Friday, 8 April 2011

கர்ளாவியின் வார்த்தையை நன்கு விளங்குவதும் - அவரின் வாந்தியை மென்று விழுங்குவதும்

லிபியத் தலைவர் முஅம்மர் அல் கத்தாபிக்கு மரண தண்டனை வழங்கியதன் மூலம் யூசுப் அல் கர்தாவி அரபு பூமிகளை ஆக்கிரமிக்கும் மேற்குலக சக்திகளின் அடிவருடி என மீண்டும் தன்னை அறிமுகம் செய்துக் கொண்டார்.

கதாபி அந்நாட்டு மக்களை கொன்றதை விட அதிகளவான மக்களை இன்று மேற்குலகின் இராணுவம் கொலை செய்திருக்கிறது. கொலை செய்து வருகிறது. அன்று லிபிய மக்களின் துயரத்திற்காக கண்ணீர் வடித்து கதாபியைச் சுட்டுக் கொள்ளுங்கள் என்று கோஷமிட்ட கர்தாவி இன்று மௌன விரதம் பூண்டிருக்கின்றார்.


இது இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சராக இருந்த ரிசிபி லிவினியை கத்தார் மன்னர் கைக்குலுக்கி வரவேற்கும் காட்சி. கத்தாரை கிலாபத் ஆட்சியாக(?) ஏற்றுக்கொண்டிருக்கும் கர்தாவி, கத்தார் இஸ்ரேல் உறவு விடயத்தில் எந்த பத்வாவையும் வெளியிடவில்லை. இஸ்ரேல் பொருட்களை பகிஷ்கரிக்க பத்வா விடும் இவருக்கு பலஸ்தீன் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் இஸ்ரேலிய அமைச்சரை பகிஷ்கரிக்குமாறு கத்தார் மன்னருக்கு பத்வா வழங்க நெஞ்சில் தீரமில்லை.அதன் அர்த்தம், கதாபி போன்றவர்கள் சொந்த நாட்டு மக்களைக் கொல்ல முடியாது. அப்படி கொல்வது ஷரீஆவின் அடிப்படையில் பாரிய குற்றமாகும். அப்படி செய்பவனை சுட்டுக் கொல்ல வேண்டும்.

ஆனால் வெளிநாட்டு இராணுவம் லிபிய மக்களைக் கொன்றால் அதற்குப் பெயர் மீட்பு யுத்தம். இன்று ஈராக்கிலும், ஆப்கானிலும் அது நடக்கின்றது. அப்படி கொலை செய்பவர்களை ஷரீஅத் சட்டம் ஒன்றும் பண்ணாது.


மேற்கத்தைய (சிவப்பு நிற) உடையில் இருக்கும் கத்தார் அரசியை ஒருபோதும் கண்டித்ததில்லை. மாறாக கைகுலுக்கி ஆர்வமூட்டியுள்ளார்.

அவர்களுக்கெதிராக கர்தாவியும் பத்வா வழங்கவும் மாட்டார்.  காரணம் அவர்கள் நவீன உலக ஒழுங்கின் நாயகர்கள். நாகரீகமானவர்கள். அவர்கள் பின்பற்றத் தக்கவர்கள். அரபு பூமியை சொர்க்கபுரியாக மாற்ற அயராது உழைப்பவர்கள்.

அவர்களின் அக்கிரமிப்பை, அரசியலை, கலாசாரத்தை அரபுலகம் அப்படியே பின்பற்றலாம்.  கர்தாவியின் கருத்துப்படி ஷரீஅத்தில் அதற்கு சரியான இடம் இருக்கிறது.

