Sunday, 26 December 2010

விக்கிலீக்ஸ் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டின் ஹ்ரப்ன்சனுடன் ஒரு பேட்டி

விக்கிலீக்ஸ் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டின் ஹ்ரப்ன்சனுடன் ஒரு பேட்டி
இதுகாறும் மறைக்கப்பட்டிருந்த போர்ச் சித்திரத்தை ஈராக் ஆவணங்கள் கொடுக்கின்றன.
By Jerry White 

அக்டோபர் 22ம் திகதி, தவறுகளை வெளிப்படுத்தும் வலைத்தள அமைப்பாக விக்கிலீக்ஸ் கிட்டத்தட்ட 400,000 அமெரிக்க இராணுவ உள்ளறிக்கைகளை வெளியிட்டது. இவை ஈராக் மக்களுக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் செய்த போர்க்குற்றங்கள் பற்றி கண்டனத்திற்கு ஆளாகின்ற சான்றுகளை அளிக்கின்றன.

வரலாற்றிலேயே இராணுவ இரகசியத் தகவல்களின் மிகப் பெரிய கசிவானஈராக்கியப் போர்க் குறிப்புக்கள்உள்ளடக்கியுள்ள SIGACT அல்லது முக்கியமான நடவடிக்கை அறிக்கைகள் அமெரிக்க இராணுவத்தினர் ஜனவரி 2004 ல் இருந்து டிசம்பர் 2009 வரை பதிவு செய்தவற்றைக் கொண்டுள்ளன. இவை ஈராக்கியப் போர்க் களத்தில் அமெரிக்க இராணுவத் துருப்புக்கள் பார்த்து, கேட்ட விரிவான நிகழ்ச்சிகளை கொண்டுள்ளன, அமெரிக்க அரசாங்கம் மட்டுமே இதுவரை அறிந்திருந்த இரகசிய வரலாறு பற்றி உண்மையான பார்வை இப்பொழுது முதல் முதலாகக் கிடைக்கிறது.என விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

ஆவணங்களில் வெளிப்பட்டுள்ள முக்கிய தகவல்களில் இதுவரை வெளியிடப்படாத 15,000 சாதாரணக் குடிமக்கள் இறப்புக்கள் மற்றும் அமெரிக்க துருப்புக்கள் இராணுவச் சோதனை சாவடிகளில் குறைந்தது 834 பேர்களில் 30 குழந்தைகள் உட்பட 681 பொதுமக்களை கொன்றதும் அடங்கும். இந்த ஆவணங்கள் ஈராக்கிய கையாட்களின் படையும் பொலிசும் கைதிகளைச் சித்திரவதை செய்ததில் அமெரிக்க உடந்தை பற்றியும் விவரிக்கின்றன. பார்க்கவும்: “The WikiLeaks documents and the rape of Iraq ”)

Monday, 20 December 2010

முஸ்லிம்களின் மோசமான எதிரி, முஸ்லிம்களே!

முஸ்லிம்களின் மோசமான எதிரி, முஸ்லிம்களே!

by Dr. Paul Craig Roberts
முஸ்லிம்களோ ஜனத்தொகையில் மிக அதிகம். ஆனால், அவர்களுக் கிடையேயான பிரிவினையோ அதைவிட அதிகம். மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் ஸியா, சுன்னாப் பிளவுகள் இதற்கோர் நல்ல உதாரணம். இவர்கள் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக மேற்கத்திய நாடுகளுக்கு அடிமைப் பட்டுக்கிடப்பதற்குக் காரணமும் இந்தப்பிரிவினைதான். ஏப்ரலில் நடக்கவிருந்து, நிறுத்தப்பட்டுப்போன ‘இஸ்லாமிய ஒருமைப்பாட்டு (ஒலிம்பிக் போன்ற) விளையாட்டுகள்’ மற்றுமொரு உதாரணமாகும். இங்கு காணப்படும் குடாக்கடலுக்கு எந்தப்பெயரை நிரந்தரமாக்குவது என்பதில்தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஈரானியர் ‘பாரசீக வளைகுடா’ என்கிறார்கள், அரேபியர் ‘அராபிய வளைகுடா’ என்கிறார்கள். இதுதான் பிரச்சினை!

இஸ்ரவேலர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து பாலஸ்தீனத்தைக் காப்பாற்ற முடியாதிருப்பதற்குக் காரணமும் முஸ்லிம்களுக்கிடையே காணப்படும் பிரிவினைதான். மேலும், அமெரிக்கா, ஈராக்கை ஆக்கிரமித்திருப்பதும், அனேகமான மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் கைப் பாவைகளை ஆட்சியில் அமர்த்தி அடக்கியாண்டுகொண்டு வருவதும் இதே பிரிவினையின் விளைவுதான்.

