Wednesday, 8 August 2012

மியான்மர் : உலகை உலுக்காத இன்னொரு இனச் சுத்திகரிப்பு



மியான்மர் தேச, வங்காளி மொழி பேசும் ரோஹிங்கியா இன மக்கள், இனச்சுத்திகரிப்பு செய்யப்படும் செய்தி, சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருந்தது. "20000 க்கும் அதிகமான ரோஹிங்கியா வங்காளிகள் இனப்படுகொலை செய்யப் பட்டதாகவும், சர்வதேச ஊடகங்கள் மௌனம் சாதிப்பதாகவும்" அந்தத் தகவல்கள் தெரிவித்தன.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3XRnITsJ9WprWB1SUVyWtsUxB3ynIdZTTrWH9vH8qw2aB6RHZUG85i2r33ftsk9jptlHOKWqRTCYa6h-QVWQd2WZw0NInK71RnA4KEbx-gaoEqBShoQdScnkYBONoBuV7qqjKUyDyxcQ/s320/burma+arakan.jpg
பொதுவாகவே சர்வதேச ஊடகங்கள், மேற்கத்திய நலன்களுக்கு எதிரான நாடொன்றின் பிரச்சினை என்றால் மட்டுமே கவனம் செலுத்துவதுண்டு. நோபல் பரிசு வென்ற ஆயுங் சங் சுகியின் பர்மாவில் என்ன நடக்கின்றது என்று அவர்கள் விசாரிக்கப் போவதில்லை. அதற்குப் பதிலாக, சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போர் அவர்களுக்கு முக்கியமாகத் தெரிகின்றது. மியான்மரின், பங்களாதேச எல்லையோர மாநிலமான அரகானில் வாழும் வங்காளி மொழி பேசும் மக்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்படுவது இதுவே முதல் தடவை அல்ல. அங்கே ஏற்கனவே பல தடவைகள் இனக்கலவரங்கள் நடந்துள்ளன. சுமார் ஒரு மில்லியன் சனத்தொகையை மட்டுமே கொண்ட, மிகச் சிறுபான்மை இனமான ரோஹிங்கியா வங்காளிகள் கடந்த பத்தாண்டுகளாகவே பெருமளவில் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். அந்த மக்கள் தாமாகவே விரும்பி வெளியேறினாலும், பலவந்தமாக வெளியேற்றப் பட்டாலும், இனச் சுத்திகரிப்பாகவே கருதப்பட வேண்டும். இதனை நிரூபிக்கும் காரணிகளை பின்னர் பார்ப்போம்.


இந்தியா மட்டுமல்ல, பர்மாவும் ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காலனியாகவிருந்தது. அதனால், நவீன தெற்காசிய தேசங்களின் எல்லைகள்  பிரிக்கப்பட்ட காலத்தில், வங்காள இனத்தவர்கள் பர்மா (இன்று:மியான்மர்) என்ற புதிய தேசத்திற்குள் சிக்கிக் கொண்டதாகவே பலரும் கருதுகின்றனர். வங்காளிகள் தொழில் தேடி, அல்லது வணிகம் செய்வதற்காக பர்மா வந்து தங்கி விட்டதாகவும், அதனால் அவர்கள் பர்மிய குடிமக்களாக கருதப்பட முடியாதென்றும் ஒரு வாதம் முன்வைக்கப் படுகின்றது. 

"தேசிய அரசுகளின் உருவாக்கம், இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றம்," என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகின்றோம். அதற்கு முன்னர், ஒருவர் எந்த தேசிய இனத்தை சேர்ந்தவர் என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஏனெனில், "தேசியம்"என்ற வார்த்தையே அன்றைய மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை. ரோஹிங்கிய வங்காளிகள், அரேபிய வணிகர்களின் வழித்தோன்றல்கள், மொகலாய சாம்ராஜ்யத்தின் எஞ்சிய பகுதியை சேர்ந்தவர்கள் என்றெல்லாம் உரிமை கோரப்படுகின்றது. இந்த உரிமை கோரல்கள் பெரும்பாலும், "ரோஹிங்கிய தேசியவாதிகள்" மத்தியில் இருந்து தான் எழுகின்றது. "பூர்வீக தாயக பூமி" க்கு உரிமை கோரும், தேசியவாத கதையாடலுக்கு அப்பால், உண்மையை அலசுவது அவசியம். மொகலாயர்களின் ஆட்சிக் காலத்தில், பர்மிய மன்னனுடன் நடந்த போரில், சிட்டகாங் மலைப்பகுதி கைப்பற்றப் பட்டது. (அது இன்றைக்கும், வங்காளதேசத்தின் ஒரு பகுதியாக உள்ளது.) அதற்கப்பால், மொகலாய சாம்ராஜ்யம் விஸ்தரிக்கப் பட்டதாக வரலாற்றில் குறிப்பிடப் படவில்லை. 

ரோஹிங்கியா வங்காளிகள், பங்களாதேஷ் வங்காளிகளிடம் இருந்து மாறுபட்ட வட்டார மொழியை பேசுகின்றனர். அனேகமாக, மொகலாய சாம்ராஜ்ய விஸ்தரிப்பு காரணமாக புலம்பெயர்ந்த ஒரு பகுதியினர் பர்மாவில் தங்கியிருக்க வாய்ப்புண்டு. அதே நேரம், அரேபிய வணிகர்களின் வழித்தோன்றல்களும் பர்மிய பெண்களை மணந்து, அங்கேயே தங்கியிருக்கலாம். ஐரோப்பிய காலனிய காலகட்டத்திற்கு முன்னர், தெற்காசிய, தென் கிழக்காசிய நாடுகளுடனான அரேபியரின் வர்த்தகத் தொடர்பு நன்கு அறியப்பட்டது தான். ஆகவே, மேற்குறிப்பிட்ட பிரிவினர் எல்லாம் கலந்து ரோஹிங்கியா வங்காளிகளாக மாறியிருக்கலாம். 

