Tuesday 20 April 2010

19.04.2010 அன்று தடுப்புக் காவல் நீடிக்கப்பட்ட நிலையில்.....அநாதரவான சாரா மாலினியும் அரபு மேலாண்மைவாத “ இஸ்லாமும்”



அநாதரவான சாரா மாலினியும் அரபு மேலாண்மைவாத “ இஸ்லாமும்”

“இருளிலிருந்து ஒளி”க்கு என்ற இஸ்லாம் சார்ந்த சிங்கள் நூலை வெளியிட்டு இலங்கை காவல் துறையினரால் கடந்த ஒரு மாத காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் சாரா மாலினி பெரேரா.

19.04.2010 அன்று  சகோதாரி சாரா மாலினி பெரேரா கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்கு கொண்டு வருவதாகவும், அவருக்கு சரீர பிணை நிற்பதற்கு கொழும்பை வதிவிடமாகக் கொண்ட இருவர் தேவைப்படுவதாகவும் சதோரரர்கள் இம்ராஸ், கலீலுர் ரஹ்மான் ஆகியோரிடமிருந்து தகவல் கிடைக்க நீதிமன்றை நோக்கி விரைந்தேன்..

சாரா மாலினி  சிறை வைக்கப்பட்ட நாள் முதல் இந்தப் பிரச்சினையை தனது சொந்தப் பிரச்சினையாய் நினைத்து ஒரு மாத காலமாக முயற்சி செய்து வரும் சகோதரர் அஜ்மல், மேமன் இனத்தைச் சேர்ந்த சகோதரர் அபூ ஆகியோர் சாரா மாலினியின் விடுதலைக்கான பெரும் எதிர்பார்ப்போடு நீதிமன்றில் காத்திருந்தனர். கூடவே கொழும்பை வதிவிடமாகக் கொண்ட இரண்டு சகோதரர்கள்  பிணை நிற்பதற்காக காத்திருந்தனர்.

செய்தி கேசரிக்க வந்திருந்த உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சிலரும்  காலை முதல் மாலை வரை காத்திருந்தனர்.

ஆனால் அன்று மாலை வரை அவரை காவல் துறை நீதிமன்றத்தின் முன் நிறுத்தாமல், தடுப்புக் காவலை   மீண்டும் ஒரு மாத காலத்திற்கான நீடிப்பதற்கான ஆணையைப் பாதுகாப்பு  அமைச்சிடமிருந்து பெற்றிருப்பதாக  எமக்கு அறியக் கிடைத்தது.

இலங்கையில் வாழ்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் மூன்று இன மக்களில் அதிகப்படியான அரசியல் கட்சிகளையும், அதிகப்படியான இயக்கங்களையும் கொண்ட சமூகமாக முஸ்லிம் சமூகம் மிளிர்ந்துக்கொண்டிருக்கின்றது.

ஆனால், சாரா மாலினி இன்று தனிமைப்பட்டிருக்கிறார்.



மாற்று மதத்தினருக்கு இஸ்லாத்தைப் போதிக்க தனியான பிரிவுகளை வைத்துக்கொண்டு உள்ளுரிலும் வெளிநாடுகளிலும் பணம் கறக்கும் பல தஃவா இயக்கங்கள்  இலங்கையில் இருக்கின்றன.  இன்று சாரா மாலினியின் கைதோடு அவை மௌனம் காத்து நிற்கின்றன.

அல்லது வெளியே வந்து சாரா மாலினியின் பிரச்சினைக்கு முகம் கொடுக்காமல் தொடை நடுங்கிகளாய் முகத்தை மறைத்துக் கொண்டு நிற்கின்றன.

முஸ்லிம் சட்டத்தரணிகளோ  பகிரங்கமாக வந்து நீதிமன்றில் ஆஜராக தயக்கம் காட்டுகின்றனர்.  சாரா மாலினி என்ற சகோதரி யாரும் செய்யாத குற்றத்தை செய்து விட்டதாக இவர்கள் கருதுவதே இதற்கான காரணமாகும்.

ஆனால் இந்த சட்டத்தரணிகள் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், போன்ற மோசமான குற்றங்களில் கைது செய்யப்படும் நபர்களுக்காக பயமின்றி ஆஜராகின்றனர். பணமும் சம்பாதிக்கின்றனர்.

சாரா மாலினி விவகாரத்தில் வெளியே தலைக்காட்டாமல் ஒரு சில சட்டத்தரணிகள் திரை மறைவிலிருந்து மட்டும் ஆலோசனை வழங்கி வருவதாக அறிய வருகிறது.

