Sunday, 30 January 2011

எகிப்தில் அல் ஜஸீராவுக்குத் தடை!


மக்கள் எழுச்சிக்கு முகம்கொடுக்க முடியாமல் திணறும் எகிப்திய முபாரக் அரசு தற்போது ஊடகங்கள் மீதான தனது ஒடுக்குமுறையை செயற்படுத்தி வருகின்றது.

இணைய வலையமைப்புகளை முற்றாக செயலிழக்கச் செய்திருக்கும் அரசு இன்று ஞாயிற்றுக்கிழமை அல் ஜஸீரா ஊடக அமைப்பின் சகல செயற்பாடுகளையும் தடைசெய்திருக்கிறது.

அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து ஒளிபரப்பிவரும் அல்ஜஸீரா மீதான தடை கருத்துச் சுதந்திரத்தை முற்றாக மறுக்கும்  செயலாகும்.

இறுதி மூச்சை வாங்கிக்கொண்டிருக்கும் முபாரக் அரசின் இந்த முடிவு எகிப்திய மக்களின் எதிர்ப்புக் குரலை உலகறிய செய்யாதிருக்கும் இறுதி முயற்சியாகும்.

  

எகிப்திய சிறையை உடைத்துக் கொண்டு 5000 கைதிகள் வெளியேற்றம்!


          
கைரோவிற்கு 130கி.மீ தொலைவில் தென் மேற்காக அமைந்துள்ள பையூம் பிராந்தியத்தில் அமைந்துள்ள சிறைச்சாலையை உடைத்துக் கொண்டு 5,000 சிறைக் கைதிகள் வெளியேறியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் இராணுவ உயர்மட்ட ஜெனரல் ஒருவர் கொல்லப்பட்டும் இன்னொரு இராணுவ உயர் அதிகாரி கடத்தப்பட்டும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹுஸ்னி முபாரக்கின் அடக்குமுறை ஆட்சியில் பல ஆயிரக்கணக்கான அரசியல்வாதிகள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

இதேவேளை சனிக்கிழமை நிவ்யோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா தலையகத்துக்கு முன்பாக எகிப்தியர்கள் தம் நாட்டில் நடைபெரும் மக்கள் எழுச்சிக்கு ஆதரவாக ஹுஸ்னி முபாரக்கிற்கு எதிரான சுலோகங்களுடன் அணிதிரண்டனர்.

சனிக்கிழமை இரவு கைரோவில் அமைந்துள்ள ஆளும் கட்சியான தேசிய ஜனநாயகக் கட்சித் தலைமையத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் இரண்டாவது முறையாகவும் தீ வைத்துள்ளனர்.

எகிப்தின் எழுச்சி - இஸ்ரேலிய அதிகாரிகள் எகிப்தை விட்டு தப்பியோட்டம்!


மக்கள் எழுச்சியைக் கண்டு மருண்டு போயிருக்கும் மத்திய கிழக்கின் சர்வாதிகார மாமன்னர்கள்)

எகிப்தின் ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக் தனக்கு ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியிலிருந்து மீண்டு வருவார் என்று பெயர் குறிப்பிட விரும்பாத இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்திருப்பதாக டைம் சஞ்சிகை வெள்ளியன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

அதே நேரம் கெய்ரோவிலிருக்கும் இஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் தமது தூதரகத்தை காலி செய்து விட்டு விஷேட ஹெலிகொப்டர்கள் மூலம் டெல்அவிவ் நகரத்திற்கு தப்பி ஓடியிருப்பதாகவும்  அப்பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.



(மக்கள் எழுச்சியில்  சர்வதேச அணுசக்தி முகவர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் முஹம்மத் அல்பராதி)


எகிப்திய பிரஜையான சர்வதேச அணுசக்தி முகவர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் முஹம்மத் அல்பராதி அவர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பதோடு தனது மூன்று தசாப்த ஆட்சியை விட்டு விட்டு ஹுஸ்னி முபாரக் வெளியேற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

Saturday, 29 January 2011

Latest Photos: எகிப்து : சரிந்து விழுகிறது சர்வாதிகாரம்?





மூன்று தசாப்த சர்வாதிகாரம் அதிர்ந்து போகிறது.
 அமெரிக்கா, இஸ்ரேல், அரபு நாட்டு மன்னர்களின் ஆசிர்வாதம் அழிந்து போகிறது.
 ஹுஸ்னி முபாரக்கை  எதிர்த்து இரவு பகலாக தொடர்கிறது எகிப்திய மக்கள் எழுச்சி... 


