Monday, 26 November 2012

இலங்கை - பதுளையில் தொடரும் பௌத்த பல சேனா தொந்தரவுகள் !


பதுளையில் முஸ்லிம்களுக்கு எதிராக அணிதிரண்டு வரும் பௌத்த பல சேனா என்ற அமைப்பு திட்டமிட்டு முஸ்லிம்களை சீண்டி வருவதை கடந்த பதிவுகளில் தந்திருந்தேன்.

நேற்றிரவு முஸ்லிம்களுக்கு சொந்தமான பத்து ஆடுகள் களவாடப்பட்டு அவற்றில் மூன்று ஆடுகளின் கழுத்தை வெட்டி  கொன்று போடப்பட்டிருக்கின்றன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பௌத்த பல சேனாஅமைப்பின் முக்கிய நபர்களை பதுளை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செயதிருக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட மூன்று நபர்களும் கடந்த வெள்ளிக்கிழமை முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்து நடாத்திய முக்கிய நபர்கள் என்று தெரிய வருகின்றது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து மதுரங்க என்ற பெயருடைய பதுளை மீன் வியாபாரியும், தினேஷ் என்ற இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியரும், கோமஸ் என்ற முச்சக்கர வண்டி ஓட்டுனரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவதாக அறிய வருகிறது.

இவர்களின் கைதை எதிர்த்து ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பாக தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் பௌத்த பல சேனா பதுளை கிளையின் முன்னணி செயற்பாட்டாளருமான தயாசிரியினதும், மற்றும் இரண்டு பௌத்த பிக்குகளினதும் தலைமயில் பதுளை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றும் நடைபெறுவதாக பதுளையில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அன்பு ஜீவகாருண்யம் தொடர்பாக பேசுகின்ற அதை வைத்து ஏனைய மதங்களை சாடுகின்ற பௌத்த இனவாத அமைப்புகள், இப்படி ஆடுகளைக் கடத்திச் சென்று கொன்று போடுவதை எப்படி அங்கீகரிக்கின்றனர்?

வீடியோ - குஜராத் கலவரம் ! ஊடகங்களுக்கு முகம் கொடுக்காமல் ஓடி ஒளியும் நரேந்திர மோடி!



 இதோ ஆயிரகணக்கான உயிர்களை பலியிட்ட நரபலி நாயகன் ,சர்வதேச பயங்கரவாதி , நரேந்திர மோடி CNN TV இல் குஜராத்தில் நடந்த கொடுமைகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறுவதையும் , காமெராவை நிறுத்த சொல்லுவதையும் பாருங்கள் ..

குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலைகளில் மிக முக்கிய ஏழு சம்பவங்களில் ஒன்றாக ஒடே படுகொலைகள் கருதப்படுகிறது. மார்ச் 1, 2002 அன்று அஹமதாபாத்திலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள ஒடே என்ற இடத்தில் கலவர நெருப்பு கொழுந்துவிட்டது. ஒரே முஸ்லிம் இளைஞர் படுகொலை செய்யப்படுகிறார். மக்கள் பீதியடைகின்றனர். பிரவொலி பஹோல் என்ற இடத்தில் ஒரு வீட்டில் தஞ்சமடைந்திருந்த முஸ்லிம்களை சங்பரிவாரக் கும்பல் உயிரோடு கொளுத்துகிறது. உயிரோடு எரிக்கப்பட்ட முஸ்லிம்களில் 9 பேர் குழந்தைகள், 9 பேர் பெண்கள், 5 ஆண்கள். 

