Friday 13 January 2012

ஹோர்மூஸ் நீரிணை - பலப் பரீட்சையில் அமெரிக்காவும் ஈரானும்


ஹோர்மூஸ் நீரிணை தொடர்பாக எழுந்தள்ள பிரச்சினை, தொடரும் ஈரான் அமெரிக்க பலப் போட்டியின் மையப் புள்ளியாக மாற்றமடைந்து வருகின்றது.

2011 டிஸம்பர் 25ம் திகதி ஈரான் அதன் நான்காவது நாள் கடற்படை பயிற்சியை ஹோர்மூஸுக்கு அருகில் நடாத்திக் காட்டியது. இந்த ஹோர்மூஸ் நீரிணை எண்ணெய் வளம் கொளிக்கும் பாரசீக வளைகுடாவின் கேந்திர ஜலசந்தியாகும்.
ஹோர்மூஸ் நீரிணை உலக பொருளாதார அரசியல் விவகாரங்களில் ஒரு முக்கிய புள்ளியாக திகழ்கின்றது. தனது ஏகாதிபத்திய அரசியலில் எண்ணெய்க்காக அரபு நாடுகளை அடித்தும் அரவணைத்தும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முயற்சித்து வரும் அமெரிக்காவிற்கு ஹோர்மூஸ் நீரிணை முக்கிய தளமாக திகழ்கிறது. ஹோர்மூஸ் நீரிணை உலக சந்தைக்கு எண்ணெய்யை எடுத்துச் செல்கின்ற முக்கிய மார்க்கமாகும்.
இந்த ஹோர்மூஸ் நீரிணையின் வட பகுதியை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றது. ஓமானும், ஐக்கிய அரபு இராஜ்ஜியமும் அதன் தென் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன.
ஹோர்மூஸ் நீரிணை 112 மைல் நீளமும் 21 மைல் அகலமும் கொண்டதாகும். 2011ம் ஆண்டு  ஒரு நாளைக்கு 17 மில்லியன் பெரல் எண்ணெய் இந்த நீரிணையால் கொண்டு செல்லப்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது. உலக எண்ணெய் வர்த்தகத்தில் கடல் மார்க்கமாக 35 வீதமான எண்ணெய் இந்த ஹோர்மூஸ் நீரிணையூடாகவே எடுத்துச் செல்லப்படுகின்றது. வளைகுடாவின் 90 வீதமான எண்ணெய்யும், மொத்த உலக எண்ணெய் வர்த்தகத்தில் 20 வீதமான எண்ணெய்யும் இந்த நீரிணையை ஊடறுத்தே செல்கின்றன.
இன்றைய உலக அரசியல் போக்கில் ஹோர்மூஸ் நீரிணை பரபரப்பாக பேசப்படுவதற்கு இதுவே காரணம்.
ஈரானின் எண்ணெய்க்கு அமெரிக்கா தடை விதித்தால் ஒரு துளி எண்ணெய் இந்த ஹோர்மூஸ் நீரிணை ஊடாக வெளியுலகிற்கு நகர முடியாது என ஈரானின் துணை ஜனாதிபதி முஹம்மத் ரீஸா றஹீமி எச்சரிக்கை விடுத்தள்ளார்.
ஹோர்மூஸ் நீரிணையை மூடுவது தண்ணீர் ஒரு மிடரைக் குடிப்பதை விட எங்களுக்கு மிக இலகுவானது என ஈரானின் கடற்படைத்தளபதி ஹபீபுல்லாஹ் ஸய்யாரி எச்சரித்துள்ளார்.
மேலும் அமெரிக்க கடற்படை கப்பல்கள் வளைகுடா பகுதியிலும் பாரசீக வளைகுடா பகுதியிலும் நுழையக்கூடாது என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் அப்பகுதியில் போர் ஒத்திகையில் ஈடுபட்டிருப்பதால், அப்பகுதியில் அமெரிக்க கப்பல்கள் நுழையக்கூடாது. மீண்டும் மீண்டும் எச்சரிக்கை செய்யும் வழக்கம் எம்மிடம் இல்லை. முதலும் இறுதியுமாக  எச்சரிக்கிறோம் என ஈரான் தெரிவித்துள்ளது.
எனினும் ‘இந்த எச்சரிக்கை  பொருளாதார தடைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தெஹ்ரானின் பலவீனத்தை காட்டுவதாக’ அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராணுவ தலைமையகமான பெண்டகனின் ஊடக பேச்சாளர் ஜார்ஜ் லிட்டில் இது பற்றி கூறுகையில் வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பல ஆண்டுகளாக அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை நிறுத்தி வருகிறது. இந்நிலைமை தொடரும். பொருளாதார தடைகளால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் ஈரான், அதிலிருந்தும் உள்நாட்டு பிரச்சினைகளிலிருந்தும் மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் இவ்வாறு பேசி வருகிறது என்று அவர் கூறியிருக்கிறார்.
ஹோர்மூஸ் நீரிணை தொடர்பாக இந்த இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுவரும் முறுகல் நிலை மசகு எண்ணெயின் விலையில் ஏற்றத்தைக் கொண்டு வந்திருக்கின்றது.
இந்நிலையில் ஈரானின் தேசிய தொலைக்காட்சி விடுத்துள்ள தகவலின் படி, ஓர்முசு நீரிணையின் (Straits of Hormuz) பாதுகாப்பை நிலைப்படுத்துவதற்காக ஈரான் எதுவேண்டுமென்றாலும் செய்யும் என ஈரானின் பாதுகாப்பு துறை அமைச்சர் அஹ்மட் வாஹிதி தெரிவித்துள்ளார்.
‘அமெரிக்க கடற்படையினரின் பாரசீக குடா மீதான ஆதிக்கம் தேவையற்றது. விசனத்தை ஏற்படுத்த கூடியது. அமெரிக்க விமானங்கள் வளைகுடாவில் பறக்கத்தொடங்கினால், ஈரான் முழு வீச்சில் அதை எதிர்க்கும். 10 நாட்களுக்கு ஈரானின் கடற்படையின் யுத்த பயிற்சி அங்கு நடைபெறும். ஈரானின் எண்னெய் வளம் மீது மேற்குலக நாடுகள் விதித்த பொருளாதார தடைகள் பற்றி அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். பாரசீக வளைகுடாவிலிருந்து ஈரான் எரிபொருள் ஏற்றுமதியாவது தடைவிதிக்கப்படுமாயின், ஓர்மூசு நீரிணையின் வழியே எரிபொருள் கொண்டு செல்வதற்கு எவருக்கும் உரிமை இருக்காது’ என அவர் எச்சரித்தார்.

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...