கைரோவிற்கு 130கி.மீ தொலைவில் தென் மேற்காக அமைந்துள்ள பையூம் பிராந்தியத்தில் அமைந்துள்ள சிறைச்சாலையை உடைத்துக் கொண்டு 5,000 சிறைக் கைதிகள் வெளியேறியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் இராணுவ உயர்மட்ட ஜெனரல் ஒருவர் கொல்லப்பட்டும் இன்னொரு இராணுவ உயர் அதிகாரி கடத்தப்பட்டும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹுஸ்னி முபாரக்கின் அடக்குமுறை ஆட்சியில் பல ஆயிரக்கணக்கான அரசியல்வாதிகள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
இதேவேளை சனிக்கிழமை நிவ்யோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா தலையகத்துக்கு முன்பாக எகிப்தியர்கள் தம் நாட்டில் நடைபெரும் மக்கள் எழுச்சிக்கு ஆதரவாக ஹுஸ்னி முபாரக்கிற்கு எதிரான சுலோகங்களுடன் அணிதிரண்டனர்.
சனிக்கிழமை இரவு கைரோவில் அமைந்துள்ள ஆளும் கட்சியான தேசிய ஜனநாயகக் கட்சித் தலைமையத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் இரண்டாவது முறையாகவும் தீ வைத்துள்ளனர்.