ஒசாமா பல ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்டு விட்டதாக முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாஸிர் பூட்டோ 2007ம் ஆண்டு ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.
ஒசாமாவின் கொலை தொடர்பாக அமெரிக்கா சொல்கின்ற “கதை”கள் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது. பாகிஸ்தானில் எவ்வித பாதுகாப்பும் (?) இல்லாத நிலையில் இருந்த ஒரு சர்வதேச பயங்கரவாதியை தாக்கியழித்தாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது.
பாதுகாப்புகள் எதுவும் இல்லாத நிலையில் இருந்த ஒரு சர்வதேச பயங்கரவாதியை உயிருடன் பிடித்து நிறைய தகவல்களை பெற முடியுமான நிலையை அமெரிக்கா உளவு நிறுவனம் ஏன் அவசரப்பட்டு இல்லாமல் செய்து கொண்டது என்ற கேள்வி மறுபுறம் எழுகின்றது.
ஒசாமாவைப் பிடிக்கச் சென்ற களநிலவரங்களைப் பார்த்தால் அவரை ஒரு எலியைப் பிடிப்பது போன்று இலகுவாக உயிருடன் பிடித்திருக்க முடியும்.
அமெரிக்க சீ.ஐ.ஏ வடிவமைத்த நிகழ்ச்சி நிரல் என்பதால் ஒசாமாவின் போராட்டம் பல சிக்கல்களையும், சந்தேகங்களையும் கொண்ட ஒரு புதிராகவே இன்றுவரை இருந்து வருகிறது.
ஒசாமா அமெரிக்க சீ.ஐ.ஏ என்ற உளவு நிறுவனத்தினால் பயிற்றப்பட்ட ஒரு தீவிர உளவாளி!. அவர் அமெரிக்காவோடு நேசம் வைத்திருந்த காலத்தில் அவரால் எத்தகைய பிரயோசனங்களைப் பெற்றதோ அதற்கும் அதிகமான பலனை அவரை எதிரியாக்கி அமெரிக்கா பெற்றுக்கொண்டது.
ஒசாமாவைப் பற்றி சுருக்கமாகச் சொன்னால் ...
அமெரிக்காவிற்கு ஒசாமா இருந்தாலும் ஆயிரம் பலன், இறந்தாலும் ஆயிரம் பலன்.
நண்பனாகவும், எதிரியாகவும் இருந்து அமெரிக்காவிற்கு அதிக லாபங்களை ஈட்டுக் கொடுத்தவர்.
இன்றைய அமெரிக்காவின் மோசமான ஜனநாயக விரோத செயற்பாட்டை நியாயப்படுத்துவதற்கு ஒசாமா என்ற கதாபாத்திரம் ஒன்றே காரணமாக இருக்கிறது.
இரண்டு வல்லாதிக்க சக்திகளாக எழுந்து, பனிப்போர் ஒன்றுக்குள் புதைதந்திருந்தன அமெரிக்காவும், ரஷ்யாவும். ரஷ்யாவை ஆப்கானிஸ்தானில் நிஜமான யுத்தக் களமொன்றில் தோற்கடிப்பதற்கு ஒசாமா என்ற கதாபாத்திரம் தேவையாக இருந்தது.
அமெரிக்கா தானே திட்டமிட்டு நடாத்தியதாக அமெரிக்கர்களாலேயே குற்றஞ்சாட்டப்படுகின்ற செப். 11 தாக்குதலை நடாத்தி விட்டடு ஒசாமாவை குற்றஞ்சாட்ட முடியாது போயிருக்கும்.
செப். 11 தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாத ஒழிப்பு யுத்தம் என்ற அடிப்படையில் பயங்கரவாதிகளைத் தேடி ஏனைய நாடுகளை ஆக்கிரமிக்க முடியாது போயிருக்கும்.
ஒசாமா என்ற ஒரு நபரும் அவரது “ஜிஹாதும்” இல்லையென்றிருந்தால் இன்றைய அமெரிக்காவின் ஈராக், ஆப்கான் ஆக்கிரமிப்புகளை நியாயப்படுத்த முடியாமல் போயிருக்கும்.