மக்கள் எழுச்சிக்கு முன்னால் திராணியற்று நிற்கும் தாங்கிகள்


இராணுவ தாங்கிகளை தமதாக்கி்க் கொள்ளும் எகிப்திய இளைஞர்கள் 

எழுச்சிக்கு முன்னால் ஒளிந்துக் கொள்ளும் இராணுவ பலம்

தூனீசியாவில் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டான் ஓர் இளைஞன். அந்தத் தீ எகிப்தைின் இராணுவ தாங்கிகளை எப்படித் தாக்கியது? 
புரட்சி என்ன தொற்று நோயா? 
 மக்கள் எழுச்சிக்கு முன்னால் மண்டியிட்டிருக்கும் இராணுவ தாங்கி

தீயில் குளிக்கிறது ஆளும் கட்சியான தேசிய ஜனநாயக கட்சித் தலைமையகம்

 எகிப்தின் எதேச்சதிகாரமும், எழுச்சியும் சந்தித்துக்கொண்ட 
 தஹ்ரீர் சதுக்கம்

கவசங்களோடு ...மக்களைக் கடித்துக் குதற காத்திருக்கும் காவல் நாய்கள்.

காட்டாறு வெள்ளத்தை கைகளால் தடுக்க முடியுமா?
கண்ணீர்ப் புகை!

இராணுவத்திற்கும் இதயம் இருக்கிறதே!


புரட்சியின் பாதை ஓளிர்கிறது.


இங்கு (எகிப்தில்) பற்றி எரிவது அடக்குமுறை மட்டுமல்ல 
 இஸ்ரேல், அமெரிக்கா நாட்டு தலைவர்களினதும் அதன் அடிவருடிகளான பக்கத்து நாட்டு அரபு மன்னர்களின் அடிவயிறுகளும்தான்.



Sunday, 23 January 2011

தூனீசியா - புரட்சியின் கருவறையான ஒரு பட்டதாரியின் கல்லறை!



(தப்பியோடிய தூனிசிய ஜனாதிபதி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் முஹம்மத் போஅஸிஸியை மருத்துவ மனையில் பார்வையிடுகிறார்)

இருபத்தேழு வயது முஹம்மத் போஅஸீஸி ஒரு பட்டதாரி இளைஞன்.  வேலையில்லா பிரச்சினைக்கு ஈடுகொடுக்க அவன் பாதைக்கு இறங்கினான். போராடுவதற்கு அல்ல  பழத்தை மரக்கறியை விற்று தனது பசியை போக்கிக் கொள்வதற்கு. அந்த நடைபாதை வியாபார விவகாரம் உலக ஊடகங்களில் இப்படி இடம்பிடிக்கும் என்று இந்த பட்டதாரி இளைஞன் எண்ணியிருக்கவே மாட்டான்.


தூனிசியா என்ற தனது நாட்டை ஆண்ட ஊழல், மோசடி மிகுந்த அதிகார வர்க்கம் இந்தப் பிரச்சினையால் அதிர்ந்து உடைந்து விழும் என்று உணர்ந்திருக்கவும் மாட்டான்.

Wednesday, 19 January 2011

சினிமா! சிந்திக்க வேண்டிய சில கருத்துக்கள்!

சினிமா பற்றி ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரை


சினிமா பற்றி சிந்திக்க வேண்டிய சில கருத்துக்களை சமநிலைச் சமுதாயம் ஜனவரி இதழில் ஆளுர் ஷாநவாஸ் எழுதியிருந்தார். அதன் பிரயோசனம் கருதி பத்ர் களத்தில் பதிவிடுகின்றேன்.



ண்மையில் அம்பேத்கர் திரைப்படத்தைப் பார்த்தேன்.


ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாய் ஒலித்த புரட்சியாளர் அம்பேத்கர்,
தன் வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவுகளிலும் சந்தித்த நெருக்கடிகள், அவமானங்கள், இழப்புகள் ஆகியவற்றையும்,
எல்லா இடர்களையும் எதிர் கொண்டு அவர் எழுந்து நின்ற வீர வரலாற்றையும் துல்லியமாகப் பதிவு செய்திருந்தனர்.


இந்தியாவின் தலைசிறந்த திரைக்கலைஞரான 'மம்முட்டி' அம்பேத்கராகவே உருமாறியிருந்தார்.
அம்பேத்கரின் சாயலை ஒத்திருந்த அவரது முகத் தோற்றமும், உடல் மொழியும் அச்சு அசலாக அம்பேத்கரைப் பார்ப்பது போலவே இருந்தது.
ஒரு காட்சியில் கூட மம்முட்டி என்ற நடிகர் நம் நினைவுக்கு வராத அளவுக்கு, அம்பேத்கரை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்திய அவரது கடும் உழைப்பும், நடிப்புத் திறனும் மகத்தானது; போற்றுதலுக்குரியது.


ஆனால், படத்தின் காட்சியமைப்பில் குறிப்பாக,அதன் தமிழ் மொழியாக்கத்தில் முஸ்லிம் வெறுப்பு அப்பட்டமாகவே வெளிப்படுகிறது. கூர்ந்து கவனித்தால் அது திட்டமிட்டே திணிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.


வட்டமேசை மாநாட்டில் பேசும் போதும், காந்தியடிகளுடன் வாதம் செய்யும் போதும், பிரிவினை கோரும் ஜின்னாவை சந்திக்கும் போதும் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை அம்பேத்கர் பதிவு செய்வதைப் போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...