Saturday, 31 December 2011

இஸ்ரேலுக்கு அடிக்கும் போது இந்த நளீமிக்கு வலிக்கிறதாம்!


அகன்ற இஸ்ரேலுக்கு அனுசரணை வழங்கும் அல்லாஹ்வின் நேசர்கள் என்ற எனது இணையதள ஆக்கத்தை யாழ் முஸ்லிம் வலைத்தளம் பிரசுருத்திருந்தது. உண்மையில் இந்த இணையதளம் யாரால் நடாத்தப்படுகின்றது என்று எனக்கும் தெரியாது. ஆனால் அவரகள் இதனை பிரசுரித்தன் மூலம் ஒரு சர்ச்சையில் சிக்கியிருப்பதாக இன்று என்க்குக் கிடைத்த தகவல் ஒன்றின் பிறகே இந்த இணைய பக்கத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அது தொடர்பாக யாழ் முஸ்லிம் வலைத்தளம் பிரசுரித்துள்ள கருத்தையும், இஸ்ரேல் தொடர்பாக நான் எழுதியுள்ள கருத்தை ஜீரணிக்க முடியாமல் குழம்பிப் போயுள்ள நளீமி ஒருவரின் கருத்தையும் இந்த தளம் பிரசுரித்திருக்கின்றது.


கர்ளாவியாலும் ஹிலாரி கிளின்டனாலும் கொலைத்தண்டனை விதிக்கப்பட்ட கதாபியின் நிதியுதவியினால் நிர்மானிக்கப்பட்ட நளீமியா கேட்போர் கூடம்

அகன்ற இஸ்ரேல் தொடர்பாக நான் முன் வைத்திருக்கும் கருத்து பிழையானது என்றால் அதனை சுட்டிக்காட்டும் உரிமை இந்த நளீமிக்கு இருக்கிறது. அவா் சரியான நடுநிலையான ஒருவராக இருந்தால் எனது பத்ர்கள ஆக்கத்தைப்பார்த்து விட்டு தனது எதிர்ப்பை நேரடியாக எனக்குத் தெரிவித்திருக்க முடியும். ஆனால் அவர் செய்யவில்லை.

இன்றைய உலக ஏகாதிபத்தியமும், இஸ்ரேலும் விரித்துள்ள சதி வலையையும், உலகளாவிய முஸ்லிம் உம்மத் எதிர்நோக்கும் சவால்களையும். இந்த சதி வலையில் வீழ்ந்துள்ள இவர்களால் மகா மேதைகள் என்று போற்றப்படுகின்ற கர்ளாவி பற்றியும் நான் எழுதியுள்ளேன்.  கர்ளாவிக்கும் கத்தாருக்கும் உள்ள உறவையும், கத்தாருக்கும் இஸ்ரேலுக்கும் உள்ள உறவையும் நான் தோலுரித்துக் காட்டினேன்.

இஸ்ரேலை நேசிக்கும் கத்தாரும், கத்தாரை நேசிக்கும் கர்ளாவியும், கர்ளாவியை நேசிக்கும் இவர்களும் ஓரணியில்தான் நிற்கின்றார்கள். 


இஸ்ரேல் பற்றி எழுதும் போதும், இஸ்ரேலினதும், அரபுகளினதும் பாதுகாவலன் அமெரிக்கா பற்றி எழுதும் போதும் இவர்கள் உணர்ச்சிவசப்பட்டு ஆடிப்போகிறார்கள்.
                                                             
                                                              பேசும் படங்கள் 

- கத்தாருக்கும் கர்ளாவிக்கும் உள்ளநட்பு


கத்தாருக்கும் இஸ்ரேல் தலைவர்களுக்கும் உள்ள நட்பு

எனது கருத்து தவறானதாக இருந்தால் அதற்கு ஆதாரத்தோடு மறுக்கின்ற உரிமை இந்த நளீமிக்கு இருக்கிறது. மாறாக கர்ளாவியை ஏற்றுக்கொள்வது ஈமானின் ஒர் அம்சம் என்ற நிலையில் இன்று இவர்கள் கர்ளாவிக்கு எதிராக கதைத்தால் பதற்றப்பட்டு போகிறார்கள்.

