Friday, 16 September 2016
Monday, 11 May 2015
இஸ்லாமிய பண்புகள் அற்ற ISIS – லத்தீப் பாரூக்
யுத்த மேகம் சூழ்ந்துள்ள மத்திய கிழக்கை சிறு சிறு துண்டுகளாக்க அமெரிக்காவும், இஸ்ரேலும், ஐரோப்பிய நாடுகளும் வகுத்துள்ள திட்டத்தை கச்சிதமாக நிறைவேற்றப் பாடுபட்டு வரும் ISIS இன்று முழு முஸ்லிம் உலகினதும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது.
மிக நன்றாகப் பயிற்றப்பட்டு, நன்கு நிதிவளம் பெற்ற, மிகச்சிறந்த ஆயதங்களைக் கொண்டுள்ள இந்த ISIS கோஷ்டி யார்? என்பதுதான் பலரையும் சிந்திக்க வைத்துள்ள கேள்வியாகும்.
சிரியாவின் ஒரு பகுதி நிலப்பரப்பில் தோன்றி மிக விரைவாக ஈராக்கின் வட பகுதி வரை ஊடுறுவி நிலப்பரப்புக்களை ஆக்கிரமித்த இவர்களின் தோற்றம் எங்கிருந்து உருவானது?.
இந்தப் பிரதேசங்களுக்குள் அவர்கள் எவ்வாறு கனரக ஆயுதங்களைக் கொண்டு வந்தார்கள்? யார் இவர்களுக்கு இந்தளவு சிறந்த ஆயுதப் பயிற்சியை வழங்கினார்கள்?
ஆற்றல்மிக்க முழு அளவிலான ஓர் இராணுவ அணியாக எப்படி அவர்கள் தங்கள் கனரக ஆயுதங்களோடு பாலைவன எல்லைகளைக் கடந்து வந்தார்கள்?
பிரிட்டனை விடப் பெரியளவிலான ஒரு நிலப்பரப்பை எப்படி அவர்கள் இவ்வளவு விரைவாகத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள்?
இதுவரை கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின்படி ISIS ஜோர்தானில், இஸரேலின் உளவுச் சேவையான மொஸாட்டினால் பயிற்சி அளிக்கப்பட்ட ஓர் அணியாகும். அமெரிக்கா இதற்குத் தேவையான ஆயுதங்களை வழங்கியுள்ளது.
சவூதி அரேபியா தேவையான நிதி உதவிகளை அளித்துள்ளது. இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான ஒட்டுமொத்த சதித் திட்டமே இதுவாகும்.
இஸ்ரேலின் உருவாக்கம் மற்றும் ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களின் வருகை என்பனவற்றுக்கு முன் அமைதியாகவும் நல்லிணக்கத்தோடும் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த ஷீயா மற்றும் ஸுன்னி முஸ்லிம்களுக்கு இடையிலான மோதல்களை உருவாக்குவதற்கான சதித்திட்டத்தின் ஓர் அங்கமாகவும் ISIS இன் உருவாக்கம் அமைந் துள்ளது.
கப்பம் கோரல், பணத்துக்காக ஆள் கடத்தல், பல்வேறு விதமான கொள்ளைகள், மக்களிடமிருந்து சட்டவிரோத வரி அறவிடல் என எல்லாவிதமான சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடும் ஒரு இயந்திரம் தான் ISIS. இவர்களின் நிச்சயமான புனித நோக்கம் எண்ணெய் கடத்தல் அன்றி வேறு எதுவும் இல்லை.
மிக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு மதிப்பீட்டின் பிரகாரம் ISIS கலீபா (ஆட்சியாளர்) தான் தம் வசமுள்ள ஈராக்கின் வட பகுதியில் மற்றும் சிரியாவின் வட கிழக்கில் காணப்படும் எண்ணெய் வளங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நேரடியான பூரண கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளார்.
இங்கிருந்து மிக மலிவான விலையில் எண்ணெயை விற்பனை செய்வதன் மூலம் நாள் ஒன்றுக்கு இவர்கள் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதிக்கின்றனர்.
இந்த வருமானங்கள் எல்லாமே பணமாக அல்லது பண்டமாற்றாக பெறப்படுகின்றன. இந்த இஸ்லாமிய இராஜ்யத்தின் சிக்கல் மிக்க விநியோக வலையமைப்பு முகவர்களிடம் இருந்து யார் இந்த எண்ணெயை கொள்வனவு செய்கின்றார்கள் என்பது பரம இரகசியமாகவே உள்ளது.
ஆனால் இஸ்லாமிய கிலாபத் (ஆட்சிக்கு உட்பட்ட) பிரதேசம் என்று சொல்லப்படுகின்ற இந்தப் பிரதேசத்தில் இருந்து பாயும் எண்ணெய் துருக்கி மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளைச் சென்றடைகின்றது என்பது மட்டும் தெரியவந்துள்ளது.
