Saturday 22 December 2012

கொழும்பில் சிங்களவர்கள சிறுபான்மையாகியும் முஸ்லிம் தமிழ் சமூகங்கள் பெரும்பான்மையாகியுள்ளதை நானும் வலியுறுத்த வேண்டிய நிலை உள்ளது . முஸ்லிம் பிரமுகர்களின் சந்திப்பில் கோதாபய !


கொழும்பில்  சிங்களவர்கள சிறுபான்மையாகியும் முஸ்லிம் தமிழ் சமூகங்கள் பெரும்பான்மையாகியுள்ளதை நானும் வலியுறுத்த வேண்டிய நிலை உள்ளது . 
முஸ்லிம் பிரமுகர்களின் சந்திப்பில் கோதாபய !
(ஏ எம் எம் முசம்மில் பதுளை )
 “இன்று இந்தநாட்டில் சிறுபான்மையினருக்கு உரிய உரிமைகளை வழங்கப்படவில்லை எனும்  சர்வதேச அழுத்தங்கள் இந்தநாட்டின் மீது பிரயோகிக்கப்படும் நிலையில் , இந்தநாட்டு சிரும்பான்மையினத்தவர்களின் இனப்பரம்பலை குறிப்பிடும் போது கொழும்பில் பௌத்தர்களை விட முஸ்லிம்களினதும் தமிர்களினதும் விகிதாசாரம் கூடியுள்ளதை பிறநாட்டு தூதுவர்களிடம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அதன் மூலமாக இந்தநாட்டில் சிறும்பான்மையினருக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளையும் சலுகைகளையும் நான் எடுத்துக்காட்டிஇருக்கின்றேன்.” என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷே அவரது அமைச்சு காரியாலயத்தில் நடைபெற்ற முஸ்லிம் பிரமுகர்களினுடனான சந்திப்பின் போது தெரிவித்தார். 

மேலும் கருத்து தெரிவித்த அவர் “முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுபவர்கள் ஒரு சிறு எண்ணிக்கையை கொண்டவர்கள். அவர்களைப்பற்றி தூக்கிப்பிடித்து நாங்கள் செயற்படுவதால் அவர்களை வீரர்களாக்கும் செயலையே நாங்கள் செய்வதாகி விடும்.

பாதுகாப்பை பற்றி முஸ்லிம்கள் அச்சப்பட தேவையில்லை. இணைய தளங்களில் இத்தகைய செயல்களில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளிநாடுகளில் இருந்துகொண்டு செயல் படுகின்றார்கள். ஜனாதிபதிக்கும் எனக்கும் சேறு பூசுவதற்கே இவ்வாறு திட்டமிட்டு செயபற்டுகின்றார்கள் .வெளிநாடுகளில் இருந்தது செயற்படும் அவர்களின் இணையதளங்களை முடக்குவது முடியாத காரியமாக உள்ளது.
இந்நாட்டிலிருந்து செயற்படும் அவ்வாறான இணையதளங்களை பற்றி தகவல்களை தந்தால் அவற்றிற்கு எதிராக எடுக்கவேண்டிய  நடவடிக்கைகள் பற்றி ஆலோசித்து பார்க்கலாம்.

முஸ்லிம்களுக்கு எதிராக ஒட்டப்படும் போஸ்டர்களை உடனடியாக கழட்டுவதட்கு நான் நடவடிக்கை எடுத்துள்ளேன் . அதே வேலை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் ஆர்ப்பாட்ட பேரணிகளையோ ஊர்வலங்களையோ தடுக்க முடியாது. 

அவ்வாறு தடுப்பது ஜனநாயக விரோத செயற்பாடாக உள்ளதால் அரசாங்கத்தை அது நெருக்கடிக்கு உள்ளாக்கும். முஸ்லிகளாகிய நீங்கள் உங்கள் தரப்பு நியாயங்களை எம்மிடம் முன் வைப்பது போல் அவர்களும் பலவிடயங்களை சுட்டிக்காட்டி எமக்கு பல அழுத்தங்களை பிரயோகிக்கின்றார்கள். உதாரணமாக வெளிநாடுகளில் முஸ்லிம்களுக்கு பர்தா அணிந்து முகம்மூடி செல்வதற்கு அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் அதற்கு அனுமதி அளித்துள்ளீர்கள் . முன்பு பல்கலைகழகங்களில் முகம் திறந்து பர்தா அணியாமல் வந்தவர்கள் இப்போது அவ்வாறு வருகின்றார்கள்.

ஆகவே அதை தடுங்கள் என்று கூறுகின்றார்கள் . நாங்கள் எப்படி அதை தடுப்பது.? ........? என்றும் கேள்வி எழுப்பிய பாதுகாப்பு செயலாளர் அவர்கள், “ பொது பல சேனா” எனும் அமைப்பு பௌத்த மதத்தின் வேறு பல முக்கிய காரணங்களுக்காக தொற்றுவிக்கப்பட்டதொரு  அமைப்பு. இன்று அதை தோற்றுவித்தவர்களின் கட்டுப்பாட்டையும் மீறி அது சென்று கொண்டிருக்கின்றது. பெரும்பான்மையான பௌத்த மக்கள் இதன் போக்கை விரும்பவில்லை. ஆகவே நீங்கள் உங்கள் மக்களுக்கு சொல்லுங்கள் அச்சப்பட தேவையில்லை என்று . இந்தநாட்டின் உளவு துரையின் பிரதான அதிகாரியாக உள்ளவர் ஒரு முஸ்லிம் ஆவார்” என்றும் குறிப்பிட்டார்.

 இந்த நிகழ்வில் ஜம்மியதுல் உலமா தலைவர் ரிஸ்வி முப்தி ,செயலாளர் முபாரக் மதனி, முஸ்லிம் கவுன்சில் தலைவர் என் எம் அமீன், அகில இலங்கை வை. எம். எம். ஏ. தலைவர் டீன், நல்லாட்சிக்கான மக்கள் இயக்க தலைவர் அ ரஹ்மான், யங் ஏசியா டெலிவிசன்   . எம் ஹில்மி, மலையக முஸ்லிம் மாநாட்டின் செயலாளர் ஏ எம் எம் முசம்மில், பதுளை டீன் பென்சி உரிமையாளர் நளீம் டீன் (பாதிக்கப்பட்ட முஸ்லிம் வியாபாரி) கண்டி ஜம்மியத்துல் உலமா உறுப்பினர்கள்  உட்பட முப்பது பேர் அடங்கலான குழு இந்தநிகழ்வில் கலந்துகொண்டனர்.                            

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...