Tuesday 21 July 2009

இஸ்லாமிய பயங்கரவாதம் ? கெட்ட நண்பர்களின் கூட்டுச் சதி!


இஸ்ரேலின் நண்பன் அமெரிக்கா
அமெரிககாவின் நண்பன் சஊதி அரேபியா
ஆக இஸ்ரேல், அமெரிக்கா, சஊதி அரேபியா மூவரும் கூட்டு நண்பர்கள்.

இதை இப்படியும் சொல்லலாம் அமெரிக்காவிற்கு இரண்டு நட்பு நாடுகள் இருக்கின்றன.

ஒன்று இஸ்ரேல்

மற்றையது சஊதி அரேபியா.

வேடிக்கை என்னவென்றால் அமெரிக்காவும் இஸ்ரேலும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழித்து ஒழிக்க வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு களம் இறங்கியிருக்கும் இரண்டு நாடுகள்.

ஒரு சிறு பிள்ளையிடம் புதிர் கேள்வியொன்றாய் மேலே நான் சொன்ன நட்பு தொடர்பான தர்க்கத்தை முன்வைத்து இஸ்ரேலுக்கு உள்ள இரண்டு நண்பர்கள் யாவர் என்று கேட்டால் அந்த சின்ன பிள்ளை சஊதியும் அமெரிக்காவும் என்று சற்றென்று பதில் சொல்லும்.


சஊதி அரேபியா இஸ்லாத்தைப் பாதுகாப்பதாக (?) சொல்லிக் கொள்ளும் ஒரு நாடு. இஸ்லாத்திற்கு எதிரான அமெரிக்காவுடன் அதற்கு இருக்கும் நட்பு மிகவும் நெருக்கமானது. அமெரிக்காவின் தந்திரோபாய “ எண்ணெய் அரசியல்” மத்திய கிழக்கை அதிக்கம் செலுத்துவதற்கு சஊதி பாரிய பங்களிப்பைச் செய்து வருகிறது.

மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்தை சூறையாடும் அமெரிக்காவின் தந்திரத்திற்கு இருப்பது இரண்டு விதிகள்.

ஒன்று நண்பனாய் நெருங்கி வளங்களை விழுங்குவது

அடுத்தது, விரோதி, பயங்கரவாதி என்ற பெயர்சூட்டி பொருளாதாரத் தடை, போர் என்று கூறி அத்துமீறி அந்தந்த நாடுகளுக்குள் ஆக்கிரமிப்பாளனாய் நுழைந்து அந்த நாட்டின் செல்வங்ளை சூறையாடுவது.

துரதிர்ஷ்டவசமாக இந்த இரண்டு நிலைமைகளுக்கும் மத்திய கிழக்கின் அரபு ஆடசியாளர்கள் இரையாகியிருக்கின்றார்கள். சாத்தானோடு இந்த மன்னர்களுக்குள்ள சிநேகம் இவ்வுலகிலே அவர்களுக்கு சுவர்க்கத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளது. இஸ்லாத்திற்கு அழிவை கொடுத்துள்ளது.

கஃபாவின் ஒளியைச் சுமந்த பூமியில் இன்று ஜாஹிலிய்யத் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இஸ்லாத்தின் உயிரோட்டமான கிலாபத் கொச்சைப்பட்டுக்கொண்டிருக்கிறது. அல்குர்ஆன் வேண்டி நிற்கும் ஆட்சிஅங்கு குழிதோண்டி புதைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஷரீஅத் முலாம் பூசப்பட்ட போலி ஆட்சி இஸ்லாத்தின் புனிதத்தை அங்கு புதைத்துக்கொண்டிருக்கிறது.

அமெரிக்கா இஸ்ரேலை போஷித்து மத்திய கிழக்கில் அராஜகத்தை வளர்ப்பதபோல். சஊதியை நேசித்து அங்கு ஜாஹிலிய்யத்திற்கு புத்துயிர் அளித்துக்கொண்டிருக்கிறது.

அமெரிக்கா, இஸ்ரேல், சஊதி
மூவரும் நண்பர்கள்தான் ஆனால் ஒரு வித்தியாசம்!

இந்த மூவருக்குள்ளேயே வெளிப்படையான நட்பும், உள்ரங்கமான நட்பும் இருக்கிறது. சஊதி அமெரிக்க நற்பு வெளிப்படையானது. அதேபோல் அமெரிக்க இஸ்ரேல் நட்பும்வெளிப்படையானது.

மௌனமாக மறைந்திருக்கும் நட்பு சஊதிக்கும் இஸ்ரேலுக்குமிடையில் இருக்கிறது. அதனால் இஸ்ரேலின் அடாவடித்தனங்களை சஊதி அவ்வளவாக கண்டுகொள்வதில்லை. இஸ்ரேலினால் அபகரிக்கப்பட்ட முஸ்லிம்களின் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸைப் பற்றி சஊதி மூச்சு விடுவதுமில்லை.
மாறாக ஆப்கான் மண்ணிலிருந்து ரஷ்யாவை விரட்டி அமெரிக்காவிற்கு அதைப் பெற்றுக்கொடுக்க பெரிய ஜிஹாதையே பிரகடனப்படுத்தி ஆப்கானுக்குள் பணத்தையும் ஆயதத்தையும் அள்ளி வீசியது.

