Monday 8 October 2012

வர்தகமயமான கிரிக்கட் விபரீதம் ! இருவர் தற்கொலை


நேற்று இடம்பெற்று முடிந்த 20-20 கிரிக்கற் போட்டியில் இலங்கை தோல்வியடைந்ததைத் தொடர்ந்துமனவேதனையுற்ற இரண்டு இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டதாக நெத் எப்.எம் இணையதளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

ஹெ ட்டன் குடாஓய பிரதேசத்தைச் சேர்ந்த மகேந்திரன் சுரேந்திரன் என்ற இளைஞன் பக்கத்து வீட்டு தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு வந்து தனது தாயையும் சகோதரியையும் வீட்டை விட்டு வெளியெ போகுமாறு நிர்பந்தித்து வெளியே அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார்.

இவரின் மரண பரிசோதனை நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் இடம்பெற்றது.

இலங்கையின் தோல்வியை சகி;க்க முடியாத பாதுக்கை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் காலிமுகத்திடலுக்குச் சென்று போட்டியைப் பார்த்துவிட்டு வீடு திரும்பி வந்து மாமரத்தில் கழுத்துக்கு சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பிரித்தானிய ஏகாதிபத்தியம் தான் ஆட்சி செய்த நாடுகளுக்கு எச்சமாக விட்டுச்சென்றுள்ள இந்த கிரிக்கட் விளையாட்டு இன்று ஒவ்வொரு நாட்டிலும் அரசியல், பொருளாதார சமூகவியல் ரீதியாக தாக்கம் செலுத்துகின்ற ஒரு விளையாட்டாக மாற்றம் பெற்று வருகின்றது.

ஒரு பக்கம் சூதாட்டக் களமாக மாறி வருகின்ற இந்த விளையாட்டு மறுபுறம் உலக மக்களை உளவியல் ரீதியிலான தாக்கங்களுக்கும் உள்ளாக்கி வருகின்றது. இந்த கிரிக்கட் மேனியாவினால் பாதிக்கட்ட பலரால் நூட்டின் அபிவிருத்தி நகர முடியாமல் நின்று போகின்றது.

பணத்தை பிரதான இலக்காகக் கொண்டு போட்டிப் போட்டுக்கொண்டு செயற்படும் ஊடகங்கள் கிரிக்கட் போட்டியை வைத்து தனது மடியை நிரப்பிக்கொள்கின்றன.

பணத்தை முதலாளிகளுக்கும் மன உளைச்சலை மக்களுக்கும் கொடுத்து வரும் இந்த விளையாட்டு இன்று உலகில் அபிவிருத்தியில் அதி முன்னணியில் இருக்கின்ற எந்த நாடுகளிலும் விiளாயடப்படுவதில்லை.

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...