இந்த கிலாபத்தை இலக்கு வைக்க வேண்டும் என்ற எண்ணம் உண்மையிலேயே அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு இருக்குமானால் இந்தப் பணம் எங்கு சென்றடைகின்றது என்பதை அவர்களால் நிச்சயம் மிக இலகுவாகக் கண்டுபிடித்துவிட முடியும் (நிச்சயம் இது ஒரு வங்கிக்கு செல்லவில்லை) ஆனால் அதை விட்டுவிட்டு அவர்கள் தேவையில்லாத இராணுவ நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
இன்றைய நிலை பற்றி பிரபல பத்தி எழுத்தாளர் சனி ஹூண்டா குறிப்பிடுகையில், செப்டம்பர் 11 இற்குப் பின் பல்வேறு வழிகளில் நோக்குகின்ற போது, முஸ்லிம்களின் வரலாற்றில் இது மிகமோசமான ஒரு நிலையாக உள்ளது.
இந்த நிலை முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளில் கூட பாரிய அளவிலான அமைதியீனத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு. மத்திய கிழக்கை இது துண்டு துண்டாக்கி சீரழித்து விடும். மேலும் பல தலைமுறைக்கு இது அமைதியீனத்தை தொடரச் செய்யும் என்று குறிப்பிடுகின்றார்.
பிரான்ஸின் வாராந்த சஞ்சிகையான சார்ளி ஹெப்டோ அலுவலகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மற்றும் கொலைகள், ஏனைய பல இடங்களில் மிகவும் சாதுரியமாகத் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கொலைகள் என்பன இஸ்ரேலின் மொஸாத் இயக்கத்தின் கைங்கரியமாக இருக்கலாம் என்ற ஒரு சந்தேகமும் நிலவுகின்றது.
முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களின் ஞானத் தந்தையாக இருக்கும் இவர்கள், மேற்குலகிலும் தங்களது கைங்கரியத்தை பரவச் செய்து முஸ்லிம்களுக்கு தலை குனிவை ஏற்படுத்த தொடங்கிவிட்டார்களா என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.
2015 பெப்ரவரி 24இல் ISIS கோஷ்டியின ருக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை விமானங்கள் மூலம் தேவையான ஆயுதங்களைப் போட்டதாக பார்ஸ் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த தகவலுக்கு மேலும் வலுவூட்டும் வகையில், 2015 பெப்ரவரி 16 திங்கட்கிழமை ஈராக்கின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஈராக்கிய படையினர் அல் அன்பார் மாநிலத்தில் IS பிரதேசத்துக்கு ஆயுதங்க ளுடன் சென்று கொண்டிருந்த இரண்டு பிரிட்டிஷ் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளார்.
ஈராக்கின் அந்த சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் அல் அன்பார் மாநிலத்தில் IS கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அமெரிக்க விமானங்கள் தினசரி அவர்களுக்குத் தேவையான ஆயுதங்களையும் ஏனைய பொருட்களையும் விமானங்களிலிருந்து போட்டு வருவதாக அங்கு வாழும் மக்கள் அன்றாடம் ஈராக் அரசுக்கு முறையிட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
அன்பார் மாநிலத்தில் எப்போதும் கொந்தளிப்பும் குழப்பமுமான ஒரு சூழல் நிலவ வேண்டும் என்று அமெரிக்கா விரும்புவதன் காரணமாகவே பயங்கரவாதக் குழுக்களுக்கு அன்றாடம் ஆயுதங்களையும் ஏனைய பொருட்களையும் மேலைத்தேய படைகள் விநியோகித்து வருகின்றன.
ஏனெனில், அன்பார் மாநிலம் கர்பலா மற்றும் பக்தாத் நகரங்களுக்கு மிக அருகில் அமைந்துள்ள மாநிலமாகும். இந்தப் பிரதேசத்தில் ISIS பிரச்சினை முடிவுக்கு வரக்கூடாது என்பதே அவர்களின் விருப்பமாகும் என்று அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
அமெரிக்க உளவாளியாக இருந்து தற்போது தலைமறைவாக வாழ்ந்து வரும் எட்வர்ட் சுனோடன், ISIS மொஸாட்டினால் உருவாக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு பிரிவு என்றும், அமெரிக்காவும் பிரிட்டனும் இதற்குத் தேவையான ஆயுதங்களையும் சவூதி அரேபியா நிதி உதவியையும் அளித்து வருகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது முற்றிலும் உண்மை என்பதற்கான சான்றுகள் தற்போது வெளிவந்த வண்ணம் உள்ளதாக அண்மைக் கால அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
‘பனிப்போர் காலமும் அதற்கு பின்னரும்’ என்ற தொனிப் பொருளில் பத்தி எழுத்தாளர் மைக்கல் சசுடோவ்ஸ்க்கி எழுதுகையில் ‘அமெரிக்காவின் CIA பாகிஸ்தானின் இராணுவ உளவுப் பிரிவை முஜாஹிதீன்களைப் பயிற்றுவிக்க ஒரு முக்கிய கருவியாகப் பயன்படுத்தியது.
இதற்கு பகரமாக CIA அனுசரணையுடன் கூடிய ஆயுத பயிற்சி இஸ்லாமிய கற்கைகளோடு இரண்டறக் கலந்தது.
ஆயுதபாணி இஸ்லாமிய தளங்களை கிளின்டன் மற்றும் புஷ் நிர்வாகங்கள் தொடர்ச்சியாக ஆதரித்து வந்துள்ளன. இதில் ஒஸாமா பின் லேடனின் அல்கைதா வும் அடங்கும்.
