Wednesday, 2 February 2011

அரபு உலகிற்கு ஜோர்ஜ் கெல்லோவேயின் அறைகூவல்!




ஹுஸ்னி முபாரக் ஒரு கிரிமினல் குற்றவாளி என்றும் அவரை தூக்கியெறிய திரண்டிருக்கும் எகிப்திய மக்களுக்கு தனது ஆதரவை தெரிவித்தும், பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஜோர்ஜ் கெல்லோவே George Gallowayஅவர்கள் உணர்ச்சிபூர்வமான உரையொன்றை ஆற்றியிருக்கிறார்.

இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகளின் உறுதுணையோடு பலஸ்தீன் மக்கள் மீது தொடுக்கப்படுகின்ற கொலைகளுக்கும், பொருளாதாரத் தடைகளுக்கும் பக்கபலமாக நின்று செயல்பட்டவர்தான்இந்த ஹுஸ்னி முபாரக்.

இவரை ஒரு கிரிமினல் குற்றவாளி என்று வர்ணித்த ஜோர்ஜ் கெல்லோவே அவரை துடைத்தெறிவதற்கு எகிப்திய மக்களோடு சேர்ந்து அதன் இராணுவமும் முன்வரவேண்டும் என அவர்வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இஸ்ரேல்- பலஸ்தீன் விவகாரத்தில்இஸ்ரேலுக்கு பக்கபலமாகசெயற்பட்டு வருபவர்தான் இந்த முபாரக்.

காஸா, எகிப்து எல்லையான ரபா எல்லைக் கதவை மூடி இஸ்ரேல் காஸா மீது விதித்துள்ள பொருளாதார தடைக்கு ஆதரவாக தனது பூரண ஆதரவை வழங்கியவர்தான் ஹுஸ்னி முபாரக். இதன்மூலம் பலஸ்தீன் மக்களை மருத்துவம், உணவு மற்றும்அடிப்படை வசதிகளை எகிப்திலிருந்து பெற்றுக்கொள்ளாமல் காஸா மக்களை பட்டினிச் சாவிற்கு தள்ளியவர்.

பலஸ்தீன் விவகாரத்தில் மிகவும் தீவிரமாக ஈடுபாடு கொண்டு செயற்பட்டு வரும் ஜோர்ஜ் கெல்லோவே அரபு நாடுகளின் அமெரிக்க, இஸ்ரேல் நலன் சார்ந்த அரசியலை மிகவும் வன்மையாக கண்டிப்பவர். விமர்சிப்பவர். மனிதநேயம் மிக்கவர். பணம், பட்டம், பதவிகளுக்கு விலைபோகாதவர்.

இங்கு ஜோர்ஜ் கெல்லோவே பற்றி எழுத, அவரைப் பற்றி அறியத் தர, அவரின் உரையை பதிவிலிட இன்னொரு முக்கிய காரணம் எனக்கு இருக்கிறது.

அது என்னவென்றால்,

சமகாலத்தில் வர்த்தகமயமான எமது தஃவா தளத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கும், எமது புத்தி (?) ஜீவிகள் பலருக்கு ஜோர்ஜ் கெல்லோவே இடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன. இதைச் சுட்டிக்காட்டுவதற்கு சிறந்த தருணமாக இது எனக்குத் தோன்றியது.

இன்று அரபுகளின் பணத்திற்காக அரபு நாடுகளின் இஸ்லாத்திற்கு முரணான அரசியலை செயற்பாட்டைப் பாதுகாக்கின்ற “படித்தவர்கள்” நிறைய பேர் உருவாகியிருக்கின்றார்கள்.

அரபுகளின் அராஜகங்களை முழுமனதோடு ஆதரிக்கின்ற, அவர்களை விமர்சிப்பதை எப்போதும் விரும்பாத புகழ்பூத்த புத்திஜீவிகள் (?)  பலர் பிறந்துக்கொண்டிருக்கின்றார்கள்.

அரபுகளிடம் கையேந்துவதை தொழிலாகக் கொண்ட இவர்கள் , ஏகாதிபத்திய நலன் சார்ந்தஅரபுகளின் தூதுவர்களாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். கைக்கூலிகளாக கடமையாற்றிக்கொண்டிருக்கின்றனர்.

இவர்களுக்கு அரபுகள் மீதான விமர்சனம் அடிக்கடி அஜீரணமாகின்றது.

