Friday, 11 February 2011

சவூதி அரேபியா - முதலாவது அரசியல் கட்சி ஆரம்பம்!


சவூதியில் முதலாவது உருவாகியிருக்கும் அரசியல் கட்சியின் செயற்பாட்டாளர்கள்

அரபு நாடுகளில் ஏற்பட்டு வரும் மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து, சவூதி மன்னனின் ஷரீஆவிற்கு மாற்றமான, அமெரிக்க, இஸ்ரேலிய நலன்சார்ந்த அரச சிம்மாசனமும் ஆட்டங்கண்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் கட்சிகளுக்கு அனுமதியில்லாத அந்த சவூதி நாட்டில் முதலாவது அரசியல் கட்சியொன்று உருவாகி இருப்பதாக ஏஎப்பி செய்தி நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இஸ்லாமிய உம்மாஹ் கட்சி என்ற பெயரில் உருவாகியிருக்கும் அந்தக் கட்சியின் செயற்பாட்டாளர்கள், சவூதி மன்னன் அப்துல்லாஹ்விற்கு இந்தத் தகவலை அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்திக்கின்றார்கள்.

''ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்குவதற்கு 5000 பவுன்ட்ஸ் வழங்கினார்கள்" - ஒரு கைதியின் வாக்குமூலம்


கடந்த வாரம் எகிப்தின் ஆர்ப்பாட்டக்காரர்களை தஹ்ரீர் சதுக்கத்திற்குள் புகுந்து தாக்கிய முபாரக்கின் ஆதரவாளர்களைப் பற்றி கேள்வியுற்றிருப்பீர்கள்.

அவர்கள் யார்? உண்மையில் முபாரக் போன்ற அடக்கு முறை ஆட்சியாளனுக்கு ஆதரவாக பொதுமக்கள் எழுவார்களா?

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பல குற்றவாளிகளை வெளியே எடுத்து, அவர்களுக்குப் பணத்தை வழங்கி ஆர்பாட்டக்காரர்களை தாக்குவதற்கு முபாரக் அரசும்அதன் அடிவருடிகளாக இருக்கும் எகிப்தின் பாதுகாப்பு அதிகாரிகளும் உத்தரவிட்டிருக்கின்றார்கள்.

தாக்குதலுக்கு வந்த அந்த சிறைக் கைதிகளில்ஒருவரைப் பிடித்துக்கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், அந்தக் கைதியின் வாயிலாகவே உண்மையை உலகறியச் செய்திருக்கின்றார்கள்.

இணைப்பை கிளிக் செய்து அந்த வீடியோவைப் பாருங்கள்.

http://observers.france24.com/content/20110204-i-was-paid-5000-pounds-wreak-havoc-cairo-protests-egypt-mubarak-baltgias

Thursday, 10 February 2011

எழுச்சிக்காக இன்னுயிர் நீத்த எகிப்திய கலைஞன்.



அஹ்மத் பாஸியூனி !

எகிப்தின் அடக்குமுறையை எதிர்த்து எழுந்த அந்தப் பேரலயைில் அவனும் ஒரு மௌனப் புயலாய் மறைந்து தான் இருந்தான்.

எகிப்தின் எழுச்சிக்குப் பின்னால் உலக ஊடகங்கள் அடக்கி வாசிக்கும் ஓர்  உண்மை இருக்கிறது. அது அடித்தட்டில் அமுங்கிக் கிடக்கிறது.

அது இந்த எழுச்சிக்குப் பின்னால் இருக்கும் இலத்திரனியல் ஆயுதமேந்திய ஓர் இளைஞர் படை. அதன் பெயர் 'ஏப்ரல் 6 ' போராட்டக்குழு.

மேற்குலகின் கைக்கூலியான அல்பராதியும், மத்திய கிழக்கின் அரபு ராஜாக்களுக்கு கூஜா தூக்கிக் கொண்டிருக்கின்ற எகிப்தின் எதிர்க்கட்சியும் ஆழ்ந்து உறங்கும் போது... ''ஏப்ரல் 6 " என்ற இளைஞர் இயக்கம் தான் மக்களைத் தட்டி எழுப்பி தஹ்ரீர் சதுக்கத்திற்கு அணியணியாய் அழைத்து வந்தது.

தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்டெழுந்த அந்த "ஏப்ரல் 6 " டிஜிட்டல் புரட்சியின் அங்கமாகத்தான் அவனும் அடையாளமானான்.

இலட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில்....

அஹ்மத் பாஸியூனி என்ற

புரட்சிக்குப் பூ தூவிய அவனை மட்டும் எதிரிகளின் துப்பாக்கி எப்படி இனம் கண்டுக்கொண்டது?

அவனது நெற்றியைக் குறி பார்த்து
நேர்த்தியாய் வைக்கப்பட்டிருந்தது அந்தத் துப்பாக்கிச் சூடு.

புகைப்படக் கருவியோடு அமைதியாக நிராயுதபாணியாக நின்றுக்கொண்டிருந்த அவனை அடக்குமுறையின் கொடிய கரங்கள் அடையாளம் கண்டன.

