Sunday, 9 August 2009

அதிகரிக்கும் பள்ளிவாசல்களும் அழிக்கப் படும் ஒற்றுமையும்.







அதிகரிக்கும் பள்ளிவாசல்களும்
அழிந்து போகும் ஒற்றுமையும்!

அரபு பணம் இலங்கையில் வந்து குவிந்துக் கொண்டிருக்கிறது. பாதை நெடுகிலும் பள்ளிவாசல்கள் நாளுக்கு நாள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. விரல் ஆட்ட ஒரு பள்ளிவாசல், விரல் நீட்ட ஒரு பள்ளிவாசல், அது அவர்களின் பள்ளிவாசல், இது இவர்களின் பள்ளிவாசல் முஸ்லிம் சமூகம் முரண்பட்டு , பிரச்சினைப் பட்டு, பிரிந்து கிடக்கிறது.

பாவம் பாமர மக்கள் ! இந்த றியால், தீனார் தஃவா காரர்களின் பின்னணி புரியாமல் நடு வீதியில் தட்டுத் தடுமாறி திணறி நின்றுக்கொண்டிருக்கின்றார்கள்.

ஒற்றுமையை உரத்துப் பேசி பேசி ஒருவரின் உதிரத்தை மற்றவர் உறிஞ்சி உறிஞ்சி குடித்துக் கொண்டிருக்கிறார்கள். வஹாபிஸம் என்ற சஊதி, குவைத் மன்னராட்சியை மறைமுகமாய் பாதுகாக்கின்ற சித்தாந்தம் பொது ம்ககளை மட்டுமல்ல அவர்களிடம் பணம் வாங்கும் கூலிப்பட்டாளத்தைக் கூட குறி வைத்து பிரித்துத் தான் வைத்திருக்கிறது.

இலங்கையைப் பொறுத்தவரை தஃவா களத்தில் இருக்கும் தப்லீக் இயக்கத்தை தவிர ஏனைய அத்தனை இயக்கங்களும் இந்த வஹ்ஹாபி பணத்தில் வாழ்ந்துக் கொண்டிருப்பவையே.

தப்லீக் இயக்கம் தனது தஃவா இயக்க செயற்பாட்டில் பாரிய மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்து பொதுவாக நிலவி வருகிறது. ஆனால் தனது சொந்த பணத்தில் தஃவா செய்கின்ற புனிதத் தன்மையை அது என்றும் பேணிப் பாதுகாத்து வ்ந்திருக்கிறது. அது காசு வழங்குபவனுக்கு கைக்கூலியாய் வேலைசெய்ய வேண்டும் என்ற கட்டாயத்திற்கு உட்படாத ஒரு அமைப்பு.


வஹ்ஹாபி பணத்தில் போஷிக்கப்படும் அத்தனை இயக்கங்களும் நாளுக்கு நாள் முரண்பாட்டை தமக்கிடையே வளர்த்து முரண்பட்டு பிரிந்து செல்வதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

வஹ்ஹாபிப் பணம் வருவதால் இங்கு இஸ்லாம் வளர வில்லை.
வன்முறை வளர்ந்திருக்கிறது. ஒற்றுமை குறைந்திருக்கிறது.

இவையெல்லாம் உருவானது தனக்கென தனித்தனி பள்ளிவாசல் உருவாவதன் பின்னால் தான் என்ற உண்மையை நாம் பலாத்கதரமாகவே மறந்தும் இரு்க்கிறோம். தனித்தனி பள்ளிவாசலின் உருவாக்கம் ஒற்றுமையை தவிடுபொடியாக்கி இருக்கிறது.

ஒற்றுமையை சீர்குலைக்கும் தனித் தனி பள்ளிவாசல் கலாசாரத்தை இஸ்லாம் அங்கீகரிக்கின்றதா?

குறைஷிக் காபிர்களால் றசூலுல்லாஹ்விற்கு கஃபாவில் வணங்க தடை வந்த போது மக்காவில் வாழத் தடை வந்த போது நபி (ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள்?

தனது கொள்கையை மாற்றிக்கொண்டு, கஃபாவை அபூஜஹ்லுக்கும், அபூலஹபுக்கும் கொடுத்துவிட்டு மதீனாவில் கஃபாவைப்போல் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டிக்கொண்டு மறைந்து வாழ்ந்திருக்கலாமே? அப்படி வாழ்ந்திருந்தால் மக்கா வெற்றி என்று ஒன்று வரலாற்றுக்கு வந்திருக்குமா?

றஸுலுல்லாஹ்வின் தஃவா இஸ்லாத்தின் கொடியின் கீழ், ஒரே தலைமைத்துவத்தின் அனைவரையும் ஒன்று திரட்டுவதாகவே இருந்தது. அனைத்து கோத்திரங்களையும், குழுக்களைகயும் , கொள்கைகளையும் ஓரணியில் திரட்டி பிரிவினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

பிரிவினையையும் பிரச்சினைகளையும் இல்லாதொழிக்கும் மத்திய நிலையங்களாக மஸஜித்கள் செயலாற்றின.

இன்று நிலைமை தலைகீழாக மாறியிருக்கிது. பிரிவினைக்காகவே பள்ளிவாசல்கள் உருவாகின்றன. உருவாக்கப்படுகின்றன.

“அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாக பற்றிப்பிடியுங்கள். பிரிந்து விடாதீர்கள்” என்று அல்குர்ஆன் அறைகூவல் விடுகிகிறது. அல்லாஹ்வின் இல்லங்களாலேயே நாங்கள் பிளவு பட்டு நிற்கின்றோம். ஒற்றுமையாய் வாழுங்கள் என்ற அல்லாஹ்வின் அறைகூவலையே நாம் அலட்சியப்படுத்தியிருக்கிறோம்.

பிரிவினைக்காகவே உருவாகின்ற இந்த பள்ளிவாசல்களின் பின்னணி என்னவாக இருக்கும் என இதுவரை யாரும் சிந்திக்காமலேயே இருந்து வருகிறோம்.

தஃவா என்ற போர்வையில் நற்செயல்கள் என்ற போலி முலாம் பூசி வந்து சேர்கின்ற இந்த அரபு பணத்தின் பின்னணி என்ன? என்பதை யாரும் சிந்திக்காமல் விட்டதன் விளைவை இலங்கை முஸ்லிம் சமூகம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

தனத நாட்டில் இஸ்லாத்தைப் பாதுகாக்க முடியாத அரபிகள்,
தனது நாட்டில் மனித நேயத்தைப் பாதுகாக்காத அரபிகள்
எப்படி மற்றைய நாடுகளில் இஸ்லாத்தைப் பாதுகாக்க முடியும்?

இந்த அரபு நாடுகளில் மஸ்ஜித்கள் ஏராளம் இருக்கின்றன. ஆனால் அவர்களிடம் இஸ்லாம் இருக்கின்றதா? அந்த நாட்டுக்கு பயணம் செய்யும் மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இஸ்லாத்தின் மீது ஆர்வம் வரும் அளவிற்கு அவர்களின் வாழ்க்கை இருக்கிறதா? இல்லவே இல்லை.

இஸ்லாத்தின் தாயக பூமியை, அரபு பூமியை, மனித நேயத்தாலும், நீதியாலும், நேர்மையாலும் நிரப்பி அல்லாஹ்வின் தீனை பாதுகாக்க முடியாத இவர்களின் பணத்தால் இலங்கையில் இஸ்லாத்தை வளர்க்க முயல்வது மடமையிலும் மடமையன்றோ.

முஸ்லிம்களையே முட்டி மோத வைப்பதால் இஸ்லாம் எப்படி வளரும்? மாற்று மதத்தவருக்கு இஸ்லாத்தின் மீது அச்சம் அல்லவா ஏற்படும்?ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை உருவாக்கி அமெரிக்காவும் சஊதியும் அதைத்தானே சாதித்தன?

