Thursday 19 July 2012

யாழ் குடாநாட்டில் 5 பொது மக்களுக்கு ஒரு இராணுவம் என்பது தவறானது! இராணுவத்தளபதி மறுப்பு


யாழ் குடாநாட்டில் ஐந்து பொதுமக்களுக்கு ஒரு இராணுவத்தினர் இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மறுத்துள்ளார்.

யாழ் குடாநாட்டில் 5 இலட்சம் பொதுமக்கள் உள்ளனர். ஆனால், அங்கு 10 ஆயிரம் இராணுவ வீரர்களே உள்ளனர். இந்த நிலையில், குடாநாட்டிலுள்ள ஐந்து பொதுமக்களுக்கு ஒரு இராணுவத்தினர் வீதம் உள்ளதாக கூறப்படும் தரவு முற்றிலும் தவறானது என்றார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை பாதுகாப்பு செயலமர்வொன்று நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட செயலமர்வைப்போன்று இவ்வருடமும் செயலமர்வொன்று நடத்தப்படவுள்ளது. இது தொடர்பாக விளக்கமளிக்கும் நோக்கில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே இராணுவத் தளபதி இதனைத் தெரிவித்தார்.
யாழ் குடாநாட்டிலுள்ள பொதுமக்கள் என்றுமே இராணுவத்தினரையே நம்பியுள்ளனர். இராணுவத்தினர் அங்கிருந்து முற்றாக வெளியேறுவதை அவர்கள் விரும்பவில்லை. யாழ் மாவட்ட வீதிகளில் இராணுவத்தினரின் பிரசன்னம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இவர்கள் முகாம்களுக்குள்ளேயே முடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நல்லிணக்கத் தேவைகள் உள்ளிட்ட மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றவேண்டுமென்ற பட்சத்திலேயே இராணுவத்தினர் உதவிக்கு வருவார்கள் என்றும் இராணுவத் தளபதி கூறினார்.
யாழ் குடாநாட்டிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றவேண்டும் என ஒருபோதும் அங்குள்ள மக்கள் கூறியதில்லை; கூறப்போவதுமில்லை. அவர்களுக்கு ஏதாவது அவசர தேவைகள் இருந்தால் அவர்கள் உடனடியாக இராணுவத்தினரையே நாடி ஓடி வருகிறார்கள். வேறு எங்கும் செல்வதில்லை யென்றும் இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் தெரிவித்தார்.
நன்றி தினகரன்

முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதியின் ஆதரவைப் பெறவில்லை



இலங்கையின் கிழக்கு மாகாணசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மீண்டும் முடிவெடுத்துள்ளது. முன்னதாக இத்தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக முஸ்லீம் காங்கிரஸ் தலைமை அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஆளும் அரசில் அங்கம் வகிக்கும் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும், முஸ்லீம் காங்கிரஸும் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் பங்கீடு தொடர்பில் அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவந்தன.


இதில் இழுபறி நிலையே தொடர்ந்தது. இந்நிலையில் திடீர் திருப்பமாக இத்தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ளார். எனினும் சுதந்திர கூட்டமைப்பு ஆட்சியில் தமது கட்சி தொடர்ந்து பங்கெடுக்க போவதாகவும், தேர்தலின் போதும் அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக இணைந்து செயற்பட போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்பு அளித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன், இது தொடர்பில் தெரிவிக்கையில், முஸ்லீம் காங்கிரஸ் தலைமை எடுத்திருக்கும் முடிவை நாம் வரவேற்கிறோம். இறுதியாக ஏமாற்றப்படாது இப்போதே புத்திசாலித்தனமான முடிவை அவர்கள் எடுத்ததையிட்டு மகிழ்ச்சி அடைகிறோம்.

தமிழ் பேசும் இனத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வடக்கு, கிழக்கின் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலத்திற்கும் இந்த முடிவு சிறப்பானதொன்றாக அமையும் என நாங்கள் நம்புகிறோம் என கூறியுள்ளார்.