மேலும், பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள், "தேசிய எல்லைகளை சரி சமமாக பிரிப்பதில் கெட்டிக்காரர்கள்". தமது முன்னாள் காலனிகளில், தேசிய இனப்பிரச்சினைகள் என்றைக்கும் தீரக் கூடாது என்ற தீர்க்க தரிசனத்துடன், ஒரே தேசிய இனத்தை பிரித்து எல்லைக்கோடு வரைவதில் கெட்டிக்காரர்கள். ஆகவே, பிற்காலத்தில் பிரிக்கப்பட்ட சர்வதேச எல்லைகளின் காரணமாக, வங்காள மொழி பேசும் இனத்தவர்கள் பர்மா என்ற புதிய தேசத்திற்குள் அடங்கி இருப்பார்கள். ஒரு தேசிய இனம், தனது பூர்வீக தாயக பூமிக்கு உரிமை கோருவதை விட, அந்த இனத்தின் இருப்பை பாதுகாப்பதே முக்கியமானது. ஆகையினால், காலனிய ஆட்சியில் இருந்து சுதந்திரமடைந்த பர்மாவின் சிறுபான்மை இனமான ரோஹிங்கியா வங்காளிகள், ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப் பட வேண்டியவர்கள்.

உலகில் சில இனங்கள், "நாடற்றவர்கள்" என்ற வகைக்குள் அடங்குவார்கள். அதாவது, அவர்களுக்கு எந்த நாட்டின் பிரஜாவுரிமையும் கிடையாது. ஏற்கனவே நமது தமிழ்த் தேசியவாதிகள், "நாடற்றவர்கள்" என்ற சொல்லுக்கு, "தேசிய அரசு அற்றவர்கள்" என்றொரு அர்த்தத்தை பரப்பி வைத்திருக்கின்றனர். ஆனால், சர்வதேச சட்டங்கள் புரிந்து கொள்ளும்,  நாடற்றவர் என்ற சொல்லின் அர்த்தம் வேறு. உதாரணத்திற்கு, பாலஸ்தீன மக்களுக்கு, இஸ்ரேலோ, அல்லது ஜோர்டானோ குடியுரிமை வழங்கவில்லை. எந்த நாட்டினதும் பிரஜாவுரிமை இல்லாதபடியால், பாஸ்போர்ட் எடுக்க முடியாது. அதனால், அவர்கள் வாழும் பிரதேசத்தை விட்டு வெளியேற முடியாது.

ஐ.நா., பாலஸ்தீனர்களை நாடற்றவர்களாக அங்கீகரித்துள்ளதால், ஒரு சில தீர்வுகள் காணப்பட்டன. வெளிநாடு செல்ல வேண்டிய தேவையுள்ளவர்கள், இராஜதந்திர கடவுச்சீட்டுடன் பிரயாணம் செய்ய முடிகின்றது. ஆனால், ரோஹிங்கியா வங்காளிகளின் நிலைமை வேறு. ஐ.நா., அல்லது சர்வதேச நாடுகள் எதுவும், அவர்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கவில்லை. பர்மிய அரசின் நிலைப்பாட்டை சொல்லத் தேவையில்லை. மேற்கத்திய நாடுகளினால் "கணவாட்டி" என்று மதிக்கப்படும் அவுங் சங் சுகி கூட, ரோஹிங்கிய வங்காளிகளை வெளிநாட்டு குடியேறிகளாக தான் கருதுகின்றார். இனவெறிக் காடையரினால், அப்பாவி வங்காளிகள் கொல்லப்பட்டதை கண்டித்து ஒரு வார்த்தை பேசவில்லை. ரோஹிங்கியா வங்காளிகளும், சமமான மனிதர்களாக மதிக்கப் பட வேண்டும் என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்க்கவில்லை.

பர்மாவில் இராணுவ சர்வாதிகார ஆட்சி நடத்திய ஜெனரல் நீ வின், 1982 ம் ஆண்டு, ரோஹிங்கிய வங்காளிகளின் குடியுரிமையை பறித்த பின்னர் தான் அவர்களது அவலம் ஆரம்பமாகியது. இன்றைக்கு, ஜனநாயக தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட அவுங் சங் சுகி கூட, பறிக்கப்பட்ட குடியுரிமையை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. பர்மிய இராணுவ சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடிய, ஜனநாயகப் போராளிகள் கூட, "வங்காளிகள் பங்களாதேஷுக்கு  திரும்பிச் செல்ல வேண்டும்" என்று பேசி வருகின்றனர். இவர்களே இப்படிப் பேசினால், தீவிர வலதுசாரி தேசியவாதிகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. "மியான்மரின் அரசியல் பிரச்சினைகள் எல்லாம் ஒரு நாளைக்கு தீர்ந்து விடும். அதன் பிறகு நாம் ஒன்று பட்டு, (ரோஹிங்கியா) வங்காளிகளை வெளியேற்றுவோம்." என்று இணையத் தளங்களில் பிரச்சாரம் செய்கின்றனர். சில வருடங்களுக்கு முன்னர், மியான்மரின் அனைத்துப் பிரஜைகளும் இராணுவ சர்வாதிகார அடக்குமுறையினால் துன்பப் பட்டார்கள். இப்பொழுது, ஜனநாயக ஆட்சியாளர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, இராணுவ ஆட்சியாளர்கள் ஒதுங்கிக் கொள்கின்றனர். ஆசிய நாடுகளில், ஜனநாயகம் என்றால், மக்களுக்கு பேரினவாத வெறியை ஊட்டித் தான் ஆட்சி நடத்த வேண்டும் என்பது எழுதப்படாத விதி போலும்.

