எகிப்தில் தொடராக எட்டாவது நாளாக இடம் பெற்று பேரணியால் தலைநகர் கெய்ரோ ஸ்தம்பித்தது. எனினும்,
அதிபர் ஹுஸ்னி முபாரக் பதவி விலக மறுத்து வருவதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. எகிப்து மக்களின்போராட்டம் நேற்றும் 8
வது நாளாக நீடித்தது. சுமார் 10
லட்சம் பேர் தலைநகர் கெய்ரோவை நோக்கி படை எடுத்திருந்தனர். ஹுஸ்னி முபாரக்கை எகிப்தை விட்டு வெளியேறும் படி அவர்கள் கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடாத்த இராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தும் , இராணுவம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தத் முபாரக் தயார் என அறிவித்தும், அதனை ஏற்றுக்கொள்ள யாரும் முனவரவில்லை.
இதேவேளை தனது சகாவான முபாரக்குக்கு ஆதரவு திரட்டி இஸ்ரேல் ஐப்ரோபிய நாடுகளில் தனது தூதரகங்கள் ஊடாக பிரசார நடவடிக்கைகளை தீவிரமாக்கும் படி அந்தந்த நாட்டிலுள்ள இஸ்ரேலர்களுக்கு பணிப்புரை விடுத்திருக்கிறது.
எகிப்தில் முபாரக்கின் வீழ்ச்சி பலஸ்தீனின் ஹமாஸை வலுவான சக்தியாக மாற்றும் என்று இஸ்ரேல் அச்சம் தெரிவித்திருக்கிறது. அதேவேளை தான் வளர்த்த முபாரக்கை கைவிட்டது போல் நடிக்கும் அமெரிக்க சந்தேகத்திடமான ஒரு பாத்திரத்தை வகிக்க ஆரம்பித்திருக்கிறது. எகிப்து தொடர்பாக அமெரிக்காவின் அண்மைய நிலைப்பாடு மாறுபட்டிருக்கிறது.
எகிப்தின் முபாரக்கிற்கு எதிராக மக்கள் போராட்டம் தொடர்ச்சியாக எட்டாவது நாளையும் கடந்து வீரியத்துடன் நடந்து வரும் நிலையில்,
"எகிப்து மக்கள் அமெரிக்கா முபாரக்கிற்கு ஆதரவளிப்பதாக தவறாக நினைத்துள்ளனர். அமெரிக்கா ஹுஸ்னி முபாரக்கிற்கு ஆதரவளிக்கவில்லை" என அமெரிக்க செனட்டர் ஜோன் கெர்ரி பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
திடீரென நியாயத்தின் பக்கம், மக்கள் பக்கம் சாய்ந்தது போன்ற அதன் நிலைப்பாட்டில் விபரீதம் ஒன்று மறைந்திருப்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டையும் உணர முடிகின்றது.
அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டை இஸ்ரேல் கடுமையாக சாடியுமுள்ளது. "முபாரக்கின் அரசு கவிழ்ந்தால் எகிப்தின் முஸ்லிம் சுசகோதரத்துவக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் நிலைமை மோசமாகும். உலக நாடுகளுக்கும் பிரச்னை அதிகரிக்கும்" என இஸ்ரேல் அமைச்சர் அயூப்கரா அச்சம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் இந்த கலக்கத்தைப் பார்க்கும் போது மத்தியக்கிழக்கில் அதன் சண்டித்தனத்திற்கு துணை போனவர்களாக இந்த அரபுத் தலைவர்கள் திகழ்ந்திருக்கின்றார்கள என்ற உண்மையை புரியக் கூடியதாக இருக்கிறது.
இதேவேளை Gulf Civil Society Forum (GCSF) என்ற அமைப்பு ஹுஸ்னி முபாரக்கிற்கு உதவி புரியும் அரபு தலைவர்கள் கடுமையாக சாடியுள்ளது. தொடர்ந்தும் இத்தகைய அடக்கு முறையாளர்களுக்கு உதவி செய்வதை உடனடியாக நிறுத்தும் படி வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.