அரபுகள் மடையர்களாக இருக்கலாம், அரபுகளிடமிருந்து பணம் பெறுகின்ற
இஸ்லாமிய இயக்க யாசகர்களும் மடையர்களாக மட்டுமல்ல இஸ்லாத்தின் அடிப்படைக்கே மாறு செய்பவர்களாகவே இருக்கின்றார்கள்.

காரணம், இந்த இயக்கங்கள் அரபு அமெரிக்க செயற்திட்டத்தை தஃவாவின் போர்வையில் மனமுரண்டாக நிறைவேற்றியும் வருகின்றார்கள்.

மற்றும்-
அரபுகள் இஸ்லாத்தின் மீது பற்று வைத்துள்ளதாய் தோற்றப்பாட்டை உருவாக்கும்,

பள்ளிவாசல்கள் கட்டுதல்,
உழ்ஹய்யா கொடுத்தல்,
கிணறு வெட்டுதல்

போன்ற குறுகிய வேலைத்திட்டத்தை தஃவா என்ற அடைமொழிக்குள் சிக்கவைத்து பிரசாரம் செய்யும் அரபுகளின் இந்த செயற்பாட்டுக்கு பின்னணியில் ஓர் அரசியல் மறைந்து இருக்கிறது.

அது அமெரிக்க ஏகாதிபத்திய அரசியலுக்குள் சிறைபட்டு நிற்கும் சஊதி மன்னராட்சியை பாதுகாக்கும் மகத்தான பணியை செய்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவிற்கு இஸ்லாத்தை உலகிலிருந்து ஒழிக்க வேண்டுமாக இருந்தால் அரபுகளின் மன்னராட்சியை அது பாதுகாத்தே ஆக வேண்டும்.

அரபுகளின் மன்னராட்சி உலகில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால், இஸ்லாத்தின் ஏக போக உரிமை அரபுகளிடம் இருக்கவேண்டும். அப்போது தான் இஸ்லாம் என்ற போர்வையில் தனக்கு தேவையானவற்றை கூட்டியு்ம், தனக்குதேவையில்லாதவற்றை குறைத்தும், மறைத்தும் கூற முடியும்.

அரபுகளின் நிதி பலத்தில் இஸ்லாமிய தஃவாவை சிறைப்பிடித்து வைப்பதன் மூலம்...

0 அமெரிக்காவினதும், சஊதியினதும் நன்மைக்காக
உலகளாவிய ரீதியில் எழும் இஸ்லாமிய அரசியல் எழுச்சியை அடக்கமுடியும்.

0 முஸ்லிம்களின் சிந்தனையை அடிப்படை பிரச்சினைகளிலிருந்து வேறு பக்கம் திசை திருப்பி சில்லரை பிரச்சினைகளில் சிக்க வைக்கமுடியும்.

0 அரபுகளின் அரசியலுக்கேற்ப இஸ்லாத்தை கூட்டியும், குறைத்தும் வடிவமைக்க முடியும்.


இன்று, மத்திய கிழக்கில் தனது ஆதிபத்தியத்தை உறுதிப்படுத்தி, அரபு மண்ணின் எண்ணெய் வளங்களை சூறையாடிக்கொண்டிருக்கும், முஸ்லிம் நாடுகளுக்குள் அத்துமீறி புகுந்து அநியாயம் புரிந்துக்கொண்டிருக்கும் ஏகாதிபத்திய வாதிகளின் அட்டகாங்களை தஃவாவின் போர்வையில் மூடி மறைப்பதற்கு இந்த அரபு பணத்தைப் பெறும் இஸ்லாமிய இயக்கங்கள் நன்றாகவே பயன்படுத்தப் படுகின்றன.

அரபுகளை திருப்தி படுத்தும் இவர்களது தஃவா, பணத்தை மையப்படுத்தி சுழன்று, வியாபார மயப்படுத்தப்பட்ட ஜாஹிலிய்ய சிந்தனையை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது. உயிரோட்டமான இஸ்லாத்தின் கட்டளைகளை பணத்திற்கு தாரை வார்த்து அநியாயங்களையும், அக்கிரமங்களையும் அடக்கி வாசிக்கும் அளவிற்கு காசின் கைதிகளாக இவர்கள் மாற்றப்பட்டிருக்கின்றார்கள்.

கடைசியாக உங்கள் சிந்தனைக்காக சில வார்த்தைகளை தர முடியும்
ஈராக்கில் புகுந்து பத்து லட்சம் முஸ்லிம்களை கொல்வதற்கு தனது நாட்டில் அமெரிக்கா கொலைகாரர்களுக்கு தளம் அமைத்துக்கொடுத்து, அமெரிக்கா யுத்த விமானங்களுக்கு இலவசமாக எண்ணெய் வழங்கிய சஊதி அரேபியா

ஆப்கானிஸ்தானை அழிக்க அமெரிக்காவுக்கு துணைபோன சஊதி அரேபியா

பலஸ்தீன் முஸ்லிம்களைக் கொன்று குவி்த்து, முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸை கபளீகரம் செய்த இஸ்ரேலின் தந்தையான, நண்பனான அமெரிக்காவை மிக மிக நேசிக்கும் சஊதி அரேபியா

இஸ்லாத்தை மறந்து புனித மண்ணில் ஆடம்பர மௌட்டீக மன்னர் ஆட்சி நடாத்தும் சஊதி அரேபியா

இஸ்லாத்தை வளர்க்க உதவி புரியுமா? அதன் பணத்தால் இஸ்லாம் வளருமா? அப்படி வளரும் இஸ்லாத்தை அதன் நேச நாடுகளான அமெரிக்காவும், இஸ்ரேலும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா? அங்கீகரிக்குமா?
ஆயிரம் கேள்விகளை இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம்...

ஏகத்துவ பிரசாரம் என்ற போர்வையில் எமக்கு சஊதி ஏற்றுமதி செய்திருப்பது முரண்பாடுகளை, மோதல்களை, சண்டைகளை, சச்சரவுகளை....

தமக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கு தனது எதிரியின் சதியை சரியாக புரிந்துக்கொள்ள அவகாசம் கிடைப்பதில்லை.
அதுதான் சஊதிக்கும் அமெரிக்காவிற்கும் தேவை!

இதனால் ஏற்படும்

இழப்பு...
இஸ்லாத்திற்கும்
முஸ்லிம் உம்மத்திற்கும்,

இலாபம்..
அரபு மன்னர்களுக்கும்
அவர்களின் யெஹுதி நஸாரா தோழர்களுக்கும்..

27 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்

    //அரபு பணம் இலங்கையில் வந்து குவிந்துக் கொண்டிருக்கிறது. பாதை நெடுகிலும் பள்ளிவாசல்கள் நாளுக்கு நாள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. விரல் ஆட்ட ஒரு பள்ளிவாசல், விரல் நீட்ட ஒரு பள்ளிவாசல், அது அவர்களின் பள்ளிவாசல், இது இவர்களின் பள்ளிவாசல் முஸ்லிம் சமூகம் முரண்பட்டு , பிரச்சினைப் பட்டு, பிரிந்து கிடக்கிறது.//

    உங்களின் கருத்து உண்மையே.

    //வஹாபிஸம் என்ற சஊதி, குவைத் மன்னராட்சியை மறைமுகமாய் பாதுகாக்கின்ற சித்தாந்தம் பொது ம்ககளை மட்டுமல்ல அவர்களிடம் பணம் வாங்கும் கூலிப்பட்டாளத்தைக் கூட குறி வைத்து பிரித்துத் தான் வைத்திருக்கிறது. //

    சகோதரரே...வஹ்ஹாபியிசம் வளர்ந்ததினால் பல குடும்பங்களில் அமைதி இல்லாமல் போய்விட்டது...

    //வஹ்ஹாபி பணத்தில் போஷிக்கப்படும் அத்தனை இயக்கங்களும் நாளுக்கு நாள் முரண்பாட்டை தமக்கிடையே வளர்த்து முரண்பட்டு பிரிந்து செல்வதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.//

    பணத்திற்காக மார்க்கத்தைவிற்று மலத்தை திங்கும் கூட்டம்.