அது ஒரு புறமிருக்கட்டும்,

ஆயிரமாயிரம் பிரச்சினைகளில் இலங்கை முஸ்லிம்கள் திண்டாடிக்கொண்டிரக்கும் போது ,  “ மாற்றுமதத்தினருக்கு த.ஃவா ”  என்ற ஒரு புதிய நிகழ்ச்சி நிரலில்   பல இயக்கங்கள் செயற்பட்டு வருகின்றன.

இன்று மாற்று மதத்தினருக்கு இஸ்லாத்தைப் போதிக்க வேண்டும் என்ற கருப்பொருளுக்கு இலங்கையிலும், அரபு நாடுகளிலும் நல்லதொரு சந்தை வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

பல இயங்கங்கள் தொலைபேசி குறுஞ் செய்தி ஊடாக (எஸ்.எம்.எஸ்.)  ஊடாகக் கூட  இந்த வேலைத்திட்டத்திற்கு பணத்தை அறவிட்டு வருவதாகவும் வந்து சேர்கின்ற பணத்திற்கு  எவ்வித கணக்கு வழக்குகளையும் அறிவிக்காமல் இருப்பதாகவும் அறியக்கிடைத்திருக்கிறது.

சமகால முஸ்லிம்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல்  திணறிக் கொண்டிருக்கும் இந்த இயக்கங்கள், இந்த புதிய வேலைத்திட்டத்தில் போட்டி போட்டுக்கொண்டு செயற்பட்டு வருகின்றன.  சில இயக்கங்கள் சேர்ந்த பணத்தை கல்லாப்பெட்டிக்கு காணிக்கையாக்கி விட்டடுசெயற்படுவதாய் காட்டிக்கொள்கின்றன.

தாம் பெயரளவில் போலி முஸ்லிமாக வாழ்ந்துக் கொண்டு, செய்கின்ற அக்கிரமங்கள், அட்டுழியங்கள், அநியாயங்கள்  அனைத்தையும் செய்துகொண்டு மாற்று மதத்தினருக்கு இஸ்லாத்தைப் போதிக்க வேண்டும் என்று பூச்சாண்டி காட்டும் இந்த புதிய கலாசாரம் பிறப்பெடுத்தது எப்படி?


அமெரிக்க நலன் சார்ந்த அரபு அரசியல் இலங்கையில் அரங்கேற்றி  வரும்  தனது தஃவா (?) பூச்சாண்டியில் புது வரவாக வே  மாற்று மதத்தினருக்கான இந்த தஃவா புகுந்து விளையாடுகிறது. .

அண்மைக் காலமாக அரபு நாடுகளின் அரசியல் நலன்களை மறைமுகமாக பாதுகாக்கும் நோக்கில்   இயங்கி வருகின்ற சில இயக்கங்கள் தமது கஜானைாவை நிரப்பிக் கொள்வதற்கு சிறந்த வழியாக இதனை பிரயோகித்தும் வருகின்றன.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள பலரின் பண உதவியை இலகுவாக வாரிச் சுருட்டிக் கொள்ளும் கவர்ச்சிகரமான இந்த சித்தாந்தத்தால்  பலரும் கவரப்படுகின்றனர்.

உண்மையில் இந்த இயக்கங்களால் எத்தனைப் பேர் நன்மையடைந்தனர்?
என்று கேட்டால் திருப்திகரமான பதிலை இவர்களால் தரவே முடியாது.
கலிமாவை சொல்லிக் கொடுத்து விட்டு காதைத் திறுகி பாதைக்கு தள்ளிவிடுவற்கு இயக்கங்கள் தேவையா?

இந்த இயக்கங்கள் இஸ்லாத்தை ஏற்று நம்பி வந்த பலரை  பலரை நடுத்தெருவில் விட்டிருக்கிறது. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒரு சிலர் இந்த இயக்கங்களின்  “ வியாபாரத்தின் ”  தன்மையை, நன்மையை உணர்ந்து அவர்களும் இயக்கங்களை ஆரம்பித்து , இணையதளங்கள் உருவாக்கி  பலரை வியாபாரத்தை (?) ஆரம்பித்து  மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

நேற்று கொழும்பு நீதிமன்றத்திற்கு சகோதரி சாரா மாலினி வந்திருந்தால்...  

“ இருளிலிருந்து ஒளி”  க்கு சிங்கள மக்களையல்ல முஸ்லிம்களையே முதலில் மீட்க வேண்டும் என்பதை நிச்சயம் புரிந்திருப்பார்.

