Wednesday 22 July 2009

அமெரிக்க அடிவருடிகளும் அழிக்கப்பட்ட ஆபகானிஸ்தானும்

80களில் ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமித்தது. அதற்கு எதிராக போராடுவதற்கு, ஜிஹாத் என்ற போர்வையில் அந்த நாட்டு மக்கள் ஆயுதபாணிகளாக்கப்பட்டார்கள். 

ஸீ.ஐ.ஏ பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. உடன் இணைந்து ஆப்கானிஸ்தானிலிருந்து ரஷ்ய துருப்புகளை விரட்டுவதற்கு திட்டம் தீட்டியது. இதற்கு சஊதி அரசு கோடிக்கணக்கான பணத்தை “ஆப்கான் ஜிஹாதிற்காக” கொட்டித் தீர்த்தது.

நீண்ட நாட்களாக ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் மௌனமாக இடம்பெற்று வந்த பனிப்போரை ஆப்கானிஸ்தானில் ஆயுதப்போராக மாற்ற ஸீ.ஐ.ஏ க்கு சந்தர்ப்பம் கிடைத்தது. பாமரர்களை அதிகம் கொண்ட ஆப்கான் நாட்டிற்கு “ஜிஹாத்” எரியும் நெருப்பிற்கு எண்ணெய் ஆனது. 

சஊதி பணத்தால் ஒட்சிசன் பெற்று வந்த இஸ்லாமிய இயக்கங்கள் எழுந்து நின்றன.  ஜிஹாத் உணர்ச்சியால் இளைஞர், முதியோர், பெண்கள், சிறுவர்கள் வீதிக்கு வந்தனர். 

 ரஷ்யாவிற்கு எதிரான இந்த ஜிஹாதை சவூதி பணத்தில் இயங்கும் அமெரிக்க நேச இயக்கங்கள் நன்றாக பயன்படுத்திக் கொண்டன. சஊதி அரசு ஸீ.ஐ.ஏ யின் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த பாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமியை தெரிவு செய்தது. 

ஜமாஅதே இஸ்லாமி ரஷ்யாவிற்கு எதிரான போர் ஜிஹாத் என்றும், இஸ்லாத்தி்ன் அடிப்படை கடமையான ஜிஹாதுக்கு முஸ்லிம்களின ஆதரவு தேவையென்றும் உலகமெல்லாம் பிரசாரப்படுத்தியது.

அன்று ஆப்கானிஸ்தான் மக்கள் ஆயுத மயமாக்கப்பட்டதற்கும் இன்று முஸ்லிம்களுக்கு எதிராக பயங்கரவாதிகள் பட்டம் சூட்டப்பட்டதற்கும் இருக்கும் தொடர்பை இன்று சஊதியும் அதன் பணத்தில் இயங்கும் இயக்கங்களும் மூடி மறைத்து விட்டன.

இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல் முளைத்ததே அமெரிக்க சஊதி வடிவமைத்த ஜிஹாத் களத்தில் தான். அன்று ஹிக்மத்தியார்களுக்கும், ரப்பானிகளுக்கும் ஆயுதத்தையும் பணத்தையும் அள்ளி இரைத்து பிறகு அவர்களை அடித்து விரட்டி தாலிபான்களிடம் ஆப்கானை தாரை வார்த்து கொடுத்த சஊதி ஸீ.ஐ.ஏ கூட்டாளிகள். தாலிபான்களை அடித்துத் துரத்தி இறுதியில் அமெரிக்காவின் கைக்கு அந்த நாட்டை ஒப்படைத்தனர்.

அண்மையில் ஹிலாரி கிளின்டன் ஆப்கான் ஜிஹாதுக்கு அமெரிக்கா நுர்ற்றுக்கு நுர்று வீதம் உதவி செய்ததை வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் உலகளாவிய எகாதிபத்திய அரசியலுக்காக ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க போருக்கு ஜிஹாத் சாயம் பூமி ஆப்கானை அழிக்க துணைபோன சஊதியும் அதன் கைக்கூலி தஃவா இயக்கங்களும் மன்னிக்க முடியாத குற்றவாளிகளே.

ஆப்கானை பயங்கர ஆயுத கிடங்காக மாற்றியதன் விளைவாக “இஸ்லாமிய பங்கரவாதம்” என்ற சொற்றொடரை முஸ்லிம்களுக்கு எதிராக அமெரிக்காவே பயன்படுத்த அரம்பித்தது.

சஊதி ஸீ.ஐ.ஏ கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட “ ஜிஹாத் ” அடுத்த கட்டத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம் என்று அடையாளப்படுத்தப்பட்டது.
இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க புறப்பட்டு முஸ்லிம் நாடுகளை துவம்சம் செய்யும் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நிகழ்ச்சி நிரலுக்கு சஊதியும் அதன் கைக்கூலிகளும் மறைமுக உதவி பரிந்தவர்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஆப்கானில் இன்னும் யுத்தம் தொடர்கிறது. அன்று ஜிஹாத் பேசி மக்களின் உணர்வலைகளை உசுப்பி விட்ட உத்தம புத்திரர்கள் அமைதியாய் கிடக்கின்றார்கள்.

அமெரிக்காவிற்கு செய்த ஒப்பந்த பணியின் வெற்றியின் களிப்பில் ஊமையாய் இருக்கின்றார்கள்.

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...