Sunday 30 January 2011

எகிப்திய சிறையை உடைத்துக் கொண்டு 5000 கைதிகள் வெளியேற்றம்!


          
கைரோவிற்கு 130கி.மீ தொலைவில் தென் மேற்காக அமைந்துள்ள பையூம் பிராந்தியத்தில் அமைந்துள்ள சிறைச்சாலையை உடைத்துக் கொண்டு 5,000 சிறைக் கைதிகள் வெளியேறியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் இராணுவ உயர்மட்ட ஜெனரல் ஒருவர் கொல்லப்பட்டும் இன்னொரு இராணுவ உயர் அதிகாரி கடத்தப்பட்டும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹுஸ்னி முபாரக்கின் அடக்குமுறை ஆட்சியில் பல ஆயிரக்கணக்கான அரசியல்வாதிகள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

இதேவேளை சனிக்கிழமை நிவ்யோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா தலையகத்துக்கு முன்பாக எகிப்தியர்கள் தம் நாட்டில் நடைபெரும் மக்கள் எழுச்சிக்கு ஆதரவாக ஹுஸ்னி முபாரக்கிற்கு எதிரான சுலோகங்களுடன் அணிதிரண்டனர்.

சனிக்கிழமை இரவு கைரோவில் அமைந்துள்ள ஆளும் கட்சியான தேசிய ஜனநாயகக் கட்சித் தலைமையத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் இரண்டாவது முறையாகவும் தீ வைத்துள்ளனர்.



யுத்தத்தாங்கிகளும் இராணுவ அதிகாரிகளும் நகரத் தெருக்களில் தீவிர காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களினால் வீதிகளில் மூட்ப்பட்ட தீ இன்னும் அணையாத வண்ணம் உள்ளது

எகிப்தில் சகலவிதமான தொலைத்தொடர்புகளும்,  வலையமைப்புக்களும் சனிக்கிழமை முதல் துண்டிக்கப்பட்டுள்ளன.

சனிக்கிழமை கைரோவிற்கு தெற்காக 115 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பனூ சுஐப் கிராமத்தில் இராணுவத்திறகும் அரச எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்றுவரும் வன்முறைச் சம்பவங்கிளினால் இது வரை சுமார் 100 பேர் மரணமடைந்துள்ளதான தெரிவிக்கப்படுகிறது. 2000 இற்கும் மேற்பட்டோர் நாடு பூராகவும் நடைபெறும் வன்முறைச் சம்பவங்களால் காயமடைந்துள்ளனர்.

எகிப்தின் பிரதான எதிர்க்கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான அழைப்பை விடுத்துள்ளது.

அதிகாரம் சமாதானமான முறையின் கைமாற்றப்பட வேண்டும் எனவும் எதிர்ப்பாளர்கள் தமது எதிர்ப்பை தொடர்ந்தும் காட்டிய வண்ணம் இருக்கவேண்டும் என்றும் மேலும் அக்கட்சி அழைப்பு விடுத்துளளது.

ஹுஸ்னி முபாரக் ஆட்சியை விட்டுக் கொடுக்க மறுத்தால் எகிப்தில் மாபெரும் புரட்சி வெடிக்கும் எனவும் அக்கட்சி எச்சரித்துள்ளது.

தகவல் - www.presstv.ir

1 comment:

  1. BRAVO TO BADR KALAM.

    Excellent work. Once again Badr Kalam join hand with oppressed people.

    I wish you all the best to Badr Kalam.

    ReplyDelete

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...