லத்தீன் அமரிக்க நாடுகளின் கூட்டமைப்பான ALBA அமைப்பு , அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் போர்வையில்; செயற்படும் அமெரிக்க உளவு அமைப்பான
USAID(United States Agency for International Development)என்ற அமைப்பை உடனடியாக உறுப்பு நாடுகளிலிருந்து வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமரிக்க அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு இசைவாக செயற்படாத நாடுகளின் அரசுகளையும் அமைப்புக்களையும் பலவீனப்படுத்தி அந்தந்த நாடுகளில் சிவில் சமூகங்களை மோதவிட்டு பிரச்சினைகளையும், உள்நாட்டுப்போர்களையும் உருவாக்கி பின்னர் அரசியல் ரீதியாக தனது நேரடியான தலையீடுகளை ஏற்படுத்தும் சூழலை
USAID உருவாக்குவதாக அதன் மீது பலத்த குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றது.
USAID இன் நயவஞ்சகத்தனமான மற்றும் மோசமான செயற்பாடுகள் தொடர்பாக அமெரிக்கரான ஜோன் பெர்கின்ஸ் தனது
confessions of an economic hit-man என்ற நூலில் ஆதாரத்தோடு ஏழுதியுள்ளார்.
தன்னோடு இசைந்து போகும் மத மற்றும் ஆரசியல் தலைவர்களுக்கு லஞ்சமாக பணத்தையும், பெண்களையும்
USAID வழங்கி தனது வலையில் சிக்கவைப்பதாக ஜோன் பெர்கின்
USAID மீது தனது நூலில் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த பூகோள உருண்டையில் விரிக்கப்பட்டுள்ள சதிவலைகளின் சொந்தக்காரர்கள்
USAID போன்ற அமெரிக்க உளவு அமைப்புகளாக செயற்படும் இத்தகைய நிறுவனங்கள்தான்.
USAID அமைப்பு அமெரிக்க ஆதிக்கத்தை உலகளவில் நிலைநிறுத்தும் நயவஞ்சக நிகழ்ச்சி நிரலுக்காகவே செயற்பட்டு வருகிறது.
மோசடி மிகுந்த இந்த நிறுவனத்தை தமது உறுப்பு நாடுகளில் அனுமதிக்க வேண்டாம் என இந்த ALBA அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
நிக்காரகுவா, கியூபா, போலிவியா, எக்குவடோர், வெனிசூலா, டொமினிக்கா போன்ற நாடுகள் இந்த அறிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.