ஜூன் மாதம், 27 வயது ஒரு ராகின் பௌத்த பெண் ஒருவர் ,  பாலியல் வன்புணர்ச்சிக்கு பின்னர் கொலை செய்யப்பட்டார். இந்தக் குற்றச் செயல் ஒரு பெரும் பிரளயத்தையே உருவாக்கி விட்டுள்ளது. குற்றவாளிகளான மூன்று வங்காள முஸ்லிம்கள் பின்னர் கண்டுபிடிக்கப் பட்டு தண்டிக்கப்பட்டாலும்,ராகின் மக்கள் மத்தியில்,வங்காளி முஸ்லிம்களுக்கு எதிராக இனவெறியூட்டும் பிரச்சாரம் நடந்தது. ஒரு குற்றச் செயலுக்காக, அனைத்து வங்காளிகளையும் பழிவாங்க வேண்டும் என்று கோரும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப் பட்டன. வங்காளிகளை குறிக்கும் வசைச் சொல்லான "காலர்கள்" (Kaler - கருப்பர்கள்) என்று குறிப்பிட்டு, "மியான்மரை விட்டு காலர்கள் வெளியேற்றப்பட வேண்டும்" என்று ராகின் மக்களை உசுப்பி விட்டன.ராகின் இன மக்கள், பர்மிய மொழி போன்ற, ஆனால் வித்தியாசமான மொழி ஒன்றைப் பேசுகின்றனர். முன்னொரு காலத்தில் இந்து மதத்தையும், பின்னர் பௌத்த மதத்தையும் பின்பற்றிய திபெத்தோ-இந்திய இன மக்கள். பண்டைய இந்து புராணங்களில் "ராட்சதர்கள்" என்று குறிப்பிடப்பட்டனர். அதிலிருந்து இன்றைய ராகின், அரகான் என்ற சொற்கள் தோன்றின.

ரோஹிங்கியா மக்கள் மத்தியில் வேலை செய்து கொண்டிருந்த,தொண்டு நிறுவனமான Altsean அனுப்பி வைத்த செய்தி, நிலைமை எவ்வளவு மோசமானது என்று தெரிவிக்கின்றது.
"இது போன்ற மோசமான நிலைமையை, நாம் இதற்கு முன்னர் சந்தித்திருக்கவில்லை. இனப்படுகொலை என்பதைக் குறிக்கும் சர்வதேச சட்டத்தினால் வரையறுக்கப் படக் கூடிய சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ரோஹிங்கியா வங்காளிகள் என்ற இனம், மியான்மரில் அழிந்து கொண்டிருக்கிறது."  - Debbie Stothard , Alternative ASEAN-netwerk for Birma (Altsean)

ஆரம்பத்தில், இரண்டு இனங்களுக்கு இடையிலான இனக்கலவரமாகவே தோன்றியது. கலவரம் ஆரம்பித்த முதலாவது வாரம், இரண்டு பகுதியிலும் 29 பேர் மாண்டனர். 2500 வீடுகள் எரிக்கப்பட்டன. ஒன்பது விகாரைகளும், ஏழு மசூதிகளும் சேதமாக்கப் பட்டன. ஆனால், மிக விரைவிலேயே பௌத்த ராகின்களின் கை ஓங்கியது. மியான்மர் அரசும், இராணுவமும் அவர்களுக்கு பக்கபலமாக நின்றன. நிலைமையை கட்டுப்படுத்துவதாக கூறிக்கொண்டு, இராணுவம் ஊரடங்குச் சட்டம் பிறப்பித்தது. ஆனால், அது வங்காளிகளை வீட்டுக்குள் முடங்க வைக்கும் சதித் திட்டம் என்பது பின்னர் தெளிவானது. வங்காளிகளை வேட்டையாடிய, ராகின் இனவெறிக் காடையர்களை ஊரடங்குச் சட்டம் ஒன்றும் செய்யவில்லை. பல வீடுகளில், வங்காளிகளின் பிணங்கள் மட்டுமே கிடந்தன. அங்கே ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை நடந்து கொண்டிருந்தது. பொலிசும், இராணுவமும் அதற்கு ஒத்துழைத்தன.

"பௌத்த பிக்குகள் கை காட்டிய திசையில், வங்காளிகள் கொன்று குவிக்கப்பட்டதாக" வந்த செய்தியை ஊர்ஜிதப் படுத்த முடியவில்லை. பௌத்த பிக்குகளும் நேரடியாக வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.  மொத்தம் எத்தனை வங்காளிகள் படுகொலை செய்யப்பட்டனர் என்பது யாருக்கும் தெரியாது. சுயாதீனமான ஊடகங்கள், 500 க்கும் 1000 க்கும் இடையில் கணக்குச் சொல்கின்றன. புலம்பெயர்ந்த ரோஹிங்கியா தேசியவாத ஆர்வலர்கள் 20000 பேர் கொல்லப்பட்டதாக கூறுகின்றனர். அது ஒரு மிகைப்படுத்தப் பட்ட எண்ணிக்கையாகவும் இருக்கலாம். உலகில் ஒவ்வொரு தேசிய இனமும், தமது இனத்தவர்கள் பாதிக்கப் படும் பொழுது மிகைப் படுத்திக் கூறுவது வழக்கம். அதனாலும், சர்வதேச ஊடகங்கள் அங்கு நடக்கும் இனப்படுகொலையை புறக்கணித்திருக்கலாம். இரண்டொரு வருடங்களுக்குப் பின்னர், ஐ.நா. விசாரணைக் குழு ஒன்றை நியமித்த பின்னர் தான் அதை எல்லாம் ஒத்துக் கொள்வார்கள் போலும். ஈழத்தில், முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட பொழுதும் இதே போன்ற நிலைமை காணப்பட்டது.