காரணம் சிறைச்சாலை பஸ் வண்டிகளில்  கை விலங்குகளோடு  வரிசை வரிசையாக வந்திறங்கி  நீதி மன்ற சிறைக் கூண்டுகளில் தள்ளப்பட்டவர்களில் நூற்றுக்கு 90 வீதமானவர்கள்  முஸ்லிம்கள்.  ( நான் ஏற்கனவே ஒரு பதிவில் எழுதியது போல் கொழும்பு இளைஞர்கள் அதிகமானனோர் பல குற்றச் செயல்களுக்கு சிறைவாசம் அனுபவிக்கின்றனர்.

வியாபார கொடுக்கல் வாங்கல்களில் மோசடி செய்து சிறைவாசம் செல்பவர்கள் அதிகம் முஸ்லிம்களே.  அரசியல், இயக்கம், ஜமாஅத், பதவி ஆசை, போட்டி, பொறாமையில் சிக்குண்டு  சின்னாபின்னப்பட்டு போனவர்கள் முஸ்லிம்களே.

இலங்கையின் அரசியல் நிகழ்வுகள் முதல் இயக்க முரண்பாடுகள் வரை இலங்கை முஸ்லிம்கள் சச்சரவுகளாலும் பிரச்சினைகளாலும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். (அண்மைய தேர்தலும் பேருவளை கொலைக்களமும் இதற்கு வாழும் சான்றுகள்)

இஸ்லாமிய வாழ்க்கை நெறியை தொலைத்து, மறுமையை மறந்து, நன்மையை தீமையை கருத்தில் கொள்ளாது  பணத்தின் பின்னால் மூச்சுத்திணர ஓடும் இந்த முஸ்லிம் சமூகத்தின் ஒரு குரலாக, சவாலாக தான் சிங்கள் சமூகம்  சாரா மாலினியின்“ இருளிலிருந்து ஒளி” என்ற இஸ்லாத்தின் அழைப்பை பார்க்ப் போகின்றது.

மறு புறம் இஸ்லாமிய (?) பிரசாரத்திற்காகவும் பள்ளிவாசல்கள் கட்டுவதற்காகவும்  பணத்தை வாரி வழங்கும் வள்ளல்கள் வாழ்கின்ற அரபு நாடுகளில் இஸ்லாம் மௌனமாக மரணித்துக் கொண்டிருக்கிறது. மனிதம் மறைந்து கொண்டிருக்கிறது.

சகோதரி சாரா மாலினிக்கு கிடைத்த வாழ்க்கை வசதிகள்  இலங்கையிலிருந்து செல்லும் ஏனைய சிங்கள  சகோதரிகளுக்கு கிடைக்கின்றனவா?
அரபுகள் என்போர் நெஞ்சிலே ஈரமில்லாத மிருகங்கள் என்றே அவர்கள் தமது எஜமானர்களை அழைக்கின்றனர்.

தமது வீட்டுப் பணிப்பெண்களை அடிமையாக வதைத்து மோசமான பாலியல் குற்றங்களை புரியும் அரபுகளிடம் என்ன இஸ்லாம் இருக்கிறது?



அரபு நாடுகளில் பணிப்பெண்ணாக வேலைக்குச் சென்று பாலியல் மற்றும் சித்திர வதைக்கு ஆளான ஆயிரமாயிரம்  சிங்கள சகோதரிகளில் ...இவரும் ஒருவர்




கொடுமை சித்திரவதைகள் புரியும் இவர்களிடம் என்ன இஸ்லாம் இருக்கிறது.  வீட்டுப் பணிப் பெண்களை மேல் மாடியிலிருந்து தள்ளிவிட்டு, நெருப்பால் சுட்டு, தாக்கி முடமாக்கும்  அரபுகளின் இஸ்லாத்தை ஏற்க இலங்கையின் சிங்கள சமூகம் தயாராகுமா?

இந்தக் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு எந்த இயக்கம் முன் வந்தது? பள்ளிவாசல்கள் கட்டி முஸ்லிம் உம்மத்தை நாளுக்கு நாள் பிரிக்காமல் இந்த ஏழை சகோதரிகளுக்கு ஒழுங்கான சம்பளத்தை வழங்கி மனிதனாக முஸ்லிமாக இவர்களோடு நடந்தால் இஸ்லாத்தைப் பற்றிய நல்ல செய்தியை இவர்களின் உள்ளங்களுக்குள் கொண்டு சென்றிருக்கலாமே!