    அருமையான கட்டுரையை எழுதி உள்ளீர்கள்...இன்றைய நடப்புகளை படம் பிடித்து காட்டியுள்ளீர்கள்...இது இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும் தான்.
    நீங்கள் அனுமதி தந்தால் உங்கள் கட்டுரையை எனது வலைப்பூவிலும் பதிவுசெய்கிறேன்...இச் செய்தி பலரின் பார்வையில் பட்டு சிந்தனையை தூண்ட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்...

    வஸ்ஸலாம்

    ReplyDelete
  2. உங்களின் வலைப்பூவை பார்க்கும்படி எனது நண்பர்களுக்கு பரிந்துரைத்துள்ளேன்....

    kiliyanurismath@gmail.com

    ReplyDelete
  3. //இவையெல்லாம் உருவானது தனக்கென தனித்தனி பள்ளிவாசல் உருவாவதன் பின்னால் தான் என்ற உண்மையை நாம் பலாத்கதரமாகவே மறந்தும் இரு்க்கிறோம். தனித்தனி பள்ளிவாசலின் உருவாக்கம் ஒற்றுமையை தவிடுபொடியாக்கி இருக்கிறது.//

    ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மை...

    நல்லதொரு எண்ணம் நண்பரே

    (இது போன்ற சிந்தனையாளர்களின் தளங்களை எங்களுக்கு அறிமுகப் படுத்தும் எங்கள் அன்பு அண்ணன் கிளியனூர் இஸ்மத் அவர்களுக்கு நன்றிகள் பல)

    ReplyDelete
  4. PALLIVAASALKAL EEN THANI THANIYE KATTA PADUKIRATHU ITHARKKU ADIPPADAI ENNA ENBATHAIYUM VILAKKI IRUNTHAAL NANDRAKA IRUKKUM.MEL POOCHCHU MATTUM POOSIYIRUKIREERKAL.ITHARKKU KAVIZAR ISMATH VAKKAALATHTHU VAAGI IRUPPATHU PORUTHTHAME.

    ReplyDelete
  5. \\பாதை நெடுகிலும் பள்ளிவாசல்கள் நாளுக்கு நாள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. விரல் ஆட்ட ஒரு பள்ளிவாசல், விரல் நீட்ட ஒரு பள்ளிவாசல், அது அவர்களின் பள்ளிவாசல், இது இவர்களின் பள்ளிவாசல் முஸ்லிம் சமூகம் முரண்பட்டு , பிரச்சினைப் பட்டு, பிரிந்து கிடக்கிறது.//

    ஆம் நாம் அனைவரும் நபி வழியை பின் பற்றினால் ஏன் இந்த குழப்பம்?? பார்த்திர்களா நான்கு மதகாபு கலை பின் பற்றும் நீங்கள் முதலில் அனைத்து பள்ளி வசகளிலும் உள்ள எச்சரிக்கை போர்டுகளை முதலில் எடுக்க சொல்லுங்கள் முதலில் அனைவரையும் அல்லாஹ்வின் பள்ளியில் தொழ அனுமதி தாருங்கள் பின்னர் நங்கள் ஏன் வேறு பள்ளிகளை கட்டுகிண்டோர்ம்.. அணைத்து தவுருகலையும் செய்து விட்டு இப்பொழுது ஏன் குய்யோ முறையோ என்று கத்து கின்றிர்கள் ???

    முதலில் உங்கள் பொய்யும் புரட்டும் உள்ள " அமல்களின் சிறப்பு " நரகத்திற்கு இட்டு செல்லும் இன்னை வைத்தலை ஆணி வேராக ஆதரிக்கும் " மவிளுது " வை தூக்கி எரிந்து விட்டு அல்லாஹ்வின் அல்ல்லவின் அடியன் " நபி ஸல்ல் அலை வசலம் அவர்களின் தூய வழி வாருங்கள்,

    //ஏகத்துவ பிரசாரம் என்ற போர்வையில் எமக்கு சஊதி ஏற்றுமதி செய்திருப்பது முரண்பாடுகளை, மோதல்களை, சண்டைகளை, சச்சரவுகளை....//

    உள்ளதை சொன்னால் உடம்பு வலிக்கும் என்று சொல்வார்கள், நபி அவர்கள் ஏகத்துவ பிரசாரம் செய்யும் பொது ஏற்படாத முரன்படுகளா, மோதல்களா இபொழுது நடந்துவிட்டது???? முதலில் உங்கள் இஷ்டத்திற்கு இஸ்லாமிய கோட்பாடுகளை வளைக்காமல் இருங்கள் அதுவே பெரிய உதவி,
    நாங்க சிறு பிள்ளைகளாக இருக்கு பொது நீங்க சொன்னதை தானே கேட்டு கொண்டு தர்கா வழிபாடு, வரதட்சினை போன்ற அனச்சரகளை செய்து கொண்டு இருந்தோம் அப்பொழுது எங்க போனீர்கள் நீங்கள் ??? ஏகத்துவ பிரசாரம் வந்து தானே இபொழுது நாங்கள் திருத்த பட்டு இருக்கிறோம்....

    உடனே நிங்கள் சொல்விர்கள் நாங்களும் ஏக துவ பிரசாரம் செய்து கொண்டு தான் இருக்கிறோம் என்று... ஆம் நன்றாக வித விதமான ஊஉர் , நாடு களுக்கு சென்று நன்றாக சமைத்து சாப்பிட்டு விட்டு வருவிர்கள், ஒரு வட்டத்தை போட்டு அமல்களில் சிறப்பு என்ற குப்பையை பத்தி பேசி விட்டு வருவிர்கள்,... நபிகள் நாயகம் இதை தான் உங்களை செய்ய சொன்னாரா, இல்லை அவர்தான் இதை செய்தாரா ?? பின்னர் ஏன் இந்த வேண்டாத வேலை???

    \\பலஸ்தீன் முஸ்லிம்களைக் கொன்று குவி்த்து, முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸை கபளீகரம் செய்த இஸ்ரேலின் தந்தையான, நண்பனான அமெரிக்காவை மிக மிக நேசிக்கும் சஊதி அரேபியா

    இஸ்லாத்தை மறந்து புனித மண்ணில் ஆடம்பர மௌட்டீக மன்னர் ஆட்சி நடாத்தும் சஊதி அரேபியா

    இஸ்லாத்தை வளர்க்க உதவி புரியுமா? அதன் பணத்தால் இஸ்லாம் வளருமா? அப்படி வளரும் இஸ்லாத்தை அதன் நேச நாடுகளான அமெரிக்காவும், இஸ்ரேலும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா? அங்கீகரிக்குமா?
    ஆயிரம் கேள்விகளை இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம்...//

    முதலில் நீங்கள் எதை சொல்ல வருகிறிர்கள் ?? சவுதி அரேபியா எல்லா தப்பும் செய்கிறது.. அதற்கா ஹ நீங்கள் அந்த பணத்தை வங்கவேண்டம் என்று சொல்ல வருகிரிர்களா ??? நீங்கள் சொல்ல்வது உண்மை தை சவுதி அரபிய சில தவறுகள் செய்து இருக்கலாம் அது ஆட்சி யாளர்களின் தவறு. அதற்காக அங்கு கிடைக்கும் நன்கொடை கலை தவறு என்று சொல்ல எந்த வித முங்கதிரமும் இல்லை.. நீங்கள் சொல்லவதை பார்த்தல் சவுதி தவறு இல்லைது விட்டது, ஆகையால் யாரும் சவுதி அரேபியாவிற்கு செல்ல வேண்டம், ஹஜ் செய்ய வேண்டம் என்று சொல்ல்வது போல் உள்ளது.
    முதலில் நீங்கள் திருத்துங்கள் இல்லாவிட்டால் அல்லாஹ்வினால் திருத்த படுவிர்கள்

    ReplyDelete
  6. விரல் ஆட்டுவதற்கு ஒரு பள்ளி, விரல் நீட்டுவதற்கு ஒரு பள்ளி, இந்தப் பள்ளியில் தொழுவதா, அந்தப் பள்ளியில் தொழுவதா என்று பாரமர மக்கள் முட்டி மோதி தவித்துக் கொண்டிருக்கிறார்கள், நம்மைப் போன்றவர்கள் மனம் வெதும்பி என்று மாறும் இந்த நிலை கேள்வியுடன் காத்திருக்கிறோம்

    யதார்த்த நிலையை விளக்கும் நல்ல கட்டுரை.