புரட்சிக்காக இன்னுயிர் நீத்த முதலாவது எகிப்தின் கலைஞனாக அவன் புதைக்கப்படுவான் என்று நினைத்திருக்கவே மாட்டான்.

அவன், மக்கள் பலம் எழுந்துக் கொண்டிருந்த தஹ்ரீர் சதுக்கத்தில்
விழுந்துபோன முதலாவது காட்சி ஊடகக் கலைஞன்.

அஹ்மத் பாஸியூனி!

முபாரக்கின் ஆட்சியில் மூன்று தசாப்தங்களாய் முடங்கிப்போயிருந்த மானுடத்தை மீட்டெடுக்க மிருதுவான தனது கலையுணர்வால் அவன் கற்பனைக் கோட்டைகளைக் கட்டியிருக்கிறான்.

காட்சி ஊடக கலைஞனான அஹ்மத் பாஸியூனி கலைவடிவங்களை படித்திருக்கிறான். படைத்திருக்கிறான். படிப்பித்திருக்கிறான்.

கலை வடிவங்களுடே சுதந்திர காற்றை சுவாசிக்க அவனது மாணவர்களுக்கும் கற்றுக்கொடுத்திருக்கின்றான்.

ஓவியன், பாடகன் என்று பல துறைகளில் தடம் பதித்த அஹ்மத் பாஸியூனி எகிப்தின் புகழ்பெற்ற இளம் கலைஞராக திகழ்ந்தவன்.

தனது முதுகலைமானி பட்டப்படிப்பிற்காக மின்னியல் கலை வடிவம் தொடர்பான ஆய்வை தொடந்திருந்த வேளையில் எகிப்து அவனை இழந்திருக்கிறது. எழுச்சி அவனைப் பிரிந்திருக்கிறது.

அடக்குமுறையை வெறுத்து புரட்சியை நேசித்த அஹ்மத் பாஸியூனி என்ற கலைஞன் தன் கனவுகளோடு மறைந்திருக்கிறான்.

அவன் தனது பேஸ் புக்கில் இறுதியாக பதித்த வார்த்தைகள்
"If they want war, we want peace. We are better: I’ll practice restraint till the end."


அல்ஜீரியா: தூனிசிய பாணியில் தீக்குளிப்பு


அல்ஜீரியாவின் வடக்கு நகரமான பாலிதாவில் பொலிசாரின் நடவடிக்கையை எதிர்த்து ஓர் இளைஞர் தன்னைத்தானே தீ மூட்டிக்டகொண்டுள்ளார்.

25 வயதான இந்த இளைஞன் தனது முறைப்பாட்டை  பொலிஸார் ஒழுங்காக விசாரணை நடாத்தாத காரணத்தினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனக்குத் தானே தீமூட்டிக்கொண்டிருப்பதாக பிரஸ் ரிவி இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

தூனிசியாவில் ஓர் இளைஞனின் மரணம் அந்த நாட்டு தலைவனை நாட்டை விட்டே ஓட வைத்தது. எகிப்தில் பொலிசாரின் தாக்குதலுக்கிலக்காகி மரணித்த  ஒரு இளைஞனுக்காக தஹரீர் சதுக்கத்தில் அணி திரண்ட இளைஞர்கள் அந்த நாட்டையே இன்று செயலிழக்கச் செய்திருக்கின்றனர்.

அல்ஜீரியாவின் அடக்குமுறை ஆட்சி தொடரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களினால் அதிர்ந்து போக வாய்ப்புமிருக்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகரமான அல்ஜியர்ஸில் உள்ள தொழில் வாய்ப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் முன்னால் தொழிலற்ற நூற்றுக்கணக்கானோர் அணிதிரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு துணைபோன அரபு நாடுகளில் உள்ள அடக்குமுறை ஆட்சியும், ஊழல், பட்டினி,வேலை வாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகள் மக்களை போராட்டத்திற்கு தள்ளியிருக்கிறது.

Tuesday, 8 February 2011

எகிப்தின் ஒமர் சுலைமான் ஒரு மொசாட் ஏஜன்ட் ! விக்கிலீக் அம்பலம்


எகிப்தின் தற்போதைய பதில் ஜனாதிபதியாக முபாரக்கினால் நியமிக்கப்பட்டுள்ள ஒமர் சுலைமான் 2008ம் ஆண்டு அப்போதைய இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த எஹுத் பராக் மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார் என்றும் முபாரக்கிற்கு அடுத்தபடியாக எகிப்தின் தலைமைத்துவத்தை ஏற்க இவர் தகுதியானவர் என்று இஸ்ரேல் இவரை சிபார்சு செய்திருப்பதாகவும் விக்கிலீக் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிப்பதாக பிரித்தானிய டெய்லி டெலிகிராப் பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

Monday, 7 February 2011

எகிப்தை நோக்கி விரைகிறது அமெரிக்க போர்க்கப்பல்!

