Thursday 19 May 2011

ஐ.எம்.எஃப் ஸ்ட்ரௌஸ் கான்: கந்து வட்டிக்காரனின் பொறுக்கித்தனம்!


மேற்கத்திய முதலாளித்துவ ஊடகங்களுக்கு இப்போது புதிதாய் ஒரு அவல் கிடைத்துள்ளது. கடந்த சில நாட்களாக வாய் வலிக்க அந்த அவலை மென்று குதப்பி வருகிறார்கள். அவர்களின் இளைய பங்காளிகளான இந்திய முதலாளித்துவ ஊடகங்களும் ‘உலகச் செய்திகளில்’ தமது மேற்கத்திய சகபாடிகள் குதப்பித் துப்பிய அதே அவலை மீண்டும் ஒரு முறை மென்று, இந்திய வண்ணத்தில் கடைபரப்புகிறார்கள். ஒசாமா கொல்லப்பட்ட பின் தற்காலிகமாக ஏற்பட்டிருந்த ‘உலக’ செய்திப் பிரிவின் பஞ்சத்தை இப்படியாக இந்த ‘அவல்’ நிரப்பியுள்ளது.
சரி சரி விஷயத்திற்கு வருகிறோம். அந்த ‘அவலின்’ பெயர் டொமினிக் ஸ்ட்ரௌஸ் கா(ஹ்)ன். பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் சார்பாக அடுத்த அதிபர் தேர்தலில் இப்போதைய அதிபர் சார்கோஸியை எதிர்த்துப் போட்டியிடப் போகிறவர் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுபவர் தான் ஸ்ட்ரௌஸ் கான். ஒரு விஷயம். ‘சோசலிஸ்ட்’ கட்சி என்ற பெயரைப் பார்த்தவுடன் ‘சோசலிஸ்டு – கம்யூனிஸ்ட்டு – மார்க்ஸ் – ஏங்கெல்ஸ்’ என்றெல்லாம் உங்கள் கற்பனைக் குதிரையைப் பறக்க விடாமல் ஒரு ஓரமாகக் கட்டிப் போட்டு வையுங்கள். ஏனெனில், இதற்கும் அதற்கும் மயிரளவிற்கும் கூட சம்பந்தம் கிடையாது.

இலங்கை பல்கலைக்கழக மாணவருக்கு கட்டாய இராணுவப் பயிற்சி ! இடி விழுந்த நிலையில் இஸ்லாமிய சமூகம்!


இவ்வருடம் முதல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு இராணுவத்தில் பயிற்சி வழங்க அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது.

பயிற்சியில் கலந்து கொள்ளாதோர் பல்கலைக்கழக அனுமதியைப் பெற மாட்டார்கள் என்று உயர் கல்வி அமைச்சர் எச்சரித்திருப்பதாகவும் செய்தி வெளிவந்திருக்கிறது.

அரசாங்கத்தின் இந்த முடிவை சிங்கள, முஸ்லிம், தமிழ் மாணவ அமைப்புகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

இராணுவத் தளங்களுக்கு பெண் பிள்ளைகளை பயிற்சிக்காக அனுப்புவதை, அந்தத் தளங்களில் பிள்ளைகளைத் தங்க வைப்பதை நினைத்து சிங்கள, தமிழ், முஸ்லிம் சகல இன பெற்றோரும் அச்சமுற்று இருக்கின்றனர்.

இந்த இராணுவப் பயிற்சி இஸ்லாமிய சமூகத்திற்கோ பெரும் இடியாக வந்திறங்கியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். முஸ்லிம்களின் கலாசாரம் இதற்குக் காரணமாகும்.

உயர் கல்வியில் கீழ் நிலையில் இருந்த இந்த சமூகம் தவழ்ந்து வந்து உயர் கல்வியை எட்டிப் பிடிக்க முயற்சி செய்யும் இந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம் பெண்களின் கல்விக்கு இடையுறாக தடையாக இந்த இராணுவப் பயிற்சி வந்திருக்கிறது.

Wednesday 18 May 2011

இஸ்லாமியர்கள் தொட்டுக்கொள்ள ஊறுகாய் அல்ல!



இக்கட்டுரை கீற்று இணையதளத்தில் சகோதர மத்ததைச் சேர்ந்த சகோ.ஆத்மார்த்தி என்பவரால் எழுதப் பட்டது.


இந்தக் கட்டுரையின் நோக்கம் நேரடியாகவே சொல்வதற்கு முனைவது தான்.

நீங்கள் குற்றமிழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆம். குற்றமிழைத்துக் கொண்டிருப்பவர்களைத் தேடிக் கண்டுபிடித்து தண்டிப்பது தீர்வாகாது என்பதால் இரண்டு நிலங்களைப் பிரிக்கும் ஒற்றைச் சுவரில் உடைப்பொன்றை ஏற்படுத்தும் கலகக்காரனாய்ச் செயல்படுவதே இக்கட்டுரையாளனின் நோக்கம்.