1500க்கும் மேற்பட் சங்பரிவார குண்டர்கள் மோடி அரசின் முழு ஒத்துழைப்போடு இப்பகுதியைச் சூறையாடினர். இச்சம்பவத்தை உச்சநீதின்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரித்தது. ஆனந்த் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்து ஏப்.9, 2012 அன்று தீர்ப்பளித்தது. குற்றம் சாட்டப்பட்டோரில் 23 பேர் குற்றவாளிகள் என்று கூறியது. 23 பேரை சாட்சியமில்லாததால் விடுதலை செய்தது. ஏப்.12, 2012ல் சிறப்பு நீதிமன்றம், குற்றவாளிகள் என சந்தேகமற உறுதி செய்யப்பட்ட 23 பேரில், 18 பேருக்கு ஆயுள் தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் அளித்துள்ளது. குற்றவாளிகள் அனைவருக்கும் மரணதண்டனை வழங்கவேண்டும் என உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக்குழு வலிமையாக வாதிட்டபோது, நீதிபதி பூணம் சிங் அதை ஏற்கவில்லை. மரணதண்டனை மிக அபூர்வ வழக்குகளில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு இதற்கு முந்தைய குற்ற வரலாறுகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 18 பேருக்கு, ரூ.5,800 அபராதமும், கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்ட 5 பேருக்கு ரூ.3800 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மரண தண்டனை வழங்க சிறப்பு புலனாய்வுக்குழு மேல்முறையீடு செய்யும் என்றும் கூறப்படுகிறது. கொடிய குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் போதுமானதல்ல என்ற ஆதங்கம் ஒருபுறம் என்றாலும், அவர்கள் பெயரளவுக்காவது தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது லேசான ஆறுதல்தான். இவர்கள் மிகக்கடுமையாக தண்டிக்கப்பட்டால்தான் இத்தகைய கொடிய சம்பவங்கள் தடுக்கப்படும் என்பது நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த வழக்கு பல்வேறு தடைகளைத் தாண்டி தீர்ப்பை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.


மார்ச் 1, 2002ல் நடந்த சம்பவத்துக்கு, 2009 இறுதியில்தான் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. எதிரிகள் 47 பேரில் ஒருவர் இறந்துவிட 46 பேர் மீது விசாரணை தொடர்ந்தது. 2011ம் ஆண்டு இவ்வழக்கு முடியும் தருவாயில் திடீரென நீதிபதி பதவி விலகினார்..!
இப்போது 1252 பக்கத்தில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியா, ஹிந்து உள்ளிட்ட ஆங்கில ஏடுகள் இவ்வழக்குச் செய்தியை முக்கியத்துவத்தோடு வெளியிட்டன. தினமணி உள்ளிட்ட சில தமிழ் ஏடுகள் இவ்வழக்கை குட்டிச் செய்தியாக்கின.

Sunday, 25 November 2012

வீடியோ - இஸ்ரேலிய பயங்கரவாதம்...!



சிறுவர்களுக்காக குரல் கொடுக்கும் அமெரிக்க அடிவருடியான ஐக்கிய நாடுகள் சிறுவர் பாதுகாப்பு நிதியம் ( யுனிசெப்) ஆழ்ந்த உறக்கத்தில்...! எரித்துக் கொல்லப்பட்டிருக்கும் இந்த சின்னஞ் சிறு குழந்தை செய்த குற்றம் பலஸ்தீனில் பிறந்ததே!

சிங்களவர்களே ! அணி திரளுங்கள் !! மீண்டும் பதுளையில் துண்டுப்பிரசுரம்.


                                               பௌத்த பல சேனாவின் துண்டுப்பிரசுரம்

அண்மையில் இலங்கை  பதுளை நகரில் முஸ்லிம் கடை உரிமையாளர் ஒருவருக்கு எதிராக புத்தரின் படம் பொறிக்கப்பட்ட கையுறை ஒன்றை விற்பனை செய்தார் என்று குற்றஞ் சாட்டி, பதுளை பொலிஸார் அவரை  நீதி மன்றத்தில் நிறுத்தி பிணையில் அனுப்பியதை பத்ர் களம் கடந்த பதிவில் தந்தது.

இந்தச் சம்பவத்தின் பின்னர் பௌத்த பல சேனா அமைப்பு சிங்களவர்களே ! அணி திரளுங்கள் !! என்ற ஒரு துண்டுப் பிரசுரத்தை மீண்டும் விநியோகித்து வருகின்றது.

அதன் தமிழ் வடிவம் இதோ!

