Wednesday, 18 May 2011

இஸ்லாமியர்கள் தொட்டுக்கொள்ள ஊறுகாய் அல்ல!



இக்கட்டுரை கீற்று இணையதளத்தில் சகோதர மத்ததைச் சேர்ந்த சகோ.ஆத்மார்த்தி என்பவரால் எழுதப் பட்டது.


இந்தக் கட்டுரையின் நோக்கம் நேரடியாகவே சொல்வதற்கு முனைவது தான்.

நீங்கள் குற்றமிழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆம். குற்றமிழைத்துக் கொண்டிருப்பவர்களைத் தேடிக் கண்டுபிடித்து தண்டிப்பது தீர்வாகாது என்பதால் இரண்டு நிலங்களைப் பிரிக்கும் ஒற்றைச் சுவரில் உடைப்பொன்றை ஏற்படுத்தும் கலகக்காரனாய்ச் செயல்படுவதே இக்கட்டுரையாளனின் நோக்கம்.

தென் இந்திய சினிமாக்களில் அதுவும் குறிப்பாக தமிழ் சினிமாக்களில் காலம் காலமாக அல்ல, சரியாக சொல்வதானால் 1995 ஆண்டுக்குப் பிறகு இஸ்லாமியர்கள் பல்வேறு படைப்பாளிகளால் தவறாகவும் மிகையாகவும் புண்படும் வண்ணமும் கேலிப் பொருட்களாகவும் எதிர்மறைப் பாத்திரங்களாகவும் சித்தரிக்கப்படுவது சென்ற வாரம் வெளியான வானம் (தெலுங்கு வேதம் படத்தின் மீள்வுருவாக்கம்) வரை தொடர்வது பலரும் எழுதிவரும் தொடர்கதை. இதற்கொரு முற்றுப் புள்ளி வேண்டும் என யாருமே எண்ணாமல் இருப்பதற்கும், ஏன் திரைத்துறையிலேயே இயங்கக் கூடிய இஸ்லாமியர்களும், மதப்பாரபட்சமற்றவர்களும் ஏன் முயல்வதே இல்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

Tuesday, 17 May 2011

சல்மான் ருஷ்தியின் நாவல் இலங்கையில் படமாகிறது!

ஸல்மான் ருஷ்தி எழுதிய 'Midnight's Children' என்ற நாவல் தற்போது இலங்கையின் கொழும்பு நகரில் படமாக்கப்படுகிறது.


கொழும்பில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, புதுக்கடை போன்ற பகுதிகளில் மேற்படி படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


கடந்த வாரம் வாழைத்தோட்டம் மஸ்ஜிதுந் நஜ்மி பள்ளிவாசலுக்கு முன்னால் உள்ள ஒழுங்கை டில்லி நகரின் சனநெருசல் உள்ள ஓர் ஒழுங்கையாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

உயிர் வாழும் ஒசாமா?


இணையத்தில் உலா வரும் இந்தப் புகைப்படம் ஒசாமா என்ற கதாபாத்திரம் அமெரிக்க ஆக்கிரமிப்பு அரசியலை நகர்த்துவதற்கு எப்படி களமாக அமைந்தது என்ற கருத்தை அழகாக சொல்லும் சிறந்த ஒரு கருத்துப்படம்.. ஒசாமா கொலை செய்யப்படுவதை வெள்ளை மாளிகையிலிருந்து ஒசாமாவும் பார்ப்பது போல் இப்படம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ஒசாமா மரணம் தொடர்பாக ஊடகங்கள் வெளியிட்ட போலி புகைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியதை மறந்திருக்க மாட்டீர்கள்.  இந்த புகைப்படமும் அதே மாதிரி வந்திருக்கும் ஒரு புகைப்படமே. ஆனால் இதன் கருத்து வித்தியாசமானது.

Wednesday, 11 May 2011

பாகிஸ்தான் - பயங்கரவாதத்தின் பண்ணை


(ரொனால்ட் றேகனின் காலத்தில் வெள்ளை மாளிகையில் ஆப்கான் ஜிஹாத் வடிவமைக்கப்படுகிறது. முஜாஹிதீன்களுடனான அமெரிக்க ஜனாதிபதியின் கலந்துரையாடல்)



(80களில் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ இன் பணிப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல் ஹாமித் குல், (இடதுபக்கம்) அப்போதைய சீ.ஐ.ஏ யின் பணிப்பாளர்  வில்லியம் வெப்ஸ்ரர் , சீ.ஐ.ஏ யின் நடவடிக்கைளுக்கான உதவிப் பணிப்பாளர்  கிளயார் ஜோர்ஜ் ,சீ.ஐ.ஏ இன் பாகிஸ்தான் பெஷாவர் நிலைய முஜாஹிதீன்களுக்கான பயிற்சிக்குப் பொறுப்பான மில்ட் பெயார்டன் ஆகியோர் 1987ம் ஆண்டு பெஷாவரில் எடுத்துக்கொண்ட படம்)

"நாயோடு உறங்கியவன் அதன் ஒட்டுண்ணியோடுதான் எழுந்திருக்க வேண்டும்.''