    ராஜா கமால்
    www.rajakamal.blogspot.com

    ReplyDelete
  7. உங்களின் வலைப்பூவை பார்க்கும்படி எனது நண்பர்களுக்கு பரிந்துரைத்துள்ளேன்....

    kiliyanurismath@gmail.com

    10 AUGUST 2009 00:15

    நன்றி இஸ்மத்!

    இது எங்கள் கடமை. இஸ்லாத்தை இன்று யெஹதி நஸாராக்களிடமிருந்து மட்டுமல்ல அமெரிக்காவின் அடிவருடிகளான அரபுகளிடமிருந்தும் நாம் பாதுகாக்க வேண்டும்.

    ReplyDelete
  8. ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மை...

    //நல்லதொரு எண்ணம் நண்பரே

    (இது போன்ற சிந்தனையாளர்களின் தளங்களை எங்களுக்கு அறிமுகப் படுத்தும் எங்கள் அன்பு அண்ணன் கிளியனூர் இஸ்மத் அவர்களுக்கு நன்றிகள் பல)//

    நன்றி! கீழை ராசா

    சீ.ஐ.ஏ இன் சதி வலையை கிழித்தெறிய வேண்டிய பொறுப்பு முஸ்லிம்கள் அனைவருக்கும் உண்டு. றசூல் (ஸல்) அவர்களின் சுன்னா முஸ்லிம்களை பிரிப்பது அல்ல. முஸ்லிம்களை ஒன்று சேர்ப்பது.
    பள்ளிவாசல்கள் சமுதாயத்தின் மத்திய நிலையங்களாகவே செயற்பட்டிருக்கின்றன. இன்று சஊதி அரேபியா பள்ளிவாசல்களை பிரிவினையின் பள்ளிக்கூடங்களாக மாற்றி இருக்கின்றது.

    ReplyDelete
  9. Assalamu Alaikkum,

    Ungal karuththu mikavum arumai.nantri.Irunthalum neengal thableegh jamath'thai velippanam illamal sheyal padukintrarkal endra kootrai ey'no jeeranikka mudia villai.Avarkalum south africa pondra yehudikalil niraiye've aathikkam sheluththum naadukalil irunthu shantheykamana pinnaniyil iyangurarkal enbathu etho unmai.Matrappadikku arumaiyana sindhanayai thoondum katrurai.Kalaththin theywayum kooda.Ungal pani thodar walththukal.Nantri.
    ziad akurana,sri lanka.

    ReplyDelete
  10. மிக நல்லதொரு கட்டுரை. உண்மை நிலையைச் சொல்லியிருக்கிறீர்கள் !

    ReplyDelete
  11. முதலில் பிரச்னையின் ஆணி வேரை களைந்தெறிய வேண்டும். பள்ளிவாசல்கள் தோறும் 'நான்கு சாதிகளை(மத்ஹபுகளை)பின் பற்றாதவருக்கு இப்பள்ளியில் இடமில்லை' என்ற போர்டை எடுக்கச் சொல்லுங்கள். யாரும் தனிப்பள்ளிக் கட்டிக் கொண்டு செல்லமாட்டார்கள்.

    அரபு நாடு வந்தபிறகுதான் இலங்கையிலும், இந்தியாவிலும் பின்பற்றப்படுவது உண்மையான இஸ்லாம் அல்ல என்ற உண்மை தெரிய வந்தது. தர்ஹா வழிபாடு, சந்தனக்கூடு, கந்தூரி,மௌலூது, தட்டு தாயத்து, ஏழாம நாள் பாத்திஹா, நாப்பதாம் நாள் பாத்திஹா, வருசத்து பாத்திஹா, வரதட்சணை வாங்கி கல்யாணம் போன்ற கூத்துகளைத்தானே இஸ்லாம் என்று சொல்லி வந்தீர்கள். இதை எல்லாம் பார்த்து மாற்று மதத்தவர்கள் சிரிக்க மாட்டார்களா? என்றாவது இதை தப்லீக் ஜமாத்தோ, உலமாக்களோ தட்டிக் கேட்டது உண்டா?

    அரபு நாடுகளில் ஒவ்வொரு ஜூம்ஆ தொழுகைக்கு பிறகும் மாற்றுமத நண்பர்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் இணைவதை நீங்கள் பார்க்கவில்லையா? எதையும் நுனிப்புல் மேய்ந்து விட்டு மனதில் தோன்றுவதை எல்லாம் பதிவாக்க வேண்டாம். முதலில் வஹ்ஹாபியிசம், தப்லீக், அரபுகள், அரபு நாட்டு பணம், இஸ்லாம், குர்ஆன், ஹதீஸ் போன்றவற்றை நன்கு படித்து விட்டு பிறகு பதிவு எழுத உட்காருங்கள்.

    நன்றி!

    ReplyDelete
  12. //முதலில் பிரச்னையின் ஆணி வேரை களைந்தெறிய வேண்டும். பள்ளிவாசல்கள் தோறும் 'நான்கு சாதிகளை(மத்ஹபுகளை)பின் பற்றாதவருக்கு இப்பள்ளியில் இடமில்லை' என்ற போர்டை எடுக்கச் சொல்லுங்கள். யாரும் தனிப்பள்ளிக் கட்டிக் கொண்டு செல்லமாட்டார்கள்.//

    அன்பின் சகோதரன் சுவனப்பிரியனுக்கு,
    பிரச்சினையின் ஆணி வேர் இஸ்லாத்தின் அடிப்படையை புரியாமல் இருப்பதே. இஸ்லாத்தின் தஃவாவை ஒழுங்காக புரியாமல் இருப்பதே!

    நான் தப்லீக் ஜமாஅத் சார்பாக எழுதவில்லை. அந்த இயக்கத்தோடு எனக்கு முரண்பாடு அதிகம்.ஆனால் இந்த பித்அத் எதிர்ப்பு பிரசாரத்திற்கு எதிரானவனல்லன். அல்குர்ஆனிய சமூகம் ஒன்றை இவ்வுலகில் உருவாக்குவதற்கு மாற்றமாக, அல்குர்ஆனை மக்களிடம் கொண்டு சென்று அல்குர்ஆனின் பக்கம் மக்களை அழைப்பதை விட்டு விட்டு பிக்ஹு பிரச்சினைகளை தஃவா வடிவம் கொடுத்து பிரச்சாரம் செய்வதை நான் எதிர்க்கிறேன்.

    இது பாலர் பாடசாலை மாணவர்களிடம் பல்கலைக்கழக பாடநெறியைப்பற்றி பற்றி விவாதிப்பது போன்றதொரு விடயமாகும். இஸ்லாத்தை கற்றுக்கொடுக்க குர்ஆனும் ஹதீஸும் எங்களுக்கு ஒரு அடிப்படையைத் தந்திருக்கிறது.