இது இளைஞர்கள் நாகரீகமாக அணியும் ஒன்று (கையுறை). இதில் இருப்பது என்னவென்று பாருங்கள். புத்தரின் உருவம். இப்படி புத்தரின் படத்தை  அவமதித்து கையுறைகளில் பதித்து விற்பனை செய்வோர்  பதுளை தபால் நிலையத்திற்கு முன்பாக இருக்கின்ற டீன்ஸ் பென்ஸி பெலஸ் என்ற வர்த்தக நிலையமே.

பௌத்த பல சேனா அமைப்பின் இளைஞர் அணியின் முயற்சியால் நேற்று இந்த கடை உரிமையாளர் பொலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

என்றாலும் அவரை பிணையில் விடுவிப்பதற்கு வெட்கம் கெட்ட அதிகாரிகள் ஒரு சிலர் செயற்பட்டு வருகின்றனர்.

சிங்கள் பௌத்தர்களான எமக்கு ஏற்பட்ட அநியாயத்திற்கு எதிராக கதைப்பதற்கு யாருமே இல்லை.

எங்களுக்கு இருப்பது சிங்கள் பௌத்த மக்களான உமது ஒற்றுமையின் சக்தி மட்டுமே!

எங்கள் புத்தபெருமானை அவமதிப்போருக்கு இடமளியோம்!
நாங்கள் ஒன்றிணைந்து எங்கள் புத்த தர்மத்தை பாதுகாப்போம்!

நீங்கள் உண்மையான பௌத்தர்களாயிருந்தால் எம்மோடு இணைந்து கொள்ளுங்கள்!

0771090167
பௌத்த பல சேனா - பதுளை

Saturday, 24 November 2012

இலங்கை - பதுளை இனவாதமும் பௌத்த பல சேனாவும்!










இலங்கையின் பதுளை நகரில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான கடையில் புத்தரின் படம் பொறிக்கப்ட்ட கையுறை ஒன்றை விற்பனை செய்தார் என்ற குற்றஞ்சாட்டி குறித்த கடை உரிமையாளரும் அந்தக் கடை ஊழியர் ஒருவரும்   கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை தலா 5000 ரூபாய் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

இது தொடர்பாக நேற்று பதுளை நகரில் முஸ்லிம்களை எதிர்த்து ஓர் ஆர்ப்பாட்டமும் இடம் பெற்றது.

முஸ்லிம்கள் பௌத்த மதத்திற்கு எதிராக செயற்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தும் இந்த வியாபாரியின் கைதை ஆதரித்தும் அவர்களுக்குத் தண்டனை வழங்கக் கோரியும் நேற்று வெள்ளிக்கிழமை பொது (பௌத்த) பல சேனா என்ற அமைப்பு பதுளை நகரில் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

இன்று (சனிக்கிழமை) காலை குறித்த கடையின் உரிமையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தேன்.

அவரிடம் புத்தரின் படம் பொறிக்கப்பட்ட எவ்வித கையுறைகளும் இருக்கவில்லை என்றும் அப்படி பௌத்தர்களின் மனதை நோகடிக்கும் வகையிலான வியாபாரத்தை செய்வதற்கு தனக்கு எவ்வித அவசியமும் இல்லையென்றும், பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய இத்தகைய முயற்சிகளை சிறுபான்மை சமூகங்கள் ஒருபோதும் செய்யமாட்டார்கள் என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.

வியாழக்கிழமை அன்று கடைக்கு கையுறை ஒன்றை வாங்க வந்த வாலிபர் ஒருவர் கையுறை ஒன்றை  160.00 ரூபாய் கொடுத்து வாங்கி விட்டு தன்னிடம் அதற்கான பற்றுச் சீட்டு ஒன்றை கேட்டதாகவும், அதற்கான விலையை ஒரு தாளில் குறி்ப்பிட்டு தான் கொடுத்ததாகவும்  கூறினார்.