ஒசாமா இல்லையென்றிருந்தால் அரபு நாடுகளுக்கு பாதுகாப்பை காரணம் காட்டி தனது புதுப்புது ஆயுதங்களை அமெரிக்காவினால் சந்தைப்படுத்த முடியாது போயிருக்கும்.
ஒசாமாவும், அவர் உருவாக்கிய தாலிபானும் இல்லாதுபோனால் தற்கொலைக் குண்டு என்ற போர்வையில் கொத்துக் கொத்தாக முஸ்லிம்களை கொன்று குவிக்க முடியாது போகும்.
ஒசாமா இல்லையென்றிருந்தால் இஸ்லாத்தை தீவிரவாதம், பிற்போக்குவாதம், பழமைவாதம் என்று கூறி அரசியல் அரங்கிலிருந்து ஓரம் கட்ட முடியாமல் போயிருக்கும்.
அமெரிக்கா தனது அரசியல் தேவைக்காக பயங்கரவாதத்தை பிறப்பித்து, வளர்ர்து, பாதுகாக்கும் ஒரு நாடு.
சுரண்டல் முதலாளியத்தை அடிப்படைக் கொள்கையாக பின்பற்றும் அந்த நாடு தனக்கு எதிரான சோஷலிஸத்தை இல்லாதொழிக்க 80களில் இஸ்லாமிய வாதிகளை திட்டமிட்டுப் பயன்படுத்தியது.
முற்போக்கு சிந்தனையற்ற முல்லாக் கூட்டம் இந்த சதிவலையில் நல்லாவே மாட்டிக்கொண்டது.
விளைவு அமெரிக்கா மூட்டிய ஜிஹாத் நெருப்பு அமெரிக்காவிற்கு எதிராக இருந்த ரஷ்ய சார்பு நாடுகளில் பற்றத்தொடங்கியது.
அமெரிக்காவின் சதியினால் ஆப்கானிஸ்தானில் ஹிக்மத்தியார், ரப்பானி வகையறாக்களால் (யுத்தப் பிரபுகளால்) கொள்ளி வைக்கப்பட்ட ஜிஹாதிய நெருப்பு சர்வதேச மட்டங்களில் மட்டுமல்லாது அரபு நாடுகளையும் ஏன் இலங்கையைக் கூட உஷ்ணப்படுத்தியது என்றால் அதன் பாரிய தாக்கத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.
அமெரிக்கா வடிவமைத்த இந்த ஜிஹாதிய அனலில் இலங்கையின் இஸ்லாமிய இயக்க முல்லாக்களின் நரம்புகள் கூட விம்மிப் புடைத்தன.
மத்ரஸாக்கள் என்ற போர்வையில் பாகிஸ்தானில் ஜிஹாதிய பண்ணைகள் உருவாக்கப்பட்டன. தாலிபான்களும், தற்கொலைப்போராளிகளும் கொத்துக் கொத்தாக யுத்தக் களங்களில் குவிக்கப்பட்டார்கள்.
ஆப்கானின் விடுதலைப் போராட்டம் என்பது இடது சாரகளான இறைமறுப்பாளர்களுக்கு எதிரான போராட்டமாகவும் அல்லாஹ்வால் இருபதாம் நூற்றாண்டின் இஸ்லாமிய உம்மாவிற்குக் கிடைத்த போராட்டக்களமாகவும் இன்றைய புகழ்பெற்ற “அஷ்ஷெய்க்” மார்கள் அடித்துச் சொல்லினர். அன்று இலங்கை முஸ்லிம் இளைஞர்களின் இரத்தத்தை சூடேற்றி மகிழ்ந்தனர்.
அமெரிக்க அரசியல் உலக முஸ்லிம்களின் ஆன்மீகத்தை எவ்வாறு தனது தேவைகளுக்காக பயன்படுத்துகின்றது என்பதைப் புரிந்துகொள்ள இந்நிகழ்வுகள் சிறந்த சான்றுகளாக திகழ்கின்றன.
இப்போது விஷயத்திற்கு வருவோம். பெனாஸிர் பூட்டோ ஒசாமா பற்றி, அவரது கொலைப் பற்றி தகவல்களை வெளியட்ட சிறிது காலத்தில் அவரும் கொலை செய்யப்படுகிறார்.