இந்த அஜீரணத்தை இல்லாமலாக்க இவர்களிடம் இருக்கும் அரு மருந்து, மற்றவரின் கருத்துச் சுதந்திரத்திற்கு தடைகள் போடுவது.  அரபுகள் மீதான விமர்சனம் கையேந்தும் போது குறுக்காக வந்து தடையேற்படுத்திவிடும் என்று தயங்கிப்போய் நிற்கிறார்கள்.

வயிற்றுப் பிழைப்புக்காக வரிந்துக் கட்டிக்கொண்டு இஸ்லாம் பேசும் இவர்கள், இன்று ஆரோக்கியமான திறந்த “கருத்துத் தளத்தை” தமது கழிப்பறைகளாக்க மாற்றும் வெட்கம் கெட்ட தந்திரத்தையும் கையாண்டு வருகின்றனர்.

அரபுகளின் ஏஜன்டுகளாக இருக்கும் இந்த புத்திஜீவிகள் பிற்போக்குவாதத்தில் பிழைப்பு நடாத்துபவர்களாக மாறிக்கொண்டிருக்கின்றார்கள்.

இன்று உலகம் நேசிக்கின்ற புரட்சி இவர்கள் அறியாமலேயே வெடித்துக் கொண்டிருக்கிறது.

அரபுகளின் பிற்போக்குவாத பணத்தினால் போஷிக்கப்படும் இவர்கள் புரட்சியின் கனவுகளோடு போர்த்திப் படுத்துக்கொண்டிருக்கும் போது, இவர்களின் கதவுகளைத் தட்டி குறட்டைகளைக் களைத்தவர்கள் யார் தெரியுமா?

அவர்கள் யாரிடமும் பணம் வாங்காத பொது மக்கள். காசுக்காக கொள்கைகளை விற்காத அந்த பொது மக்களின் பின்னால் போராட்டத்திற்கு அணிதிரள வேண்டிய நிர்ப்பந்தம் இவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

போராட்டம் இவர்களை நீண்ட துயிலிலிருந்து உசுப்பி எழுப்பி இருக்கிறது.
இன்றைய தூனீசியாவும், எகிப்தும் இதற்கு சிறந்த சான்றுகள்.

அரபுகளின் அரசியலை நேசிக்கின்ற, இவர்களின் கதையாடலில் இருக்கின்ற இஸ்லாமிய எழுச்சி போலி என்பது உலகிற்கே இன்று புலனாகியிருக்கிறது.

இவர்களின் கனவு எழுச்சிக்கு பணத்தை வாரி வழங்கி இவர்களைப் பாதுகாத்த அதே அரபு அரசியல்.  தூனீசியாவில் இஸ்லாமிய ஏழுச்சியை காலா காலமாய்  நசுக்கிக்கொண்டிருந்த , நாட்டை விட்டு தப்பியோடிய துரோகியான தூனீசிய தலைவர் பின் அலியையும் அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வருகிறது.

பின் அலியை பாதுகாத்த விஷயத்தில்

இந்த அரபு தேசம் எழுச்சிக்கும்,  வீழ்ச்சிக்கும் உதவி புரிகின்ற ஒரு நாசத்தை செய்து வருகின்றது என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்திருக்கிறத.

இன்று அடக்குமுறை ஆட்சியாளன் பின் அலியினதும், அந்த அடக்கு முறைக்கு எதிராக போராடிய இந்த இஸ்லாமிய வாதிகளினதும் அனுசரணையாளர் யார் என்ற விபரம் திரை கிழிந்து தெரியவந்திருக்கின்றது.

இந்த அடிப்படையில்பார்க்கும்போது அரபுகளின் வாக்குகளை அல்லாஹ்வின் வாக்காக மதிக்கின்ற ,ஆதாயத்திற்காகஅரபுகளைப் பாதுகாக்கின்ற இந்த ஒருசில “ஷெய்க்கு”களை விட ஜோர்ஜ் கெல்லோவே எவ்வளவோ மேலானவர்.

அநீதிக்கு எதிராக போராடுவது, அதற்காக குரல் கொடுப்பது அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுத்தரும் சிறந்த செயலாகும்.  இதை எந்த லாபத்தையும் எதிர்ப்பார்க்காது ஜோர்ஜ் கெல்லோவே செய்தும் வருகிறார்.

இந்த “ஷெய்க்கு” களோ  அல்லாஹ்வின் திருப்தியை விட தனக்கு ஊதியம் வழங்கும் எஜமானர்களின் திருப்தியை மட்டுமே நோக்காகக் கொண்டு அவர்களை திருப்தி படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றனர்.