வங்காள இன மக்கள் வாழும் அரகான் மாநிலப் பிரதேசம், இராணுவத்தால் உயர் பாதுகாப்பு வலையமாக பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது. வங்காளிகளின் பூர்வீக பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு, அங்கே பௌத்த-பர்மியர்கள் குடியேற்றப் படுகின்றனர். ரோஹிங்கியா வங்காளிகள், இராணுவத்தினரால் கட்டாய வேலை வாங்கப் படுகின்றனர். பாதைகள் செப்பனிடவும், பாலங்கள் போடவும், வேறு பல கட்டுமானப் பணிகளிலும், வங்காளி அடிமை உழைப்பாளிகள் ஈடுபடுத்தப் படுகின்றனர். இராணுவத்தினரால்  வங்காளிப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதும் அடிக்கடி நடக்கிறது. 

ரோஹிங்கியா வங்காளிகளுக்கு குடியுரிமை இல்லாத படியால், அவர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் எதுவும் கிடையாது. உயர்கல்வி கற்க முடியாது. ஒரு நிறுவனத்தில் பதவி வகிக்க முடியாது. வர்த்தகம் செய்ய முடியாது. இவை எல்லாவற்றையும் விட, திருமணம் செய்வதற்கு கூட இராணுவ உயர் அதிகாரிகளின் அனுமதி பெற வேண்டும் என்பது கொடுமையிலும் கொடுமை. திருமணம் செய்ய விரும்பும் வங்காளிகள் எல்லைக்காவல் படை அலுவலகம் உட்பட, நான்கு இடங்களில் அனுமதிப் பத்திரம் பெற வேண்டும். அது கிடைப்பது இலகுவானதல்ல. திருமணம் செய்யாமல், ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது குற்றமாகும். ஒரு இளம்பெண் அவ்வாறு சேர்ந்து வாழ்ந்து கர்ப்பமடைந்த பின்னர் தெரிய வந்ததால், அவர்கள் வீட்டில் இருந்த கால்நடைகளையும், பிற சொத்துகளையும் இராணுவத்தினர் அபகரித்து சென்று விட்டனர்.

கடந்த பத்தாண்டுகளாகவே, ரோஹிங்கியா வங்காளிகள், மியான்மரை விட்டு வெளியேறி வருகின்றனர். குறைந்தது மூன்று இலட்சம் பேராவது புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். பெருந்தொகை அகதிகள், அயல்நாடான ஒரே மொழி பேசும் பங்களாதேஷுக்கு சென்றுள்ளனர். மியான்மர்-பங்களாதேஷ் எல்லை மூடப்பட்டுள்ளது. எல்லையை ஒரு ஆறு பிரிக்கின்றது. அகதிகள், சிறு எண்ணிக்கையில் வள்ளங்களில் எல்லை தாண்டுகின்றனர். பங்களாதேஷிலும் அவர்களுக்கு வரவேற்பில்லை. 

1996 ம் ஆண்டு நடந்த இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சம் ரோஹிங்கியா பங்களாதேஷில் தங்கி இருந்தனர். சில வருடங்களுக்குப் பின்னர், பங்களாதேஷ் அரசு அவர்களை மியான்மருக்கு திருப்பி அனுப்பியது. இப்பொழுதும் தஞ்சம் கோரி வரும் ரோஹிங்கியா அகதிகளை, பங்களாதேஷ் எல்லைக் காவல் படை தடுத்து திருப்பி அனுப்புகிறது. அவர்களுக்கு தஞ்சமளிக்க வேண்டாம் என்று எல்லையோர கிராம மக்கள் அறிவுறுத்தப் படுகின்றனர். பங்களாதேஷ் மக்களில் ஒரு பகுதியினர் கூட, ரோஹிங்கியா அகதிகளை வெறுக்கின்றனர். மியான்மரில் வங்காளி சிறுபான்மையினர் அனுபவிக்கும் கொடுமைகளைப் பற்றி, பங்களாதேஷ் மக்கள் அதிகமாக கேள்விப் பட்டிருப்பார்கள். ஈழப் பிரச்சினையை, தமிழக இனவாதக் குழுக்கள் எப்படிக் கையாளுகின்றனவோ, அதே போன்று தான் பங்களாதேஷை சேர்ந்த இஸ்லாமிய மதவாதக் குழுக்கள் நடந்து கொள்கின்றன.

வதந்திகள், திரிபுபடுத்தல், இவற்றை தவிர்த்து விட்டு, உண்மையை கண்டறிவது கடினமான பணியாகும். பல சமயங்களில், பலருக்கு உண்மை அறிவதில் ஆர்வம் இருப்பதில்லை. படுகொலை செய்யப்பட்ட ரோஹிங்கிய வங்காளிகளின் எண்ணிக்கை 20000 க்கும் குறைவாக இருக்கலாம். பங்களாதேஷுக்கு அகதியாக சென்றவர்களின் எண்ணிக்கையையும்  சேர்த்து,  படுகொலையானவர்கள் என்று கூறி இருக்கலாம். ஆனால், எது சரி? அதை எப்படி உறுதிப்படுத்துவதுரோஹிங்கியா மக்களின் இனப்படுகொலை பற்றி, பாகிஸ்தானை மையமாகக் கொண்டியங்கும் அமைப்புகள் மிகப் படுத்தப்பட்ட பிரச்சாரம் செய்வதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.பாகிஸ்தான் மட்டுமல்ல, வளைகுடா அரபு நாடுகள், பிரிட்டனில் இருந்து இந்த பிரச்சார வலைப்பின்னல் இயங்கிக் கொண்டிருக்கிறது. 