தென் இந்திய சினிமாக்களில் அதுவும் குறிப்பாக தமிழ் சினிமாக்களில் காலம் காலமாக அல்ல, சரியாக சொல்வதானால் 1995 ஆண்டுக்குப் பிறகு இஸ்லாமியர்கள் பல்வேறு படைப்பாளிகளால் தவறாகவும் மிகையாகவும் புண்படும் வண்ணமும் கேலிப் பொருட்களாகவும் எதிர்மறைப் பாத்திரங்களாகவும் சித்தரிக்கப்படுவது சென்ற வாரம் வெளியான வானம் (தெலுங்கு வேதம் படத்தின் மீள்வுருவாக்கம்) வரை தொடர்வது பலரும் எழுதிவரும் தொடர்கதை. இதற்கொரு முற்றுப் புள்ளி வேண்டும் என யாருமே எண்ணாமல் இருப்பதற்கும், ஏன் திரைத்துறையிலேயே இயங்கக் கூடிய இஸ்லாமியர்களும், மதப்பாரபட்சமற்றவர்களும் ஏன் முயல்வதே இல்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

Tuesday 17 May 2011

சல்மான் ருஷ்தியின் நாவல் இலங்கையில் படமாகிறது!

ஸல்மான் ருஷ்தி எழுதிய 'Midnight's Children' என்ற நாவல் தற்போது இலங்கையின் கொழும்பு நகரில் படமாக்கப்படுகிறது.


கொழும்பில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, புதுக்கடை போன்ற பகுதிகளில் மேற்படி படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


கடந்த வாரம் வாழைத்தோட்டம் மஸ்ஜிதுந் நஜ்மி பள்ளிவாசலுக்கு முன்னால் உள்ள ஒழுங்கை டில்லி நகரின் சனநெருசல் உள்ள ஓர் ஒழுங்கையாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

உயிர் வாழும் ஒசாமா?


இணையத்தில் உலா வரும் இந்தப் புகைப்படம் ஒசாமா என்ற கதாபாத்திரம் அமெரிக்க ஆக்கிரமிப்பு அரசியலை நகர்த்துவதற்கு எப்படி களமாக அமைந்தது என்ற கருத்தை அழகாக சொல்லும் சிறந்த ஒரு கருத்துப்படம்.. ஒசாமா கொலை செய்யப்படுவதை வெள்ளை மாளிகையிலிருந்து ஒசாமாவும் பார்ப்பது போல் இப்படம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ஒசாமா மரணம் தொடர்பாக ஊடகங்கள் வெளியிட்ட போலி புகைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியதை மறந்திருக்க மாட்டீர்கள்.  இந்த புகைப்படமும் அதே மாதிரி வந்திருக்கும் ஒரு புகைப்படமே. ஆனால் இதன் கருத்து வித்தியாசமானது.

Wednesday 11 May 2011

பாகிஸ்தான் - பயங்கரவாதத்தின் பண்ணை


(ரொனால்ட் றேகனின் காலத்தில் வெள்ளை மாளிகையில் ஆப்கான் ஜிஹாத் வடிவமைக்கப்படுகிறது. முஜாஹிதீன்களுடனான அமெரிக்க ஜனாதிபதியின் கலந்துரையாடல்)



(80களில் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ இன் பணிப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல் ஹாமித் குல், (இடதுபக்கம்) அப்போதைய சீ.ஐ.ஏ யின் பணிப்பாளர்  வில்லியம் வெப்ஸ்ரர் , சீ.ஐ.ஏ யின் நடவடிக்கைளுக்கான உதவிப் பணிப்பாளர்  கிளயார் ஜோர்ஜ் ,சீ.ஐ.ஏ இன் பாகிஸ்தான் பெஷாவர் நிலைய முஜாஹிதீன்களுக்கான பயிற்சிக்குப் பொறுப்பான மில்ட் பெயார்டன் ஆகியோர் 1987ம் ஆண்டு பெஷாவரில் எடுத்துக்கொண்ட படம்)

"நாயோடு உறங்கியவன் அதன் ஒட்டுண்ணியோடுதான் எழுந்திருக்க வேண்டும்.''

இந்த முதுமொழி பாகிஸ்தானுக்கு சரியாகப் பொருந்துகிறது.

அமெரிக்கா என்ற பயங்கரவாதத்தோடு உறவு வைத்து அதன் ஏகாதிபத்திய நிகழ்ச்சிக்கு ஏற்ற தாளத்திற்கு ஆட்டம் போட்ட பாகிஸ்தான் இன்று ஆடிப்போய் நிற்கிறது.

Tuesday 10 May 2011

புனித மக்காவில் போலி ஸம்ஸம் தண்ணீர்?


உலகமயமாக்கல் மற்றும் திறந்த பொருளாதாரம் மனித உணர்வுகளை மலினப்படுத்தி இருக்கிறது.

நீதி, நியாயத்தை ஓரம்கட்டிவிட்டு பணத்திற்கு பின்னால் ஓடுகின்ற சமுதாயம் ஒன்றை உருவாக்கியிருக்கும் இன்றைய பொருளாதார முறை, எதையும் விற்று பணமாக்கும் மனநிலையை மனிதர்கள் மத்தியில் தோற்றுவித்திருக்கின்றது.

ஊடகங்களில் ஹஜ், உம்ரா போன்ற வணக்க வழிபாடுகள் பணத்தைக் குறியாய்க் கொண்ட முகவர்களினால் இன்று முற்றாக வர்த்தகமயமாக்கப்பட்டிருக்கின்றன.

இந்த வரிசையில் இப்போது  ஸம்ஸம் தண்ணீரும் சேர்ந்திருக்கின்றது.

ஸம்ஸம் தண்ணீர்என்று கூறி புனித மக்கா வீதிகளில் போலியாக தண்ணீர் நிரப்பப்பட்ட கொள்கலன்கள் விற்கப்படுவதாக அரப் நிவுஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கின்றது.
http://arabnews.com/saudiarabia/article388908.ece

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...