Wednesday, 22 July 2009

இரத்தம் தோய்ந்த கைகளும் இஸ்லாத்தின் காவலர்களும்


உலகளாவிய ஏகாதிபத்தியம் அடக்குமுறையின் மூலம் முழு உலகையும் ஆட்டிப் படைக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது.

எகாதிபத்தியத்தின் சுரண்டலுக்கு இரையாகாமல் தப்பி வாழ்வது இயலாத காரியமாய் இருக்கிறது. தனது விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சியை தனக்கே உரிய அதிகார சக்தியாய் ஆக்கிக்கொண்ட அமெரிக்கா மனிதம் வெட்கித் தலை குனியும் அளவிற்கு மனிதநேயத்திற்கு எதிராக எழுந்தக்கொண்டிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் அநியாயத்தின் பொதுச்சின்னமாக அது அடையாளமாகியிருக்கிறது.


இஸ்லாம் உலகில் நீதத்தை நிலைநாட்ட வந்த பூரண வாழ்க்கைத் திட்டமாகும். இஸ்லாத்தை இதயத்தில் சூடிக்கொண்ட ஒரு சமூகத்தால் அநியாயம் செய்யும் ஓர் அசத்திய சக்தியை ஆப்த நண்பனாய் ஆக்கிக்கொள்ள முடியாது.

அல்குர்ஆன் கண்டிக்கும் ஒரு சக்தியை அதரிக்கவே முடியாது. அந்த அக்கிரம சக்திக்கு அடிபணிய முடியாது. அந்த சக்தியை தோழனாக ஏற்று அவன் தோள்களில் தொங்க முடியாது.

இஸ்லாத்தை தனது கொள்கையாக வைத்திருப்பதாய் சொல்லிக்கொள்ளும் சஊதி போன்ற ஒரு நாடு ஓர் அநியாயக்கார நாட்டை எப்படி ஆதரிக்க முடியும்?

இஸ்லாத்தை அழிக்கும், முஸ்லிம்களை பூண்டோடு அழிக்க தருணம் பார்த்து இருக்கும் அராஜக சக்தியொன்றின் இரத்தம் தோய்ந்த கைகளை நேசக்கரமாய் நினைத்து முத்தமிட முஸ்லிம் ஒருவனுக்கு மனம வருமா?

காஸாவில் ஆயிரக்கணக்கான சிறுவர்களும், பெண்களும், வயோதிபர்களும் கொலையுண்டு குற்றுயிராய் வீழ்ந்தபோது....அல்லாஹ்வின் தீனை ஏற்றுக்கொண்ட இந்த முஸ்லிம் உம்மத் இரத்த வெள்ளத்தில் மடிந்து சிதைந்த போது மௌனமாய் இருந்து சஊதி அரேபியா இஸ்ரேலின் கொடுமைக்கு குரல் கொடுக்க முடியாமல் திணறி நின்றதன் தாத்பரியம் என்ன?

தனது நேச நாடான அமெரிக்காவுக்கு நெருக்குதல் கொடுத்து பலஸ்தீ்ன் முஸ்லிம்களை பாதுகாக்க அது ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை?

அமெரிக்க கூலிப்படைக்கு முஸ்லிம்களை கொன்று குவிக்க தரை மார்கமாக ஈராக்கை ஆக்கிரமிக்க தனது நாட்டை தளம் அமைத்துக் கொடுத்து அந்த கொடுமைகளில் பங்கேற்றதற்கான காரணம் என்ன?

பத்து லட்சத்திற்குமதிகமான ஈராக்கிய முஸ்லிம்களின் படுகொலைக்கு பக்கபலமாக நின்று அமெரிக்க தன் உற்ற நண்பனுக்கு உதவி செய்துள்ளது.

இஸ்லாத்தை பூண்டோடு அழிப்பதற்கும், முஸ்லிம் நாடுகளை ஆக்கிரமிப்பு செய்வதற்கும் ஏதுவாக அமைந்த செப்டம்பர் 11தாக்குதலுக்கு பின்னணியில் இருந்து சஊதி அரச குடும்பம் உதவி புரிந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.

“இஸ்லாமிய பயங்கரவாதம்” என்ற சொற்றொடரை அமெரிக்கா உலகிற்கு அறிமுகப்படுத்த சஊதி ஸீ.ஐ.ஏ உடன் சேர்ந்து ஆப்கானிஸ்தான் நாட்டில் அரங்கேற்றிய ஜிஹாத் நாடகம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

தாலிபான்கள் என்ற அறிவு இல்லாத ஆன்மிக தலைமைத்துவம் ஒன்றுக்குள் ஆப்கானை சிக்க வைத்து இஸலாம் பிற்போக்கான மதம் என்ற மோசமான கருத்தை பரப்பவதற்கு சஊதியும் மறைமுக காரணியாக செயற்பட்டிருக்கிறது.

ஆப்கான் சிவிலியன்களை இராணுவ மயமாக்கிய “ஆப்கான் ஜிஹாத்” இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற பதத்தின் மூலம் இஸ்லாத்தின் பெருமைக்கு மாசு கற்பிக்க காரணமானது.No comments:

Post a Comment