இவர்களின்செயற்பாட்டைப் பார்க்கும் போது கர்ளாவியை என்னவோ கடைசி நபியாக ஏற்றுக்கொண்டவர்கள் போல்தான் தெரிகிறது.  தவறுகள் பிழைகள் செய்யாமல் இருப்பதற்கு கர்ளாவி என்ன கடைசி நபியா?இவர் என்ன அல்லாஹ்விடமிருந்து ஒளியாக வழிகாட்ட வஹீயை பெறுகின்றாரா?

முன்மாதிரியாய் பின்பற்றுவதற்கு கர்ளாவி என்ன அல்லாஹ்வால் உலகிற்கு அருளப்பட்ட அருட்கொடையா?

பாவங்கள் தவறுகளிலிருந்து பாதுகாக்கப்பட்ட அல்லாஹ்வின் அருட்கொடை அல்லாஹ்வின் இறுதித் துாதர் றசூலுல்லாஹ் (ஸல்)  அவர்களுக்கு இணையாக வைத்து அல்லவா இவர்கள் இந்த கர்ளாவியை பார்க்கின்றார்கள்?


கர்ளாவி ஐ நா படை சிரியாவிற்குள் வர வேண்டுமென்று கோரிக்கை விட்டதை நான் விமர்சித்திருக்கிறேன். இதை கர்ளாவியின் பாஷையில் சொல்வதாக இருந்தால் அல்லாஹ்வின் உதவியை விட்டு விட்டு ஐநா போன்ற தாகூத்களின் தயவை இவர் நாடியிருக்கிறார். நீதி நியாயம் வேண்டி தாகூத்களிடம் சரணாகதியடைந்த கர்ளாவியின் அறிவு நிலையை கடைந்தெடுத்த முட்டாள் தனம் என்றே குறிக்க முடியும்.

கதாபியை சுட்டுக்கொல்லுங்கள் என்று பத்வா விட்டதை நான் எதிர்த்திருக்கிறேன். இதே பத்வாவை அவர் அமெரிக்காவின் நண்பர்களான ஹுஸ்னி முபாரக்கிற்கும், பின் அலீக்கும் ஏன் வழங்கவில்லை என நான் கேள்வி எழுப்பியிருக்கிறேன். இந்த பத்வாவின் பின்னணியில் உள்ள அமெரிக்க அரசியல் நலனை நான் விளக்கியிருக்கின்றேன்.  சகோதரரே! கர்ளாவியை விடுங்கள் இதற்கு நீங்கள் தரும் விளக்கம் என்ன?  கர்ளாவி சொல்வது சரியா? கதாபிக்கு மட்டும் என் இந்த பத்வாவை வெளியிட்டார்?

கதாபி கொலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கர்ளாவியோடு சேர்ந்து அமெரிக்க அரச செயலர் ஹிலாரி கிளின்டனும் முன்வைத்தார். கதாபியை கொலை செய்வதற்கு ஒரு தினத்திற்கு முன்னர் லிபியாவிற்கு விஜயம் செய்த கிளின்டன் வெகுவிரைவில் கதாபி கொலை செய்யப்படுவார் என்று பகிரங்கமாக அறிவித்தார்.

கிளின்டனின் அரசியலில் ஒரு கைதியை கொலை செய்வது ஒரு பெரிய விவகாரமல்ல. வெள்ளை மாளிகையின் கொள்ளை அரசியல் அதற்கு இடம் கொடுக்கிறது.

 கர்ளாவினதும் ஹிலாரி கிளின்டனினதும் வேண்டுகோளின் பேரில் 
ஒரு கைதிக்கு கொலை தண்டனை நிறைவேற்றப்படுகிறது
ஆனால் இஸ்லாமிய ஷரீஆ இதற்கு இடம் கொடுக்கிறதா? ஆடு மாடுகளை அறுப்பது போல் ஒரு கைதியை கதறக் கதற தக்பீர் முழங்கி குதறி எடுப்பதை இந்தக் கர்ளாவியின் அமெரிக்க சார்பு 'கர்ளாவி இஸ்லாம்' அங்கீகரிக்கின்றது.
றசூலுல்லாஹ்வின் வழிமுறை இதனை வெறுக்கிறது. இந்தக் கொடூர செயல் ஷரீஆவிற்கு மட்டும் முரணானதல்ல, மனித பண்பாட்டுக்கும், நாகரீகத்திற்கும் எதிரானது.  மனித உரிமைக்கு எதிரானது. கர்ளாவி பக்தர்கள் இது விடயத்தில் மௌனம் காக்கின்றார்கள்.