800 படையினரை ஏற்றிக்கொண்டு அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று எகிப்தை நோக்கி விரைவதாக பிரஸ் ரீவி இணைய தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

எகிப்தை ஆக்கிரமிக்க அமெரிக்கா தயாராகிறது என்று பரவிவரும் செய்தியை மறுத்துள்ள பென்டகன் எகிப்தில் பிரச்சினை உக்கிரமடைந்தால் தனது நாட்டு பிரஜைகளை எடுத்துச் செல்லவே இந்தப் போர்க்கப்பல் அனுப்பப்படுவதாக அறிவித்திருக்கிறது.

எகிப்தின் மக்கள் எழுச்சியோடு, மத்திய கிழக்கில் தனது பிடி தளர்ந்து வருவதை உணர்ந்துள்ள அமெரிக்கா தனக்கு விசுவாசமான, சவுதி, குவைத், கத்தார் போன்ற ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளைப் பின்பற்றும்,அவர்களின் அனுசரணையில் வாழும் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களை பொம்மைகளாக எகிப்தில் ஆட்சி பீடமேற்றும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

முபாரக்கின் வீழ்ச்சியோடும், எகிப்தின் மக்கள் எழுச்சியோடும் கதி கலங்கிப் போயிருக்கும் இஸ்ரேலின் நிலையைப் பார்க்கும் போது,  மத்திய கிழக்கு அரபு நாடுகளின் ஆதரவு, உதவியின் மூலம் தான் அது தன் இருப்பை பாதுகாத்து வந்திருக்கிறது என்ற உண்மை உலகறிய வந்திருக்கிறது. அதன் மூலம்தான் பலஸ்தீன் மக்கள் மீதான அடாவடித்தனங்களையும், அட்டகாசங்களை அரங்கேற்றி வந்திருக்கிறது என்ற உண்மையும் புலனாகின்றது.

மத்திய கிழக்கைப் பொறுத்தவரை அந்த நாடுகளில் ஆட்சி செய்பவர்கள் மன்னர்களாகவும், சர்வாதிகாரிகளாகவும் இருப்பது அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் விருப்பமானதாகும். மக்களால் தெரிவு செய்யப்படும் அரசாங்கங்கள் அங்கு உருவானால் அவர்களின் ஆக்கிரமிப்பு, சுரண்டல் அரசியலுக்கு அது பெரும் தடையாக அமையும்.

அந்த மன்னராட்சி, சர்வாதிகார ஆட்சி என்ற சாதகமான அரசியல் சூழ்நிலை அரபு நாடுகளில் தற்போது சரிந்து வருவதால் அமெரிக்காவும் இஸ்ரேலும் அதிர்ந்து போய் இருக்கின்றன. 

Sunday, 6 February 2011

காஸா எல்லையில் எகிப்து இராணுவம் பட்டினியில்

காஸா எகிப்து எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதைகளில் ஒன்று

பன்னிரெண்டு நாட்களாக தொடரும் மக்கள் போராட்டத்தினால் எகிப்தின் அனைத்து நிர்வாக செயற்பாடும் முடங்கி நிற்கின்றன.

காஸா எல்லையில் கடமையிலிருக்கின்ற எகிப்திய இராணுவத்திற்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தடைப்பட்டிருப்பதால் காஸா மக்கள் தமது சுரங்கப்பாதை ஊடாக வந்து உணவுப்பொருட்களை இராணுவத்திற்கு வழங்கி வருகின்றனர்.

2006ம் ஆண்டு முதல் காஸாவிற்கு இஸ்ரேல் தரை, கடல் வழிகளை மூடி  பொருளாதார த் தடையை விதித்திருக்கிறது.

இஸ்ரேலின் இந்த முடிவுக்கு ஆதரவாக செயற்பட்ட முபாரக் எகிப்து காஸா எல்லையான ரபா வாயிலைமூடி இஸ்ரேலின் பொருளாதாரத் தடைக்கு உதவினார்.

இந்தத் தடையை சமாளிக்க காஸா மக்கள் சுரங்கப் பாதைகளை உருவாக்கி எகிப்துக்குள் நுழைந்து தமக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அதனூடாக எடுத்துச் சென்றனர்.

காஸா மக்களுக்கு இந்தச் சுரங்கப் பாதைகள் இஸ்ரேலின் பொருளாதார தடைக்கு முகம் கொடுக்கும் மாற்று வழிகளாக மாற்றம் பெற்றன.

இன்று அந்தச் சுரங்கப் பாதைகளின் செயற்பாடுகள் தலைகீழாக மாறியிருக்கின்றன.

கடந்த பல வருடங்களாக பொருளாதார நெருக்கடியில் வாழும் காஸா மக்கள் இன்று எகிப்தின் காஸா எல்லையில் நிர்க்கதியாக இருக்கும் இராணுவத்தினருக்குஉணவுப்பொருட்களை சுரங்கப்பாதையுடாக கொண்டு வந்து விநியோகித்து வருகின்றனர்.

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...