கிழக்கு மாகாண சபையில் தனித்துப் போட்டியிட தீர்மானித்த முஸ்லிம் காங்கிரஸ் தனித்து செல்லும் முடிவை எடுப்பதற்கு முன்னர் ஜனாதிபதியின் ஆதரவைப் பெறவில்லை என ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார். 

உப்புக்குளம் முஸ்லிம்களின் இருப்புக்கான போராட்டம்


M.ரிஸ்னி முஹம்மட்: உப்புக்குளம் முஸ்லிம்கள் இருப்புக்கான பாரிய ஆர்பாட்டம் ஒன்றை நேற்று நடத்தியுள்ளனர்: மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்கு துறைமுகப்பகுதியில் பரம்பரையாக பயன்படுத்திய தற்போது மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மீனவர்களுக்கும் ஒப்பந்தத்தின் அடிப்டையில் கடந்த 10 வருடங்களாக முஸ்லிம் பகுதியில் கடற்தொழிலில் ஈடுபட்டு வந்த விடத்தல்தீவு கிராமத்தைச் சேர்ந்த  மீனவர்களும் இடையில் முரண்பாடு அதிகரித்துள்ளது.
இதனால் ஒப்பந்தத்தின் அடிப்டையில் முஸ்லிம் கடற்கரை மீனவ கிராம பகுதியை பயன்படுத்திவந்த விடத்தல்தீவு கிராமத்தைச் சேர்ந்த  மீனவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று மன்னாரில் இடம்பெற்றுள்ளது . அதேவேளை  மன்னார் உப்புக்குளம் கிராம மீனவர்கள் உப்புக்குளம் கிராம வாடியில் வைக்கபட்டிருந்த சில பொருட்களை சேதப்படுத்தியுள்ளதாக மன்னார் விடத்தல்தீவு  மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்கு துறைமுகப்பகுதி முஸ்லிம்களுக்கு சொந்தமான பிரதேசமாகும் புலிகளினால் 1990ஆம் ஆண்டு வடமாகாண முஸ்லிம்கள் இனச் சுத்தகரிப்பு செய்யப்பட்டபோது இந்த கிராம முஸ்லிம்களும் புலிகளினால்பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.
அதன் பின்னர் இந்த பகுதி வேறு பிரதேசத்தவர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2002 ஆண்டுக்கு பின்னர் முஸ்லிம்கள் அந்த பகுதிக்கு சிறிதளவில் சென்று வந்தமையால் அந்த பகுதி பிரதேச செயலாளரின் மூலமாக ஒப்பந்த அடிபடையில் விடத்தல்தீவு கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள்களுக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட பின்னர் அதிகமான முஸ்லிம்கள் தமது சொந்த பிரதேசத்தில் மீள்குடியேறியதால் ஒப்பந்தத்தின் மூலம் வழங்கப்பட்ட தமது   பகுதியை முஸ்லிம் மீனவர்கள்  முடியாத நிலையில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். முஸ்லிம் மீனவர்கள் தமது பகுதியை கடந்த  ஆண்டுகளாக கோரிவரும் நிலையில் விடத்தல்தீவு கிராமத்தைச் சேர்ந்த  மீனவர்களுக்கு வழங்கப் பட்ட ஒப்பந்த காலம் பல தடவைகள் நீடிக்கப்பட்டுக்கொண்டு செல்கின்றமையை எதிர்த்து பல முயற்சிகளை முஸ்லிம் மீனவர்கள் தரப்பில் செய்யபட்டாலும் எதுவும் பயன் தராத நிலையில் நேற்று ஆர்பாட்டத்தில் குதித்துள்ளனர். இதே போன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நாளையும் நடத்தப் போவதாகவும் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்கு துறை முஸ்லிம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர் .
தாம் நேற்று நடாத்திய ஆர்பாட்டத்தை ஊடகங்கள் பதிவு செய்தாலும் அவை இன அடிபடையில் திட்டமிட்டு மக்களுக்கு காட்சிப் படுத்தாமல் மறைத்து விட்டது என்று உப்புக்குளம்  முஸ்லிம் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர் .