குளிக்கப் போய் சேறு பூசிக்கொண்ட இந்த புத்தி(?) ஜீவிகளின் கதையை பார்க்கும் போது ..

நா. காமராசன் விலைமாதர்கள் பற்றிய ஒரு கவிதை எனக்கு ஞாபகம் வருகிறது.

“அவர்கள்
நிர்வாணத்தை விற்கிறார்கள்
ஆடை வாங்குவதற்காக..”

அரபுகளின் பணத்துக்காக இஸ்லாம் பேசுபவர்களுக்கும் இந்தக் கவிதைக்கும் நிறையவே தொடர்பிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

அமெரிக்க நலன் சார்ந்த அரபு அரசியலை நேசிப்பவர்களை, அந்த நிதியின் மூலம் இஸ்லாத்தையும் தனது வயிற்றையும் வளர்க்க முயல்பவர்களை
இப்படியும் நோக்கலாம்

அவர்கள்
ஆடைகளை விற்கிறார்கள்
நிர்வாணத்தை வாங்குவதற்காக.
.....?



Sunday, 30 January 2011

எகிப்தில் அல் ஜஸீராவுக்குத் தடை!


மக்கள் எழுச்சிக்கு முகம்கொடுக்க முடியாமல் திணறும் எகிப்திய முபாரக் அரசு தற்போது ஊடகங்கள் மீதான தனது ஒடுக்குமுறையை செயற்படுத்தி வருகின்றது.

இணைய வலையமைப்புகளை முற்றாக செயலிழக்கச் செய்திருக்கும் அரசு இன்று ஞாயிற்றுக்கிழமை அல் ஜஸீரா ஊடக அமைப்பின் சகல செயற்பாடுகளையும் தடைசெய்திருக்கிறது.

அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து ஒளிபரப்பிவரும் அல்ஜஸீரா மீதான தடை கருத்துச் சுதந்திரத்தை முற்றாக மறுக்கும்  செயலாகும்.

இறுதி மூச்சை வாங்கிக்கொண்டிருக்கும் முபாரக் அரசின் இந்த முடிவு எகிப்திய மக்களின் எதிர்ப்புக் குரலை உலகறிய செய்யாதிருக்கும் இறுதி முயற்சியாகும்.

  

எகிப்திய சிறையை உடைத்துக் கொண்டு 5000 கைதிகள் வெளியேற்றம்!


          
கைரோவிற்கு 130கி.மீ தொலைவில் தென் மேற்காக அமைந்துள்ள பையூம் பிராந்தியத்தில் அமைந்துள்ள சிறைச்சாலையை உடைத்துக் கொண்டு 5,000 சிறைக் கைதிகள் வெளியேறியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் இராணுவ உயர்மட்ட ஜெனரல் ஒருவர் கொல்லப்பட்டும் இன்னொரு இராணுவ உயர் அதிகாரி கடத்தப்பட்டும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹுஸ்னி முபாரக்கின் அடக்குமுறை ஆட்சியில் பல ஆயிரக்கணக்கான அரசியல்வாதிகள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

இதேவேளை சனிக்கிழமை நிவ்யோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா தலையகத்துக்கு முன்பாக எகிப்தியர்கள் தம் நாட்டில் நடைபெரும் மக்கள் எழுச்சிக்கு ஆதரவாக ஹுஸ்னி முபாரக்கிற்கு எதிரான சுலோகங்களுடன் அணிதிரண்டனர்.

சனிக்கிழமை இரவு கைரோவில் அமைந்துள்ள ஆளும் கட்சியான தேசிய ஜனநாயகக் கட்சித் தலைமையத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் இரண்டாவது முறையாகவும் தீ வைத்துள்ளனர்.

எகிப்தின் எழுச்சி - இஸ்ரேலிய அதிகாரிகள் எகிப்தை விட்டு தப்பியோட்டம்!


மக்கள் எழுச்சியைக் கண்டு மருண்டு போயிருக்கும் மத்திய கிழக்கின் சர்வாதிகார மாமன்னர்கள்)

எகிப்தின் ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக் தனக்கு ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியிலிருந்து மீண்டு வருவார் என்று பெயர் குறிப்பிட விரும்பாத இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்திருப்பதாக டைம் சஞ்சிகை வெள்ளியன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

அதே நேரம் கெய்ரோவிலிருக்கும் இஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் தமது தூதரகத்தை காலி செய்து விட்டு விஷேட ஹெலிகொப்டர்கள் மூலம் டெல்அவிவ் நகரத்திற்கு தப்பி ஓடியிருப்பதாகவும்  அப்பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.