இன்று அரபுகளின் மிருகத்தனமான குரூரமான உணர்வுகளைத்தான் இஸ்லாம் என்று இந்த சிங்கள சமூகம் ஏற்றிருக்கிறது.  இது மட்டுமில்லாமல் அரபுகளின் குற்றங்குறைகளை மூடி மறைத்து அதற்கு இஸ்லாமிய சாயம் பூசும் “கொந்தராத்து“ வேலையை செய்வதற்கு கூலிப்பட்டாளம் ஒன்றையே அரபு நாடுகள் இலங்கையில் பணிக்கமர்த்தியும் உள்ளன.

சாரா மாலினி “இருளிலிருந்து ஒளி”க்கு என்ற புத்தகத்தைப் பிரசுரித்து சிங்கள் சமூகத்திற்கு அழைப்பு விடுப்பதற்கு முன் தான் வாழ்கின்ற பஹரைன் உட்பட அரபு நாடுகளில் வாழ்கின்ற அரபுகளுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்லி அவர்களை உண்மையான இஸ்லாமிய வாழ்க்கைக்கு அழைப்பதுவே காலத்தின் தேவையாகும்.

உலகில் பாரிய ஒரு மாற்றத்தை உருவாக்க முதலில் முழு அரபுலகையும் இஸ்லாத்தை நோக்கி திசை திருப்புவதன் பணியைத்தான்  மேற்கொள்ள வேண்டும். அரபுகளை மீண்டும் இஸ்லாத்தின் ஒளிக்கு அடித்து இழுத்து வரவேண்டும்.

சாரா மாலினியைப் பொருத்தவரை இன்று அவர் சிங்கள சிறையில் வாடுகிறார்.  இஸ்லாத்தைப் போதிப்பதற்கு அரபு நாடுகளை விட இலங்கையில் இன்னும் சுதந்திரம் இருக்கிறது.

அரபு நாடுகளில் மன்னர்கள் அனுமதித்த விடயத்தைத் தவிர எதையும் பேச முடியாது.  இஸ்லாத்தின் எதிரிகள் பற்றி வருகின்ற அல்குர்ஆன் வசனங்களைக் கூட அங்கே பகிரங்கமாக ஓத முடியாது. அல்லாஹ்வின் சட்டத்திற்கே ஆப்பு வைத்திருக்கின்றன இந்த அரபு நாடுகள்.

அல்லாஹ்வின் சட்டத்திற்கும், முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ( ஸல்) அவர்களின் முன்மாதிரிக்கும் மாற்றமாக வாழும்  அரபுகளின்  இஸ்லாத்தை சிங்களவர் மட்டுமல்ல ஈமானுள்ள எந்த இஸ்லாமியனும் ஏற்றுக்கொள்ளவே மாட்டான்.

இந்த கொடுமைகளை மூடி மறைத்து இஸ்லாமிய பணி புரிவதால் யாருக்கும் பிரயோசனம் இல்லை என்பதை நாங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

இன்று அரபு நாடுகளில் உண்மையான இஸ்லாத்தை பேசியதற்தகாக எத்தனைப் பேர் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்? அரபுகளின் அமெரிக்க சார்பு அரசியலை விமர்சித்ததற்காக   எத்தனை உலமாக்கள் சிறையில் வாடுகிறார்கள்?  அரபு நாடுகளில் இஸ்லாத்தைப் போதிக்க அநியாயத்தை எதிர்க்க சுதந்திரம் அறவே இல்லை என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தலைமைத்தும் ஒன்று இல்லாமல் பிரிவினையை அச்சாணியாக்கி சுழன்றுக் கொண்டிருக்கின்ற  உலகளாவிய முஸ்லிம்  உம்மத் எப்படி மற்றை சமூகத்திற்கு வழி காட்ட முடியும்?

விழியிழந்த குருடன் மற்றவருக்கு வழிகாட்டத்தான் முடியுமா?

சகோதரி சாரா மாலினி!

இது இஸ்லாத்தின் அடிப்படை புரியாமலும், அரபுகளின் அரசியல் புரியாமலும் இஸ்லாமிய பிரசாரம் புரிய இலங்கை வந்த உங்களுக்கும்

உங்களைப் போன்றே  அமெரிக்க அரபு அரசியல் மேலாண்மை வாதத்தை  இஸ்லாமிய தஃவா  என்று போதித்து முழ உலகையும் ஆக்கிரமித்து வரும்
அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், அதன் நலன் சார்ந்த ஓர் இஸ்லாமிய உலகையும்  உருவாக்க ஒத்துழைப்பு நல்கிவரும் நம் நாட்டு   தஃவா கூலிப்பட்டாளத்திற்கும் கொடுக்கும்

ஒர் ஆலோசனை மட்டுமே!