ஓர்  அரை மணித்தியாலம் தாமதித்து அவரின் கடைக்கு வந்த பதுளை பொலிஸ் நிலையத்ததைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள்,

கடையில் விற்பனைக்கு வைத்திருக்கும் கையுறைகளை சோதனையிட வேண்டும் என்று வேண்டியதாகவும் புத்தரின் படம் பொறிக்கப்பட்ட கையுறைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறி அந்த வகையான புத்தரின் படம் பொறிக்கப்பட்ட கையுறைகளை காட்டுமாறும் கடை உரிமையாளரை நிர்ப்ந்தித்திருக்கின்றனர்.

அதனை மறுத்த கடை உரிமையாளர் தாம் அப்படி புத்தரின் படம் பொறிக்கப்பட்ட எவ்வித கையுறையையும் யாருக்கும் விற்க வில்லையென்றும் கூறியிருககின்றார்.

உடனே பொலிஸார் வெளியே நின்றுக்கொண்டிருந்த  ஏற்கனவே கடைக்கு வந்து கையுறை வாங்கிய இளைஞரை அழைத்து அவரின் கையிலிருந்த கையுறையை கடை உரிமையாளருக்கு காட்டியிருக்கின்றனர். அந்தக் கையுறை ஜோடியில் ஒன்றில் புத்தரின் படம் பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்ட கடை உரிமையாளர் அதிர்ச்சியடைந்திருக்கின்றார்.

தான் இப்படியான கையுறையை யாருக்கும் விற்பனை செய்யவில்லையென்றும்  தனது கடையில் இத்தகைய கையுறைகள் கிடையவே கிடையாது என்றும் அடித்துக் கூறியிருக்கின்றார.

இதனை ஏற்க மறுத்த பொலிஸார் கடை உரிமையாளரை பொலிஸுக்கு வருமாறு அழைத்திருக்கின்றனர். கடைக்கு வெளியே வரும் போது பல ஊடகவியலாளர்கள் கடைக்கு வெளியே காத்துக் கிடப்பதையும் பல கோணங்களிலிருந்தும் கடையையும், கடை உரிமையாளரையும் படமெடுப்பதையும் அவதானித்திருக்கின்றார்.

இதைப்படிக்கும் போதே ஏதோ திட்டமிட்டு நடக்கும் நாடகம் என்பதை உங்களால் புரிந்துக் கொள்ள முடியும்.

பொலிஸார்  கடை உரிமையாளர் கைது செய்து பதுளை பொலிஸ் நிலையத்திற்கு செல்லும் போது இது விடயமாக முறைப்பாடு செய்வதற்கு ஏற்கனவே ஒரு பௌத்த தேரர் பொலிஸ் நிலையத்தில் வந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

கடை உரிமையாளருக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்கு இந்தக் கொடுக்கல் வாங்கலில் சம்பந்தமே படாத இந்த பௌத்த தேரருக்கு எவ்வித உரிமையுமில்லை. இதற்கான முறைப்பாட்டை அந்த கையுறையை வாங்கிய இளைஞனே வழங்க வேண்டும். ஆனால் எதற்கும் சம்பந்தம் இல்லாத  இந்த பௌத்த பிக்குவின் முறைப்பாடே இதன் பின்னணியில் இருக்கின்ற முஸ்லிம் இனவாத நாடகத்தை எடுத்துக்காட்டுகின்றது.

அண்மைக்காலமாக பதுளையில் உருவாகிவரும் முஸ்லிம் களுக்கு எதிரான இனவாத வேலைத்திட்டங்களின்  பின்னணியில் ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள்.  ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டணியில் மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த தயாசிரி எனபவர் இந்த பௌத்த பல சேனா என்ற அமைப்பில் முன்னணி செயற்பாட்டாளராக இருக்கின்றார்.

கைது செய்யப்பட்ட கடை உரிமையாளருக்கு சார்பாக எந்த சட்டத்தரணியும் ஆஜராக முன்வரக் கூடாது என்று சட்டத்தரணிகள் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றனர்.

இருந்த போதிலும் பெரும்பான்மை இன சட்டத்தரணிகள் ஆறு பேர், (அதில் ஒருவர் பெண் சட்டத்தரணியாவார்) சுயேச்சையாகவே கடை உரிமையாளருக்காக நீதிமன்றில் ஆஜரானதாக தெரிய வருகின்றது.