ஆனால் அல்லாஹ்வின் சட்டம், றசூலுல்லாஹ்வின் வழிமுறை இதற்கு மாற்றமானது. ஒரு கைதி அவன் சரணடைந்தாலோ, பிடிபட்டாலோ அவனை பாதுகாக்கின்ற பொறுப்பு வெற்றியாளர்களுக்குச் சேர்கிறது. இதுதான் இஸ்லாத்தின் போதனை.   இந்தப் போதனையை நேட்டோ படையோடு சேர்ந்து நிராகித்த கர்ளாவிக்கும், கர்ளாவியின் பக்தர்களுக்கும் இஸ்லாத்தைப் பற்றி பேசுவதற்கு இனியும் இடமிருப்பதாக நான் நினைக்கவில்லை.

இவர்களின் கருத்துப்படி கதாபி ஒரு காபிராக இருந்தால் அவரிடம் உதவி பெற்று நளீமியாவில் கட்டப்பட்டிருக்கும் மாநாட்டு மண்டபத்தை உடைத்து தரைமட்டமாக்க வேண்டும். கர்ளாவியினதும் அமெரிக்க இராஜாங்க செயலர் ஹிலாரி கிளின்டனினதும் கருத்தப்படி கொலை செய்யப்படக் கூடிய ஒரு பாவியிடமிருந்தல்லவா அந்தக் கட்டிடத்திற்கு பண உதவி பெற்றிருக்கின்றீா்கள். கதாபியை உங்களைப் போன்ற கர்ளாவியின் பக்தர்களின் கொலை செய்வதற்கு சிறிது காலத்தின் முன் நளீமியாவின் மாநாட்டு மண்டபத்தை மறுசீரமைக்க நிதி உதவி வழங்கினாரே? அந்த உதவி கிடைக்கும் போது நளீமியாவின் ஆசான்களாக இருக்கும் கர்ளாவிக் குஞ்சுகள் ஏன் கண்ணை மூடிக்கொண்டு இருந்தார்கள்?

சகோதரரே, உங்கள் தேடலை கர்ளாவியோடு மட்டும் கட்டுப்படுத்திக்கொள்ளாமல், பூகோள அரசியலையும், அதன் நகர்வுகளையும் கொஞ்சம் தேடிப்படியுங்கள். இஸ்லாமிய இயக்கங்களின் வெற்றி தோல்வியில் இந்த பூகோள அரசியல் எப்படி பாதிப்பைச் செலுத்தியிருக்கிறது என்பதைப் பாருங்கள். ஆனால் நீங்கள் இவற்றைச் செய்யாமல் இஸ்ரேலுக்கு எதிராக எழுதப்பட்ட ஆக்கத்தை அதாவது 'இந்த அகன்ற இஸ்ரேல் விவகாரம்'' த்தை பிரசுரித்ததன் மூலம் யாழ் முஸ்லிம் வலைத்தளத்தின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுவிட்டதாக கடிந்துக் கொண்டுள்ளீர்கள்.

இந்தக் கட்டுரை வெளிவந்ததன் பின்னர் உங்களைப் போன்று பலர் இப்படி குழம்பிப் போயிருப்பதாக நான் உணர்ந்தேன். அரபு நாடுகளில் போன்று எதிர்வரும் காலத்தில் இஸ்ரேல், அமெரிக்கா தொடர்பான எந்தவித கருத்தையும் உச்சரிக்க முடியாத ஒரு நிலை இலங்கையிலும் உருவாகலாம்.  உலக ஏகாதிபத்தியத்தைப் பாதுகாக்கின்ற அரபு அரசியலின் தாக்கம் இலங்கையில் வேர்விட்டிருக்கிறது. உங்கள் கருத்தும் இந்த அச்சுறுத்தலைத்தான் விடுக்கிறது.