7 comments:

  1. உண்மை! உண்மை! உண்மை!
    "சாரா மாலினி “இருளிலிருந்து ஒளி”க்கு என்ற புத்தகத்தைப் பிரசுரித்து சிங்கள் சமூகத்திற்கு அழைப்பு விடுப்பதற்கு முன் தான் வாழ்கின்ற பஹரைன் உட்பட அரபு நாடுகளில் வாழ்கின்ற அரபுகளுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்லி அவர்களை உண்மையான இஸ்லாமிய வாழ்க்கைக்கு அழைப்பதுவே காலத்தின் தேவையாகும்.

    உலகில் பாரிய ஒரு மாற்றத்தை உருவாக்க முதலில் முழு அரபுலகையும் இஸ்லாத்தை நோக்கி திசை திருப்புவதன் பணியைத்தான் மேற்கொள்ள வேண்டும். அரபுகளை மீண்டும் இஸ்லாத்தின் ஒளிக்கு அடித்து இழுத்து வரவேண்டும்" என்ற உங்கள் கருத்து மிகவும் சரியானது.

    இஸ்லாத்தின் உண்மையான வடிவை அதன் தூய தண்மையை நிச்சயம் இந்த சாரா மாலினி இந்த அரபிகளிடமிருந்து பெற்றிருக்க சாத்தியமேயில்லை. நிச்சயமாக அல்லாஹ்வின் பிரத்தியோக வரம் ஒன்று உந்துதல் ஒன்று கிடைத்ததன் பலனால் இவர் இஸ்லாத்தின் உண்மையான வடிவை அதன் தூய தண்மையை தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்.ஏனென்றால் இந்த அரபிகளிடம் மனிதம், மனிதாபிமானம் செத்துப்போய் பல நூறு வருடங்களாகிவிட்டது என்பதனை நான் அந்த அரபு மன்னில் இருந்தவன் என்ற அடிப்படையில் அநுபவ ரீதியாக கூறுகின்றேன்.

    இந்துக்களிடத்தில், பெளத்தர்களிடத்தில் இருக்கும் ஜாதி குல தீண்டாமையை விட அரபிகள் - அஜமிகள் என்ற பாகுபாடு பெருமை மிகக் கொடியதாகி விட்டது இந்த அரபிகளிடம். அதிலும் Asian என்றால் ஏதோ பிச்சைக்காரன் போல்தான் கணக்கெடுப்பார்கள். அவர்கள் தவரு செய்தால்
    மறைத்துவிடுவார்கள் - நாம் ஒரு சின்ன தவறு செய்தாலும் அதனை பெரிதாக்கி தண்டனையும் வழங்கிவிடுவார்கள் - ஆடம்பர டாம்பீக வாழ்க்கை - ரசூலுல்லாஹ் பிறந்து இஸ்லாத்தை ஸ்தாபித்த அந்த மண்ணில் ரசூலுல்லாஹ்வின் சுன்னாக்களை அந்த பாலைவனத்தை தோன்றித்தான் தேடவேண்டியுள்ளது......

    நீங்கள் கூறுவது போன்று இஸ்லாத்தை முதலில் முஸ்லிம்களுக்குத்தான் போதிக்க வேண்டும். ஒவ்வொரு காலத்து நபிமார்களின் காலத்தில் அவர்களின் சமுதாயம் செய்த பாவச் செயல்களை ஒத்து மொத்தமாக அருமை ரசூலுல்லாஹ்வின் இன்றைய சமுதாயம் செய்து கொண்டிருக்கின்றது.

    புனிதம் என்று ஏட்டில் படித்து விட்டு இஸ்லாத்துக்குள் புகுந்து - இஸ்லாமியர்களாக பிறப்பிலிருந்தே இருக்கின்றவர்களின் உதவியும் அனுசரைணையும் இல்லாமல் ஏமார்ந்து போன ஆயிரங்களில் சாராவும் சேர்ந்து வி்ட்டாள்.

    இஸ்லர்த்தை ஏற்றுக் கொண்டவர்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ஒரு NGO இல்லை. உதாரணமாக - பள்ளிக்கு அழைத்து கலிமாவை சொல்லிக் கொடுத்து விட்டதோடு அந்த பள்ளியின் வேலை முடிந்து விடும். அதன் பிறகு அந்த நபரின் பெயர் மாற்றத்தை சட்டரீதியாக்கி அடையாள அட்டை ஒன்றை பெற்றுக்கொடுக்கக் கூட அந்த கலிமா சொல்லிக் கொடுத்த பள்ளிக்கு அக்கரையில்லை - செய்வது எப்படி என்பது கூட தெரியாது. இது போக அவரின் சம்பாத்தியம், குடும்ப நிலை, சமுதாய அந்தஸ்து... என்று ஒரு பட்டியலே இருக்கிறது. ஆனால் அவற்றை கவனித்து செய்து கொடுக்க ஒரு தஹ்வா இயக்கமோ NGO க்களோ இல்லை. இதனால் இஸ்லாத்ததை ஏற்றவர்கள் ஏமாற்றம் அடைந்து இஸ்லாமியர்களையே வெறுக்கும் நிலையும் உருவாகின்றது.