இது அமெரிக்க வெளியுற வுக் கொள்கை நிகழ்ச்சி நிரலில் ஒர் அங்கமாகவே இருந்து வந்துள்ளது. பொஸ்னியா மற்றும் கொஸோவோவா விடயங்களில் கிளின்டன் நிர்வாகத்துக்கும் ஒஸாமா பின் லேடனுக்கும் உள்ள தொடர்புகளை நிரூ பிக்கப் போதியளவு தேவையான ஆவணங்கள் அமெரிக்க காங்கிரஸில் தாராள மாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன’ என்று குறிப்பிட் டுள்ளார்.
ஊடகவியலாளர்கள் ஜேம்ஸ் போலே மற்றும் ஸ்டீவன் சொட்லொப் ஆகியோர் கழுத்து வெட்டப்பட்டு கொல்லப்பட்டமை தொடர்பாக கேள்விகளை எழுப்பிய ஊடகங்கள் வரிசையில் தோஹாவைதளமாகக் கொண்டு செயற்படும் அல்ஜஸீராவின் அரபுப் பிரிவும் இணைந்து கொண்டது.
இவர்கள் கொல்லப்பட்டமை தொடர்பான காட்சிகள் நம்ப முடியாதவையாக உள்ளன என்றும், இவர்கள் இருவரும் ஹொலிவூட் திரைப்பட நடிகர்களின் பங்கினை இந்தக் காட்சிகளில் நிறைவேற்றி உள்ளனரா என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
சிரியாவில் அமெரிக்கா ஊடுறுவ முன்பதாக ஒரு முன்னோட்ட நிகழ்வாகவே இந்தக் காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தற்போது தெரியவந்துள்ளது.
இந்தக் கொலைகள் தொடர்பான முதலாவது வீடியோ காட்சியைப் பார்க்கின்ற ஒருவரை முதலில் ஈர்க்கும் விடயம். ஜேம்ஸ் போலே பாதிக்கப்பட்ட ஒருவராக அன்றி ஒரு வீரனைப் போல் குரல் எழுப்புவதாகும்.
முழுக்க முழுக்க அரங்கம் அமைத்து நிறைவேற்றப்பட்ட இந்தக் காட்சியில் அவர் ஒரு நீண்ட கூற்றை வாசிக்கின்றார்.
அதை வாசிக்கும் அந்தக் காட்சிகளில் அவரின் கண் அசைவுகளிலிருந்து அவர் முன்னேற்பாட்டு காட்சிப் பிரதியொன்றை வாசிக்கின்றார் என்பதும் புரிகின்றது என்று அல்ஜஸீரா அரபு செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
2014 செப்டெம்பரில் நியூயோர்க்கில் செப்டெம்பர் 11 தாக்குதலின் மூன்றாண்டு நிறைவை அமெரிக்காவும் உலகும் நினைவு கூர்ந்தபின் ISIS என்பது புதிய அல்கைதா என்ற நவீன உலக வரலாற்றின் உலக மகா பொய்யையும் அமெரிக்கா அரங்கேற்றி வைத்தது.
முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு உலக அரங்கில் ஆக்கிரமிப்பையும் உள்ளூர் அரங்கில் பொலிஸ் மட்ட செயற்பட்டையும் அதிகரிக்கும் வகையில் அமெரிக்க மக்களை நம்ப வைப்பதற்காக இந்த உலக மகா பொய் அமெரிக்க மக்கள் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டது.
‘ISIS, எண்ணெய் அரசியல் மற்றும் இஸ்லாமோபோபியாவின் (இஸ்லாம் பற்றிய மிதமிஞ்சிய அச்சம்) உச்ச கட்டம்’ எனும் தலைப்பில் பிரபல இந்திய பத்தி எழுத்தாளர் ராம் புன்யானி குறிப்பிடுகையில் ‘மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் எண்ணெய் செல்வத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அமெரிக்கா தீட்டியுள்ள திட்டங்கள் ஏராளம் உள்ளன.
அமெரிக்கா இதற்கென தனக்கே மட்டும் உரித்தான புறம்பான நியாயங்களைக் கொண்டுள்ளது. எண்ணெய் மிகவும் விலைமதிப்பற்ற ஒரு பொருள்.
அதை மற்றவர்கள் கட்டுப்பாட்டில் விட்டுவிட முடியாது என்பது அதில் ஒரு நியாயமாகும். முஸ்லிம் இளைஞர்களை உணர்வூட்டி அல்கைதாவை நாங்கள்தான் உருவாக்கினோம் என்று ஹிலரி கிளின்டன் அண்மையில் மிகத் தெளிவாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இஸ்லாத்தில் இருந்து திரிபுபடுத்தப்பட்ட கருத்துக்களை மையமாகக் கொண்டுதான் இந்த இளைஞாகள் உணர்வூட்டப்பட்டார்கள் என்பதை இந்தப் பிராந்தியத்தின் வரலாறு விளக்குகின்றது. அதில் வஹ்ஹாபிஸம் பிரதானமானதாகும்’ என்று குறிப்பிடுகின்றார்.
ஆப்கானிஸ்தானில் ரஷ்ய படைகளை எதிர்த்துப் போராடுவதற்காக மிகவும் பிரமாண்டமான முறையில் பாரிய நிதி உதவிகளுடன் உருவாக்கப்பட்டது தான் அல் கைதா.