இந்த நளீமி யாழ் முஸ்லிம் தளத்தின் பெயருக்கு கலங்கம் ஏற்படும் அளவிற்கு எனது கட்டுரையில் என்ன இருந்தது என்பதை கூறவில்லை. நான் உலகப் புகழ்பெற்ற அறிஞர் ஒருவரை அமெரிக்காவின் ஏஜன்ட் என்று கூறியதுதான் கலங்கமாக இருந்தால். நான் முன்வைதிருக்கும் கருத்துக்கு, தர்க்கத்திற்கு அவர் பதிலளித்து தெளிவு படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவர் அதனைச் செய்யாமல் முழுப்பூசணிக்காயை சொற்றில் மறைக்கும் சொத்தை வாதத்தை முன் வைத்திருக்கினறார்.

இன்று நளீமிகளில் சிலர் இந்த அறிவுத்தரத்தில் தான் இருக்கின்றார்கள். இவர்களின் இந்த போக்கு தொடர்பாக எனது மனதிலுள்ளதை இங்கு பதிவது அவசியம் என நினைக்கிறேன்.

சமூகத்தில் அறிவியல் ரீதியிலான பாரிய மாற்றம் ஒன்றை வேண்டியே இந்த நளீமியா உருவாக்கப்பட்டது. நளீம் ஹாஜியாரின் நிய்யத்தும் அது ஒன்றாகவே இருந்தது.

நளீமிகள் நவீன சிந்தனையாளர்களாக உருவாக வேண்டும். சாரம் அணிந்துக்கொண்டிருந்த மௌலவிகளுக்கு காற்சட்டை அணிவிக்க வேண்டும் என்ற நோககத்தில் மர்ஹூம் நளீம் ஹாஜியார் நளீமியாவை உருவாக்கவில்லை.  

நவீன சிந்தனையாளர்களை உருவாக்கும் நோக்கில் உதயமான இந்த கலாபீடத்தில் இன்று என்ன நிகழ்கின்றது?

சிந்தனையாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களின் கருத்துக்களை காவித்திரியும், சொல்லித்திரியும் செல்லக்கிளிகளாக இவர்கள் இன்று மாற்றம் பெற்று வருகின்றார்கள்.  இவர்கள் அறிஞர்களாக மாறாமல் குறிப்பிட்ட சில அறிஞர்களின் கருத்துக்களை பிரசாரம் செய்யும் பீரங்கிகளாக இருக்கின்றார்கள்.


இன்று நளீமிகள் சில எகிப்திய அறிஞர்கள் கருத்துக்களின் காவிகளாகவே இருக்கின்றார்கள். ஒரு காலத்தில் நளீமியாவில் இருந்த ஒரு சில மேல் வகுப்பு மாணவர்களால் நாங்களும் அப்படி வழி நடாத்தப்பட்டடோம். பெற்ற தாய் தந்தையரை காபிர்கள் என்று சொல்லும் அளவிற்கு இந்த எகிப்திய அறிஞர்களின் தாக்கத்தால் நாங்கள் மூளைச் சலவை செய்யப்பட்டோம்.


அன்றிருந்த நளீமியா நிர்வாகம் எங்களுக்கு தகுந்த பதிலை தந்து எங்களை இந்த மோசமான கருத்திலிருந்து நீக்குவதற்கான சூழ்நிலையை உருவாக்கியது. இன்றொ நளீமியாவின் நிலை வேறு உலக ஏகாதிபத்தியத்தினதும், அதைப்பாதுகாக்கின்ற அரபு அரசியலினதும் வாரிசுகள் இன்று நளீமியாவை ஆட்சி செய்கின்றார்கள். அவர்களினால் மூளைச் சலவை செய்யப்படுகின்ற நளீமிகள் குறுகிய மட்டத்தில் சிந்திக்கின்றார்கள். இந்த இஸ்ரேல் தொடர்பான எனது கருத்தைக் கண்டு கலங்கிப் போயிருக்கும் இந்த சகோதரரும் அந்த இனத்தைச் சார்ந்தராக இருக்க முடியும் என்பதே எனது கணிப்பு.