இந்த முதுமொழி பாகிஸ்தானுக்கு சரியாகப் பொருந்துகிறது.

அமெரிக்கா என்ற பயங்கரவாதத்தோடு உறவு வைத்து அதன் ஏகாதிபத்திய நிகழ்ச்சிக்கு ஏற்ற தாளத்திற்கு ஆட்டம் போட்ட பாகிஸ்தான் இன்று ஆடிப்போய் நிற்கிறது.

Tuesday, 10 May 2011

புனித மக்காவில் போலி ஸம்ஸம் தண்ணீர்?


உலகமயமாக்கல் மற்றும் திறந்த பொருளாதாரம் மனித உணர்வுகளை மலினப்படுத்தி இருக்கிறது.

நீதி, நியாயத்தை ஓரம்கட்டிவிட்டு பணத்திற்கு பின்னால் ஓடுகின்ற சமுதாயம் ஒன்றை உருவாக்கியிருக்கும் இன்றைய பொருளாதார முறை, எதையும் விற்று பணமாக்கும் மனநிலையை மனிதர்கள் மத்தியில் தோற்றுவித்திருக்கின்றது.

ஊடகங்களில் ஹஜ், உம்ரா போன்ற வணக்க வழிபாடுகள் பணத்தைக் குறியாய்க் கொண்ட முகவர்களினால் இன்று முற்றாக வர்த்தகமயமாக்கப்பட்டிருக்கின்றன.

இந்த வரிசையில் இப்போது  ஸம்ஸம் தண்ணீரும் சேர்ந்திருக்கின்றது.

ஸம்ஸம் தண்ணீர்என்று கூறி புனித மக்கா வீதிகளில் போலியாக தண்ணீர் நிரப்பப்பட்ட கொள்கலன்கள் விற்கப்படுவதாக அரப் நிவுஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கின்றது.
http://arabnews.com/saudiarabia/article388908.ece

Monday, 9 May 2011

எதிரி (?) இஸ்ரேலுக்கு எரி வாயு (Gas) கத்தார் நாட்டின் கைங்கரியம்!

இஸ்ரேல் கத்தார் உறவு - இஸரேலிய வெளிவிவகார அமைச்சராக இருந்த ஸிபி லிவினிக்கு கை கொடுக்கும் கத்தார் மன்னர்


இஸ்ரேல் கத்தார் உறவு - இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு கை கொடுக்கும் கத்தார் மன்னரும் அவர் மனைவியும்


இஸ்ரேல் கத்தார் உறவும் - கர்ளாவி கத்தார் உறவும் 
இஸ்ரேலோடு நெருக்கமான உறவு வைத்திருக்கும் கத்தார் மன்னனின் மனைவிக்கு கர்ளாவி கை கொடுக்கிறார்

கிலாபத் சிந்தனையாளர்களின் கனவு இராஜ்யமான கத்தார் நாடு இரத்த வெறி பிடித்த இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற முறையில் எரி வாயு வழங்க முடிவு செய்திருப்பதாக இஸ்ரேலிய இணையதளமான Ynet  http://www.ynetnews.com/articles/0,7340,L-4064547,00.html செய்தி வெளியிட்டிருக்கிறது.

கடந்த காலங்களில் எகிப்தே இஸ்ரேலுக்கான எரிவாயுவை வழங்கி வந்தது. இஸ்ரேல் ஆதரவாளரான முபாரக் அந்நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதன் பின்னர் இஸ்ரேலுக்கான எரிவாயு வழங்கல் தடைப்பட்டிருந்தது.

எனவே இஸ்ரேலுக்கு அடுத்த நேச நாடாக திகழும் கத்தார் நாடு, சந்தை விலையை விட குறைந்த விலையில் இஸ்ரேலுக்கு எரிவாயுவை வழங்க முடிவு செய்திருக்கிறது.