Saturday, 18 December 2010

கர்பலா! கண்ணீரின் ஈரத்தால் கனத்த பாரம்!

கர்பலாவின் கதையை கேட்டு
கண்கள் பூத்துபோனதே!
கர்பலாவின் கொடுமை கேட்டு
நெஞ்சு வேர்த்து போனதே!

இமாம் ஹுசைனை
இழந்த நெஞ்சம்
தீயில் வெந்து போனதே!

கர்பலாவின்
கண்ணீர்த் துளியே
நெஞ்சில் பாரமனதே!

கொடுமை நிறைந்த
கர்பலா என்
கல்பில் என்றும் ஈரமே!




(இது இலங்கை அரச தொலைக்காட்சியான ரூபவாஹினி கூட்டுத்தாபன நேத்ரா அலைவரிசையில் ஒளிபரப்பான என்னால் இயற்றப்பட்ட பாடல்)

கர்பலா உன்
ஷஹாதத் காயம்
உம்மத்திற்கு பாரமே!

கர்பலாவின்
கதையை கேட்டு
கண்கள் பூத்துபோனதே!

கர்பலாவின்
கொடுமை கேட்டு
நெஞ்சு வேர்த்து போனதே!
கண்கள் பூத்துப்போனதே!
கல்பில் என்றும் ஈரமே!


தீனை காக்க 
கொடியைத் தாங்கி
உங்கள் கைகள் உயர்ந்ததே!

தீய மனிதர்கள்
செய்த கொடுமையில்
உங்கள் தலையும் வீழ்ந்ததே!

அண்ணல் நபியின்
பேரர் பூவே
களத்தில் கசங்கி
வீழ்வதா?

அந்த துயரை
மறந்து நாங்கள்
மயங்கி இன்னும் வாழ்வதா?

பூக்கள் நொந்து போனதே!
தென்றல் வெந்து போனதே!
அன்பு நபியின்
பேரர் பூவை
தீமை கொண்டு போனதே!

வஹி தந்த கிலாபத்தை (இமாமத்தை)
உலகம் இன்று இழந்ததே!
தலைமை இல்லா
அனாதை போல
உம்மத் இன்று ஆனதே!

றஸுலுல்லாஹ் (ஸல்)
தந்த ஒளியை
ஊதி அணைக்க முடியுமா?
தலைவன் இன்றி
தவிக்கும்  எங்கள்
வாழ்க்கை என்று விடியுமோ?

தீமை ஒழிந்து போகுமே!
தீயில் எரிந்து போகுமே!
உண்மை எழுந்து வாழுமே!
உலகம் தன்னை ஆளுமே!

இமாம் ஹுஸைனை
இழந்த நெஞ்சம்
மீண்டும் எழுந்து ஆளுமே!

கர்பலாவின் கதையை கேட்டு 
கண்கள் பூத்துபோனதே!

கர்பலாவின் கொடுமை கேட்டு 
நெஞ்சு வேர்த்து போனதே!

இமாம் ஹுசைனை 
இழந்து நெஞ்சம்
தீயில் வெந்து போனதே! 

Friday, 17 December 2010

Thursday, 16 December 2010

எச்சரிக்கை! சுதந்திரமாய் சுற்றித் திரிகிறான் கொலைக் குற்றவாளி!


விக்கீலீக்ஸ்  தகவல்களால் அமெரிக்கா திண்டாடி போயிருக்கிறது.

அடாவடித்தன அரசியலை ஏனைய நாடுகள் மீது திணிக்கும் சர்வதேச பொலிஸ்காரனான அமெரிக்கா  இன்று உலக அரங்கில் நிர்வாணமாய் நின்று கொண்டிருக்கிறது.

உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் செயற்படுகின்ற அதன் துாதுவராலயங்கள். உளவுவேலை பார்க்கின்ற அமைப்புகளாய் செயற்பட்டிருக்கின்றன என்ற உண்மை இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது.

விக்கிலிக்ஸ் அண்மையில் வெளியிட்ட தகவல்களில் அனேகமானவை இராஜதந்திர மட்டத்தில் இடம்பெற்ற  வெறும் “சங்கதி”களாய்  இருந்தபோதும்,

2007 ம் ஆண்டு ஈராக்கில் பக்தாத் நகரில் நிராயுதபாணியான மக்கள் மீது ஹெலிகப்டர் மூலம் தொடுக்கப்பட்ட மிருகத்தனமான தாக்குதல் மறைக்க முடியாதது.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்களில் இது ஒன்றே அமெரிக்க இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனத்தை முழு உலகிற்கும்  எடுத்துக்காட்டிய சாட்சியுள்ள ஒரு சிறந்த ஆவணமாகும்.