புலம்பெயர்ந்த ரோஹிங்கியா வங்காளிகள், பங்களாதேஷ் இஸ்லாமியவாதிகள், மற்றும் பன்னாட்டு இஸ்லாமிய -சர்வதேசியவாதிகள், இதனை ஒரு "முஸ்லிம் இனப்படுகொலையாக" சித்தரித்து, சர்வதேச அளவில் போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களது அணுகுமுறை, தமிழக மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் உணர்வாளர்களின் போராட்ட  முறையை பெரிதும் ஒத்திருக்கின்றது. இனவாதம், மதவாதம் முக்கியமாக கருதப்படும் இன்றைய உலகில், ஒரு பிரச்சினை பல மாறுபட்ட பரிணாமங்களை அடைகின்றது. ரோஹிங்கியா வங்காளிகளும், மியான்மார், பங்களாதேஷுக்கு இடையிலான சர்வதேச முரண்பாடாக மாற்றமடைகின்றது. ஆயிரம் வருடங்களுக்கு முந்திய மதப்போர் வரலாற்றின் தொடர்ச்சியாக இதனை மாற்ற எத்தனிக்கின்றனர். பர்மாவுக்கும், பங்களாதேஷுக்கும் இடையிலான மத முரண்பாடு பற்றி, வேறொரு கட்டுரையில் பார்ப்போம்.

நன்றி - கலையகம்

Monday, 30 July 2012

விம்பம் 7வது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா


விம்பம் 7வது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா


மன்னார் நீதிமன்றத்தாக்குதல் சம்பவம்-கைது செய்யப்பட்ட 13 பேரை விடுதலை செய்யுமாறு நீதி அமைச்சரிடம் கோரிக்கை!



மன்னார் நீதிமன்றத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மன்னாரைச் சேர்ந்த 13 பேரையும் விடுதலை செய்யுமாறு கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர். மன்னாரில் கோந்தைப்பிட்டி மீன்பிடி இறங்குதுறை தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையினைத் தொடர்ந்து மன்னார் உப்புக்குளம் மக்களால் கடந்த 18 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது மன்னார் நீதிமன்றத்தின் மீது கற்களால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் போது நீதிமன்றக் கட்டிடத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 13 பேர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் பலரை பொலிஸாரும் புலனாய்வுத்துறையினரும் தேடி வருவதோடு மேலும் 35 பேரை நாளை திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை மன்னார் உப்புக்குளம் மற்றும் மூர்வீதி ஆகிய கிராமங்களுக்குச் சென்ற அமைச்சர் றவூப் ஹக்கீமிடம் கைது செய்யப்பட்டு தற்சமயம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 13 பேரையும் விடுதலை செய்ய ஆவன செய்யுமாறு அவர்களுடைய உறவினர்கள் அமைச்சரிடம் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
இதேசமயம் மன்னார் நீதிமன்றத் தாக்குதல் தொடர்பில் பொலிஸாரும்,குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரும் வீடியோ மற்றும் புகைப்பட சாட்சியங்களை ஆதாரமாக வைத்துப் பலரைக் கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் மன்னார் உப்புக்குளம் மற்றும் மூர்வீதி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 35 பேரை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த 35 பேரில் அதிகமானவர்கள் அமைச்சர் றிஸாட் பதீயுதீனின் ஆதரவாளர்கள் மற்றும் அவருடைய அரசியல் செயற்பாட்டாளர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
தற்போது அமைச்சர் ரிஸாட் பதீயுதீன் அவர்களுக்கு எதிராக வழக்கு இடம் பெற்று வருகின்ற நிலையில் குறித்த 35 பேரும் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் முகமாக அமைச்சர் ஹக்கீமுக்கு தமது ஆதரவுகளைத் தெரிவித்துள்ளதோடு தமது கைது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதே வேளை அண்மையில் மன்னார் ஆயர் அவர்களுக்கு ஆதரவாக இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு மன்னார் ஆயர் அவர்களுக்காக கதைத்த மன்னார் மாவட்டத்தின் மூத்த முஸ்ஸிம் ஊடகவியலாளர் ஒருவரை அமைச்சர் றிஸாட்டின் சகோதரர் எனத் தன்னை அடையாளப்படுத்திய ஒருவர் தாக்கியிருந்தார்.
குறித்த தாக்குதலை நடத்தியவர் கைது செய்யவுள்ள 35 பேரில் முதலாவது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் நீதிமன்றத்திற்கும் ,நீதிபதிக்;கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் அமைச்சர் றிஸாட் பதியுதீனுக்கு எதிராக மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் நீதி அமைச்சர் றவூப் ஹக்கீம் மன்னாருக்கு வருகை தந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பத்ர் களம்: நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - கன்னியாஸ்திரி இரெனா ஹன்...

பத்ர் களம்: நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - கன்னியாஸ்திரி இரெனா ஹன்...: நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - கன்னியாஸ்திரி இரெனா ஹன்டோனோ நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono ந...

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - கன்னியாஸ்திரி இரெனா ஹன்டோனோ

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - கன்னியாஸ்திரி இரெனா ஹன்டோனோ

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono
நான் ஆறு வயதாக இருக்கும் போது கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த பள்ளி ஒன்றுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவத்தைப் பற்றி பயில்வதற்காக அனுப்பப்பட்டேன். என்னுடைய படிப்பிற்கான முழு செலவுகளையும் அந்த தேவாலய நிர்வாகவே பொறுப்பு ஏற்றுக் கொணடிருந்தது. ஏனென்றால் என்னுடைய பெற்றே...ார்கள் இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய சர்ச்சுகளில் ஒன்றின் அமைப்பாளர்கள் (Organisors) ஆவார்கள்.

பின்னர் பருவ வயதில் தேவாலயத்தைச் சேர்ந்த ''Liaision Maria'' என்ற கல்வி நிறுவனத்தில் சேர்ந்தேன். Maria என்பது ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயார் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் குறிக்கும்.