அல்கைதாவின் காட்டுமிராண்டித்தனம் வெளிப்படத் தொடங்கியதும் அமெரிக்கா செப்டம்பர் 11 தாக்குதலின் பின் ‘இஸ்லாமிய பயங்கரவாதம்’என்ற முத்திரையை குத்தத் தொடங்கியது.
இந்த செப்டம்பர் 11 தாக்குதல் சம்பவத்துக்கு முன் பயங்கரவாதச் செயற்பாடுகள் சமயத்தோடு தொடர்புபடுத்தப்படவில்லை. வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்தவர்கள் இவ்வாறான காரியங்களில் ஈடுபட்டபோதிலும் கூட ஒரு போதும் அவற்றுக்கு சமய முத்திரை குத்தப்படவில்லை.
மகாத்மா காந்தி கொலை, இந்திரா காந்தி கொலை, ராஜீவ் காந்தி கொலை, தாய்லாந்தில் மியன்மாரில் மற்றும் இலங்கையில் பௌத்த பிக்குகளின் பயங்கரவாதச் செயற்பாடுகள், நோர்வேயில் என்டர்ஸ் பெர்லிங் பிரிவிக்ஸ் செய்த கொலைகள், பல்வேறு அரசியல் நோக்கங்களுக்காக பல்வேறு சமூகத்தவர்கள் மேற்கொண்ட அரசியல் கொலைகள் என எதற்குமே சமய முத்திரை குத்தப்படவில்லை.
ஆனால் செப்டமபர் 11 தாக்குதலின் பின்னர் பயங்கரவாதம் என்பது இஸ்லாத்தோடு மட்டும் பின்னிப் பிணைக்கப்பட்டது.
அல்கைதாவை உருவாக்குவதற்கும் முஜாஹிதீன்களாக சேர்ந்த இளைஞர்களை உணர்வூட்டுவதற்கும் அமெரிக்கா தெரிவு செய்த இஸ்லாமிய பிரிவு அப்துல் வஹாப் என்பவரால் உருவாக்கப்பட்டது.
இஸ்லா த்தை மிகவும் இறுக்கமாக்கி தனது பிரத்தியேகமான பார்வையில் அதனை வெளிப்படுத்தினார்.
இது சவூதியின் ஆளும் குடும்பத்து க்கு மிகவும் பொருத்தமாக அமைந்தது. எண் ணெய் வளங்கள் மீது தமது கட்டுப்பாட்டை வைத்திருக்க இது அவர்களுக்குப் பொருந்தியது.
அமெரிக்க வடிவமைப்புக்கும் இதே முறை பொருத்தமாக காணப்பட்டது. இங்கே அவர்கள் காபிர்(உண்மையை ஏற்க மறுப்பவர்) என்பதை முஸ்லிம் அல்லாத ‘ஏனையவர்கள்’ என அடையாளப்படுத்தினர்.
இப்போது வஹ்ஹாபி இஸ்லாத்தை தலையில் வைத்துக் கொண்டும் அமெரிக்க ஆதரவுடன் கிடைத்திருக்கும் ஆயுதங்களை கரங்களில் ஏந்திக் கொண்டும் அவர்கள் என்ன செய்ய விளைகின்றார்கள்?
இதன் வழித்தோன்றலாக காலப்போக்கில் உருவானது தான் ISIS. கலீபா ஒருவரை உருவாக்கி உலகை ஆட்சி செய்யலாம் என்ற அவர்களின் மாயை, அதன் விளைவாக ஏற்பட்டுள்ள பித்துப் பிடித்த நிலை என்பன தற்போது கண்கூடாகத் தெரியத் தொடங்கியுள்ளன.
இவ்வாறுதான் அமெரிக்க தற்போது முன்னைய காலனித்துவ ஆதிக்கவாதிகளைப் பின்பற்றி பிரித்தாளும் தனது விளையாட்டை அரங்கேற்றி வருகின்றது.
இந்தியாவில் காலனித்துவவாதிகள் இனவாத அரசியலின் விதையை தூவினர். சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப்பின் கடந்த சில தசாப்தங்களில் மேற்காசியாவில் இந்த விதை தூவப்பட்டுள்ளது.
இனரீதியான பிரிவினைகளின் அடிப்படையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் நாடுகளைத் துண்டாடும் பணியினை மேற்கொண்டுள்ளத.
ஷிஆ, ஸுன்னி, குர்திஸ் என இன ரீதியாக தூபமிட்டு நாடுகளை துண்டாடி பலமிழக்கச் செய்யும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சி தற்போது உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.
இதேநேரம் இஸ்லாத்தை பூதாகரமாகச் சித்திரித்து ,இஸ்லாம் பற்றி மிதமிஞ்சிய அச்சத்தை ஏற்படுத்தும் கைங்கரியமும் சமகாலத்தில் நன்கு திட்டமிடப்பட்டு உலகம் முழுவதும் அரங்கேற்றப்பட்டு வருகின்றது.
அல்கைதா மற்றும் ISIS ஆகிய அமைப்பக்களின் தீய செயற்பாடுகள் இதற்கு சிறந்த முறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
சக்திமிக்க நாடுகள் தமது சொந்த நலன்களுக்காகவும், அரசியல் இலக்குகளை அடைந்து கொள்வதற்காகவும், சமயத்தை துஷ்பிரயோகம் செய்து வருகின்றபோது சமூக சிந்தனைகளில் நாம் எவ்வாறு நியா யத்தை நிலை நிறுத்த முடியும்.
