மக்கள் எழுச்சியைக் கண்டு மருண்டு போயிருக்கும் மத்திய கிழக்கின் சர்வாதிகார மாமன்னர்கள்)
எகிப்தின் ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக் தனக்கு ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியிலிருந்து மீண்டு வருவார் என்று பெயர் குறிப்பிட விரும்பாத இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்திருப்பதாக டைம் சஞ்சிகை வெள்ளியன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.
அதே நேரம் கெய்ரோவிலிருக்கும் இஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் தமது தூதரகத்தை காலி செய்து விட்டு விஷேட ஹெலிகொப்டர்கள் மூலம் டெல்அவிவ் நகரத்திற்கு தப்பி ஓடியிருப்பதாகவும் அப்பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.
(மக்கள் எழுச்சியில் சர்வதேச அணுசக்தி முகவர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் முஹம்மத் அல்பராதி)
எகிப்திய பிரஜையான சர்வதேச அணுசக்தி முகவர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் முஹம்மத் அல்பராதி அவர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பதோடு தனது மூன்று தசாப்த ஆட்சியை விட்டு விட்டு ஹுஸ்னி முபாரக் வெளியேற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.