தமது பிரச்சினை தொடர்பாக அவர்கள்  ஒரு அறிக்கையையும்  அனுப்பிவிதுள்ளனர்:
உப்புக்குள பொது மக்கள் சார்பாக
மீனவர் கூட்டுறவு சங்கம்
உப்புக்குளம்
நாங்கள் செய்த குற்றம்தான் என்ன நாம் இன்று குற்றவாளி கூண்டில் நிற்க,எமது நிலம் எமக்கு வேண்டும், செய் நன்றி மறவாதே சுயநலம் பார்க்காதே,எம்மை எம்மண்ணில் வாழச் செய், உன் மண்ணில் நீ வாழ உன்னை வழிப்படுத்தச் செய், நம்பிக்கை துரோகம் உங்களுக்கு கைவந்த கலையா?. நன்றி மறப்பது உனக்கு நன்றா? உண்டவீட்டிற்கு இரண்டகமா?…உங்களை LTTE விரட்டியதாக அவர்களை காட்டிக்கொடுத்து எம்மிடம் எமது இறங்குதுறையை கேட்டீர்கள் அதற்கு முன்னர் எமது அயல்கிராம அன்புக்கத்தோலிக்க உறவினர்கள் உங்களுக்கு உதவியதற்கு நீங்கள் காட்டிய நன்றிக்கடன் நம்பிக்கை துரோகம். அதற்கு பின்னர் எம்மிடம் காட்டிய பொய் முகம் உங்கள் சமூகம் உங்களுக்கு இடம் தரவில்லை என்று அவர்களையும் காட்டிக்கொடுத்து எம்மிடம் தவம்கிடந்தீர்கள். ஆனால் எமது மண் மக்களோ வாழவைத்து பார்ப்பவர்கள் அவ்வடிப்படையிலேயே எமது மீனவர்களால் வாடிகள் அமைக்கப்பட்டு உங்களுக்கு இரண்டு வருடங்களுக்கு அவை வழங்கப்பட்டது.
2002 சமாதனக்கீற்று தெரிந்த போது உங்களை அரவனைத்தது நாம் இரண்டு வருடங்கள் முடிந்து 2004ல் தொடர்ந்து கடத்தொழில் உதவிப்பணிப்பாளரின் வேண்டுகோளுக்கினங்க 2005 வரை தொடர்ந்தும் தொழிலுக்கு வழிசெய்தோம். 2005ல் உங்கள் தேவையை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் உங்களுக்காக 2006 வரைக்கும் கேட்டுக்கொண்டதற்கினங்க மறுபடியும் ஒரு வருடத்திற்கு வழங்கினோம். 2007ல் மன்னார் அரசாங்க அதிபரின் கூட்டத்தில் அரசாங்க அதிபர் திரு வீ. விஸ்வலிங்கம் ஐயா அவர்கள் உங்களுக்காக கேட்டுக் கொணடதற்கினங்க மறுபடியும் ஒரு வருடம் வழங்கினோம்.  2008 தொடக்கம் 2009 காலப்பகுதிகளில் விடத்தல்தீவு மீனவர்கள் மற்றும் அக்கிராம உயர்மட்டத்திலான உறுப்பினர்களின் நம்பிக்கையான வார்த்தைகளை நம்பி பின்னர் அவர்களின் தயவான வேண்டுகோளை மதித்து மறுபடியும் வழங்கினோம். உங்களுக்கு இவ்வாறு காலங்கள் தொடர்ச்சியாக வழங்கிய வரலாற்றில் உங்கள் இடத்திற்கு நீங்கள் செல்லவேண்டும் என்பதை வழியுறுத்தியும் வந்தோமே உங்களுக்கு அது தெரியாதா? ஞாபகம் இல்லையா அல்லது மறந்தது போல் பாசாங்கு செய்தீர்களா?உங்களுடன் இவ்வளவு நம்பகமாக நாங்கள் நம்பிய காலத்தில் நயவஞ்சகத்தனமாக நீருக்கடியில் நெருப்பை கொண்டு சென்றது போல் கீழ்த்தரமான முறையில் மனிதன் செய்யாத வடிவத்தில் நயவஞ்சகத்தனமாக எங்கள் காணியை சட்டரீதியாக உங்களது உடைமையாக்க எடுத்து எமக்கு வைத்தீர்களே ஆப்பு இது யார் உங்களுக்கு கற்றுத்தந்தது.