    தொழுகை தொடர்பான பிரச்சினைகளை பேசுவதற்க முன்னால் தொழுகை கடமையாவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்கள் மக்கள் மத்தியில் செய்தார்களே அதுதான் தஃவா! அந்த தஃவாவை நீங்கள் செய்ய ஆரம்பியுங்கள்! அரபு மன்னர்களையும் உங்கள் காலடிக்கு கொண்டு வர முடியும். அதை விட்டு விட்டு அப்துல் வஹ்ஹாப் போன்ற காலனித்துவ வாதிகளின் கைபொம்மையாக செயற்பட்டு கொள்ளை கோஷ்டி தலைவனான இப்னு சுஊதை அரியாசணம் ஏற்றிய வஹ்ஹாபின் சதிகளைக“ கொஞ்சம் தேடிப்படியுங்கள்.

    இஸ்லாமிய கிலாபத்தை மூடி மறைக்க, அழிக்க உதவி புரியும் அமெரிக்காவோடு உங்கள் தஃவா எஜமானர்கள் (அரபுகள்)கொஞ்சி குலாவுவதை முதலில் நிறுத்தச் சொல்லுங்கள்.

    முதலில் கோடிக்கணக்கான பணத்தை அள்ளி வழங்கும் அரபுகளை இஸ்லாத்திற்குள் அழையுங்கள். இலங்கை முஸ்லிம்களான எங்களுக்கு தர்கா, ஸியாரத், கந்துரி என்று இந்த கன்றாவிகளை கற்றுக்கொடுத்ததே இந்த தமிழ் நாடுதான்.

    எங்கள் நாட்டில் பள்ளிவாசல்கள் கட்ட முன் எங்கள் வேறு நாடுகளிலிருந்து பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்துவதையும், அந்தப் பெண்கள் மீது பலாத்காரம் புரிவதையும், சம்பளம் கொடுக்காமல் அவர்களை சித்திரவதை செய்வதையும் நிறுத்தச் சொல்லுங்கள். முஸ்லிமாக நடப்பது அவர்களுக்கு கஷ்டமாக இருந்தால் இதயமுள்ள ஒரு மனிதனாக நடக்கச் சொல்லுங்கள்.

    தனது வாழ்க்கையில் இஸ்லாத்தை கொண்டு வந்தால், அவர்கள் வரிசையில் வந்து இஸ்லாத்தை ஏற்க காத்திருப்பார்கள்.

    அரபுகளின் அராஜக வாழ்க்கையைப் பார்த்தே ஜும்ஆக்களில் வரிசை வரிசையாக இஸ்லாத்தை ஏற்க நிற்கின்றார்கள் என்றால். இவர்கள் உண்மை முஸ்லிமாக, முஃமினாக வாழ்நதால் முழு உலகும் அணி திரண்டு இஸ்லாத்திற்குள் வருமே!

    ReplyDelete
  13. மிக நல்லதொரு கட்டுரை.

    நான்கு மத்ஹபுகள் கூடாது என்று இமாம்களை எதிர்த்து குரான் ஹதீஸ் (என்னமோ இமாம்கள் குரானுக்கும் ஹதீஸுக்கும் எதிராக செயல்பட்டது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கியது) என்று ஒத்த குரலில் நின்றவர்கள் எப்படி ஒற்றுமையாக இருப்பது என்று வாழ்ந்து காட்ட வேண்டியது தானே.

    ஷாபி இமாம், ஹனபி இமாமை பின்பற்றியவர்கள் எல்லாம் கூட இந்த அளவிற்கு பிரிவினையை உண்டு பண்ணியது கிடையாது.

    தௌஹீது பேசும் பிரிவினையாளர்கள் ஏற்படுத்தியிருக்கும் பிரிவினை வேடிக்கையாகவும் வெட்கமாகவும் இருக்கிறது. இந்திய தௌஹீது, தமிழ்நாடு தௌஹீது, பாண்டிச்சேரி தௌஹீது, என்னாங்க இதெல்லாம்..? மத்ஹபுகளையே சாதிகள் என்று சொல்பவர்கள் இது குறித்து என்ன சார்பு விளக்கம் அளிக்க போகிறார்களோ?

    ReplyDelete
  14. //ஆம் நாம் அனைவரும் நபி வழியை பின் பற்றினால் ஏன் இந்த குழப்பம்??//

    சகோதரர் முஹம்மத்!

    குழப்பத்தின் பிறப்பிடமான நீங்களா எங்களிடம் இந்தக் கேள்வியை கேட்கின்றீர்கள்?

    சஊதி வஹ்ஹாபிகளான உங்களிடமே ஒருமித்த கருத்து இல்லையே! வஹ்ஹாபிகள் ஊருக்கு ஒரு கூட்டமாய் பெயர் வைத்துக்கொண்டு பிரிந்து தானே இருக்கின்றீர்கள்?

    முதலாவது வஹ்ஹாபிகள் எல்லோரும் சேர்ந்து ஒரு மாநாடு போட்டு உங்களில் யார் சொல்வது சரி என்று முடிவெடுத்து விட்டு மக்களிடம் செல்லுங்கள்.

    ReplyDelete
  15. "இது பாலர் பாடசாலை மாணவர்களிடம் பல்கலைக்கழக பாடநெறியைப்பற்றி பற்றி விவாதிப்பது போன்றதொரு விடயமாகும்."

    - இப்படி விவாதித்த காரணத்தினால் பாலர் பாடசாலை மாணவர்கள் எல்லாம் தங்களை பல்கலைக்கழக பேராசிரியர்களாகவே பாவித்துக் கொண்டு தங்களுக்குள் விளக்கம் கொடுத்துக் கொள்ளும் பாங்கு இருக்கிறதே! அல்லாஹ் வச்சு காப்பாத்தணும்!!

    ReplyDelete
  16. தலைப்பை பார்த்துவிட்டு, இஸ்லாமிய விரோத கட்டுரை என்று நினைத்தேன்! அல்ஹம்துலில்லாஹ்! எவ்வளவு பெரிய விஷயத்தை தைரியமாக தெளிவாக சுட்டி காட்டி இருக்கிறீர்கள்!

    தப்லீக் என்பது ஒரு இயக்கமல்ல! ஒரு தியாகம்! தன்னை தானே சீர்திருத்த வேண்டும் என்பது தான் இதன் மூலம்! பூமி தானும் சுற்றி, சூரியனையும் சுற்றி வருவது போல, தன்னையும் திருத்தி, தன் செயல்மூலமும், சொல்மூலமும் அடுத்தவரையும் திருத்த வேண்டும். இது தான் சரி!

    சொந்த பணத்தை செலவு செய்து அறம் வளர்க்கும் தப்லீக் ஜமாத் எங்கே? யஹூதி நசராக்களின் கைகூலிகளான வஹாபிகள் எங்கே?!

    //இந்த அரபு நாடுகளில் மஸ்ஜித்கள் ஏராளம் இருக்கின்றன. ஆனால் அவர்களிடம் இஸ்லாம் இருக்கின்றதா? அந்த நாட்டுக்கு பயணம் செய்யும் மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இஸ்லாத்தின் மீது ஆர்வம் வரும் அளவிற்கு அவர்களின் வாழ்க்கை இருக்கிறதா? இல்லவே இல்லை//

    நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் நற்குணத்தால் தான் தீன் வளர்ந்தது, பலரும் நினைப்பது போல் வாளால் அல்ல! தோற்றத்தில் மட்டும் சுன்னத் இருந்தால் போதாது, வாழ்க்கையிலும் இருக்க வேண்டும்!

    பிரிவினை சதியில், அறியாமையால் இணைபவர்கள் பாவப்பட்டவர்கள். வீசி எறியும் ரொட்டித் துண்டுக்கு ஆளாய் பறக்கும் நாய்க்கூட்டமென, சேற்றில் புரளும் இவர்களை என்னவென்று சொல்வது?

    எது உண்மை, எது பொய் என்ற குழப்பத்தில் இருக்கும் ஜனங்களை இன்னும் குழப்பி, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் பதர்கள், இறைவன் ஒருவனே நெறிப்படுத்த முடியும்!

    ரமலான் துவங்கும் இந்நாளில், சமுதாய ஒற்றுமைக்கு, இருகரமேந்தி இறைஞ்சுவோமாக!