ஒரு சம யம் சார்ந்த சமூகத்தை பூதாகரமாகச் சித்திரிக்கும் விடயம் என்பது எளிதில் தீர்வு காணக்கூடிய ஒரு விடயமும் அல்ல.
ஆதிக்க சக்திமிக்க பிரிவுகள் மத்தியில் நிலவும் கருத்துக்களுக்கு சவால் விடுப்பதும், அவர் களின் சமூக ஆதிக்க சக்திகளுக்கு சவால் விடுப்பதும் மிகவும் கஷ்டமான காரியங் களாகும்.
எமது சமூகத்தில் அமைதியும், முன்னேற்றமும் நிலவ வேண்டுமானால் இந்த விடயங்களில் நாம் பாரதூரமாகக் கவனம் செலுத்த வேண்டியதும் அவசிய மாகும்.
‘மனித குலத்தின் மீது யுத்த அச்சுறுத்தல் விடுக்கும் ஒபாமா’ என்ற கட்டுரையில் கௌரவத்துக்குரிய அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபன் லென்ட்மன், “நிரந்தர யுத்தம் என்பது அமரிக்காவின் உத்தியோகபூர்வ கொள்கை.
யுத்த மோகம் கொண்ட நீண்ட அமெரிக்க ஜனாதிபதிகள் வரிசையில் இப் போது உள்ளவர்தான் ஒபாமா. அவர் நேரடி யாகவும் மறைமுகமாகவும் பல யுத்தங்க ளைத் தொடுத்துள்ளார்.
தனது பதவிக்காலத்தில் அவர் இதனை நிறையவே செய்துள்ளார். இன்னும் பல மரணங்களும், அழிவுகளும் அவரின் சிந்தனையில் உள்ளன. அமெரிக்காவின் கலாசாரமே வன்முறைதான். அது எப்போ தும் அப்படியேதான் இருந்து வந்துள்ளது.
சமாதானத்தின் பெயரால் அது யுத்தங்களைப் புகழுகின்றது. மேலைத்தேய நாடு கள் மத்தியில் அதிகமான மனித கொலை களைப் புரிந்துள்ள நாடும் அதுவே” என்று கூறுகின்றார்.
Wednesday, 7 January 2015
ஓவியர், கவிஞர், எழுத்தாளர் என்ற பன்முகத் திறன் கொண்ட கலீல் ஜிப்ரான்
# லெபனான் நாட்டில் பஷ்ரி என்ற நகரில் பிறந்தவர். இவரது 12-ம் வயதில் குடும்பம் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தது. அரேபிய மொழி, ஆங்கிலம், பாரசீக மொழிகள் அறிந்தவர். ஓவியத்தில் இவருக்கு இருந்த திறனை அறிந்த அவரது ஆசிரியர்கள் இவரை பாஸ்டனில் உள்ள ஓவியப் பள்ளியில் சேர்த்துவிட்டனர்.
# அப்போது இவர் வரைந்த படங்களை ஒரு வெளியீட்டாளர் தனது புத்தகங்களின் அட்டைகளில் பயன்படுத்திக்கொண்டார். இளம் வயதிலேயே இலக்கிய உலகிலும் அடியெடுத்து வைத்துவிட்டார்.
# 15 வயதில் பெய்ரூத் சென்று உயர் கல்வி பயின்றார். அங்கே கல்லூரி இலக்கிய பத்திரிகையை நண்பர்களுடன் சேர்ந்து வெளியிட்டார். கல்லூரி-கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜிப்ரான் இலக்கிய, அரசியல் புரட்சியாளர் என்று கருதப்பட்டார்.
# 1902-ல் பாஸ்டன் திரும்பினார். இவரது கட்டுரை வடிவிலான கவிதைகள் அடங்கிய ‘தி ப்ராஃபெட்’ வெளிவந்த சமயத்தில் ஐரோப்பிய நாடுகளில் புகழ்பெற்றார்.
# இதன் பதிப்புகள் தொடர்ந்து வெளிவந்தன. இது 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. அமெரிக்காவில், 20-ம் நூற்றாண்டில் மிகச் சிறப்பாக விற்பனையான புத்தகமாகத் திகழ்ந்தது.
# கடுமையான விமர்சனங்கள் எழுந்தாலும் இவரது புத்தகங்கள் நன்றாக விற்பனையாகின. அரேபிய, ஆங்கில, பாரசீக மொழிகளில் கவிதை தொகுப்புகள், கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
# இவரது படைப்புகளை சிரத்தையுடன் தேடிக் கண்டுபிடித்து உலகுக்கு அளித்த பெருமை இவரது காரியதரிசி பார்பரா யங்கையே சாரும். ஜிப்ரான் தனது முற்போக்கு சிந்தனைகள் காரணமாக மதகுருமார்கள், அதிகாரிகளின் கோபத்துக்கு ஆளானவர். ‘ஒட்டுமொத்த உலகமும் எனக்கு தாய்நாடுதான். அனைவரும் என் சக குடிமகன்கள்’ என்று இவர் கூறுவார்.
