Friday 28 September 2012

அமெரிக்க தூதரகத்தைத் தாக்கியவர்கள் சடலமாக மீட்பு?


லிபிய பெங்காஸி நகரிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்தைத் தாக்கி தூதுவர் கிறிஸ்டோபர் ஸ்டீவன் உட்பட மூன்று அமெரிக்க உளவhளிகளை தாக்கி கொலை செய்ததாக கூறப்படும் அன்சாருல் ஷரீஆ ஆயுதக்குழுவைச் சேர்ந்த ஆறு பேரின் சடலங்கள் பெங்காஸியின் வயல் வெளியொன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க தூதுவராலய தாக்குதலைக் கண்டித்து மற்றுமொரு ஆயுதக்குழு அன்சாருல் ஷரீஆ காரியாலயத்தை முற்றுகையிட்டு தாக்குதல் நடாத்தியது.

இரவு முழுவதுமாக இடம்பெற்ற இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அன்சாருல் ஷரீஆ அலுவலகம் முற்றாக சேதமடைந்து அதிலிருந்த பொருட்கள் கொள்ளையிடப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன..

மற்றுமொரு ஆயுதக் குழுவின் எதிர்ப்பைத் தொடர்ந்து துற்போது அன்சார் அல் ஷரீஆ அமைப்பினர் தலைமறைவாகி இருப்பதாக அறிய வருகிறது.

கத்தாபியியை வீழ்த்துவதற்காக மேற்குலக நாடுகளும் அவர்களின் ஏஜன்டுகளாக செயற்படும் அரபு நாடுகளும் லிபிய மக்களை ஆயுதமயப்படுத்தின.

சுமார் 40 மேற்பட்ட ஆயுதக் குழுக்களுக்கு தாராளமாக ஆயுத்ங்கள் விநியோகிக்கப்பட்டன. 

இந்த அத்தனைக் குழுக்களிடையேயும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இருப்பதாகவும், அவற்றை மீளப்பெறுவதற்கான ஓர் ஆய்வை மேற்கொள்ளவே  அமெரிக்காவால் அனுப்பப்பட்ட சீஐஏ உளவாளிகள் மூவர் பெங்காஸி வந்ததாகவும் இந்த தூதுவராலய தாக்குதலில் கிறிஸடோபர் ஸ்டீவனோடு அவர்களும் கொல்லப்பட்டிருப்பதாகவும் அறிய வருகிறது.

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...