இது வெறுமனே தாள்களில் பதியப்பட்ட தகவல்களாய் வராமல்,  அச்சொட்டாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட ஒன்றாகவே வெளிவந்தது.  அந்த ஒளிப்பதிவில் சிறுவர்களை சுட்டுக்கொன்று விட்டு கேலியாக சிரித்துக் கொண்டு   “ சிறுவர்களை ஏன் இவர்கள் யுத்தக்களத்திற்கு அழைத்து வருகிறார்கள்?”  என்று கிண்டலடித்து  ஏளனமாய் ஈராக்கிய மக்களை பார்க்கும் அமெரிக்க இராணுவத்தின் மனிதாபிமானமற்ற போக்கை அந்த ஒளிப்பதிவு உலகிற்கே எடுத்துக் காட்டியது.

பக்தாத் கொலைக்களம் தொடர்பாக இந்த ஒளிப்பதிவு வெளிவந்த உடனே மனித உரிமைக்காக குரல் கொடுக்கும் அமெரிக்கா என்ன செய்தது?

குற்றமிழைத்த இராணுவத்தைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு சரியான பாடத்தைப் புகட்டுவது ஒரு நல்ல நாட்டுக்கு அழகு. ஆனால் அமெரிக்கா என்ன செய்தது?  அந்த காணொளியை  விக்கிலீக்ஸுக்கு வழங்கினார் என்ற சந்தேகத்தில் அதன் இராணுவ உளவுப்பிரிவில்  கடமையாற்றிய  பிரட்லி மென்னிங் ( Bradley Manning)   ஐ கைது செய்து சிறையில் தள்ளியுள்ளது.  


அமெரிக்காவின் சட்டத்தைப் பாருங்கள்.  


கொலை செய்வது குற்றமல்ல, கொலையாளியை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுவதுதான் குற்றம். 


அப்பாவி மக்களை ஈவிரக்கமின்றி  கொன்ற கொலையாளிகள் இன்றுவரை தண்டிக்கப்படவில்லை. அந்த க் கொலைக்காட்சிகளை  வெளியே கசிய விட்டார் என்ற குற்றத்திற்காக  பிரட்லி மென்னிங் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறார். 


விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களில் மிகவும் ஆதாரபூர்மான ஆவணம் பக்தாத் கொலை வீடியோ தான்.  அது வெளிவந்ததும் ஏற்பட்ட பரபரப்பு  அண்மையில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆயிரக்கணக்கான வம்புக் கதைகள் அடங்கிய ஆவணங்களோடு அப்படியே அடங்கி விட்டது. 


அந்த போர் குற்றத்திற்காக அமெரிக்காவை தட்டிக் கேட்கும் திராணி இவ்வுலகில் யாரிடமுமில்லை.


அமெரிக்காவின் எதேச்சதிகாரத்தை எதிர்ப்பவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்.  அல்லது பயங்கரவாத முத்திரைக் குத்தப்பட்டு ஓரம்கட்டப்படுகின்றார்கள். 


சர்வதேச காவல் பிரிவான இன்டர்போல் கூட பாலியல் குற்றவாளிகளை பாய்ந்து பிடிப்பதிலுள்ள அவசரம், கொலைக் குற்றவாளிகள் விடயத்தில் அறவே இல்லை. அது  கொலைக் குற்றவாளிகளொடு கொஞ்சிக் குலாவுகிறது.


விக்கிலீக்ஸ் அண்மையில் வெளியிட்ட மற்றும் வெளியிட தயாராக இருக்கும் வம்புக் கதைகளுடன் கூடிய காகித அடுக்குகளுக்குள்  ஆதாரபூர்வமான ஒளிப்பதிவாய் வெளிவந்த பக்தாத் கொலைகள் அமிழ்ந்தே போய் விடும்.


இதைப் பார்க்கும்  போது ஏற்கனவே விக்கிலீக்ஸால் வெளிவந்த ஆதார பூர்வமான போர்க்குற்றத்தை மூடி மறைக்க அமெரிக்காவே விக்கிலீக்ஸுக்கு வேண்டுமென்றே வெறும் கதைகள் அடங்கிய தகவல்களை கசிய விட்டதுவா என்று சந்தேகம் வருகிறது.