    ReplyDelete
  17. நன்றி சுமஜ்லா!

    இன்றைய உலகின் அத்தனை நிகழ்வுகளுக்கும் பின்னால் ஓர் அரசியல் இருக்கிறது.

    எந்த முகமூடி அணிந்தாவது எந்த நாட்டுக்குள்ளும் புகுந்கு விளையாடும் பரிச்சயம் உள்ள ஓர் அரசியல்தான் அமெரிக்க அரசியல். அதைத்தான் இந்தக் கட்டுரையில் தந்திருக்கிறேன்.

    ReplyDelete
  18. அன்பின் சகோதரர்களுக்கு தயவு செய்து ஒரு விஷயத்தை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.இஸ்லாத்திற்கு அளவுகோல் அரபு நாடும் அரேபியர்களும் அல்ல.மாறாக அல்லாஹ் அருளிய திருமறையும் அவனுடைய தூதர் நமக்கு கற்று தந்த வழிமுறையும் தான்.
    1.சவ்தியிலிருந்து யாருக்கு பணம் வருகிறது எங்கே பணம் வருகிறது காதில் கேட்டதை எல்லாம் பிரச்சாரம் செய்யாதீர்கள் இது முனாஃபிக் வேலை அப்படி சவுதி அரசு பணம் கொடுத்தால் சொல்லுங்கள் எங்கள் ஊரிலும் பள்ளி கட்ட வேண்டும்.
    2.ஏகத்துவ மெய்ந்ஞான சபை இட ஒதுக்கீட்டுக்கு செய்த தியாகம் என்ன?இன்று விஞ்ஞான உலகம் நம் இறைவேதத்தை பார்த்து வியந்து கொண்டிருக்கிறது அந்த அளவுக்கு குரானும் அறிவியலும் ஒத்துப்போகிறது இப்படிப்பட்ட அறிவுப்போர்வமான மார்கத்தில் பிறந்து இன்று செய்கு முரீது என்று பிரிந்து நிற்கும் கேவலமான கூட்டம் நீங்கள்.
    3.எப்படி எப்படி பாலர் பாடத்தை கற்று கொடுக்க வேண்டுமா பிக்ஹுகலை பேசக்கூடாதா?சாக்கடை நாற்றம் வந்தால் தூர் வாரி எடுக்க வேண்டும் சகோதரா மேலே வாசனை திரவியம் ஊற்றக்கூடாது.
    4.இலங்கையில் மட்டும் இல்லை இந்த உலகத்தில் எந்த மூலையிலும் எந்த மொளிக்காரனிடமும் அல்லாஹ் ஒருவன்தான் குரான் இறை வேதம்தான் என்று சொல்லக்கூடிய தில்லும் திராணியும் குரானையும் ஹதீஸையும் மட்டும் பின்பற்ற கூடிய தவ்ஹீத் வாதிகளுக்கு மட்டும்தான் இருக்கு.செய்குகளை பின்பற்ற கூடிய நீங்கள் எப்படி இஸ்லாத்தை எடுத்து சொல்வீர்கள் ஒரு ஹிந்து சகோதரனிடம் நீங்கள் சொன்னால் உங்கள் செய்கை விட பவரஃபுல் முனிவர் இருக்கிறார் என்பார்கள்.
    5.நபி அவர்கள் இஸ்லாத்தை எடுத்த சொல்லும்போது வராத பிரச்சனைகளா இன்று வந்து விட்டது?உங்கள் வலைப்பூவின் தலைப்பூ பத்ரு களம் இந்த களம் எவ்வாறு உருவானது என்று வரலாற்றை புரட்டிப் பாருங்கள் நண்பரே.

    6.அரேபியர்கள் வேலைக்குப் போகும் பணிப்பெண்களை கொடுமை படுத்துவதால் இலங்கையில் அரபு நாட்டு மோகம் குறைந்து விட்டதா?
    7.நான் அவர்கள் செய்யும் தவறுகளை நியாயப் படுத்தவில்லை அவர்கள் தவறு செய்வதால் இஸ்லாத்தை எடுத்து சொல்ல வேண்டாம் என்பதற்கு நீங்கள் யார்?இது எந்த விதத்தில் நியாயம்?குரானிலோ உண்மையான ஹதீசுகளிலோ குறை இருந்தால் தாவா செய்வதில் குற்றம் சொல்லுங்கள்.
    8.நீங்களோ அல்லது உங்களுக்கு வக்காலத்து வாங்கி கருத்து எழுதும் கிளியனூர் இஸ்மத் போன்றவர்களோ மாற்று மத சகோதரர்களிடம் இஸ்லாத்தை எடுத்து சொல்ல வக்கற்ற இஸ்லாம் சொல்லித் தராத வழியை பின்பற்றுபவர்கள் நீங்கள் சவுதியர்கள் செய்யும் க்ற்றத்தை நோன்டிசாக்காக சொல்லுங்கள் தயவு செய்து எங்களை வம்புக்கு இழுக்காதீர்கள் சகோதரர்களே.

    இந்த கருத்தை வெளியிட மாட்டீர்கள் என்று தெரியும் பரவாயில்லை கருத்து உங்களுக்குத்தான்.

    ReplyDelete
  19. உண்மைக் குரல்(?)
    சகோதரருக்கு,

    //சவ்தியிலிருந்து யாருக்கு பணம் வருகிறது எங்கே பணம் வருகிறது காதில் கேட்டதை எல்லாம் பிரச்சாரம் செய்யாதீர்கள் இது முனாஃபிக் வேலை அப்படி சவுதி அரசு பணம் கொடுத்தால் சொல்லுங்கள் எங்கள் ஊரிலும் பள்ளி கட்ட வேண்டும்.//

    உங்கள் ஊரில் பள்ளிகட்ட ஏன் சஊதி பணம்? அதை உங்கள் சொந்தப் பணத்தில் கட்டுங்களேன்.
    பணத்திற்கு தஃவா செய்து பழகிப்போன நீங்கள் பள்ளிகட்டவும் சஊதியைப் பார்த்தா பல்லிளிக்கப்போகின்றீர்கள்.

    அமெரிக்க ஆப்த நண்பனான சஊதியின் பணத்தில் பள்ளிகட்டுவதை விட சும்மா தரையில் பாயை போட்டு தொழுங்கள்! அது சிறந்தது.

    ReplyDelete
  20. சகோதரரே நாங்கள் பள்ளிக்கட்டுவதற்கு சவுதி பணத்தை ஒருபோதும் எதிர்பார்த்தவர்கலில்லை மாறாக நீங்கள் இட்டுக்கட்டியதற்கு தான் அப்படி கேட்டேன்.அதை நிரூபிக்க திராணி இல்லாமல் தாவா செய்ய கூலி பெறுபவர்கள் என்று மறுபடியும் ஒரு குற்றச்சாட்டு அட போங்க சார்,

    மறுபடியும் ஒரு விஷயத்தை நினைவு படுத்துகிறேன் இஸ்லாத்திற்கு அளவுகோல் அரபு நாடுகளும் அரேபியர்களும் அல்ல.அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.சவ்திக்காரர்கள் எக்கேடுகெட்டு போனால் எங்களுக்கென்ன எவனையும் எதிர்பார்த்து நாங்கள் எந்த பணியும் செய்ய வில்லை மறுமை வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல் படுகிறோம்.

    ஆனால் ஒன்றுமட்டும் தெளிவாக தெரிகிறது உங்கள் வலைப்பூவின் தலைப்பையும் உங்கள் பெயரையும் முஸ்லிம் பெயராக வைத்துக்கொண்டு இஸ்லாத்திற்கு எதிரான கொள்கையை பிரச்சாரம் செய்யும் மாற்று மதத்தை சேர்ந்த அன்பர் என்று தெரிகிறது.