இந்த நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் என்னவெனில் ''Stray Sheeps'' என்று சொல்லப்படக் கூடிய ''காணாமல் போன ஆடுகளை'' தேடுவதாகும். ''காணாமல் போன ஆடுகள்'' என்று அவர்கள் குறிப்பிடுவது, நம்முடைய உணவுக்காகவும் ஈதுல்-அல்ஹா பெருநாள் குர்பானி கொடுப்பதற்காக அறுக்கிறோமே அந்த ஆடுகளை அல்ல. மாறாக ''காணாமல் போன ஆடுகள் என்று அவர்கள் குறிப்பிடுவது, ''கிறிஸ்தவர்களல்லாத மற்றவர்களை''. அதாவது இந்த பள்ளி வாசலில் குழுமியிருக்கும் நம்மைப் போன்ற முஸ்லிம்களை அவர்கள் ''காணாமல் போன ஆடுகள் என்று குறிப்பிடுகிறார்கள். நம்மையெல்லாம் கிறிஸ்தவர்களாக்கும் ஒரு மிகப்பெரும் செயல் திட்டம் அவர்களிடம் இருந்துக் கொண்டிருக்கிறது.
ஒரு வருடம் கழித்த பிறகு நான், இந்தோனேசியாவில் மிக அதிக அளவில் றுப்பினர்களையுடைய ஒரு கிறிஸ்தவ அமைப்பின் தலைவியானேன். பின்னர் கன்னியாஸ்திரி ஆவதற்காக ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் சேர்ந்தேன்.

சகோதர சகோதரிகளே! நான் ஒரு முஸ்லிம் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒரு போதும் இருந்ததில்லை. நான் கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியது. கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியதிலிருந்து, அல்லாஹ் அவனுடைய அடிமையாகிய எனக்கு நேர்வழி காட்டத் துவங்கினான்.

பின்னர் கிறிஸ்தவ பாதிரியார்கள் படிக்கும் மேற்படிப்பாகிய மதங்கள் மற்றும் தத்துவங்களைப் பற்றிய (Theology & Philosophy) உயர்ந்த படிப்பைப் படிப்பதற்காக நான் அனுப்பப்பட்டேன். அங்கு நான் மதங்களைப் பற்றிய ஒப்பாய்வு (Comparative Religion) பாடங்களைப் படித்தேன். இஸ்லாத்தைப் பற்றி பயிற்றுவிக்கப்பட்டேன். ஆனால் உண்மையான இஸ்லாத்தைப் பற்றி அல்ல! இஸ்லாம் என்பது மிக மோசமான மதம் என்று பயிற்றுவிக்கப்பட்டேன்.

''இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் இந்தோனேசியாவிலுள்ள முஸ்லிம்களைப் பாருங்கள்'' என்று எங்களுக்கு விளக்கினார்கள்.

இந்தோனேசியாவில்,

o ஏழைகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

o முட்டாள்களாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

o வெள்ளிக் கிழமை தொழுகையின் போது தங்களின் காலனிகளை தொலைக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

o ஒற்றுமையாக இருப்பதற்கு மறுக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

o தீவிரவாதிகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்
இவர்களுடைய இத்தகைய தவறான போதனையினால் என்னுடைய நன்பர்கள் அனைவரும் ''இஸ்லாம் என்பது ஒரு மிக மோசமான மதம்'' என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள். ஆனால் அதே சமயத்தில் நான் அவர்கள் எடுத்திருக்கின்ற முடிவு உண்மைக்கு புறம்பானது என்றும் தவறானது என்றும் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களிடம், ''நாம் இந்தோனேசியாவை மட்டும் பார்க்கக் கூடாது, மற்ற நாடுகளில் உள்ள நிலவரங்களையும் நாம் பார்க்க வேண்டும்'' என்று கூறினேன்.

உதாரணமாக,

பிலிப்பைன்ஸ் நாட்டில், ஏழைகளாகவும், படிப்பறிவில்லாதவர்களாகவும் இருக்கிறார்களே! அவர்களுடைய மதம் இஸ்லாம் அல்ல!.அவர்களெல்லாம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.

மெக்ஸிகோ ஒரு ஏழை நாடு. அந்நாட்டில், குற்றவாளிகளாகவும், திருடர்களாகவும், குடிகாரர்களாகவும், கற்பழிப்பு செய்பவர்களாகவும், சூதாட்டக்காரர்களாகவும் இருக்கிறார்களே! அவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர். அவர்கள் அனைவரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்!

அயர்லாந்து குடியரசு நாடு. இந்த நாடு வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கிடையே தீர்க்க இயலாத உள் நாட்டு பிரச்சனையில், சச்சரவில் சக்கித் தவிக்கும் ஒரு நாடு. இந்தப் சச்சரவில் ஒரு முஸ்லிம் கூட இல்லை. இந்தப் சச்சரவு நடப்பது கத்தோலிக்க மற்றும் புரோட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்களுக்கிடையில் தான். அவர்கள் தமக்குள்ளாகவே சன்டையிட்டுக் கொண்டு கொலை செய்கின்றார்கள். ஐரோப்பிய சமூகம் அவர்களை ''அயர்லாந்தின் தீவிரவாதிகள்'' என்று கருதுகிறது. அவர்கள் ''ஐரோப்பிய தீவிரவாதிகள்'' என்றும் வகைப்படுத்தப்படுகிறார்கள்.

இத்தாலியைப் பாருங்கள்! போதைப் பொருள் கடத்துபவர்கள், சூதாட்டக்காரர்கள் - இவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர். அனைத்து மாஃபிய்யாக் கும்பல்களும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.

அப்போது நான் என்னுடைய மேலதிகாரியான பாதிரியாரிடம், ''இஸ்லாம் ஒரு மோசமான மதம் என்று நிரூபிக்கப்படவில்லையே'' கூறினேன். அப்போது நான், இஸ்லாத்தை, இஸ்லாமியர்களிடமிருந்தே படிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன் வைத்தேன். அதற்கு, ''நான் இஸ்லாத்தின் பலவீனங்களைப் பற்றி மட்டும் படிக்க வேண்டும்'' என்ற கட்டுப்பாட்டுடன் அனுமதியளிக்கப்பட்டென்.