இன்றைய பல நளீமிகள் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்களாகவே இருக்கின்றார்கள்.  

நான் எனது கருத்தை யாருக்கும் அச்சமின்றி எடுத்துச் சொல்கின்றேன். அல்லாஹ்வினது தீனுக்கும் அவனது தூதர் நபிஸல்) அவர்களினது றிஸாலத்திற்கும் எதிரிகள் செய்கின்ற சதிகளை உலகறியச் செய்ய வேண்டும் என்ற அவாவில் எனது தேடலில் கிடைக்கும் தகவல்களை நான் எழுதி வருகின்றறேன். நான் புனைப்பெயருக்குள் புகுந்து விளையாடுபவனும் அல்ல.  எனது தளத்திற்கு வருகின்ற பின்னூட்டங்களை நான் அப்படியே பிரசுரிக்கின்றேன்.  அநாகரீகமாக வருகின்ற அல்லது நான் எழுதிய கருத்துக்குப் பொருந்தாதவற்றை நான் நீக்கிவிடுகின்றேன்.

அகன்ற இஸ்ரேல் தொடர்பாக நான் எழுதிய ஆக்க்ம், சமகால அரபு அரசியலை நேசிப்பவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆத்திரப் படுவதற்கு உங்களுக்குள்ள உரிமையை நான் மறுப்பதற்கில்லை.  ஆனால் நீங்கள் ஆத்திரப்படுவதற்கான நியாயத்தை சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். அதைவிட்டு விட்டு உலகப் புகழ்பெற்ற அறிஞரை(?)  நான் குற்றம் சாட்டுவது தான் பிழையென்று நீங்கள் சொல்ல முயல்வது அறிவில் உங்களுக்குள்ள குறையே தவிர வேறொன்றுமில்லை.

பத்ர்களத்தின் வாசகர்களுக்காக இந்த நளீமி, யாழ் முஸ்லிம் இணையத்திற்கு அகன்ற இஸ்ரேல் மீதுள்ள மறைமுக பற்றினால் வழங்கியதாக நான் உணரும்அவரின் உபதேசத்தை அப்படியே கீழே பதிவிடுகின்றேன்.

நன்றி!
ஏ.அஸீஸ் நிஸாருத்தீன்
0094 777 636 138

உங்களுடைய வலைத்தளத்தை நீங்கள் சிறப்பாகச் செய்யும் போது சில ஆக்கங்களினால் உங்களுடைய வலைத்தளத்தின் நற்பெயருக்கு கெட்ட பெயர் ஏற்படுகின்றது. 
                                                                                          இது நளீமியின் குற்றச்சாட்டு


யாழ் முஸ்லிம் வலைத்தளம் குறித்து பல்வேறு மட்டங்களில் ஆரோக்கியமானதொரு பார்வை நிலவுவதை நாம் அறிவோம். பலர் தமது கருத்துக்களையும் எழுதி அனுப்புவார்கள். சிலர் விமர்சனங்களையும் முன்வைப்பார்கள். சிலவேளைகளில் சிலருடைய ஆக்கங்களை நாம் பதிவேற்றம் செய்யும்போது, அந்த ஆக்கத்தில் சொல்லப்பட்ட கருத்துநிலையில்தான் யாழ் முஸ்லிம் பயணிக்கிறது என்று அபிப்பிராயம் கொள்வோரும் உள்ளனர்.

அந்தவகையில் அண்மையில் நாம் அஸீஸ் நிஸாருத்தீன் என்பவருடைய கட்டுரையொன்றை பதிவிட்டோம். அக்கட்டுரை சில சர்ச்சைகளை எற்படுத்தியது. சிலர் அதுபற்றி எம்முடன் தொடர்புகொண்டு விளக்கம் கோரினர். நாமும் அவர்களுக்கு விளக்கினோம். அவ்வாறு எமது விளக்கத்தையடுத்து எம்மை வந்தடைந்த ஈமெயில் கடிதமொன்றை இங்கு பதிவிடுகிறோம்.