# உலகின் பல இடங்களில் இவரது ஓவியக் கண்காட்சிகள் நடைபெற்றுள்ளன. லெபனானில் ஜிப்ரான் அருங்காட்சியகத்தில் இவரது ஓவியங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவரது புத்தகங்கள் உலக அளவில் விற்பனையில் மூன்றாம் இடம் வகித்துவருகிறது.
# இவரது படைப்புகள் ஒவ்வொரு தனிமனிதனின் எண்ணங்களையும் பிரதிபலிப்பவையாக இருக்கின்றன. வாழ்க்கை சம்பந்தமான தீவிர சிந்தனைகள் கொண்ட இவரது படைப்புகள் உலகம் முழுவதும் 22-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
# உலகின் மகத்தான சிந்தனையாளர்களில் ஒருவர். எழுத்தாளர், ஓவியர், தத்துவவாதி, கவிஞர். உலகம் முழுவதும் இலக்கிய நட்சத்திரமாகக் கொண்டாடப்பட்டுவரும் கலீல் ஜிப்ரான் 48-ம் வயதில் மரணமடைந்தார்.
1943 ஜனவரி 7: 'அணுகுண்டு நோய்' கொன்ற சடாகோ சசாகி பிறந்த தினம்
இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானைச் சரணடைய வைக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த அமெரிக்கா, அந்நாட்டின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் முறையே 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9-ல் அணுகுண்டுகளை வீசியது. இந்த இரண்டு கொடூரச் சம்பவங்களிலும் 1 லட்சத்து 29 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். கதிரியக்கத்தின் காரணமாகக் குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கானவர்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்தார்கள். அந்தக் குழந்தைகளில் ஒருவர்தான் சடாகோ சசாகி. 1943 ஜனவரி 7-ல் பிறந்தவர் அவர். ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டபோது சகாகிக்கு இரண்டே வயதுதான்.
ஹிரோஷிமாவின் மிசாசா பாலத்துக்கு அருகில் சசாகியின் வீடு இருந்தது. அதாவது, அணுகுண்டு விழுந்த இடத்திலிருந்து சுமார் 1.7 கி.மீ. தொலைவில். குண்டுவிழுந்த அதிர்ச்சியில் வீட்டின் ஜன்னல் வழியே வெளியில் தூக்கியெறியப்பட்டாள் சசாகி. பதறிப்போன அவளது அம்மா, ஓடிச்சென்று பார்த்தபோது சசாகி உயிருடன்தான் இருந்தாள். அவளைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து ஓடினார் அவளது அம்மா. மொத்த நகரமும் அழிந்துபோனதால், அருகில் இருந்த மியோஷி நகரில் தனது உறவினர் வீட்டில் தங்கினார். அதன்பின்னர் மற்ற குழந்தைகளைப் போலவே சாதாரணமான வளர்ந்தாள் சசாகி.
அவளுக்கு 11 வயதானபோது கழுத்திலும், காதின் பின்புறத்திலும் வீக்கங்கள் ஏற்பட்டன. சில மாதங்களிலேயே அவளது கால்களில் ஊதா நிறப் புள்ளிகள் ஏற்பட்டன. அவளுக்கு ரத்தப் புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவளது அம்மாவோ இதை அணுகுண்டு நோய் என்று அழைத்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள் சசாகி. அவளைக் காண வந்த அவளது தோழிகளில் ஒருத்தியான சிசுக்கோ ஹமாமாட்டோ, தங்க நிறத் தாள் ஒன்றை மடித்து, (ஜப்பானின் பண்டைய கலையான ஓரிகாமி முறையில்) கொக்கு ஒன்றை உருவாக்கினாள்.
1,000 காகிதக் கொக்குகளை உருவாக்கினால் விரும்பியது நடக்கும் என்பது ஜப்பானியர்களின் நம்பிக்கை. அதன்படி, நோய் பாதிப்புக்கு இடையிலும், 1,000 காகிதக் கொக்குகளை உருவாக்கும் வேலையில் இறங்கினாள் சசாகி. எனினும், அவளால் 644 கொக்குகளைத்தான் உருவாக்க முடிந்தது. 1955 அக்டோபர் 25-ல் ரத்தப் புற்றுநோய்க்கு பலியானாள் சசாகி. அதன்பின்னர், அவளது பள்ளி நண்பர்கள் இணைந்து 1,000 காகிதக் கொக்குகளை உருவாக்கினார்கள். அவை அனைத்தும் அவளது உடலுடன் சேர்த்துப் புதைக்கப்பட்டன. அவளது நினைவாக, 1958-ல் ஹிரோஷிமா அமைதி நினைவுப் பூங்காவில் தங்கக் கொக்கை சுமந்து நிற்கும் சடாகோவின் சிலை நிறுவப்பட்டது. அந்தச் சிலையின் அடிப்பகுதியில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள் இவை:
இதுதான் எங்கள் கூப்பாடு,
இதுதான் எங்கள் பிரார்த்தனை,
உலகில் அமைதி வேண்டும்.
tamil.thehindu.comWednesday, 19 November 2014
இன்று 19.11.2014 சா்வதேச கழிப்பறை (Toilet) தினம்!
இன்று 19.11.2014 சா்வதேச கழிப்பறை (Toilet) தினம்!
