முஸ்லிம்களின் மோசமான எதிரி, முஸ்லிம்களே!
by Dr. Paul Craig Roberts
முஸ்லிம்களோ ஜனத்தொகையில் மிக அதிகம். ஆனால், அவர்களுக் கிடையேயான பிரிவினையோ அதைவிட அதிகம். மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் ஸியா, சுன்னாப் பிளவுகள் இதற்கோர் நல்ல உதாரணம். இவர்கள் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக மேற்கத்திய நாடுகளுக்கு அடிமைப் பட்டுக்கிடப்பதற்குக் காரணமும் இந்தப்பிரிவினைதான். ஏப்ரலில் நடக்கவிருந்து, நிறுத்தப்பட்டுப்போன ‘இஸ்லாமிய ஒருமைப்பாட்டு (ஒலிம்பிக் போன்ற) விளையாட்டுகள்’ மற்றுமொரு உதாரணமாகும். இங்கு காணப்படும் குடாக்கடலுக்கு எந்தப்பெயரை நிரந்தரமாக்குவது என்பதில்தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஈரானியர் ‘பாரசீக வளைகுடா’ என்கிறார்கள், அரேபியர் ‘அராபிய வளைகுடா’ என்கிறார்கள். இதுதான் பிரச்சினை!
இஸ்ரவேலர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து பாலஸ்தீனத்தைக் காப்பாற்ற முடியாதிருப்பதற்குக் காரணமும் முஸ்லிம்களுக்கிடையே காணப்படும் பிரிவினைதான். மேலும், அமெரிக்கா, ஈராக்கை ஆக்கிரமித்திருப்பதும், அனேகமான மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் கைப் பாவைகளை ஆட்சியில் அமர்த்தி அடக்கியாண்டுகொண்டு வருவதும் இதே பிரிவினையின் விளைவுதான்.