Showing posts with label AZEEZ NIZARDEEN. Show all posts
Showing posts with label AZEEZ NIZARDEEN. Show all posts

Sunday, 16 October 2016

துருக்கி உதுமானிய பேரரசின் முதலாவது இலங்கை பிரதிநிதியாக இருந்த ஹஸன் லெப்பை அவ்து கண்டு மரிக்கார் எப்பன்தி

 ஜனாஸா நல்லடக்கம் ஒன்றுக்கு சென்றிருந்த போது மாளிகாவத்தை மையவாடியில் ஒரு பழைய கல்லறை என் கண்ணில் பட்டது.
அதில் பதிக்கப்பட்டிருந்த தகவலில், துருக்கி உதுமானிய பேரரசின் The Imperial Ottoman Empire முதலாவது இலங்கை பிரதிநிதியாக இருந்த ஹஸன் லெப்பை அவ்து கண்டு மரிக்கார் எப்பன்தி ( Hassen Lebbe Avdu Candu Marikar Effendi ) என்பவரது கல்லறை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
1890ம் ஆண்டு மரணித்த இவர் மாளிகாவத்தை மையவாடியின் முதலாவது நம்பிக்கைப் பொறுப்பாளராக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர் பற்றி இணைய தளத்தில் தேடிய போது ஒரே ஒரு இணைய தளம் கிடைக்கப்பெற்றது.
அதில் கொழும்பு பெரியபள்ளிவாசலுக்கு அருகில் இருந்த மையவாடியை சுகாதார சட்டத்தின் Sanitary Ordinance கீழ் அகற்ற வேண்டியிருந்ததால்
அதற்கு ஈடாக மாளிகாவத்தையில் 37 எக்கர் காணியை வாங்குவதற்கு நிதியை திரட்டி இவர் வாங்கியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இவரது பெயரோடு சேர்ந்துள்ள எப்பன்தி Effendi என்ற சொல் கௌரவ என்ற அர்த்தத்தில் துருக்கி உதுமானிய பேரரசால் வழங்கப்பட்டதாகும்.
ஆங்கிலததில் 'சேர் ' என்ற பதத்தின் அர்த்தத்தை எப்பன்தி Effendi என்ற பதம் குறிக்கிறது

Saturday, 15 October 2016

'உசாவிய நிஹன்டய்' சிங்கள திரைப்படம் தடைக்கு உள்ளாகுமா?

பிரசன்ன விதானகே தயாரித்த 'உசாவிய நிஹன்டய்' 'நீதிமன்றத்தில் அமைதி' சிங்கள திரைப்படம் நீதி
மன்றத்தின் மூலம் காட்சிப்படுத்தலுக்காக தடையை எதிர்நோக்கியுள்ளது.
இந்த திரைப்படம் ஒக்டோபர் 6ம் திகதி திரையிடுவதற்கு தயாராக இருந்த நிலையில் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்ட கோரிக்கை ஒன்றின் மூலம் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tuesday, 1 September 2009

ஸக்காத்தின் வீழ்ச்சியும் உழ்ஹிய்யாவின் எழுச்சியும்


ஸக்காத்தின் வீழ்ச்சியும்
உழ்ஹிய்யாவின் எழுச்சியும்

ஸக்காத் ஏழை வரி இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்று.

ஸக்காத் இஸ்லாம் முன்வைக்கும் ஒரு மகத்தான பொருளாதார திட்டமும் கூட. அல்குர்அன் தொழுகையைப் பற்றி பேசும் அனேக இடங்களில் ஸக்காத் பற்றியும் பேசுகிறது.

ஸக்காத் எற்றத்தாழ்வற்ற ஒரு சமுதாயத்திற்கு அத்திவாரமாகின்றது. குர்ஆனிய சமூகமொன்றில் ஸக்காத் பொருளாதார பலத்திற்கு துணையாக நிற்கிறது.

இன்றைய தஃவா (?) தளத்தில் ஒரு பேசு பொருளாக மட்டும் மாற்றப்பட்டிருக்கும் ஸக்காத்தின் நிலையைப் பற்றி நாங்கள் பேசியே ஆக வேண்டும். ஸக்காத்தின் உயிரோட்டத்தைச் சிதைத்து, சில்லரை காசுகளில் சங்கமமாகும் ஒரு சடங்காக அது இடம்பெற்று வருகிறது. வெறுமனே உச்சரிக்கப்படுகின்ற ஒரு சொல்லாக மட்டுமே அது உலா வந்துக் கொண்டிருக்கிறது.