ஐக்கிய நாடுகள் சபையின் கணிப்பின்படி உலகம் முழுவதும் சுமாா் 2.5 பில்லியன் மக்கள் கழிப்பறை மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் அற்றவா்களாக இருக்கின்றாா்களாம்.
கழிப்பறை மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று.
விஞ்ஞான, தொழிலநுட்ப ரீதியில் அறிவின் உச்சத்தைத் தொட்டுவிட்டதாக மாா்தட்டும் இந்த மனித சமூகம், மனிதனின் அடிப்படை தேவைகளை பூா்த்தி செய்வதில் இன்னும் பூஜ்யமாகத்தான் இருக்கிறது என்பதற்கு இந்த ஐநா புள்ளி விபரம் சிறந்த சான்று.
ஓாிரு வருடங்களுக்கு முன்னா் கொழும்பில் முஸ்லிம் மாணவா்களின் கல்வி பின்னடைவு பற்றிய ஒரு செயலமா்வு இடம்பெற்றது. அதில் ஊடகவியலாளா் என்.எம். அமீன் ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டாா்.
கொழும்பு முஸ்லிம் மாணவா்களின் கல்வியின் பின்னடைவிற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக தமது வீடுகளில் மலசல கூட கழிப்பறை வசதிகள் இல்லாமல் இருப்பதுதான் என்று கூறினாா்.
கொழும்பில் முஸ்லிம்கள் செரிவாக வாழ்வதால் பல வீடுகளுக்கு ஓரிரண்டு கழிப்பறைகளே இருப்பதாகவும் காலைநேரங்களில் கழிப்பறையின் நெருக்கடி காரணமாக உாிய நேரத்தில் பிள்ளளைகள் பாடசாலைக்கு செல்ல முடியாமல் இருப்பதாகவும் கூறினாா். தொடா்ந்து பாடசாலைக்கு சமுகமளிப்பதில் தவறும் மாணவா்களின் நிலை கல்வியில் மிகவும் பின் தங்கிய நிலைக்கு சென்று விடுவதாகவும் அவா் கூறினாா்.
தலைநகரான கொழும்பில் மிக அதிக முஸ்லிம் ஜனத்தொகையைக் கொண்ட கொழும்பு மத்திய தொகுதியில்தான் இந்தப் பிரச்சினை இருப்பதாக உணர முடிகின்றது. கழிப்பறை போன்ற ஒரு மனிதனுக்கு தேவையான அடிப்படை உாிமையை பெற்றுக்கொள்ள திராணியற்றவா்களாவே முஸ்லிம்கள் இருக்கின்றாா்கள் என்பதற்கு அது சிறந்த சான்று.
எமது அண்மைய நாடான இந்தியாவில் சனத்தொகை 120 கோடி. இதில் 60 கோடி பேருக்கு கழிப்பிட வசதி இல்லையாம். இத்தகவலைக் கேட்டு ஐ.நா செயலாளா் பான் கீ மூன் அதிா்ச்சியடைந்ததாக தி இந்து பத்திரிகையில் செய்தியொன்றை வாசித்தது ஞாபகம். இந்த செய்தி எனக்கும் இது அதிா்ச்சியாகவே இருந்தது.
இந்திய கழிப்பறை விவகாரம் பிராந்திய அரசியலில் கூட இது பேசு பொருளானது.
மீனவா், தமிழா், சீன ஆதிக்கம் தொடா்பாக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் அடிக்கடி சா்ச்சைகள் உருவாகிவரும் நிலையில் எமது அமைச்சா் சுசில் பிரேம ஜயந்த கடந்த வருடம் “ தனது நாட்டு மக்களின் கழிப்பறை பிரச்சினையை தீா்த்துக் கொள்ள முடியாத இந்தியா எங்கள் உள்நாட்டு பிரச்சினையை தீா்கக முனைவது வேடிக்கையானது” என்று கூறினாா்.
இதற்கு எதிா்வினையாற்றிய தென் இந்திய தொலைக்காட்சி ஊடகங்கள் “ ஒரு சுண்டைக்காய் நாடு இந்தியாவை அச்சுறுத்துவதா” என கேள்விகள் கூட எழுப்பின.
இந்தியாவை ஆட்டிப்படைக்கும் ஒரு பிரச்சினையாகவே இந்த கழிப்பறை பிரச்சினை இருக்கிறது.
இன்றைய கழிப்பறை தினம் தொடா்பாக இன்று காலை இந்திய தொலைக்காட்சிகளில் பல செய்தி விவரணங்கள் இடம் பெற்றன. இந்தியா இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட பல தசாப்தங்கள் ஆகும் என அறியக் கிடைத்தது.
செய்மதிகளை விண்ணுக்கு அனுப்பி விண்ணில் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்யும் ஒரு நாடு மண்ணில் வாழும் மக்களின் பிரச்சினையை மறந்திருக்கின்றதா என்ற கேள்வி எழுகிறது.
ஒரு தீபாவளிக்கு 5000 கோடி ரூபாய்களை பட்டாசு கொளுத்துவதற்கு இந்தியா்கள் செலவிடுகின்றாா்கள். இவற்றை தவிா்த்து விட்டு மனிதனின் அடிப்படை தேவையின்பால் கவனம் செலுத்துவதே அவசரமானது அவசியமானது.