    ஏன் என்றால் உங்கள் கட்டுரையின் சாராம்சம் என்ன
    அமெரிக்காவின் ஆப்த நண்பர்களான சவுதி அரசின் பணத்தில் பள்ளிவாசலும் கட்டக்கூடாது.அந்த அரசு செலவிடும் மக்கா ஆலயத்திற்கு ஹஜ்ஜி என்ற இஸ்லாமிய கடமையை நிறைவேற்றவும் செல்லக்கூடாது அப்படித்தானே.

    சகோதரரே நீங்கள் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சரி தயவு செய்து உங்கள் முகமூடியை கலட்டி வைத்து விட்டு வாருங்கள் விவாதித்துப்பார்ப்போம்.

    நான் ஏகத்துவ கொள்கையில் உள்ளவன் எனவே உங்களை ஒரு முஸ்லிம் என நம்பி உங்களுக்கு சாதகமாக கருத்து எழுதி எமார்ந்து போகும் என் மற்ற சகோதரர்களைப் போல் ஏமார்ந்து போக மாட்டேன் இன்ஷா அல்லாஹ்.

    உங்களை போன்று பலபேர் முஸ்லிம் போர்வையில் இஸ்லாத்திற்கு எதிராக இந்த வளைத்ததில் விளையாடுகிறார்கள் ஏன் என்றால் உங்களைப் போன்றவர்களால் முஸ்லிம்களிடம் குறை காணும் அளவிற்க்கு இஸ்லாத்தில் ஒரு குறையைக் கூட காணமுடியாது.

    எனவே தான் உங்களைப் போன்றவர்களால் இஸ்லாத்திற்கு எதிராக எடுத்துக் கொள்ளப்பட்ட ஆயுதம் தான் இந்த இஸ்லாமிய பெயர் தாங்கி வரும் வலைத்தளங்கள்.

    உங்களைப் போன்றவர்களுக்கு இலக்கு எங்களைப் போன்று தவ்ஹீத் வாதிகளால் பரப்பபட்டுக் கொண்டிருக்கும் இஸ்லாமியக் கொள்கை இஸ்லாம் அல்லாதவர்களைப் போய் அதிகமாக போய் சேர்வதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    இந்த அகில உலகையும்,உங்களையும்,என்னையும் படைத்து நாளை அளிக்கவும் போகும் எல்லாம் வல்ல இறைவனின் மார்க்கம் இது எனவே உங்களின் கனவுகள் பலிக்காது.

    அல்லாஹ் நாடினால் நாளை நீங்களும் இந்த இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வீர்கள்.

    ReplyDelete
  21. உண்மைக்குரல் பெயரில் உலா வரும்
    ”பாத்தில்” குரல் நண்பருக்கு,

    //ஆனால் ஒன்றுமட்டும் தெளிவாக தெரிகிறது உங்கள் வலைப்பூவின் தலைப்பையும் உங்கள் பெயரையும் முஸ்லிம் பெயராக வைத்துக்கொண்டு இஸ்லாத்திற்கு எதிரான கொள்கையை பிரச்சாரம் செய்யும் மாற்று மதத்தை சேர்ந்த அன்பர் என்று தெரிகிறது.//

    எனது வலைப்பூவைப் பார்த்து என்னை மாற்று மதத்தவன் என்று கணிப்பிடும் உங்கள் வஹ்ஹாபிய அறிவை என்னவென்று சொல்லத் தெரியாமல் தவிக்கிறேன்.

    பிரித்தானிய உளவாளி அப்துல் வஹ்ஹாப் உருவாக்கிய

    இஸ்லாமிய கிலாபத்தை குழிதோண்டி புதைத்த,

    அல்குர்ஆன் வேண்டி நிற்கின்ற ஆட்சிமுறையை இல்லாதொழித்து, மன்னராட்சியின் மௌடீகத்தில் பாலைவனக் கொள்ளை கோஷ்டியான சஊத் குடும்பத்தவரின் கைக்குள் மக்கா, மதீனா புனிதத் தலங்களை சிக்க வைத்து...

    இப்னு சஊத் என்ற கள்ள கோஷ்டியை முஸ்லிம் உம்மத்தின் மன்னர்களாக்கி குர்ஆனின் ஆட்சியை குழிதோண்டி புதைத்து..இஸ்லாத்தை சீரழித்து...

    வெறுமனே பிக்ஹு பிரச்சினைகளை மட்டும் இஸ்லாம் என்று பிரசாரம் செய்து சமூகத்தைப் பிளவுபடுத்திய வஹாபிஹஸம் உங்களுக்கு “மதம்“ என்றால்.. நான் உங்கள் “வஹ்ஹாபி” (இஸ்லாத்தின் எதிரிகளுக்கு உளவு வேலை பார்த்த,பார்த்துக் கொண்டிருக்கும் வழிகெட்ட) மதத்தைச் சார்ந்தவனல்ல.

    நான் ஒரு முஸ்லிம் என்பதற்கு எந்த அமெரிக்க, பிரித்தானிய உளவாளி வஹாபியும் உத்தரவாதம் தர அவசியமேயில்லை. எனது நாடு இலங்கை. நான் இலங்கை ஊடகத்துறையோடு நெருங்கிய தொடர்புள்ளவன்.

    என்னை மாற்று மதத்தவன் என்ற அணிக்குத் தள்ளி விட ஏன் முயற்சிக்கின்றீர்கள்? நான் முன்வைக்கும் கருத்துகளுக்கு மறுமொழி வழங்க உங்களால் முடியாது என்றிருந்தால மௌனமாக இருப்பதே உங்களுக்கு சௌக்கியமாயிருக்கும்.

    முதலில் நீங்கள் பதித்த கருத்தை நான் போட மாட்டேன் என்று நீங்களே தீர்ப்பும் வழங்கியிருந்தீர்கள்.

    அல்லாஹ்வின் “தீன்“ இஸ்லாத்தைப்பற்றி பேசுகின்ற எனது தளத்தில் மாற்றுக் கருத்துக்கு மதிப்பளிப்பவன் என்ற ரீதியில் அத்தனையையும் நான் அப்படியே விட்டு வைத்துள்ளேன். காரணம் எனது தளத்திற்கு வருபவர்கள் அத்தனைக் கருத்துக்களையும் பார்க்க வேண்டும் என்பதற்காக நான் எதிர்கருத்துகளைக் கூட அழிக்காமல் விட்டு வருகிறேன்.

    எனது ஏனைய பதிவுகளையும் பார்த்து விட்டு முடியுமானால் உங்கள் கருத்துக்களையும் முன்வையுங்கள். அதைவிட்டு விட்டு சும்மா மாற்றுமத லேபல் வழங்குவதிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

    காபிர் முஷ்ரிக் என்ற வாசகங்கள் எல்லாம் உங்களுக்கு கைவந்த கலை. அவை உங்கள் வஹாபிஸத்தின் வாய்மொழிகள். அதை விட்டால் உங்களுக்கு வேறு ஒன்றுமே தெரியாது என்பதற்கு ஆதாரம் தேவையில்ல.

    இலங்கையில் (பேருவலையில்) நீங்கள் ஏற்றிய வஹ்ஹாபிய ஷைத்தானிய தீபம் இஸ்லாத்தையெ கேவலப்படுத்தியிருக்கிறது. மாற்று மதத்தவன் சிரிக்கும் அளவிற்கு இஸ்லாத்தை சீரழித்து விட்டு இன்று இஸ்லாத்தை பேச உங்களுக்கு அருகதை இருக்கிறதா என்பதை மட்டும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!.

    உங்கள் கருத்திலிருந்து ஒன்றை மட்டும் என்னால் ஊகிக்க முடிகிறது. பிரித்ததானிய உளவு நிறுவனம் பிரசவித்த வஹாபிஸத்தை நீங்கள் மதமாக ஏற்றுக்கொள்வதாக இருந்தால் அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் அந்த வஹ்ஹாபிய மதத்தைச் சார்ந்தவனல்ல.

    நான் அமெரிக்க சீ.ஐ.ஏ யுடன் சினேகம் புரியும் சஊதி வஹ்ஹாபிய அரசை வெறுப்பவன்.