பெனாஸிரின் கருத்து உண்மையாக இருந்தால், இன்று ஒசாமாவைக் கொன்று விட்டதாகக் ஒபாமா நிருவாகம் சொல்வது வெறும் நடிப்பாக இருக்கலாம்.
அமெரிக்கர்களின் வரிப்பணம் வெளிநாட்டு யுத்தங்களுக்காக செலவிடப்படுவதை இப்போது அந்நாட்டு மக்கள் எதிர்த்து வருகின்றனர். தனது நாட்டுப் பிரஜைகள்வேறுநாடுகளில் மரணப்பொறியில் சிக்கியிருப்பதாக அவர்கள் உணர்கின்றனர்.
செப். 11 தாக்குதலை புஷ் நிர்வாகமே திட்டமிட்டு செய்ததாக அந்நாட்டு புத்தி ஜீவிகள் பலத்த குற்றத்தைச் சுமத்தி வருகின்றனர். அந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கும் தகுந்த விஞ்ஙான, தொழில் நுட்ப ஆதாரங்களை அவர்கள் ஊடகங்கள் மூலம் நிரூபித்தும் வருகின்றனர்.
இந்த இக்கட்டான அரசியல் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருப்பதால் அதன் நிகழ்ச்சி நிரலில் அவசர மாற்றம் ஒன்று தேவைப்படுகின்றது.
அமெரிக்காவில் அரசாங்கத்திற்கு எதிராக ஏற்பட்டு வரும் மக்கள் அழுத்தங்களை குறைக்க வெண்டும் என்றிருந்தால் வெளிநாட்டு அக்கிரமிப்பு யுத்தங்களை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.
ஒசாமாவைத் தேடி ஆரம்பித்த பயங்கரவாத ஒழிப்பு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒசாமாவை ஒழிக்க வேண்டும். அது இன்று நிகழ்ந்திருக்கிறது.
அரபு, மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஆதிக்கத்திற்கான, ஆக்கிரமிப்பிற்கான தனது புதிய நிகழ்ச்சி நிரலை வெள்ளை மாளிகை வெகு விரைவில் வெளியிட இடமிருக்கிறது.
அதை இப்படியும் யூகிக்கலாம்...!
இறந்த ஒசாமாவை அரசியலுக்காக உயிர் வாழ வைத்திருந்ததை மாற்றி
மீண்டும் இறக்க வைப்பது..!
எங்கள் நாட்டில் யானைக்கு சொல்லும் ஒரு பழமொழி ஒன்றிருக்கிறது.
யானை இருந்தாலும் ஆயிரம் இறந்தாலும் ஆயிரம்!
ஒசாமாவைப் பொறுத்தவரை
அமெரிக்காவிற்கு இருந்த போதும் ஆயிரம்
இறந்த போதும் ஆயிரம்.!
கல்வி! இஸ்லாம் உயரிய இடம் வழங்கிய உன்னதமான சொத்து!
கல்வியின் மகத்துவம் குறித்து சமூகத்தில் அடிக்கடி விவாதிக்கப்பட்டாலும் இலங்கையின் தேசிய மட்டத்தில் மட்டுமல்ல சர்வதேச மட்டத்திலும் கூட அதன் நிலை பின்னடைந்தே இருக்கின்றது.
“முஸ்லிம்கள் ஓர் வர்த்தகச் சமூகம் அவர்களுக்கு கல்வியில் அக்கறைக் கிடையாது”
என்ற கருத்து திட்டமிட்டு பரப்பப்பட்டும் வருகிறது. இந்தக் கருத்து கல்வியில் கரிசனையில்லாத எமது செயற்பாடுகளினால் ஊர்ஜிதமாகியும் வருகிறது.
எமது பாடசாலைகளில் நிலவும் வளப்பற்றாக்குறை, பெற்றோரின் கவனயீனம், புத்திஜீவிகளின் பாராமுகம் போன்றவை எதிர்கால சமூகத்தின் முன்னேற்றத்தை வெகுவாக பாதித்திருக்கிறது.