பல வருடங்களாக பலஸ்தீன் காஸா மக்கள் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ள இஸ்ரேல், அந்நாட்டு மக்களுக்கு உணவு, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளைத் தடுத்து வருகிறது. காஸா மக்கள் திறந்த வெளி சிறை ஒன்றில் அல்லல் பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இஸ்ரேல் பொருட்களைப் பகிஷ்கரிக்குமாறு போலியாக உலகிற்கே அறிக்கை விடும் கத்தார் நாட்டின் ஆஸ்தான உலமாக்கள் வழமைபோல மௌனமாக இதற்கு அங்கீகாரம் வழங்கியிருப்பதாகவும் அறிய வந்திருக்கிறது.

எது எப்படியிருந்தாலும் 

இஸ்ரேலின் நேச நாடான கத்தார்,  இஸ்ரேலுக்கு உதவி செய்வதைப் போல்  இஸ்லாமிய வாதிகளுக்கும் உதவி செய்து வருகிறது. 

குறிப்பாக இலங்கையிலிருந்து கத்தார் செல்லும் தாஈகளுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கிறது. 

கத்தார் ஒரு கையினால இஸ்ரேலையும்,  மறு கையினால் இலங்கையின் இந்த இஸ்லாமிய வாதிகளையும் பற்றியிருக்கிறது.

இஸ்ரேலின் அனுசரணையில் கத்தாரில் ஏற்படப்போகும் இஸ்லாமிய எழுச்சிக்காக தளம் அமைக்கின்ற பணியில் இலங்கையிலிருந்து இஸ்லாமிய வாதிகளும், புகழ்பெற்ற அறிஞர்களும் (?) அடிக்கடி சென்று களம் அமைத்து வருகின்றார்கள்.

1980 களில் ஆப்கானிஸ்தானிலிருந்து ரஷ்யாவை விரட்டும் ஜிஹாத் களத்தை சூடேற்ற அடிக்கடி பாகிஸ்தானுக்கு தஃவா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்த தாஈகள், தாலிபான்கள் போன்ற பிற்போக்குவாத சக்திகளை உருவாக்க பின்னணியில் நின்றார்கள்.

இவர்கள் இப்போது இஸ்ரேலுக்குச் சார்பான கத்தாரில் கால் பதிருக்கின்றார்கள்.  கத்தாரில் கிலாபத்தை உருவாக்க அதனை வழிநடாத்த புதியதொரு ''காலிபான்''களை உருவாக்கவும் இவர்களால் முடியும்.

அமெரிக்காவை ஆதரித்து ஆப்கானில் ஆரம்பமான தாலிபான் அரசு போல இஸ்ரேலை ஆதரித்து கத்தாரில் அமையவிருக்கின்ற ''இஸ்ரேலிய இஸ்லாமிய கிலாபத்" எப்படி அமையுமோ? 

பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Sunday, 8 May 2011

ஒசாமாவின் மரணமும் ஒபாமாவின் கரணமும்!

ஒசாமாவின் மறைவும் 10 ஆண்டு நிறைவும்?
ஓபாமாவின் அரசியல் காய் நகர்த்தல்
மே 3ம் திகதி இடம்பெற்ற நிகழ்வுகளின் படங்கள்



ஒபாமா அரசியல் சாகச விளையாட்டில் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கின்றார்.

கரணம் தப்பினால் மரணம் என்றவொரு பழமொழி இருக்கிறதே! ஒபாமாவின் சாகச விளையாட்டைப் பார்க்கும் போது அது தான் ஞாபகத்திற்கு வருகிறது.

கொஞ்சம் சறுக்கினால் அவர் தனது அரசியல் சாகச விளையாட்டிலிருந்து கீழே விழுந்து நொருங்கி விடும் அபாயம் நெருங்கியே இருக்கிறது.

ஒசாமாவை வைத்து அமெரிக்கா அதிகம் லாபமீட்டியது.

ஆப்கானிலிருந்து ரஷ்யாவை விரட்டியது முதல் ஆப்கான், ஈராக் ஆக்கிரமிப்பு வரை அதன் வெளிநாட்டு ஆக்கிரமிப்புக் கொள்கைக்கு ஆதாரமாக ஒசாமாவின் செயற்பாடுகளைத்தான் காரணமாக முன்வைத்தது.

புஷ்ஷின் அடிச்சுவட்டை அதே பாணியில் பின்பற்றும் ஒபாமா இன்று சரிந்துக்கொண்டிருக்கும் தனது செல்வாக்கை காப்பாற்றிக் கொள்வதற்காக ஒசாமாவின் மரணத்தை(?) ஓர் ஆயுதமாக பாவிக்கும் தந்திரத்திற்கு ஆளாகியுள்ளார்.

அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் ஒசாமாவின் மரணத்தைப் பற்றி கருத்துத்தெரிவிக்கும் போது இது ஒசாமாவின் இரண்டாவது மரணம் என்று குறிப்பிட்டதோடல்லாமல் ஒசாமாவின் மரணச் செய்தி ஏப்ரல் 1ம் திகதி வந்திருந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்கர்களின் அரசியலுக்காக, அதன் வெளிநாட்டு சுரண்டல் கொள்கைக்காக உலகம் எவ்வளவோ இழப்புகளைச் சந்தித்து இருக்கிறது.

ஒரு நாட்டின் வளங்களைச் சுரண்ட திட்டமிட்டால் அது எத்தகைய அநீதிகளையும் அந்நாட்டின் மீது கட்டவிழ்த்து விடும்.

மத்திய கிழக்கு தொடர்பான அதன் வெளிநாட்டுக் கொள்கைக்கு ஆயுதமாக  இஸ்லாத்தை பயன்படுத்திக்கொண்டது.

ஆப்கானிஸ்தான் ஹிக்மதியார், ரப்பானி முதல் ஒசாமா வரை அதன் தூண்டிலில் சிக்கி சிதைந்து போனவர்களே.

இன்று பாகிஸ்தான் ஒரு பயங்கரவாதத்தின் பண்ணை யாக உருமாறுவதற்கு  அமெரிக்காவின் கைகள் பக்கபலமாக இருந்திருக்கின்றன.

தாலிபான்கள் போன்ற பாமரத்தனமான ஆன்மிகவாதிகளான பிற்போக்குவாதிகளை உருவாக்கி அவர்களை மறைமுகமாக நிர்வகிப்பதின் மூலம் பயங்கரவாதத்திற்கெதிரான போரை தேவையான காலத்திற்கு நீடிக்க முடியும் என்பதே அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரல்

ஒபாமாவிற்கு அடுத்து வரும் தேர்தலில் வெற்றிக்குத் தடையாக இருப்பது
பயங்கரவாதத்திற்கெதிரான இந்த யுத்தம்தான்.

நாட்டு மக்களின் வரிப்பணத்தை வேறு நாடுகளில் யுத்தத்திற்காகவும், தமது அரசியல் அபிலாஷைகளுக்காகவும் கொட்டுவதை இப்போது அந்த மக்கள் எதிர்த்து வருகின்றனர்.

எனவே திடீரென்று ஒபாமா நிகழ்ச்சி நிரலை மாற்றி தனது பயணத்தை ஆரம்பிக்க முடிவெடுத்துள்ளார். தனது அரசியல் சாகச விளையாட்டைத் தொடங்கியுள்ளார்.

எதிர் வரும் செப்டம்பர் 11 திகதி இரட்டைக் கோபுர தாக்குதல் இடம்பெற்று 10 வருடங்கள் நிறைவடைகினறன. அந்த நிகழ்வை முன்வைத்து தனது சரிந்து போகும் பெயரை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியாகவே அவரின் தற்போதைய செயற்பாடுகள் அமைந்துள்ளன.

ஒசாமாவைத் தாக்கியதாக சொல்லப்படும் மே 2ம் திகதியின் சூடு தணிவதற்கு முன் , மே மாதம் 3ம் திகதி செப்டம்பர் 11 தாக்குதலில் கொல்லப்பட்ட தீயணைப்பு படையினரின் குடும்பத்தினரோடு ஞாபகார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

எச்சரிக்கைமிகுந்த ஒரு சாகச விளையாட்டில் ஒபாமா ஈடுபட்டிருப்பதை அமெரிக்க மக்கள் தற்போது புரிந்து வருகிறார்கள் என்பதை அவர்களின் ஊடகங்கள் ஊடாக புரிந்துக் கொள்ளக் கூடியதாய் இருக்கிறது.

இரட்டைக் கோபுர சரிவிலிருந்து அமெரிக்கா தனது ஏகாதிபத்தியத்திற்கான ஒரு புதிய முகமூடியைத் தேடிக்கொண்டது. யாருக்கும் கட்டுப்படாத ஏகாதிபத்திய சக்தியாய் எழுந்துக் கொண்டது.

இன்று ஒபாமா விழுந்த இரட்டைக் கோபுரத்தின் நிகழ்வை வைத்து எழுந்து நிற்க முயற்சி செய்கிறார்.

ஒசாமாவை வீழ்த்தியதாகச் சொல்லி ஒபாமா தனது அரசியல் சாகசத்தை ஆரம்பித்திருக்கின்றார்.

ஒபாமா ! ஜாக்கிரதை கரணம் தப்பினால் மரணம்!

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...