மக்கள் எழுச்சிக்கு முகம்கொடுக்க முடியாமல் திணறும் எகிப்திய முபாரக் அரசு தற்போது ஊடகங்கள் மீதான தனது ஒடுக்குமுறையை செயற்படுத்தி வருகின்றது.
இணைய வலையமைப்புகளை முற்றாக செயலிழக்கச் செய்திருக்கும் அரசு இன்று ஞாயிற்றுக்கிழமை அல் ஜஸீரா ஊடக அமைப்பின் சகல செயற்பாடுகளையும் தடைசெய்திருக்கிறது.
அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து ஒளிபரப்பிவரும் அல்ஜஸீரா மீதான தடை கருத்துச் சுதந்திரத்தை முற்றாக மறுக்கும் செயலாகும்.
இறுதி மூச்சை வாங்கிக்கொண்டிருக்கும் முபாரக் அரசின் இந்த முடிவு எகிப்திய மக்களின் எதிர்ப்புக் குரலை உலகறிய செய்யாதிருக்கும் இறுதி முயற்சியாகும்.