Thursday, 9 December 2010

விக்கிலீக்ஸ் - சவுதி அரச குடும்பத்தினரின் அந்தரங்க களியாட்டம்

சவுதி அரச குடும்பத்தினரின் அந்தரங்க களியாட்டம் : விக்கிலீக்ஸ் _

 












சவுதியின் மன்னர் குடும்ப இளம் வாரிசுகள் சவூதி நாட்டின் கடுமையான இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு முரணாக அந்தரங்க களியாட்டங்களில் ஈடுபடுவதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள இரகசிய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெத்தாவிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் ஆவணம் ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது சவூதியின் அரச குடும்பத்தினரின் குறிப்பாக இளம் வாரிசுகளின் களியாட்டங்களில் விபசாரிகள் மற்றும் மதுவகைகள், போதைப்பொருள் முக்கிய அம்சமாக உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அல்-துனயான் அரச குடும்ப உறுப்பினர் ஒருவர் கடந்த வருடம் நடத்திய களியாட்டம் ஒன்றில் சவூதியின் முற்றுமுழுதான இஸ்லாமிய சட்டதிட்டங்கள் மீறப்பட்டதாகவும் மதுபானம் விநியோகப்படுத்தப்பட்டதுடன் விலைமாதர்களும் களியாட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொகெயின் மற்றும் அசீஸ் வகை போதைபொருட்களும் இங்கு பரிமாறப்பட்டமை தொடர்பில் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர்கள் அச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

இவை அனைத்தும் இரகசியமாகவே இடம்பெற்றதாகவும், சுமார் 150 இற்கும் மேற்பட்ட 20 - 30 வயதுக்கிடைப்பட்ட ஆண் மற்றும் பெண்கள் இதில் கலந்து கொண்டதாகவும் இவர்களைத் தடுப்பதற்கு அந்நாட்டு பொலிஸார் கூட அஞ்சியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இத்தகைய களியாட்டங்கள் சவூதி நாட்டின் இளவரசர்களிடையே தற்போது சகஜம் எனவும் சிலரின் வீடுகளுக்குள்ளேயே மதுபானசாலை, டிஸ்கோ ஆகியவை உள்ளதாகவும் அவ் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விக்கிலீக்ஸினால் வெளியிடப்பட்ட அவ் ஆவணத்தினை இங்கு காணலாம் http://213.251.145.96/cable/2009/11/09JEDDAH443.html

நன்றி   வீரகேசரி இணையம் 12/9/2010 12:42:13 PM

Wednesday, 1 December 2010

விக்கிலீக்ஸ் நிறுவனரை தேடுகிறது இன்டர்போல்!


விக்கிலீக்ஸ் நிறுவனரை தேடுகிறது  இன்டர்போல்!

அமெரிக்க அரசாங்கத்தின் இரகசிய தகவல்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் விக்கிலீக் இணையத்தின் நிறுவனர் ஜூலியன் அச்செஞ்சியை  கைது செய்யுமாறு சுவீடன் நீதிமன்றம்   ஒன்று சர்வதேச காவல்துறையான  இன்டர்போலுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இரண்டு பெண்கள் மீது பாலியல் குற்றம் புரிந்ததாக இவர்மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

அண்மைக்காலமாக விக்கிலீக்ஸ் இணையதளம்  அமெரிக்க வெளியுறவுக் கொள்கையையும், உலகின் மீது அது திணிக்க முயலும் ஏகாதிபத்திய வெறித்தனத்தையும்,  அந்த வெறித்தனத்தால்  உலகிற்கு ஏற்பட்ட விளைவுகளையும்  வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.

தனது சுரண்டல் அரசியலுக்காக  பல உயிர்களை அமெரிக்கா குடித்திருக்கிறது.  குறிப்பாக  ஆப்கான், ஈராக் போன்ற முஸ்லிம் நாடுகளை அது துவம்சம் செய்து வருகிறது. ஏகாதிபத்திய சக்திகளுக்கு துணை போகும்  அரபு நாடுகள் தனது இனத்தையே கொள்ளும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்தாசை வழங்கியிருப்பதை, வழங்கவிருப்பதை விக்கிலீக்ஸ் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.

எது எப்படியிருப்பினும் பாலியல் குற்றத்திற்காக   விக்கிலீக்ஸ் இணையத்தின் நிறுவனர் ஜூலியன் அச்செஞ்சியை  சட்டத்தின் முன் நிறுத்த இன்டர்போல் தயாராக இருக்கிறது,

அமெரிக்கா இராணுவம் இராக்கில் நிகழ்த்திவரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகளை விசாரணை செய்வதற்கு எந்த நீதிமன்றமும் இதுவரை இன்டர்போலிடம் வேண்டுகோள் விடுக்கவில்லபோலும்.

எனவே விக்கிலீக்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களை ஆராய்ந்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த இன்டர்போல் எப்போது முன் வரும் என்ற கேள்வி தான் இப்போது எல்லோர் மனங்களிலும் எழுகிறது.

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...