அவர் வாழ்கின்ற கத்தார் நாடும் அந்நாட்டின் அனாச்சாரங்களை அங்கீகரிக்கும் அவரின் போக்கும் இதற்கு சிறந்த சான்றுகளாகும்.கர்தாவியின் ஆசிர்வாதத்தோடு வளரும் ஓ...பாமா(க்கள்)   உறவு

குட்டி அமெரிக்காவாக பரிணாமம் பெற்றுவரும் கத்தார் நாட்டை கர்தாவி ஒருபோதும் கண்டிப்பதில்லை. வித்தியாசமாக விமர்சித்ததில்லை.


கதாபியை சுட்டுக் கொல்லுங்கள்!
கத்தாரைப் பற்றி நில்லுங்கள்!!

இதுதான் கர்தாவியின் நவீன கிலாபா கோட்பாடு

கர்தாவியின் அமெரிக்க சார்பான சமகால அரபுலக நிலைப்பாட்டில் மறைந்து கிடப்பது மற்றுமொரு ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு.

இதுவே உண்மை.


கர்தாவியின் மீது, அவரின் கண்மூடித்தனமான அமெரிக்க சார்பு நிலைப்பாட்டின் மீது விமர்சனங்கள் வரும் போது அவற்றை ஜீரணிக்க முடியாமல் திணறுகின்றன இங்குள்ள கர்தாவிக் குஞ்சுகள்.

அவர் மீதான விமர்சனங்களால் தமது வயிறுகள் அஜீரணமாகி இருப்பதை அவர்களின் ஏடுகள் எடுத்துக் காட்டுகின்றன.

அஜீரணமான அசுத்தத்தை இறக்கிக்கொள்வதற்கு அந்த ஏடுகளின் தாள்களையே இவர்கள் தளமாக பாவிக்கின்றார்கள். தனிமனித வழிபாட்டில் உச்சத்தை அடைந்துள்ள இவர்கள். கா்தாவியை நபியின் அந்தஸ்தில் வைத்து பூஜிக்க பழகிவிட்டார்கள்..

கா்தாவியின் வாயிலிருந்து வந்து விழுபவற்றை வேதவாக்காக ஏற்று வருகிறார்கள்.

கர்ளாவியின் வார்த்தையை நன்கு விளங்கி ஏற்றுக்கொளவதில், விளங்கி  நிராகரிப்பதில் தவறேதுமில்லை என்ற தத்துவத்தை புரியாமல் தடுமாறிப்போயுள்ள இவர்கள்,

அவர் வாயிலிருந்து வந்தது என்பதற்காக அவரின் வாந்தியையும்  மென்று விழுங்குவது தான் வேடிக்கையாக இருக்கிறது.

5 comments:

 1. யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்....

  ReplyDelete
 2. பஹ்ரைன் மன்னனை பாதுகாக்க கர்ளாவி முயற்சி செய்கிறார். அந்த மன்னன் இஸ்ரேலை பாதுகாக்க முயற்சி செய்கிறார். இஸரேலை பயங்கரவாதீ என்று பஹ்ரைனின் எந்த அரச ஊடடகங்களிலும் குறிப்பிடக் கூடாது என்று அறிவுறுத்தியிரப்பதாக விக்கி லிக்ஸ் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இதற்கு சமனான பத்வாவை கர்ளாவியும் வெளியிட இடமிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

  ReplyDelete
 3. அட கன்றாவி!
  யாரைத்தான் நம்புவதோ

  ReplyDelete
 4. //பஹ்ரைன் மன்னனை பாதுகாக்க கர்ளாவி முயற்சி செய்கிறார். அந்த மன்னன் இஸ்ரேலை பாதுகாக்க முயற்சி செய்கிறார்//

  Allahwe....

  ReplyDelete
 5. Holiness Kaleefa's friends yusuf Dollar Qardhawi and His Al jazeera

  ReplyDelete

ஞானசார தேரர் சிறைச்சாலையில் 'ஜம்பர்' அணிவது பிரச்சினையா?

ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தை வைத்து சிங்கள இனவாதிகள் தமது வழமையான இனவாத பிரசாரத்தை முடுக்கி விட்டுபோராட்டங்களை ஆரம்பித்...