இது இவ்வாறு இருக்க எம்மை மதரீதியாக பிளவுபடுத்த நீங்கள் முயற்சிக்க உங்களுக்கு செல்லித்தந்தது யார்? 2011 நவம்பருடன் உங்களை எமது இறங்கு துறையிலிருந்து வெளியேர மன்னார் உதவிக்கடற்றொழில் பணிப்பாளர் மற்றும் நீங்கள் அங்கம் வகிக்கும் கிராமிய மீனவர் அமைப்பின் தலைவர் அவர்களும் கலந்து கொண்டு எடுத்தனுப்பிய தீர்மானம் உங்களுக்கு தெரிந்தும் தெரியாதவாறு இருந்தீர்களா?  நத்தாரையும் 2012 புதுவருடத்தையும் நாம் மனித நேயத்தோடு கருதி மறுபடியும் 2012 ஜனவரி வரைக்கும் தொழிலுக்கு சென்று உங்கள் குடும்பத்தினருடன் மகிழ்வாக வாழ வழியமைத்து துந்துதவியது ஞாபகம் வருகிறதோ?ஜனவரியுடன் செல்கின்றோம் எனச் சொல்லி எம்மை பொலிசுக்கு கொண்டு சென்றது என்ன தந்திரமோ என்ன மந்திரமோ யார் சொல்லித்தந்த மாயமோ, கொடுத்ததுக்கான கூலியாக நாம் பெற்றுக் கொண்ட வெகுமானமாகியது பொலிசுக்கு சென்றது.
பொலிஸ் அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் இது உப்புக்குள மக்களின் துறைமுகம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்பதை ஏற்று இத்துறைமுகத்திலிருந்து வெளியேருகின்றோம் எனப்பொருந்திக்கொண்டு அவர்கள் சொன்ன காலத்திற்குள் வெளியேராது வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறிய கதையாக மீண்டும் தொழிலுக்கு செல்ல முயன்றது நியாயமா?மீண்டும் இவ்விடயம் அரசாங்க அதிபர் தலைமையில் கூட்டப்பட்டு அங்கும் இதே பல்லவியை பாடி உடனே செல்கின்றோம் எனக்கூறி அதனையும் அவமதித்து நடந்தீர்களே உங்களுக்கு வாய்மை இல்லையா?
மீண்டும் பிரதேச செயலாளர் மட்டத்தில் அவரது காரியாலயத்தில் கடற்றொழில் உதவிப்பணிப்பாளர், ர்ஞஐஇ மாவட்ட உதவி அசாங்க அதிபர் திரு பரமதாஸ் அவர்கள் மற்றும் அவர்களது அருட்தந்தை உட்பட  எருக்கலம்பிட்டி, விடத்தல்தீவு, பெரியகமம், பனங்கட்டிக்கொட்டில், பள்ளிமுனை, உப்புக்குள மீனவ பிரதிநிதிகள் கூடி மறுபடியும் சில நாட்கள் வழங்கப்பட்டு வெளியேர எடுத்த தீர்மானத்தினையும் மதிக்காது கடலுக்கு சென்றதால் துறைமுகத்திலேயே கலவரமாகும் நிலைமையையும் உருவாக்கியவர்கள் நீங்கள்தான்.
யார் என்ன சொன்னாலும் எம்மை வழிப்படுத்துபவர்கள் சொல்வதையே நாம் செய்வோம் என்ற தோரனையில் தல்லாடி ஆமியிடம் சென்று உப்புக்குள மக்கள் எம்மை கொலை செய்வதாக மிரட்டுகின்றார்கள், தொழிலுக்கு செல்ல தடைசெய்கின்றார்கள் என்று பல பொய்யான தகவல்களை கூறி நீங்கள் தொழிலுக்கு சென்றீர்கள் ஆனால் நாம் ஆமிக்காரர்களினால் அடிவாங்கிச் சென்றோம்.