    ஆனால் உங்கள் (தஃவா?) செயற்பாடுகளுக்கு அமெரிக்க நேச சஊதி, துபாய், கதார், குவைத், போன்ற அரபு நாடுகளில்செங்கம்பள வரவேற்பு கிடைக்கிறதே! அதன் மர்மம் என்ன? அந்த நாடுகளில் உள்ள வழிகெட்ட ஆட்சியாளர்களுக்கு இஸ்லாத்தை எப்போது சொல்வீர்கள்?

    உண்மையான இஸ்லாத்தை நீங்கள் சொல்பவர்களாக இருந்தால் அரபு மன்னர்களாக இருக்கும் இந்தக் காமக் கூத்தாடிகள் உங்களுக்கு அனுமதி தருவார்களா?

    இஸ்லாத்தை விரும்பாத அவர்கள் உங்கள் செயற்பாட்டிற்கு அனுமதி தருவதிலிருந்தே நீங்கள் இஸ்லாமிய தஃவா செய்பவர்கள் அல்லர் என்பதை நிரூபிக்கிறதே!.


    எனது புகைப்படத்தை நான் எனது பக்கத்தில் போட்டிருப்பதே அச்சம்இன்றி இஸ்லாத்திற்கு எதிராக முஸ்லிம்களுக்குள்ளேயே உருவாக்கப்பட்டிருக்கும் ஸீ.ஐ.ஏ யின் சதிகளை வெளிச்சம் போட்டு காட்டவே,

    அப்படி வேறு நோக்கம் இருந்தால் நானும் உங்களைப் போல் “உண்மைக் குரல்” என்று பெயரைப் போட்டுக் கொண்டு பொய்யை பேசி இஸ்லாத்தின் எதிரிகளான உளவு நிறுவனங்களுக்கு வால் பிடித்து அரபு மன்னர்களை மறைமுகமாக பாதுகாக்கின்ற பித்தலாட்டம் புரியும் அணியில் சேர்ந்திருப்பேன். நஊது பில்லாஹ்....

    மேலும் விபரங்களுக்கு சஊதி நிதி சீ.ஐ.ஏ சதி தொடர்பாக நான் பதித்தவற்றை ஆவேசப்படாமல் வாசியுங்கள்

    இஸ்லாத்தின் எதிரிகளிடமிருந்தும் அரபு மன்னர்களிடமிருந்தும் அல்லாஹ்வின் தீனை பாதுகாக்கும் படி அவனிடமே முறையிடுவோம்.

    ReplyDelete
  22. அஸீஸ் நிஸாருத்தீன் அவர்களே,
    இப்போது தான் (உங்கள் பின்னூட்டம் வழியாக வந்து) இந்தப் பக்கத்தைப் பார்க்கிறேன்.(மிகவும் தாமதமாக :( )

    காத்திரமான பதிவு. அத்துடன் அவதியுறும் இந்தக் காலத்திற்குத் தேவையான கருத்துக்கள்.

    "மற்றும்-
    அரபுகள் இஸ்லாத்தின் மீது பற்று வைத்துள்ளதாய் தோற்றப்பாட்டை உருவாக்கும்,

    பள்ளிவாசல்கள் கட்டுதல்,
    உழ்ஹய்யா கொடுத்தல்,
    கிணறு வெட்டுதல்

    போன்ற குறுகிய வேலைத்திட்டத்தை தஃவா என்ற அடைமொழிக்குள் சிக்கவைத்து பிரசாரம் செய்யும் அரபுகளின் இந்த செயற்பாட்டுக்கு பின்னணியில் ஓர் அரசியல் மறைந்து இருக்கிறது."

    இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு (குருநாகல் பிரதேசத்தில்)பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் கிணறு தோண்டினார்கள்.அந்தக் காலப்பகுதியில் தோண்டிய எந்தக் கிணறையும் அவர்கள் கட்டவில்லை.(கிணறு தோண்டும் போது புகைப்படங்கள் எடுத்தார்கள்.என்ன நடந்திருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது தானே?.)பள்ளிக் கூடப் பிள்ளைகளுக்கு ஆபத்தின் வாயிலைத் திறந்து வைத்துவிட்டு எந்தச்சுவடும் இன்றி அந்தக் கொடை வள்ளல்கள் மறைந்து விட்டார்கள்.

    எந்தப் பயன்பாட்டுக்கும் உதவாத வகையில் அவர்கள் தோண்டிவைத்துச் சென்ற குழிகளை பாடசாலை நிர்வாகத்தினர் மூடினர்.

    இவ்வாறு சவூதி அரசு மட்டுமல்ல இடைத்தரகர்களும் 'மகத்தான பணி' புரிகின்றனர்.

    ReplyDelete
  23. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  24. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  25. உங்களின் வலைப்பூவை பார்க்கும்படி எனது நண்பர்களுக்கு பரிந்துரைத்துள்ளேன்....

    nidurali
    nidurseasons.com

    ReplyDelete
  26. அஸ்ஸலாமு அழைக்கும்,

    சஹோதரரே நான் தொடர்ந்து உங்கள் வலைப்பூவை பார்த்துக்கொண்டு இருக்கிறேன் .முதலில் மன்னிக்கவும் உங்கள் அனுமதி இல்லாமல் உங்களின் பல பதிவுகளை பதிவிட்டு இருக்கிறேன்.ஒன்று மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.இன்று ஏகத்துவம் ?என்ற பயரில் இஸ்லாத்தை குழிதோண்டி புதைக்கும் பணிகள் மிக வேகமாக நடை பெட்டரு கொண்டு இருக்கிறது.நிச்சயம் இறைவன் இவர்களை பற்றி உண்மைகளை இந்த இஸ்லாமிய உம்மஹ்விர்க்கு வெளிப்படுத்துவான்.மீண்டும் இது போன்ற பல பதிவுகளை நான் எதிர்பார்க்கிறேன்.அடுத்து சவூதி யை பற்றி அதிகமாக பேச வேண்டாம்.ஏன் என்றல் அவர்களை பற்றி அவர்களின் இஸ்லாத்தை பற்றியும் நமக்கு தெரிந்தவர்கள் அங்கிருந்து வருபவர்கள் சொல்வதில் இருந்து தெரிஹிறது.நக்கு எதிராக நடக்கும் சதிகளை பற்றி அதிகமாக எழுதுங்கள்.

    ReplyDelete
  27. அஸ்ஸலாமு அழைக்கும்,

    சஹோதரரே நான் தொடர்ந்து உங்கள் வலைப்பூவை பார்த்துக்கொண்டு இருக்கிறேன் .முதலில் மன்னிக்கவும் உங்கள் அனுமதி இல்லாமல் உங்களின் பல பதிவுகளை பதிவிட்டு இருக்கிறேன்.ஒன்று மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.இன்று ஏகத்துவம் ?என்ற பயரில் இஸ்லாத்தை குழிதோண்டி புதைக்கும் பணிகள் மிக வேகமாக நடை பெட்டரு கொண்டு இருக்கிறது.நிச்சயம் இறைவன் இவர்களை பற்றி உண்மைகளை இந்த இஸ்லாமிய உம்மஹ்விர்க்கு வெளிப்படுத்துவான்.மீண்டும் இது போன்ற பல பதிவுகளை நான் எதிர்பார்க்கிறேன்.அடுத்து சவூதி யை பற்றி அதிகமாக பேச வேண்டாம்.ஏன் என்றல் அவர்களை பற்றி அவர்களின் இஸ்லாத்தை பற்றியும் நமக்கு தெரிந்தவர்கள் அங்கிருந்து வருபவர்கள் சொல்வதில் இருந்து தெரிஹிறது.நக்கு எதிராக நடக்கும் சதிகளை பற்றி அதிகமாக எழுதுங்கள்.
    http://islamicummath.blogspot.com

    ReplyDelete

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...