அண்மைக்காலமாக இந்த பௌத்த பல சேனா அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிராக பல துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு சிங்கள மககளை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டி வரும் மோசமான செயலை செய்து வருகின்றது. அரசியல் ரீதியாக இந்த அமைப்பிற்கு கிடைக்கும் ஆதரவிற்கு அஞ்சி முஸ்லிமகள் வாய் மூடி மௌனிகளாக இருக்கின்றார்கள்.

நேற்று வெள்ளிக்கிழமை பதுளை பள்ளிவாசலுக்கு ஜும்ஆ தொழுகைக்காக சென்ற இரண்டு முஸ்லிம்கள் இந்த ஆர்ப்பாட்டக் காரர்களினால் தாக்கப்பட்டிருக்கின்றார்கள்.  தமக்கு எதிராக தாக்குதல் நடாத்தியவர்களை  பொலீசில் முறைப்பாடு செய்வதற்கும் முடியாதவர்களாக , பயந்தவர்களாக இவர்கள் இருக்கின்றனர். ஆளும் தரப்பில் இருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட இப்பிரச்சினையை மூடி மறைக்க முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

பதுளையில் வளர்ந்து வரும் இந்த இனவாத செயற்பாட்டை தடுப்பதற்கோ, தட்டிக்கேட்பதற்கோ யாருமே முன்வராத நிலையில் பதுளை முஸ்லிம்கள் அனாதரவாக மாறியிருக்கின்றார்கள்.

பதுளை பள்ளிவாசல் நிர்வாகம் கூட இந்த ஆளும் தரப்பு அரசியல்வாதிகளின் ஆலோசனையின் பேரிலேயே செயற்படுவதாகவும் பொது மக்கள் குற்றம் சாற்றுகின்றனர்.


Thursday, 22 November 2012

அதிர்ச்சி தரும் வீடியோ - இஸ்ரேலிய இராணுவ மிருகங்களின் கொடுமை

இது மனிதாபிமானமற்ற இஸ்ரேலிய மிருகங்களிடம் வதை படும் பலஸ்தீன் மக்களின் கதையை எடுத்துக்காட்டும் ஒரு வீடியோ.

வீட்டுக்குள் புகுந்து அப்பாவி பெண்களையும், சிறுவர்களையும் துன்புறுத்தும் இஸ்ரேலிய பொலிஸ் படை காட்டுமிராண்டித்தனமாக நடப்பதை இந்த வீடியோ காட்டுகின்றது.

ஏற்கனவே தாக்குதலுக்கு உள்ளான வீட்டில் புகுந்து இப்படி மோசமாக நடக்கும் இஸ்ரேலை அமெரிக்கா பக்க பலமாக நின்று தட்டிக் கொடுக்கின்றது. வேறு நாடுகளில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்றால் மனித உரிமை மீறல் என்று கொக்கரிக்கும் அமெரிக்கா இஸ்ரேல் விடயத்தில் அதற்கு மாற்றமாக நடந்து வருகின்றது.

Palestinian Central Bureau of Statistics (PCBS)  அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு தகவலில் 1967 முதல் இன்றுவரை இஸ்ரேலிய இராணுவத்தால் 750,000 பேர் தடுத்து வைக்கபட்டிருந்ததாகவும், இதில் 12,000 பெண்களும் உட்பட்டிருப்பதாகவும் மேற்படி தகவல் தெரிவிக்கின்றது.

Palestinian Central Bureau of Statistics (PCBS) 

தகவலின் படி இன்று 6000 பலஸ்தீனிய ஆண்களும், 35 பெண்களும் 275 சிறுவர்களும்  சிறைகளில் வாடுவதாக தகவல் வெளியிட்டிருக்கிறது.


இன்று அநீதிக்கும் அக்கிரம்த்திற்கும் உட்பட்டு தவித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் உம்மத் தட்டிக் கேட்க நாதியற்ற ஒரு சமூகமாய் மாறியிருக்கிறது.


போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...