இது இவ்வாரிருக்க மறுபடியும் இதன்விளைவால் மன்னார் கச்சேரியின் ஜைக்கா கட்டிடத்தில் அரசாங்க அதிபர் தலைமையில், மன்னார் பட்டின பிரதேச செயலாளர், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்,  கடற்றொழில் உதவிப்பணிப்பாளர் SP, ASP, HQI, Thallady Army Commander, Navy    மாவட்ட உதவி அசாங்க அதிபர் திரு பரமதாஸ், மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள், கிராமிய மீனவர் சங்கத் தலைவர், விடத்தல்தீவு அருட்தந்தை, அருட்சகோதரர்கள், எருக்கலம்பிட்டி, விடத்தல்தீவு, பெரியகமம், பனங்கட்டிக்கொட்டில், பள்ளிமுனை, உப்புக்குள மீனவ பிரதிநிதிகள் கொண்ட ஒரு பெருங்கூட்டத்தில் விடத்தல்தீவு மீனவர்கள் உப்புக்குள மக்களுக்கு நன்றி கூற வேண்டும், மேலும் அன்றைய தினத்துடன் உப்புக்குள துறைமுகத்திலிருந்து தங்களின் உபகரணங்கள் அனைத்தினையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற கட்டளை ளுP அவர்களினால் பிறப்பிக்கப்பட்டதுடன் உப்புக்குள துறைமுகத்திலிருந்து கடலுக்கு செல்வதற்கான அனுமதியையும் வழங்கக்கூடாது என பணிக்கப்பட்டு, அவர்களுக்கான மாற்று ஒழுங்குகள் செய்து வழங்கப்பட்டது.
இவ்வளவு சந்தர்ப்பங்கள் வழங்கியும் இவர்கள் சமூக முறுகல்களை தோற்றுவிக்கும் வகையில் கடந்த புதன், வியாழக்கிழமைகளில் மறுபடியும் கடலுக்கு செல்ல, சென்றவர்களிடம் சம்பவங்களை கூறினால் வார்த்தைகளை காப்பாற்றும் மனப்பாங்கற்றவர்கள் போன்று தொடர்ந்த தொழிலுக்கு செல்வதை நீங்கள் நிறுத்தாமையினால் நாம் எமது வாடிகளை கலட்டிவிட முடிவெடுத்து எமது வாடிகளை நாம் அகற்றச் சென்றால், பொலிஸ் அதிகாரிகள் எமது மக்களை கைது செய்து இன்று எம்மக்களை நீதிமன்றுக்கு கொண்டு செல்லும் கைங்கரியம் கையாலப்பட்டுள்ளது. இது எந்த மனித நேயம் படைத்தவர்களாலும் செய்யக்கூடாத செயலாக, ஒழுங்கான மனித நேயமுடைய மக்களால் செய்ய என்னாத செயலாகவே இருக்கும் என்பது எமது பார்வை.
இன்று நாம் நீதிமன்றில் நிற்பது 2002ம் ஆண்டு முதல் நாம் உங்களின் வாழ்வாதாரத்திற்கு வழங்கிய பிரதியுபகாரமா?
இங்கு எம்மால் வழங்கப்பட்டுள்ள விபரங்கள் தொடர்பான சகலவிதமான எழுத்து மூல ஆவணங்களும் எம்மிடம் தகவல்களாக இருக்கின்றதை உங்கள் அனைவருக்கும் ஞாபகமூட்ட விரும்புகின்றோம்.
எமது மண்ணிற்கு ஏற்பட்ட நிலைமை ஏனைய முஸ்லிம் கிராம மக்களுக்கோ அல்லது சகோதர தமிழ் கிராம மக்களுக்கோ ஏற்படக் கூடாது என்பது எமது பணிவான வேண்டுகோளாக முன்வைக்க விரும்புகின்றோம். எனவே விடத்தல்தீவு கடற்றொழில் மக்களே நீங்கள் உங்கள் இடத்திற்கு செல்வதூடாக எமது தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை இத்தீவில் தொடர்ந்து பேன உதவுங்கள், எம்மை பிளவு படுத்த என்னாதீh;கள். உங்களை வழிப்படுத்துபவா;கள் எவராக இருந்தாலும் நீங்கள் விழிப்பாக இருங்கள். வயிற்று பசி போக்க வாய்ப்பு தந்தோம் இப்போது எங்கள் வயிற்றில் கால் வைத்து உதைக்காதே.
உப்புக்குள பொது மக்கள் சார்பாக
மீனவர் கூட்டுறவு சங்கம்
உப்புக்குளம்