நான் குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக ''இறைவன் ஒருவனே! ஒரே ஒருவன் தான்'' என்று வலியுறுத்தியது. அது நான் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற ''திரித்துவக் கடவுள் கொள்கைக்கு'' (Trinity of God) முற்றிலும் மாற்றமானதாக இருந்தது. ஆனால் இரவில் நான் குர்ஆனைப் படித்தபோது (சூரா இக்லாஸ்), இறைவன் ஒருவனே! என்றிருக்கிறது. ஆனால் அன்று காலையிலோ தேவாலயத்தில் மதங்களைப் பற்றிய பாடத்தை ரெவ. பாதிரியார் அவர்கள் போதித்த போது ''கடவுள் ஒருவரே! ஆனால் மூவரில் இருக்கிறார் (திரித்துவம் - Trinity) என்று போதித்தார். அதனால் அந்த இரவில் ஒரு சக்தி என்னை மேலும் குர்ஆனைப் படிக்க உந்தியது. என் ஆழமான உள் மனது ''இறைவன் ஒருவனே! என்றும் மேலும் இது (குர்ஆன்) உண்மையானது தான்'' என்றும் கூறிற்று.

மறு நாள் காலையில் தேவாலயத்தில் நான் என்னுடைய பாதிரியாரிடம், விவாதித்தேன்.

''கடவுளின் திரித்துவக் கொள்கை'' (Trinity of God) என்பது பற்றி எனக்கு சரியாக விளங்கவில்லை என்று அவரிடம் நான் கூறினேன்.

கிறிஸ்தவ கன்னியாஸ்திரியாகிய நான் இதுவரைக்கும் கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி எப்படி விளக்கம் பெறாமல் இருக்கமுடியும் என்பதைப் பற்றி அந்த பாதிரியார் மிகவும் ஆச்சரியமடைந்தார்.

அந்தப் பாதிரியார் முன் வந்து ஒரு முக்கோனத்தை வரைந்தார். பின்னர் அவர், ஒரு முக்கோனத்திற்கு மூன்று மூலைகள் (three corners) இருப்பதைப் போல, ஒரு கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்று கூறினார்.

அதற்கு நான், உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும். எனவே கடவுள் மூவரை வைத்து சமாளிப்பது என்பது கடினம். எனவே கடவுள் மற்றொருவருக்கு தேவையுடைவராக இருக்க சாத்தியக்கூறு இருக்கிறதல்லவா? இது சாத்தியம் தானே? என்று கேட்டேன்
அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார் ''இதற்கு சாத்தியமே இல்லை'' என்று கூறினார். அதற்கு நான், இது சாத்தியமானதே! கூறி முன்னாள் வந்து, ஒரு சதுரத்தை வரைந்தேன். முக்கோனத்திற்கு மூன்று கோணங்கள் இருப்பதைப் போன்று சதுரத்திற்கு நான்கு மூலைகள் (Four corners) இருக்கின்றனவே என்று கூறினேன்.

அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார், ''முடியாது'' என்று கூறினார். முன்பு ''இதற்கு சாத்தியமே இல்லை'' என்று கூறிய அவர், தற்போது ''முடியாது'' என்று மட்டும் கூறினார்.

நான் கேட்டேன், ''ஏன்?''

அதற்கு பாதியார், ''இது நம்பிக்கை''. நீ புரிந்துக் கொண்டாயோ இல்லையோ அப்படியே ஏற்றுக்கொள், அப்படியே இதை விழுங்கிவிடு. இதைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதே! கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதே! இதைப் பற்றி சந்தேகப்பட்டு கேள்வி கேட்டால் நீ பாவம் செய்தவளாகி விடுவாய்! என்று கூறினார்.

இந்த மாதிரியான பதில் எனக்கு கிடைக்கப் பெற்றும் அன்று இரவு குர்ஆனை தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற உறுதியான ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. ஏகத்துவம் குறித்த கடவுள் கொள்கையைக் குறித்து கற்றறிந்த என்னுடைய பாதிரியாருடன் விவாதம் செய்ய விரும்பினேன்.

ஒரு சமயம் நான் என்னுடைய பாதிரியாரிடம், ''இந்த மேசைகளை உருவாக்கியது யார்?'' என்று கேட்டேன். அதற்கு பாதிரியார் பதிலளிக்க விரும்பாமல் என்னையே பதிலளிக்குமாறு கூறினார்.
அதற்கு நான் ''இந்த மேசைகளை உருவாக்கியது 'தச்சர்கள்' (Carpenters)'' என்றேன்.

''ஏன்?'' பாதிரியார் கேட்டார்.
அதற்கு நான் இந்த மேசைகள் ஒரு வருடத்திற்கு முன்பாகவோ அல்லது நூறு வருடத்திற்கு முன்பாகவோ உருவாக்கப்பட்டவைகள். இவைகள் இன்னமும் மேசைகளாகவே இருக்கின்றன. இந்த மேசைகள் எப்போதும் ''தச்சார்களாக'' (Carpenters) மாறமுடியாது. மேலும் ஒரே ஒரு மேசை கூட தச்சராக (Carpenter) மாறுவதற்கு ஒருபோதும் முடியாது.

''நீ என்ன சொல்ல வருகிறாய்?'' பாதிரியார் கேட்டார்.
அதற்கு நான், இந்த பிரபஞ்சத்திலே உள்ள மனிதன் உட்பட உயிருள்ள மற்றும் உயிரற்ற ஒவ்வொன்றையும் கடவுளே படைத்தார். ஒரு வருடத்திற்கு முன்னாள் ஒரு மனிதன் பிறந்தால் அடுத்து வரக் கூடிய நூறு வருடங்களாயினும் அவன் மனிதனாகவே இருப்பான். உலக முடிவு நாள் வரைக்கும் கூட அவன் மனிதனாகவே தான் இருப்பான். ஒரே ஒரு மனிதன் கூட கடவுளாக அவதாரம் எடுக்க முடியாது! மேலும் கடவுளை மனிதனோடு ஒப்பிட முடியாது.