ஆப்கானை மீட்டு அமெரிக்காவிற்கு கொடுக்க முயற்சி செய்த சஊதி, அல்லாஹ்வின் இல்லமான பைத்துல் முகத்தஸை இஸ்ரேலிடமிருந்து மீட்டெடுக்க எந்த ஜிஹாதையும் பிரகடனப்படுத்தவில்லை. பலஸ்தீன் போராளிகளுக்கு எந்த ஆயுதத்தையும் வழங்கவில்லை.
ஆயுதமயமாக்கப்பட்ட ஆப்கானுக்கும், அமெரிக்கா இஸ்லாத்திற்கு எதிராக குற்றம் சாட்டும் “அடிப்படைவாதம்” “பயங்கரவாதம்” என்ற பதப்பிரயோகத்திற்கும் நேரடி தொடர்புள்ளது. ஆப்கான் போராட்டத்திற்கு பிறகே இந்தப் பெயர் இஸ்லாத்திற்கு சூட்டப்பட்டது. ஆப்கானை ரண களமாக்கிய பெருமை சஊதியையும், அமெரிக்காவையுமே சாரும்.

அமெரிக்காவின் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுக்கு ஊழியம் புரிந்த சஊதியும், அதன் உளவு நிறுவனங்களினால் வழி நடாத்தப்படும் இஸ்லாமிய இயக்கங்களும் இஸ்லாத்திற்கு ஏற்பட்ட இந்த அவப்பெயருக்கு பொறுப்பு சொல்ல வேண்டும்.

அமெரிக்காவின் விருப்பத்திற்காக ஆப்கான் யுத்தத்திற்கு உதவிய சஊதி அல்லாஹ்வின் விருப்பத்திற்கு பலஸ்தீனத்திற்கு உதவவில்லை.

அநீதியாளர்களொடு சஊதிக்கு உள்ள நேசமும், முஸ்லிம் என்று அது போடும் வேஷமும் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

சஊதிக்கும், அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் உள்ள நேரடி, மறைமுக உறவுகளை இப்போது முஸ்லிம்கள் உணர்ந்திருக்கின்றார்கள்.

சரி, இவர்கள் ஒவ்வொருவரும் தமக்கிடையே உள்ள இந்த நட்பை எப்படி பாதுகாத்துக்கொள்கிறார்கள்?

இவர்களின் நட்பிற்கான இலக்கணம் என்ன? அதை இப்போது பார்ப்போம்.

இஸ்ரேலின் அனைத்து ஆக்கிரமி்புகளையும், படுகொலைகளையும், அக்கிரமங்களையும், அநியாயங்களையும் ஆமோதித்து அமெரிக்கா அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குகின்றது.

இஸ்ரேலுக்கு ஆதரவாக ஐ.நா பாதுகாப்பு மன்றில்தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துகிறது. இஸ்ரேலை பாதுகாக்கிறது. சட்ட விரோத இஸ்ரேல் நாட்டுக்கு பக்கபலமாய் நின்று உதவி செய்கிறது. சட்ட விரோத இஸ்ரேல் நாட்டுக்கு சண்டித்தனம் செய்ய சான்றிதழ் வழங்குகிறது.


இதுவே அமெரிக்க இஸ்ரேல் நட்பிற்கு நற்சான்று!

இனி இந்த அமெரிக்க இஸ்ரேல் சஊதி முக்கூட்டு நட்பிற்கு சஊதியின் சான்று என்ன என்று நீங்கள் சிந்திக்கலாம்.

அமெரிக்கா, இஸ்ரேலை அரவணைக்கறது. அதன் அட்டகாசத்தை அடக்கி வாசிக்கிறது?

சஊதி அரேபியாவோ-
அமெரிக்கா இஸ்ரேல் அகிய இரண்டு நாடுகளின் அக்கிரமங்களையும் அட்டகாசங்களையும் அடக்கி வாசிக்கிறது . இரண்டு நண்பர்களின் ஈனச்செயல்களையும் அமைதியாக நின்று ஆமோதிக்கிறது.


2 comments:

  1. இன்னும் எவ்வலவு காலம் தான் சவுதி அரேபியாவை முஸ்லிம்களின் நண்பன் என்று நினைத்து கொண்டிருப்பது?
    இதை விட என்ன ஆதாரம் தேவை அவர்கள் எஹுதியினதும், நசாராக்களினதும் நண்பன் என்று உணர்வதற்கு?
    இன்னும் விளங்கவில்லை என்றால் நெஞ்சின் மேல் கையை வைத்து ஈமானை பரிசோதிக்க வென்றும்!

    ReplyDelete
  2. இன்னும் எவ்வலவு காலம் தான் சவுதி அரேபியாவை முஸ்லிம்களின் நண்பன் என்று நினைத்து கொண்டிருப்பது?
    இதை விட என்ன ஆதாரம் தேவை அவர்கள் எஹுதியினதும், நசாராக்களினதும் நண்பன் என்று உணர்வதற்கு?
    இன்னும் விளங்கவில்லை என்றால் நெஞ்சின் மேல் கையை வைத்து ஈமானை பரிசோதிக்க வேண்டும்!
    யசீதின் ஆட்சியை ஒத்த இவர்களின் ஆட்சியை, இனம் காண தவறினால் மறுமையில், அல்லாஹ்வின் சன்னிதானத்தில், பாமர முஸ்லிம்களை வலி நடத்தும் உலமாக்களின் நிலை? அந்தோ பரிதாபம்!

    ReplyDelete

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...