Saturday, 29 January 2011

Latest Photos: எகிப்து : சரிந்து விழுகிறது சர்வாதிகாரம்?





மூன்று தசாப்த சர்வாதிகாரம் அதிர்ந்து போகிறது.
 அமெரிக்கா, இஸ்ரேல், அரபு நாட்டு மன்னர்களின் ஆசிர்வாதம் அழிந்து போகிறது.
 ஹுஸ்னி முபாரக்கை  எதிர்த்து இரவு பகலாக தொடர்கிறது எகிப்திய மக்கள் எழுச்சி... 


மக்கள் எழுச்சிக்கு முன்னால் திராணியற்று நிற்கும் தாங்கிகள்


இராணுவ தாங்கிகளை தமதாக்கி்க் கொள்ளும் எகிப்திய இளைஞர்கள் 

எழுச்சிக்கு முன்னால் ஒளிந்துக் கொள்ளும் இராணுவ பலம்

தூனீசியாவில் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டான் ஓர் இளைஞன். அந்தத் தீ எகிப்தைின் இராணுவ தாங்கிகளை எப்படித் தாக்கியது? 
புரட்சி என்ன தொற்று நோயா? 
 மக்கள் எழுச்சிக்கு முன்னால் மண்டியிட்டிருக்கும் இராணுவ தாங்கி

தீயில் குளிக்கிறது ஆளும் கட்சியான தேசிய ஜனநாயக கட்சித் தலைமையகம்

 எகிப்தின் எதேச்சதிகாரமும், எழுச்சியும் சந்தித்துக்கொண்ட 
 தஹ்ரீர் சதுக்கம்

கவசங்களோடு ...மக்களைக் கடித்துக் குதற காத்திருக்கும் காவல் நாய்கள்.

காட்டாறு வெள்ளத்தை கைகளால் தடுக்க முடியுமா?
கண்ணீர்ப் புகை!

இராணுவத்திற்கும் இதயம் இருக்கிறதே!


புரட்சியின் பாதை ஓளிர்கிறது.


இங்கு (எகிப்தில்) பற்றி எரிவது அடக்குமுறை மட்டுமல்ல 
 இஸ்ரேல், அமெரிக்கா நாட்டு தலைவர்களினதும் அதன் அடிவருடிகளான பக்கத்து நாட்டு அரபு மன்னர்களின் அடிவயிறுகளும்தான்.



2 comments:

  1. வீரியமும், வீரமும் செறிந்த படங்கள். முந்திக்கொண்டீர்கள். நன்றி.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்...
    அருமையான புகைப்படங்கள். அசத்தல் பதிவு.
    அதிரடி விளக்கங்கள். பத்ர் களம்'தான்...!

    போராட்டம் நடக்கும்போதே ஜமாத்தாக தொழுகையா..!?!?! மாஷாஅல்லாஹ்.

    சிகப்புக்கொடியை துனிசியாவில் பார்த்தவுடன் 'இந்த புரட்சிக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை' என்று கொக்கரித்தவர்கள் கவனிக்க. எங்கே சென்று விட்டீர்கள் இப்போது?

    ///ஒ... மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஹதீஸ்: ஸுனன் நஸயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)((((இல்லாவிட்டால்....? இல்லாவிட்டால்....? இல்லாவிட்டால்?)))) /// ---எப்பேற்பட்ட கொம்பனாய் இருந்தாலும், இறைவேதத்துக்கு அப்பாற்பட்டு நபிவழிக்கு முரணாய் லஞ்சம், ஊழல், ஆடம்பரம், மக்களை பற்றி கவலைப்படாதிருத்தல், சுயநலம், பொய், கள்ளத்தனம், கபடம், ஹராமை ஹலாலக்குதல், ஹலாலை புறக்கணித்தல் போன்றவற்றில் ஈடுபட்டால்... முஸ்லிம் பொதுமக்கள் அரசுக்கு எதிராக கொந்தளித்து அந்த அரசை ஆட்சியிலிருந்து அகற்றி நல்ல அரசை அமைப்பது தங்கள் கடமை என்று இப்போதாவது இவர்களுக்கு புரிய ஆரம்பித்ததே..! மிக்க மகிழ்ச்சி.

    துனிசிய, எகிப்திய மக்கள்தான் அனைத்து முஸ்லிம் நாட்டு அரசினருக்கும் எச்சரிக்கைமணி அடித்துள்ளனர். எத்தநினைக்காலம்தான் ஏமாற்றுவார்கள்? & ஏமாறுவார்கள்?

    ReplyDelete

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...