ஸக்காத்தின் இந்த பின்னடைவான நிலைக்கு அமெரிக்க பூகோள ஏகாதிபத்திய அரசியலே காரணமாகியிருக்கிறது, அந்த அரசியல் தாக்கத்தை செலுத்தியிருக்கிறது.

அந்த அமெரிக்க அரசியல் சஊதி ஆன்மீகம் ஊடாக எங்கள் உள்ளங்களுக்குள் இறங்கிக்கொண்டிருக்கிறது. சஊதி சார்பு இஸ்லாமிய இயக்கங்கள் இந்த வேலையை கச்சிதமாக நிறைவேற்றியும் வருகின்றன. கருத்தாடலோடு மட்டும் ஸக்காத்தை கட்டுப்படுத்தி வைக்கும் அமெரிக்க சஊதி திட்டத்திற்கு இந்த இயக்கங்கள் உறுதுணையாய் நின்று உதவியும் புரிகின்றன.

Sunday, 16 August 2009

ஜுன்துல்லாஹ் ஹமாஸ் மோதல் மத்திய கிழக்கில் மற்றுமொரு பொறி!


ஜுன்த் அன்ஸாருல்லாஹ் - ஹமாஸ் மோதல்
மத்திய கிழக்கில் மற்றுமொரு பொறி!

பலஸ்தீனின் ரபாஹ் நகரத்தில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் போது காஸா பிராந்தியத்தை “ காஸா அமீரகமாக” (Gaza Emirate) பிரகடனப்படத்திய ஜுன்து அன்ஸாருல்லாஹ அமைப்பிற்கும், ஹமாஸின் பொலிஸ் காவல் துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில், ஜுன்த் அன்ஸாருல்லாஹ் அமைப்பின் தலைவராக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட லத்திப் மூஸாவும் மேலும் 23 பேரும் கொல்லப்பட்டனர். இதில் 6 பேர் ஹமாஸ் பொலிஸ் பிரிவைச் சார்ந்தவர்கள்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் போன்று பலஸ்தீனில் திடீரென்று தோன்றிய இந்த ஜுன்த் அன்ஸாருல்லாஹ் அமைப்பு எப்போது? எப்படி வந்தது? இதன் பின்னணி என்ன?

சர்வதேச ஊடகங்களில் இந்த செய்தி வந்த போது எல்லோருக்கும் ஏறபட்ட சந்தேகம் இது.

2006ம் ஆண்டு பலஸ்தீனில் நடைபெற்ற அதன் அதிகார சபைக்கான தேர்தலில் மஹ்மூத் அப்பாஸின் பத்தாஹ் இயக்கம் படுதோல்வியைச் சந்தித்தது. ஹமாஸ் இயக்கம் அமோக வெற்றியைப் பெற்றது.

பாராளுமன்றத்தின் அதிக ஆசனங்கள் ஹமாஸின் கைக்குள் வந்தது. ஆயுதப் போராட்டத்தில் தன்னை வளர்த்துக்கொண்டு தேர்தலுக்கு முகம் கொடுத்தது ஹமாஸ் இயக்கம்.

ஹமாஸ் மக்கள் ஆதரவு இல்லாத இயக்கம் என்ற நிலைப்பாட்டிலிருந்த அமெரிக்காவும், சஊதியும், ஏனைய மேற்குலக நாடுகளும் தமது நிலைப்பாட்டை பலஸ்தீன் மக்கள் தலைகீழாக மாற்றிவிட்டதைக் கண்டு மிரண்டு போயினர்.

பலஸ்தீன் பாராளுமன்றத்தைக் கைப்பற்றிய ஹமாஸுக்கு இஸ்ரேலும், மேற்குலமும் பல நெருக்குதல்களை கொடுத்தன. பொருளாதார தடைகளை திணித்தன. ஹமாஸ் அரசாங்கம் செயலாற்ற முடியாதவாறு முடக்கப்பட்டது.

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...