    இங்கு சாராவின் நிலையும் அதுதான். அவருக்கு உதவி செய்ய இன்று ஒரு தஹ்வா இயக்கம் NGO இல்லை. ஏன் இந்த ஜம்மியதுல் உலமாவுக்கே இந்த விபரம் மாற்றான் தாய் விபரமாகிவிட்டது......

    அல்லாஹ்தான் இந்த சாராவை காப்பாற்ற வேண்டும்.

    ReplyDelete
  2. சாராவின் நிலையறிய உங்கள் பதிவை வாசித்தேன். அங்கே உம்மத்தின் நிலை கண்டு கண் கலங்கினேன்

    ReplyDelete
  3. சாரா மாலினி பற்றி எழுத முனைந்த நீங்கள் திசைமாறி அரபுகள் பற்றியும் அமேரிக்கா பற்றியும் அங்கலாய்த்து உள்ளீர்கள்.
    அரபிகளை ஒரு புறம் வையுங்கள். நீங்கள் இவ்வளவு காலமும் இலங்கை நாட்டில் தான் வாழ்கிறீர்கள். எத்தனை மாலினி"களை இஸ்லாத்தில் இணைத்தீர்கள். சாரா மாலினி உங்களிடத்திலா இஸ்லாத்தை ஏற்றார்கள். இல்லையே. அரபு நாட்டில் தானே அது நடைபெற்றிருக்கின்றது.
    உங்கள் அண்டவாளங்களை அரங்கேறுவதை விட்டுவிட்டு அரபி அரபி என அங்கலாய்ப்பது உங்களின் முகத்திரையை கிழிப்பதற்கு வழிகோலுகிறது.
    நீங்கள் உங்கள் நடத்தையினால் எத்தனை பேரை இஸ்லாத்தில் இணைத்துள்ளீர்கள். சாரா போன்றோர் இஸ்லாத்தை ஏற்க அரபு நாட்டுக்குத்தான் செல்ல வேண்டுமா ?

    ReplyDelete
  4. சகோதரர் அப்துல் காதர்,

    உங்களைப் போன்ற அறிவுத்தரம் உள்ளோர் அதிகம் பேர் வாழ்கின்ற சமூகம் தான் முஸ்லிம் சமூகம். பிரச்சினையை ஒழுங்காக புரியாமல் ஏதேதோ எழுதியுள்ளீர்கள்.

    உங்களைப் போன்ற ஒருசிலர் இத்தகைய விமர்சனங்களை எனது தனிப்பட்ட இமெயிலுக்கும் அனுப்புகின்றார்கள். விமர்சனங்களையும் மாற்றுக் கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்துடையவன் நான். ஆனால் நீங்கள் வைக்கும் கருத்து அறிவு பூர்வமாக இருக்க வேண்டும்.

    அரபுகள் அந்த நாட்டில் இலங்கைப் பெண்களுக்கு செய்யும் கொடுமைகளை நீங்கள் ஏன் மூடி மறைக்க முயற்சி செய்கின்றீர்கள்?

    அமெரிக்காவை விமர்சிக்கும் போது உங்களுக்கு ஆத்திரம் வருகிறது. அதற்கான காரணம் என்ன?

    நான் வைத்திருக்கும் கருத்துகளில் பிழை அல்லது மாற்றுக் கருத்து இருந்தால் இது இது பிழை அல்லது இது இப்படி வர வேண்டும் என்று சுட்டிக்காட்டும் உரிமை உங்களுக்கு இருக்கிறது.

    இலங்கை முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தை எத்திவைத்து அவர்களுக்கு முதலில் நல்வழி காட்ட வேண்டும் என்பதுதான் எனது கருத்து.

    ஊழலிலும், மோசடியிலும், சண்டையிலும் சிக்கி வாழ்ந்துக் கொண்டு மாற்று மதத்தினருக்கு இஸ்லாத்தை போதிக்க முனைவது நகைப்புக் கிடமானது.