சா்வதேச கழிப்பறை தினத்தையொட்டி பிபிஸி இணையதளம் வெளியிட்டிருந்த படங்கள் இவை -

Tuesday, 18 November 2014
புற்று நோய்க்கு மருந்தாகும் நித்தியக்கல்யாணி அல்லது சுடுகாட்டு மல்லி
நித்தியக்கல்யாணி அல்லது சுடுகாட்டு மல்லி என்று அழைக்கப்படும் இத்தத் தாவரத்தை நீங்கள் பல இடங்களில் பார்த்திருப்பீா்கள்.
புற்று நோய்க்கு மருந்தாகும் இந்தத் தாவரம் பற்றியும் நோய் தீா்க்கும் அதன் மகத்துவம் பற்றியும் நான் அறிந்த நாளிலிருந்து அந்த தாவரம் மீது எனக்கு அன்பும் மதிப்பும் மாியாதையும் ஏற்பட்டிருக்கிறது.
ஊதா நிறப் பூக்களையும் கடும் பச்சை நிற இலைகளையும் கொண்ட இந்த தாவரம் பல மருத்துவ குணங்களைக் கொண்டது.
இதன் தாவரவியல் பெயா் வின்கா ரோசியா (vinca rosea).
புற்றுநோய்க்கான வேதியியச் சிகிச்சையில் (Chemotheraphy) பயன்படும் வின்கிரிஸ்டின் (Vincristine) என்ற மருந்து முற்றாக இதிலிருந்தே தயாாிக்கப்படுகிறது.
இந்தத் தகவலை மஹரகம தேசிய புற்று நோய் ஆராய்ச்சி நிலையத்தில் கடமையாற்றிய வைத்தியா் ஒருவா் என்னிடம் கூறினாா். எனக்கு ஆச்சாியமாக இருந்தது. நாங்கள் யாருமே மதிக்காத இந்தப் பூவுக்குள் இப்படி ஒரு சக்தி புதைந்து கிடக்கிறதா?
அதன் பிறகு இணையத்தில் கொஞ்சம் தட்டிப் பாா்த்தேன்.
புற்று நோய் மட்டுமல்ல நீரிழிவு நோய்க்கும் சிறந்த மருந்தாக இது இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் கிடக்கின்றன.
ஆனால் கிராமப்புற மக்கள் இதை சுடுகாட்டுமல்லி என்று அழைக்கின்றாா்கள்.
கிராமப்புரங்களில் இந்தத் தாவரம் தொடா்பாக நல்ல கருத்து இல்லை.
சுடுகாடுகளில் இது செழித்து வளா்வதால், இதை வீடுகளில் நட்டால் அந்த வீட்டில் மரணங்கள் சம்பவிக்கும் என்ற மூட நம்பிக்கை இருப்பதால் நித்தியகல்யாணிக்கு மவுசு இல்லையென்றும் அந்த டாக்டா் கூறினாா்.

பன்னாட்டு மருந்து தயாாிப்பு நிறுவனங்களுக்கு இலாபம் வழங்கும் அடிப்படையில்
தான் எமது மக்களின் நம்பிக்கைகளும் இருக்கின்றன. சிலவேளை நம்பிக்கைகள்
அப்படிதான் வளா்க்கப்பட்டிருக்கின்றன. இலங்கை மருத்துவ தாவரங்கள் நிறைந்த
ஒரு நாடு. எமது நாட்டில் விளையும் பல தாவரங்களுக்கான மருத்துவ வணிக
காப்புாிமையை (Patent) பன்னாட்டு கம்பனிகள் கொள்ளையிட்டு விட்டன.
இலங்கையில் அாிய தாவர வளங்களை கொள்ளையிடுவதற்கு இந்த தாவரங்களின் தாயகமான சிங்கராஜ வனத்தை சுரண்டுவதற்கு பன்னாட்டு கம்பனிகள் பல முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
சிங்கராஜ வனத்தில் இருக்கின்ற மருத்துவ தாவரங்களை ஒழுங்கான தொழில்நுட்பம் ஒன்றை பயன்படுத்தி மருந்துகளை உற்பத்தி செய்தால் வெளிநாட்டிற்கும் அவற்றை ஏற்றுமதி செய்யலாம்.
இந்தியாவில் பல நுாறு ஏக்கா் நிலங்களில் இந்தத் தாவரம் பயிாிடப்பட்டு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது

Subscribe to:
Posts (Atom)
போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!
பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...
-
அதிகரிக்கும் பள்ளிவாசல்களும் அழிந்து போகும் ஒற்றுமையும்! அரபு பணம் இலங்கையில் வந்து குவிந்துக் கொண்டிருக்கிறது. பாதை நெடுகிலும் பள்...
-
அமெரிக்கா ஏகாதிபத்தியம் எங்களை ஆக்கிரமிக்கிறது… ஜாஹிலிய்யத்திற்கு கை கொடுக்கிறது ஜம்இய்யதுல் உலமா! ஜம்இய்யதுல் உலமா என்ற இலங்கையின் ம...
-
22ம் திகதி காலை. 7.30 மணியிருக்கும் கொழும்பு மாளிகாவத்தை மையவாடி மயான அமைதியில் மூழ்கியிருக்கிறது. எனக்கு மிகவும் அறிமுகமானவரும், எனது நண...