நன்றி Lankamuslim.org



Tuesday 17 July 2012

பாதாள உலக பௌத்த மதகுரு?


இலங்கையில் பாதாள உலக குழுக்களோடு சேர்ந்து பல கொள்ளைகளுக்கும், சட்டவிரோத செயல்களுக்கும் தொடர்பிருப்பதாக சந்தேசக்ப்படும் ஒரு பௌத்த பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்துருவ பண்டாரிகொட ஸ்ரீ சுனந்தாராமய விகாரையின் பிரதம பிக்குவான  மீகெட்டுவத்தே சுமித்த ஹிமி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக அறிய வருகிறது.

இந்த பௌத்த பிக்குவிடமிருந்து போதை மாத்திரைகளும், பொலீஸ் சீருடைகள் இரண்டும் கைப்பற்றப்பற்றதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மீகெட்டுவத்தே சுமித்த ஹிமியின் உடலின் பல பாகங்களிலும் கேடிகளைப் போன்று பச்சை குத்தியிருப்பதாகவும் சிறைச் சாலை அதிகாரிகளின் தகவல்களிலிருந்து  தெரிய வந்திருக்கிறது. சந்தேக நபர்களை சிறையிலடைப்பதற்கு முன்னர் மேற்கொள்ளும் உடல் அடையாள பரிசோதனைகளின்  போது இதுபற்றி தெரிய வ்ந்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.

அண்மைக்காலமாக பல சட்டவிரோதச் செயல்களுக்கு பௌத்த பிக்குகள் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்ததை ஊடகங்கள் மூலமாக அறியக் கூடியதாய் இருக்கின்றது.

அஹிம்சையை போதிக்கும் பௌத்த மதத்தின் காப்பாளர்களாக இலங்கையின் பெரும்பான்மை சிங்கள மக்களால் போற்றப்படுகின்ற இவர்கள் சிலரிடம் ஹிம்சையும், இனவாதமுமே குடிகொண்டிருக்கின்றன.

இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகளின் நேரடி செயற்பாடு தீவிரமடைந்ததன் பின்னர் மாற்று மதங்களுக்கு எதிரான அவர்களின் சிந்தனை கூர்மையடைந்து வருகின்றது.

 இந்த நிலையில் சட்டவிரோத சக்திகளோடு இணைந்து செயற்படும் பிக்குகளின் செயற்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

ஒரு புறம் பிக்குகளின் இனவாதம் மறு புறம் பிக்குகளின் சட்டவிரோத குற்றச்செயல்கள்.

இரண்டும் இணைந்தால் சிறுபான்மை இனங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...