    இன்று முஸ்லிம்களில் பலர் அரபிகளுக்கு பெண்களை “சப்ளை” பண்ணும் இழிவான தொழிலை செய்து வருகிறார்கள். நான் இந்தப் பிரச்சினையை சுவர்ணவாஹினி தொலைக்காட்சி கலந்துரையாடல் ஒன்றில் கூட பகிரங்கமாக வெளிப்படுத்தி இருக்கின்றேன்.

    அன்று கூட இந்த அரபிகளுக்கு பெண்களை “சப்ளை” பண்ணும் இழி தொழிலை செய்யும் அனேகம் பேர் என்னை நீங்கள் விமர்சிப்பது போல் விமர்சித்தார்கள்.

    ReplyDelete
  5. அன்பின் விமர்சகர்களே! தயவு செய்து தனிப்பட்ட விருப்புக்களை மனதில் வைத்துக்கொண்டு விமர்சனங்கள் எழுதுவதை அல்லாஹ்வுக்காக நிறுத்திக் கொள்ளுங்கள். இங்கு, பதிவாளர் எதனை எடுத்துச் சொல்லியிருக்கிறார் என்பதை சற்று விளங்கிக் கொண்டு அதனை சார்ந்து விமர்சித்தால் ஆரோக்கியமாக இருக்கும்.

    நான் விளங்கிக் கொண்டது, பதிவாளர் அஸீஸ் நிஸார்டீன் தனது பதிவுகளில் நமது முஸ்லிம உம்மத்தின் அவல நிலையினை சுட்டிக்காட்டி, அந்த அவல நிலைகளை நீக்க அதிகாரம் உள்ளவர்கள (உ+ம் - அரபு நாடுகள், உலமா சபை, தஹ்வா இயக்கங்கள்) கண்டும் காணாமல் இருப்பதையும் அல்லது அந்த அவலத்தை ஏற்படுத்தும் யூத -அமெரிக்கர்களுக்கு உதவி செய்து பக்க பலமாக இருப்பதையும் தான் சுட்டிக்காட்டுகின்றார். இதனை இயக்கங்கள் சாராமல், அரபிகள் என்ற புனிதம் பேணாமல் நடுநிலையாக நின்று நோக்கினால் பதிவாளர் கூறுவதில் நமக்குப் புரியாத பல உணமைகள் நமக்குப் புரிகின்றது.

    உண்மையில் பதிவாளருக்க அரபிகள் மீது தனிப்பட்ட வெறுப்பு உண்டு என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அவர் சுட்டிக்காட்டுவது போன்று, அரபிகள் அதிலும் சவுதி, குவைட் போன்ற நாட்டு மன்னர்களும் அந்நாட்டு மக்களினதும் வாழ்வு முறையும் அராஜகங்களும் அடக்கு முறைகளும், உண்மைக்கு முரணாக இருக்கின்றதா? அப்படியிருப்பின் அதனை மறுத்து யாரும் உதாரணத்தோடு பதியலாமே?

    இலங்கைத் தமிழர்களுக்கு அடிபட்டால் கேட்க பேச, அடைக்கலம் கொடுக்க இந்தியா உண்டு. அதுபோல் முஸ்லிமகளாகிய நாம் யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டப் பட்டோம். கேட்டது யார்? பாகிஸ்தான்?, ஈரான்?, சவுதி?, குவைட்?.... என்ற முஸ்லிம நாடுகளின் பட்டியலே உள்ளது. ஆனால் வாய்த் திறந்தவர் யாருமில்லை. ஆனால் பாலஸ்தீனத்துக்கு, ஜரூஸலத்திக்கு, ஈராக்கிக்கு, பக்டாட்டுக்கு அமெரிக்கா குண்டு பொழிய தளம் கொடுத்தார்கள் சவுதி, குவைட், பாகிஸ்தான் என்பதை யாராவது மறுப்பீர்களா?

    நல்லதை சரியானதை எதிரி சொன்னாலும் செய்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையும் (ஆயத்துல் குர்ஷியின் மகிமையை ஷைத்தான் கற்றுக் கொடுத்ததை ரசூலுல்லாஹ் அனுமதிதத்து போன்று) , தீயதை தன் தந்தை, பிள்ளைகள் செய்தாலும் அதனை தண்டிக்கும், விமர்சிக்கும் நீதியும் (பாத்திமா திருடினாலும் கையை வெட்டுவேன் என்று ரசூலுல்லாஹ் கூறியது போன்று) ஒரு ஈமான்தாரியிடம் மட்டுமல்ல மனிதன் என்ற ஆரறிவு படைத்தவனிடம் இருக்க வேண்டும்.

