உலகில் பலராலும் அறியப்பட்ட சிந்தனையாளரான நோம் சொம்ஸ்கி இந்த நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர். அமெரிக்க தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றில் மொழியியற்துறைப் பேராசிரியராகப் பணிபுரிபவர். அமெரிக்காவின் ஜனநாயக விரோதப் போக்குகளை மக்கள் விரோதப் போக்குகளை தொடர்ந்தும் அம்பலப்படுத்தி வருபவர். இதனால் பல அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டு வருபவர். பல்துறைசார்ந்த அறிவுஜீவியான இவர் அண்மையில் சீனாவுக்குச் சென்றபோது ளுழரவாநசn ஆநவசழிழடவையn னுயடைல என்ற சீனப் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலை பிரசுரித்திருந்தது. அந்த நேர்காணலை நமது வாசகர்களுக்காக தமிழில் தருகிறோம். இப்பேட்டியில் அவர் சர்வதேச அரசியலில் சீனா பெற்று வரும் முக்கியத்துவம், அமெரிக்கா மற்றும் உலகமயமாக்கல் குறித்து தெளிவுபடுத்துகிறார்.
தமிழில்: ஜிஃப்றி ஹாஸன்
———————————————————————————————————————-
SMD– அதிகமான சீனர்கள் உலகமயமாக்கலை ஏற்றுக் கொண்டுவிட்டனர். கடந்த மூன்று தசாப்தங்களில், குறிப்பாக உலக வர்த்தக ஸ்தாபனத்தில் (றுவுழு) சீனா இணைந்ததையடுத்து அநேகமான சீனர்கள் அதிகம் நன்மையடைந்தார்கள். ஆனால், நீங்களோ ஓர் மங்கிய ஒளியில் உலகமயமாக்கலைப் பார்ப்பதாகத் தோன்றுகின்றதே.
சொம்ஸ்கி – சீனாவின் பொருளாதார அடைவென்பது உலகமயமாக்கலோடு குறைந்தளவிலேயே தொடர்பு கொண்டுள்ளது. சீனாவின் பொருளாதாரம் ஏற்றுமதி வர்த்தகத்துடனேயே தொடர்புபட்டுள்ளது. சீனா ஒரு ஏற்றுமதி மைய நாடாக படிப்படியாக மாறி வருகிறது. நான் உட்பட எவரும் இந்த ஏற்றுமதிகளுக்கு எதிரானவர்களல்ல் ஆனால் இதுவல்ல உலகமயமாக்கல், உண்மையில் சீனா வட-கிழக்காசிய உற்பத்தி முறையில் ஒரு தொழிற்சாலையாக மாறியுள்ளது. முழுப்பிராந்தியத்தையும் நீங்கள் எடுத்து நோக்கினால், நீங்கள் ஒரு பாரிய சக்தியைக் காண்பீர்கள.; சீனாவின் ஏற்றுமதி அளவு அளவிட முடியாததாகவுள்ளது. ஆனால் நாம் கவனிக்க வேண்டிய விடயமொன்றும் இங்குள்ளது. சீனாவுடைய ஏற்றுமதி பாரியளவில் ஜப்பான், கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் ஏற்றுமதியை சார்ந்திருக்கிறது. இந்நாடுகள் சீனாவுக்கு உயர் தொழில்நுட்பங்களையும், தொழில்நுட்பக் கருவிகளையும் வழங்குகின்றன. சீனா இத்தொழில்நுட்ப உற்பத்தியில் இங்கு வெறும் ஒன்றியமாகத்தான் செயற்படுகின்றது. இவைகளைப் பயன்படுத்தி அது மேற்கொள்ளும் இறுதி உற்பத்தியில் ‘அயனந in உhiயெ’ என்ற முத்திரையைக் குத்தி விடுகிறது அவ்வளவுதான்!
அறிவுபூர்வமான கொள்கைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் சீனா வேகமாக அபிவிருத்தி அடைகின்றது. மில்லியன் கணக்கான மக்கள் வறுமையிலிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கின்ற போதிலும் சூழலியல் அழிவு போன்ற இழப்புக்கள் உயர்வாக உள்ளன. இவை அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுகின்றன. பொருளியலாளர்கள் அவற்றைப் பற்றி கவலைப்படமாட்டார்கள். ஆனால் இறுதியில் இந்த இழப்புகளுக்காக சிலர் விலை கொடுக்க வேண்டியுள்ளது. அது உங்களுடைய பிள்ளையாக அல்லது பேரப்பிள்ளையாக இருக்கலாம். இது உலகமயமாக்கலுடனோ அல்லது றுவுழு உடனோ எந்த விதத்திலும் தொடர்புபட்டதல்ல.