Sunday, 30 January 2011

எகிப்தின் எழுச்சி - இஸ்ரேலிய அதிகாரிகள் எகிப்தை விட்டு தப்பியோட்டம்!


மக்கள் எழுச்சியைக் கண்டு மருண்டு போயிருக்கும் மத்திய கிழக்கின் சர்வாதிகார மாமன்னர்கள்)

எகிப்தின் ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக் தனக்கு ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியிலிருந்து மீண்டு வருவார் என்று பெயர் குறிப்பிட விரும்பாத இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்திருப்பதாக டைம் சஞ்சிகை வெள்ளியன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

அதே நேரம் கெய்ரோவிலிருக்கும் இஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் தமது தூதரகத்தை காலி செய்து விட்டு விஷேட ஹெலிகொப்டர்கள் மூலம் டெல்அவிவ் நகரத்திற்கு தப்பி ஓடியிருப்பதாகவும்  அப்பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.(மக்கள் எழுச்சியில்  சர்வதேச அணுசக்தி முகவர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் முஹம்மத் அல்பராதி)


எகிப்திய பிரஜையான சர்வதேச அணுசக்தி முகவர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் முஹம்மத் அல்பராதி அவர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பதோடு தனது மூன்று தசாப்த ஆட்சியை விட்டு விட்டு ஹுஸ்னி முபாரக் வெளியேற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.சர்வாதிகார முபாரக் அரசு சனிக்கிழமை வரை  தொடராக ஐந்து தினங்களாக மக்களின் முற்றுகைக்கு உட்பட்டு இருக்கிறது.

அரசுக்கெதிரான இந்தப் போராட்டத்தில் இதுவரை சுமார் 100 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக அறிய வருகிறது. அமைச்சரவை முழுவதும் இராஜிநாமா செய்திருக்கும் நிலையில் முக்கிய மூன்று நகரங்களில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.


(முன்னாள் இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் டிஸிபி லிவினியை ஒமர் சுலைமான் இஸரேலில் 2008ம் ஆண்டு சந்தித்த போது எடுக்கப்பட்ட படம்)

அமைச்சரவை கலைப்பிற்கு பிறகு ஹுஸ்னி முபாரக் தனதும் இஸ்ரேலினதும் நம்பிக்கைக்குரிய ஒருவராக இருக்கும், எகிப்திய  உளவுப்பிரிவின் தலைவரான  ஒமர் சுலைமானை பதில் ஜனாதிபதியாக இப்போது நியமித்துள்ளார்.

பதில் ஜனாதிபதி என்ற ஒரு பதவி எகிப்தில் இதுவரை இல்லாத ஒரு பதவியாகும். மற்றும் உள்ளுர் விமான சேவைக்கு பொறுப்பாக இருந்த அமைச்சரான அஹ்மத் ஷபீக்கை புதியதொரு அரசாங்கத்தை அமைக்க உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருகின்றார்.  அஹமத் ஷபீக் எகிப்திய இராணுவத்தோடு மிகவும் நெருங்கிய தொடர்புடைய மூத்த இராணுவ அதிகாரி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலைப் போன்றே முபாரக்கின் மற்றுமொரு சகாவான சவூதி மன்னன் அப்துல்லாஹ்வும் சர்வாதிகார முபாரக் அரசுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதோடு,  சனிக்கிழமையன்று ஏஎப்பி செய்திச சேவைக்கு கருத்துத்தெரிவிக்கும் போது கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் எகிப்தின் பாதுகாப்பிற்கும், அரசியல் ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்களைக் கண்டித்துள்ளார்.

மேற்படி எகிப்திய மக்கள் எழுச்சியைக கொச்சைப் படுத்திய மன்னர் அப்துல்லாஹ், இஸரேல் நலன் சார்ந்த எகிப்திய சர்வாதிகார அரசுக்கு தனது பூரண ஆதரவை வழங்குவதாக உறுதிபூண்டிருக்கின்றார்.

எகிப்திய மக்கள் எழுச்சியை பேஸ்புக்கில் பின்தொடர்வதற்கு இந்த சுட்டியை சொடுக்கவும்.
We are all Khaled Said


1 comment:

 1. Dear Badr Kalam,

  Please do not compare poor whore with our Saudi support ulemaas.

  whore, they selling their body for food and cloth.

  unfortunately, our ulemaas selling their religion for protect the enemy of allah just because of money.

  So, according to me those whores are better than our shameless ulemaas.

  Thanks for your kind information.

  ReplyDelete

ஞானசார தேரர் சிறைச்சாலையில் 'ஜம்பர்' அணிவது பிரச்சினையா?

ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தை வைத்து சிங்கள இனவாதிகள் தமது வழமையான இனவாத பிரசாரத்தை முடுக்கி விட்டுபோராட்டங்களை ஆரம்பித்...