அனைத்து பல்கலைக்கழக மாணவா்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த
ஆர்ப்பாட்டம் கடந்த 21.10.2014 அன்று பாராளுமன்றத்திற்கு அருகில்
இடம்பெற்றது. இந்த அா்ப்பாட்ட நிகழ்வில் உரையாற்றிய ஒரு பௌத்த பிக்கு
மாணவர் ஒருவரால் நிகழ்த்தப்பட்ட உரையே இது.
இந்த ஆா்ப்பாட்டத்தின் போது பொலிஸாா் நடாத்திய தாக்குதலில் பல மாணவா்கள் படுகாயமுற்றனா். அரசாங்கத்தையும் அது போஷித்து வளா்க்கும் இனவாத சக்திகளான பொதுபலசேனாவையும் இந்த மாணவா்கள் கடுமையாக தாக்கி உரையாற்றினா்.

பொதுபலசேனாவின் வன்முறை சாா்ந்த ஆா்ப்பாட்டங்களுக்கு அனுமதியளிக்கும்
மஹிந்த அரசு, மாணவர்களின் இந்த போராட்டத்தை பொலிஸாரின் மூலம்
காட்டுமிராண்டித் தனமான தாக்குதல்களைத் தொடுத்து கலைத்தது.
மஹிந்த
அரசு தனக்கு சாா்பான இனவாத கூலிப்பட்டாளங்களின் ஆா்ப்பாட்டங்களுக்கோ
கூட்டங்களுக்கோ தடைவிப்பதில்லை. மாறாக அவா்களுக்கு பூரண பாதுகாப்பை வழங்கி
வருகின்றது.
கடந்த ஜுன் மாதம் முஸ்லிம்களின் பல உயிர்களையும், கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமதியான உடமைகளையும் அழித்த பொதுபலசேனாவின் ஊா்வலத்தை தடை செய்யவில்லை, தடுத்து நிறுத்தவில்லை.
ஆனால் ஜனநாயக ரீதியிலான தொழலாளா்களின்,மாணவா்களின் போராட்டங்களை காவல் துறையின் காட்டுமிராண்டித் தனமான வன்முறையைப் பயன்படுத்தி தடுத்து வருகின்றது.