ஹாலிக் அல் அர்ஷத் (நளீமி)

உங்களுடைய வலைத்தளத்தை நீங்கள் சிறப்பாகச் செய்யும் போது சில ஆக்கங்களினால் உங்களுடைய வலைத்தளத்தின் நற்பெயருக்கு கெட்ட பெயர் ஏற்படுகின்றது. தனிப்பட்ட ரீதியில் எனக்கு அஸீஸ் நிஸார்தீன் பற்றி எதுவும் தெரியாது. நான் நேரடியாக இதுவரை அவரை சந்தித்ததும் இல்லை. அண்மையில் அவருடைய ஆக்கங்களை வாசிக்கும் போதுதான் அவர் பற்றிய சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. ஒரு முன்னணி இஸ்லாமிய அறிஞ்சரை அமெரிக்காவின் நண்பன் என்று விமர்சித்து எழுதும் அளவுக்கு அவரின் எழுத்துக்கள் உள்ளது. 

அஸீஸ் நிசாருதீன் ஒருவிடயத்தை எழுதவும், பதிவிடவும் உரிமை பெற்றுள்ளார். அவருக்குள்ள உரிமையை மதிக்கிறேன். என்ற யாழ் முஸ்லிம் வலைத்தளத்தின் கருத்தை  நானும் ஏற்றுக்கொள்கிறேன்.


உண்மையில் நீங்கள் தவறுதலாகத்தான் இந்த ஆக்கத்தை பிரசுரித்திருப்பீர்கள் என்றே நான் எண்ணினேன்.  உங்களுடைய வலைத்தளம் பற்றி எனக்குச் சந்தேகமில்லை. ஆக்கபூர்வமான ஆக்கங்களை உங்களது வலைத்தளத்தில் நான் வாசித்திருக்கிறேன். உங்கள் பணியைத் தொடருங்கள்.

யாழ் முஸ்லிம் வலைத்தளம் என்று பெயரை வைத்து யாழ் முஸ்லிம்களைப் பற்றிய செய்திகளை மட்டும் வெளியிடாமல் பொதுவான ஆக்கங்கள், செய்திகளை நீங்கள் பிரசுரிப்பதால் உங்களுடைய வலைத்தளம் ஒரு குறுகிய வட்டத்துக்குள் இல்லாமல் பலராலும் வாசிக்கப்படும் ஒரு வலைத்தளமாக மாறியுள்ளது. அதன் மூலம் யாழ் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் (உ.ம். மீள் குடியேற்றம்) போன்ற பிரச்சினைகளை உங்களால் மக்கள் மயப்படுத்த முடிந்திருக்கிறது. 

முஸ்லிம்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை மாற்று மத தமிழ் சகோதரர்களும் அறிந்து கொள்வதற்கான சூழலை இதன் மூலம் உருவாக்கியிருக்கிறீர்கள். அதுவே உங்கள் வலைத்தளத்தின் வெற்றிக்கான போதுமான சான்றென நினைக்கிறேன். இன்ஷா அல்லாஹ் நீங்கள் உங்களுடைய வலைத்தளத்தை blogspot இலிருந்து .com / .lk க்கு மாற்ற வேண்டுமென எதிர்பார்க்கிறேன். ஏனெனில், சொந்த வலைத்தளம் நடாத்துவதற்குத் தேவையான போதுமான வாசகர்களை உங்களுடைய வலைத்தளம் கொண்டுள்ளது. நிர்வாகச்செலவுகளை நிவர்த்தி செய்ய விளம்பரங்களைப் பிரசுரிக்கலாம்.

உங்களது முயற்சிகள் அனைத்தையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக. ஆமீன்.


ஹாலிக் அல் அர்ஷத் (நளீமிஅகன்ற இஸ்ரேலுக்கு அனுசரணை வழங்கும் அல்லாஹ்வின் நேசர்கள்.


1 comment:

  1. Did u notice Naleemiyya Building?
    (Dajjal's)one single EYE.it is looks like Illuminati Building.

    ReplyDelete

ஞானசார தேரர் சிறைச்சாலையில் 'ஜம்பர்' அணிவது பிரச்சினையா?

ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தை வைத்து சிங்கள இனவாதிகள் தமது வழமையான இனவாத பிரசாரத்தை முடுக்கி விட்டுபோராட்டங்களை ஆரம்பித்...