கல்வியில் ஊக்கத்தை ஏற்படுத்துவதற்கும், அதன் தரத்தை உயர்த்துவதற்கும் சகல பாடசாலைகளையும் இணைத்த ஒரு நிகழ்ச்சி நிரல் அவசரமாக தேவைப்படுகிறது.
பள்ளிவாசலும் பாடசாலையும் சமூகத்தின் இரு கண்களாக வர்ணிக்கப்பட்டாலும் பள்ளிவாசலைப் பார்க்கும் விதமாக பாடசாலைகள் நோக்கப்படுவதில்லை.
வணக்க வழிபாடுகளுக்காக பளிங்கு மாளிகைகளாக பள்ளிவாசல்களைக் கட்டிப்போடும் நமது சமூகம் கல்வி ஒரு இபாதத் என்பதை மறந்தே செயற்படுகிறது.
பாடசாலைகள் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளன. கல்வியின் மேம்பாடு தொடர்பான கருத்தரங்குகள், மாநாடுகள், கலந்துரையாடல்கள், சொற்பொழிவுகள் எல்லாம் சம்பிரதாயமாக மாறியிருக்கிறது. உப்புசப்பில்லாமல், உணர்வில்லாமல் வெறுமனே கூடிக்கலைகின்ற ஒன்றாகவே கல்வி தொடர்பான கூட்டங்களை குறிப்பிடவேண்டியிருக்கிறது.
சமகாலத்தில் முஸ்லிம் பாடசாலைகளை உயிர்ப்பித்து சமூகத்தின் அறிவுக் கண்ணை திறந்து வைப்பதற்கு உருப்படியான எந்த ஒன்றையும் யாரும் இதுவரை செய்யவில்லை.
அரபு நாடுகளில் ஒன்றான சிரியாவில் நடக்கும் ஆட்சிக்கு எதிரான போராட்டத்துக்கு அமெரிக்காவே காரணம் எனவும் அமெரிக்கா சிரிய போராட்டத்துக்குப் பண உதவி செய்வதாகவும் விக்கி லீக்ஸ் அதிர்ச்சிகர செய்தி வெளியிட்டுள்ளது.
அரபு நாடான சிரியாவில் அதிபர் பாஷார் அல்- ஆஷாத்துக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. துனீஷியா, எகிப்து போராட்டங்களைத் தொடர்ந்து கடந்த மாதம் 18-ந்தேதி தொடங்கிய சிரியா போராட்டம் தற்போது வலுவடைந்துள்ளது.
போராட்டத்தை ஒடுக்க சிரிய ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 8 பேர் பரிதாபமாக பலியாகினர். அவர்களின் இறுதி ஊர்வலம் நேற்று நடந்தது. அதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சிரியாவில் போராட்டம் வலுவடைந்துள்ளது. இந் நிலையில், "சிரியாவில் போராட்டம் நடக்க அமெரிக்காவே காரணம்" என விக்கி லீக் இணைய தளம் தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்க தூதரகங்களின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு அமெரிக்காவின் சட்டவிரோத செயல்ப்பாடுகளை வெளிப்படுத்திவரும் விக்கிலீக் இணையதளம் சமீபத்தில் சிரியா குறித்த தகவல்களையும் வெளியிட்டுள்ளது.
அதில், "சிரியாவில் கலவரத்தைத் தூண்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் பண உதவி செய்தார். அத்துடன் சிரிய அதிபருக்கு எதிரான மக்கள் போராட்டத்தை ஒளிபரப்ப லண்டனைத் தலைமையகமாக கொண்டு இயங்கும் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கும், புஷ் அரசு பண உதவி அளித்தது.
அதற்காக புஷ் மொத்தம் ரூ.30 கோடி வழங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அந்த தனியார் தொலைக்காட்சி சிரியாவில் தனது ஒளிபரப்பைத் தொடங்கியது. அதன் எதிரொலியாகத்தான் தற்போது அங்கு கலவரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மேலும், இதற்கான ஒப்பந்தம் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்கும், சிரியா எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையே கடந்த 2005-ம் ஆண்டு டமாஸ்கஸ்சில் ஏற்பட்டது.