அதற்கு நான் ஒரு உதாரணமும் கூறினேன். ஒரு இராணுவத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களில் ஒருவரை தேர்தெடுத்து அவரை தங்களின் ''ஜெனரலாக'' தேர்தெடுத்தால் அந்த தேர்வு செல்லாததாகிவிடும். ஏன் அவர்களில் 99 சதவிகிதத்தினர் அவரை தேர்வு செய்திருப்பினும் சரியே!

''நீ என்ன சொல்ல வருகியாய்?'' பாதிரியார்
அதற்கு நான், ''மனிதன் உட்பட இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் கடவுள் படைத்தார். மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை கடவுளாக ஆக்கினால் அந்த தேர்வு செல்லாதது'' என்று நான் அந்த பாதிரியாரிடம் விளக்கினேன்.

பின்னர் நான் தொடர்ந்து படித்து வந்தேன். ஒருநாள் நான் என்னுடைய பாதிரியாரிடம், ''என்னுடைய ஆராய்ச்சிகளின் படியும், மதங்களைப் பற்றிப் வகுப்புகளில் படித்ததிலிருந்தும் கி.பி. 325 ஆம் ஆண்டில் தான் முதன் முதலாக இயேசு கடவுளாக கருதப்பட்டார்'' என்று கூறினேன்.

இவ்வாறு இந்த கன்னிகாஸ்திரி அவர்கள் பலவிதங்களில் அந்த பாதிரியாரிடம் விவாதம் புரிந்ததாகக் கூறினார்கள்.

பலவித ஆராய்ச்சிகளுக்குப் பிறகு தாம் இஸ்லாமே ஏகத்துவத்தை வலியுத்தும் உண்மையான மார்க்கம் என்றறிந்து இஸ்லாத்தை தழுவிய இந்த முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த கன்னிகாஸ்திரி Irena Handono அவர்கள் தற்போது இந்தோனேசியாவில் இருக்கும் Central Muslim Women Movement என்ற அமைப்பின் தலைவியாக இருந்துக் கொண்டு இஸ்லாமிய அழைப்புப் பணியைச் செய்து கொண்டுவருகிறார்.

அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாகவும்.

Saturday, 28 July 2012

கொழும்பில் பள்ளிவாசல், குடியிருப்புகளை அப்புறப்படுத்துவது பாரிய பிரச்சினை : ஹக்கீம்


கொழும்பு 7 எம்.எச்.எம். அஷ்ரப் மாவத்தையில் அமைந்துள்ள பள்ளிவாசலையும், அதன் அருகில் உள்ள சில குடியிருப்புகளையும் வேறு இடத்துக்கு அப்புறப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுமானால் அது பாரிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் என நீதி அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பிட்ட ஜும்மா பள்ளிவாசலும், அதன் அருகில் அமைந்துள்ள வீடுகளும் நீண்டகாலமாக அங்கு இருந்து வருவதாக தெரிவித்த அமைச்சர் ஹக்கீம், கொழும்பு கொம்பனித்தெரு போன்ற இடங்களிலிருந்து மக்கள் குடியிருப்புகளை அகற்றி அங்கு வாழ்ந்த மக்களை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவாக பாரிய பிரச்சினைகள் தலை தூக்கியதாகவும் கூறினார். இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் விலாடிமிர் பீ. மிக்ஹெலோ அமைச்சர் ஹக்கீமை அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடிய போதே, அமைச்சர் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.

பிரஸ்தாப பள்ளிவாசலுக்கும் அதன் அருகிலுள்ள குடியிருப்புக்கும் பக்கத்தில் உள்ள காணியில் ரஷ்யாவின் நான்கு மாடிகளைக் கொண்ட புதிய தூதரகக் கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் நவீன வசதிகள் அனைத்தையும் உடையதாக அமையவிருப்பதாகவும் தூதுவர் கூறினார். இருபது குடும்பங்கள் வரை வசிக்கும் அங்குள்ள வீடுகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளவை என்றும் அவற்றின் எல்லை வேலிகள் உத்தேச ரஷ்ய தூதரக கட்டிடத்திற்கு மிகவும் நெருக்கமாகவுள்ளதால் பாதுகாப்பு பிரச்சினைகளும் ஏனைய அசௌகரியங்களும் ஏற்படும் என்றும் தூதுவர் தெரிவித்தார்.

பள்ளிவாசலை வேறு இடத்தில் அமைப்பதற்கும், தமது வசிப்பிடங்களை இழப்போருக்கு வேறிடத்தில் அவற்றை நிர்மாணித்துக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தூதுவர் கூறியபோது, விசனம் தெரிவித்த அமைச்சர் ஹக்கீம் கொம்பனித்தெரு போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய முயற்சி பாரிய பிரச்சினைகளை தோற்றுவித்தாக தூதுவரிடம் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பு செயலாளர் திரு. கோதபாய ராஜபக்ஷவுடன் தாம் இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தூதுவர் கூறினார்.

எவ்வாறாயினும், அந்தப் பள்ளி வாசலின் நிர்வாகிகளுடனும், அங்கு வாழும் மக்களுடனும் கலந்துரையாடாமல் எந்த விதமான முடிவுக்கும் வரக்கூடாது என்றும் அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஜனநாயகம், மனித உரிமைகள் என்பன பற்றி தமது நாடு அதிக கரிசனையுடன் செயல்பட்டு வருவதாகக் கூறிய தூதுவர் சிறுபான்மை மக்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் தமது நாடு அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் சொன்னார்.

ரஷ்யாவில் இருபது மில்லியன்களுக்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்ந்து வருவதாகவும், சோவியத் ரஷ்யாவில் இருந்து பிரிந்துசென்று தனித்தனியாகவுள்ள நாடுகள் சிலவற்றில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும், அதிக எண்ணிக்கையிலும் காணப்படுகின்றனர் என்றும் தூதுவர் கூறினார். சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தம் பற்றியும் அவர் கவலை தெரிவித்தார்.
_

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...