இஸ்ரேல் அரசோடு இணைந்து செயற்பட பேஸ்புக் நிறுவனம் உடன்பாடு!
அமெரிக்க அட்டகாசத்தின் அடையாளமாக இருக்கும் வியட்நாம் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் படத்தை நீக்கியதால் சர்ச்சையில் சிக்கிய பேஸ்புக் நிறுவனம், அதன் முடிவை மாற்றிக்கொண்டது.
நோர்வே நாட்டின் பிரதமரினால் பதிவிடப்பட்ட குறித்த படத்தை நீக்கியதற்காக பேஸ்புக் நிறுவனம் பின்பு மன்னிப்பையும் கோரியது.
இந்த சர்ச்சையைத் தொடர்ந்தாற் போல் மற்றுமொரு நகர்வுக்கு பேஸ் புக் நிறுவனமும் இஸ்ரேலிய அரசாங்கமும் வந்திருக்கின்றன.
எசோஸியேடட் பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் இஸ்ரேல் அரசாங்கமும் பேஸபுக் நிறுவனமும் இணைந்து
தணிக்கை ஒன்றுக்கு உடன்பட்டிருப்பதாக அறிய வருகிறது.
பலஸ்தீன் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகளை சட்ட ரீதியாக நீக்கும் உடன்படிக்கை ஒன்றுக்கு இரு தரப்பும் இணங்கியிருக்கின்றன.
தனது நாட்டிற்கு எதிராக நடக்கும் பிரசாரங்களுக்கு சமூக வலைதளங்களில் வரும் அல்லது பகிரப்படும் விடயங்கள் அடிப்படையாக இருப்பதாகவும், பலஸ்தீன் மக்களின் போராட்டங்கள் தொடர்பான அறிவித்தல்களை ஒரு நொடியில் உலகம் முழுவதும் பரப்புவதற்கு பேஸ்புக் உறுதுணையாக
இருப்பதாக இஸ்ரேலிய தரப்பின் வாதங்களை பேஸ்புக் நிறுவனம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.
பேஸ்புக் நிறுவனத்தோடு இந்த உடன்படிக்கையில் இஸ்ரேலிய நீதித்துறை அமைச்சர் அயலட் ஷேகட் Ayelet Shaked மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த உடன்பாட்டில் இஸ்ரேல் வன்முறையைத் தூண்டுவதாக கருதும் விடயங்களை நீக்குவதற்கு பேஸ்புக் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவ உதவியோடு பலஸ்தீன மக்களுக்கு எதிராக இடம்பெறும் கொலைகளை, வன்முறைகளை ஆதரித்து இஸ்ரேலிய மக்கள் இடும் பதிவுகளைப் பற்றி பேஸ்புக் நிறுவனம் என்ன செய்யப் போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
2014ம் ஆண்டு பலஸ்தீனர்களை கொல்வோம் என்ற பேஸ்புக் பக்கத்தை அதிகமான இஸ்ரேலியர்கள் பகிர்ந்திருந்னர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment