ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக மியான்மரில் புத்த தீவிரவாதிகள் கட்டவிழ்த்துவிட்டுள்ள இனப்படுகொலையில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதில் கூடுதல் பாதிக்கப்பட்டோர் ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஆவர். கடந்த ஜூன் மாதம் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் புலன்பெயர்ந்து செல்லக் காரணமான மியான்மர் ராக்கேன் மாநிலத்தில் நிகழ்ந்த இனப்படுகொலை ஓய்ந்த நிலையில் மீண்டும் புத்த தீவிரவாதிகள் வன்முறையை துவக்கியுள்ளனர். ஒருவாரத்திற்குள் அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். ராக்கேன் மாநிலத்திற்கு பார்வையிடச் சென்றுள்ள ஐ.நா குழுவினர் வன்முறையை தொடர வாய்ப்புள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 4665 வீடுகள் வன்முறையாளர்களால் தாக்கப்பட்டுள்ளன.
வீடுகளை இழந்தவர்களில் 21,700 பேர் ரோஹிங்கியா மக்கள் ஆவர். இத்தகவலை ஐ.நா குழு தலைவர் அசோக் நிகாம் தெரிவித்துள்ளார். வீடுகளை இழந்தவர்கள் ராக்கேனை விட்டு வெளியேறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களை தவிர, முன்னர் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் ராக்கேன் தலைநகருக்கு புலன்பெயர்ந்துள்ளனர். ஜூன் மாதம் இனப்படுகொலை துவங்கியதில் இருந்து புலன்பெயர்ந்தோரின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டியுள்ளது. தற்போது உருவான கலவரம் ஆறு கிராமங்களை பாதித்துள்ளது.
இதில் மின்பியா கிராமம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.இத்தகவலை எ.எஃப்.பி கூறுகிறது. இங்கிருந்து புலன்பெயர்ந்த நான்காயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஐ.நா தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் பிரபல மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ஸ் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்திருந்தது.
No comments:
Post a Comment