அவரது ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த நிதி உதவி ஒபாமாவின் ஆட்சியிலும் தொடர்கிறது. ஒருபுறம் கலவரத்தைத் தூண்டிக் கொண்டே மறுபுறம் சிரியாவுடன் உறவைப் பலப்படுத்துவது போன்று அமெரிக்கா நடிக்கிறது. கடந்த 6 வருடத்தில் கடந்த ஜனவரி மாதம்தான் முதன் முதலாக சிரியாவுக்கான தூதரை அமெரிக்கா நியமித்தது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்கிலீக்ஸின் இப்புதிய தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரபு நாடுகளில் ஏற்பட்டுவரும் மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து, அந்த நாடுகளுக்கான ஆயுத ஏற்றுமதி பல மடங்கு அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
Commons Committees on Arms Export Controls அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களில் வட ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதற்காக பிரிததானிய நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் மேற்படி தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிய ரக ஆயுதங்கள், கண்ணீர்ப் புகைக் குண்டுகள், ஸ்னைப்பர் துப்பாக்கிகள், கவச வாகனங்கள் போன்றவற்றை லிபியா, பஹ்ரைன் போன்ற நாடுகளுக்கு அதிகளவில் விநியோகிப்பதற்கும் அனுமதியளிக்கப்பட்டடிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரபு நாடுகளின் மக்கள் எழுச்சியை முடக்குவதற்கு பிரித்தானியா அரசு ஆயதங்களை ஏற்றுமதி செய்து உதவி புரிவதை Commons Committees on Arms Export Controlsஅமைப்பின் தலைவர் ஸர் ஜோன் ஸ்டன்லி வன்மையாக கண்டித்துள்ளார்.
அரபு நாடுகளுக்கான ஆயுத ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் பிரித்தானியா, அதன் ஆயுதத் தொழில்துறையில் 3 லட்சம் பேருக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கியுள்ளது. 35 பில்லியன் பவுன்களை வருடமொன்றுக்கு இலாபமாக பெறுகிறது.
லிபியத் தலைவர் முஅம்மர் அல் கத்தாபிக்கு மரண தண்டனை வழங்கியதன் மூலம் யூசுப் அல் கர்தாவி அரபு பூமிகளை ஆக்கிரமிக்கும் மேற்குலக சக்திகளின் அடிவருடி என மீண்டும் தன்னை அறிமுகம் செய்துக் கொண்டார்.
கதாபி அந்நாட்டு மக்களை கொன்றதை விட அதிகளவான மக்களை இன்று மேற்குலகின் இராணுவம் கொலை செய்திருக்கிறது. கொலை செய்து வருகிறது. அன்று லிபிய மக்களின் துயரத்திற்காக கண்ணீர் வடித்து கதாபியைச் சுட்டுக் கொள்ளுங்கள் என்று கோஷமிட்ட கர்தாவி இன்று மௌன விரதம் பூண்டிருக்கின்றார்.
இது இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சராக இருந்த ரிசிபி லிவினியை கத்தார் மன்னர் கைக்குலுக்கி வரவேற்கும் காட்சி. கத்தாரை கிலாபத் ஆட்சியாக(?) ஏற்றுக்கொண்டிருக்கும் கர்தாவி, கத்தார் இஸ்ரேல் உறவு விடயத்தில் எந்த பத்வாவையும் வெளியிடவில்லை. இஸ்ரேல் பொருட்களை பகிஷ்கரிக்க பத்வா விடும் இவருக்கு பலஸ்தீன் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் இஸ்ரேலிய அமைச்சரை பகிஷ்கரிக்குமாறு கத்தார் மன்னருக்கு பத்வா வழங்க நெஞ்சில் தீரமில்லை.
உலக முஸ்லிம் அறிஞர்கள் சபையின் தலைவரும், நவீன சிந்தனையாளரும், சமகால இஸ்லாமிய எழுச்சியின் தந்தை என்று அவரது பக்தகோடிகளால் போற்றப்படுகின்ற பிரபல சர்வதேச முப்தி யூசுப் அல் கர்தாவி அவர்கள் கத்தார் நாட்டு மன்னனின் மனைவிக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவிக்கிறார்.