    சகோ. அஸீஸ் நிஸார்டீன் அவர்களே! நீங்கள் மறைந்திருக்கும் பல உண்மைகளை எம்மைப் போன்றவர்களுக்காக எழுதி எம்மையும் சிந்திக்க வைக்கின்றீர்கள். அது சிலருக்கு கசப்பாகிவிடுகின்றது. அரபிகளையும் அமெரிக்கர்களையும் விமர்சிப்பதால் உங்களுக்கு ஷீயா பட்டமும் கிடைத்துள்ளது!

    ஒரு பக்கம் பார்த்தால் நீங்கள் சவுதியைத்தான் கூடுதலாக விமர்சிக்கின்றீர்கள். ஏன் ஈரான், மலேஷியா, லிப்யா போன்ற நாடுகளும் உலக முஸ்லிம் உம்மாவிக்காக என்ன செய்துள்ளது? அவர்கள் ஏன் குரல் கொடுக்க முடியாதா? அதுபற்றி எழுத மாட்டீர்களா?

    ReplyDelete
  6. உங்களது பதிவின் வாசகங்கள் எம்மை மிகவும் கவலையில் ஆழ்த்தி விட்டனு. சாரா மாலினி போன்றோரின் வருகை இஸ்லாத்தைத் தழைத்தோங்கச் செய்யத்ாதக்ாக‍ இறைவனின் பெரும் அருட்கொடை என்ற உண்மையை உணர்ந்து இஸ்லாத்திற்குச் சேவையாற்ற‍ வேண்டிய பொறுப்பு முஸ்லிம் நிறுவனங்கள் அனைத்திற்கும் உள்ளதுை.

    ஜம்இய்யதுகல் உலமா, இஸ்லாமிய தஃவா அமைப்புகள், இஸ்லாமிய நிலையங்கள் மட்டுமன்றி, இன்று பரவலாக அமுல்படுத்தப்ிபட்ஸடு வரும் கூட்டு ஸக்காத் நிதியமும் இவ்விடயத்தில் கவனம் செலுத்த‍ வேண்டிய பொறுப்பாளிகளாவர்.

    ஸக்காத் பெறத் தகுதியான குழுக்களிடல் ஒன்றாக புதிய முஸ்லிம்களை இஸ்லாம் பரிந்துரை செய்துள்ளமைற, அவர்கள் தம‌து சமூக, ச‌மய வாழ்வை சாவதானமாக‌ நெறிப்படுகத்திக் கொள்வதற்கான அவகாசத்தையும் ஆறுதலையும் வழங்குவதற்கான திட்டமாுகும்.

    ஏனெனில், அடிப்படைற முஸ்லிம்களை விடவும் அளப்பரிதய பணியாற்றிய புதிய முஸ்லிம்கள் பலரை வரலாற்றில் நாம் அறிந்திருக்கிறோம்.

    வீடு கட்டிக் கொடுத்தல்ை, கிணறு அமைத்துக் கொடுத்தல் , தொழில் வழிகாட்டல்ச, பாதை அமைத்தல், போன்ற அரசியல் சார் பணிகளில் அதிக ஈடுபாடு காண்பிக்கும் கூட்டு ஸக்காத் நிதியங்கள், புதிய முஸ்லிம்கள் விடயத்தில் எவ்வித அக்கறைடயும் கரிசனையும் எடுத்துக் கொள்வதில்லை என்பதை, அவர்களது கூட்டத்் தொடர்களின் முடிவுகளும் பேசுபொருள்களும் உறுதிப்படுசத்துகின்றன.

    மறுபுறத்தில், இஸ்லாம் மிகச் சிறந்த பொருளியல், சமூகவியல் மற்றும் அரசியல் பரிமாணங்களையும் வழிகாட்டல்றகளையும் வழங்கியுள்ள‍ போதிலும், இன்று முஸ்லிம்கள் இம்மூன்று துறைகளிலும் மிகவும் பின்னடை்வுக்குட்பட்டிருப்பதுஸ ஏன் என்ற வினா இன்று பூதாகரமாய் எழுந்து நிற்கிறது.

    இந்தக் கேள்விக்கு விடையிறுக்க‍ வேண்டிய பொறுப்பு, அரபு முஸ்லிம் நாடுகளையே சார்ந்திருக்கிறது.

    ReplyDelete
  7. Sara malini is with almuslimaath at present. we have not asked or got a single cent from anyone for her. We are happy to be able to give her a place to stay for the sake of Allah.
    Dr. Mareena Reffai

    ReplyDelete

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...