(மக்கள் எழுச்சியில்  சர்வதேச அணுசக்தி முகவர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் முஹம்மத் அல்பராதி)


எகிப்திய பிரஜையான சர்வதேச அணுசக்தி முகவர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் முஹம்மத் அல்பராதி அவர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பதோடு தனது மூன்று தசாப்த ஆட்சியை விட்டு விட்டு ஹுஸ்னி முபாரக் வெளியேற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

Saturday, 29 January 2011

Latest Photos: எகிப்து : சரிந்து விழுகிறது சர்வாதிகாரம்?





மூன்று தசாப்த சர்வாதிகாரம் அதிர்ந்து போகிறது.
 அமெரிக்கா, இஸ்ரேல், அரபு நாட்டு மன்னர்களின் ஆசிர்வாதம் அழிந்து போகிறது.
 ஹுஸ்னி முபாரக்கை  எதிர்த்து இரவு பகலாக தொடர்கிறது எகிப்திய மக்கள் எழுச்சி... 


மக்கள் எழுச்சிக்கு முன்னால் திராணியற்று நிற்கும் தாங்கிகள்


இராணுவ தாங்கிகளை தமதாக்கி்க் கொள்ளும் எகிப்திய இளைஞர்கள் 

எழுச்சிக்கு முன்னால் ஒளிந்துக் கொள்ளும் இராணுவ பலம்

தூனீசியாவில் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டான் ஓர் இளைஞன். அந்தத் தீ எகிப்தைின் இராணுவ தாங்கிகளை எப்படித் தாக்கியது? 
புரட்சி என்ன தொற்று நோயா? 
 மக்கள் எழுச்சிக்கு முன்னால் மண்டியிட்டிருக்கும் இராணுவ தாங்கி

தீயில் குளிக்கிறது ஆளும் கட்சியான தேசிய ஜனநாயக கட்சித் தலைமையகம்

 எகிப்தின் எதேச்சதிகாரமும், எழுச்சியும் சந்தித்துக்கொண்ட 
 தஹ்ரீர் சதுக்கம்

கவசங்களோடு ...மக்களைக் கடித்துக் குதற காத்திருக்கும் காவல் நாய்கள்.

காட்டாறு வெள்ளத்தை கைகளால் தடுக்க முடியுமா?
கண்ணீர்ப் புகை!

இராணுவத்திற்கும் இதயம் இருக்கிறதே!


புரட்சியின் பாதை ஓளிர்கிறது.


இங்கு (எகிப்தில்) பற்றி எரிவது அடக்குமுறை மட்டுமல்ல 
 இஸ்ரேல், அமெரிக்கா நாட்டு தலைவர்களினதும் அதன் அடிவருடிகளான பக்கத்து நாட்டு அரபு மன்னர்களின் அடிவயிறுகளும்தான்.



Sunday, 23 January 2011

தூனீசியா - புரட்சியின் கருவறையான ஒரு பட்டதாரியின் கல்லறை!



(தப்பியோடிய தூனிசிய ஜனாதிபதி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் முஹம்மத் போஅஸிஸியை மருத்துவ மனையில் பார்வையிடுகிறார்)

இருபத்தேழு வயது முஹம்மத் போஅஸீஸி ஒரு பட்டதாரி இளைஞன்.  வேலையில்லா பிரச்சினைக்கு ஈடுகொடுக்க அவன் பாதைக்கு இறங்கினான். போராடுவதற்கு அல்ல  பழத்தை மரக்கறியை விற்று தனது பசியை போக்கிக் கொள்வதற்கு. அந்த நடைபாதை வியாபார விவகாரம் உலக ஊடகங்களில் இப்படி இடம்பிடிக்கும் என்று இந்த பட்டதாரி இளைஞன் எண்ணியிருக்கவே மாட்டான்.


தூனிசியா என்ற தனது நாட்டை ஆண்ட ஊழல், மோசடி மிகுந்த அதிகார வர்க்கம் இந்தப் பிரச்சினையால் அதிர்ந்து உடைந்து விழும் என்று உணர்ந்திருக்கவும் மாட்டான்.

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...