கத்தார் மன்னர் செய்க் ஹமாத் பின் கலீபா இஸ்ரேல் நாட்டிற்கு இரகசிய விஜயம் ஒன்றை மேண்கொண்டு இஸ்ரேலிய கதிமா கட்சியின் தலைவி ஸிபி லிவினியை சந்தித்துள்ளார்.
இந்த இரகசிய பயணத்தில் கத்தாரின் பிரதமர் செய்க் ஹமாத் பின் ஜாஸிம் அல்தானியும் பங்குகொண்டுள்ளார்.
இந்த இரகசிய பயணத்தின் போது இஸ்ரேலிய அரசாங்கத்தின் உயர் மட்ட அதிகாரிகளையும் இவர்கள் சந்தித்திருப்பதாக அறிய வருகின்றது.
இஸ்ரேலுடனான எரிவாயு ஏற்றுமதி தொடர்பான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்ட கத்தார் மன்னர், கத்தாரின் நடைமுறையிலுள்ள பாடநூல்களை மறுசீரமைப்பது பற்றிஅந்நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடி இருப்பதாகவும் அறிய வருகின்றது.
கத்தாரின் இஸ்ரேலுடனான இந்த உறவு அந்நாட்டிலுள்ள மற்றும் அந்த நாட்டை அதரிக்கின்ற இஸ்லாமியவாதிகளிடம் எவ்வித எதிர்ப்பு உணர்வுகளையும் ஏற்படுத்தவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் இது தொடர்பாக அரச குடும்பத்தோடு மிகவும் நெருங்கிய உறவு வைத்திருக்கும் யூசுப் அல் கர்ளாவி ஆழ்ந்த மௌனம் சாதித்து வருகின்றார்.
No comments:
Post a Comment