எரிந்து விழுந்து, சாம்பலில் இருந்து எழுந்து வந்து சரித்திரம் படைக்க முடியும் என்பதற்
கு ஜப்பான் ஒரு சிறந்த சான்று.
அச்சுக்கலை தொடா்பான ஒரு கண்காட்சிக்கு இந்தியா சென்றிருந்த போது ஹிரோஷிமாவில் தயாரிக்கப்பட்ட ஒரு அச்சு இயந்திரத்தைக் கண்டு நான் அதிா்ந்து போனேன்.
கணினி மூலம் இடும் கட்டளையை அது நோ்த்தியாகவும் அழகாகவும் நிறைவேற்றிக் கொண்டிருந்தது.
“மேட் இன் ஹிரோஷிமா - ஜப்பான்” என்று அந்த இயந்திரத்தை தயாரித்த ஜப்பான் நாட்டில் அந்த நகரத்தின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது பாா்த்து நான் பூரிப்படைந்தேன். சகல துறைகளிலும் ஜப்பான் முன்னணியில் நிற்கிறது.
வெந்துபோன ஒரு நாடு தொழில் நுட்பத் துறையில் உலகிற்கே உந்து சக்தியாய் இன்று மாறியிருக்கிறது.
நவீன தொழில் நுட்பத்தின் உச்சத்தைத் தொட்டிருக்கும் ஜப்பானின் ஹிரோஷிமா என்ற அந்த பெயரைப்பார்த்த போது அணு குண்டு விழுந்த ஒரு நகரம் அதி நவீன தொழில்நுட்பத்தில் இப்படி எழுந்திருக்கிறதே என நினைத்து ஆச்சாியத்தில் நான் சிலிா்த்துப் போனேன்.
ஜப்பானிர்கள் தமக்கு வந்த அழிவைக் கூட ஆசிர்வாதமாக மாற்றிக்கொண்ட வல்லவா்கள் என்று நான் படித்திருக்கிறேன்.
அவா்கள் அணு குண்டால் அழிந்த ஹிரோஷிமாவையும் நாகசாக்கியையும் “அழிவு முகமூடி அணிந்து வந்த ஆசிா்வாதம்” என்று குறித்து வைத்திருப்பதாய் நான் கேள்விப்பட்டிருக்கின்றேன்.
1945 ஆண்டின் ஆகஸ்ட் 6ம் மற்றும் 9ம் திகதிகளை உலக வரலாறு மிக முக்கியமான தினமாக .குறித்து வைத்திருக்கிறது.
ஆம்! அந்த தினங்கள் ஜப்பானின் ஹிரோஷிமா நாகசாக்கி போன்ற நகரங்களை அமெரிக்கா நாசகார அணு குண்டால் தாக்கி அந்நாட்டை சாம்பல் மேடாக்கிய தினங்கள்.
இரண்டாம் உலகப் போரில் ஜப்பானும் அமொிக்காவும் நேரடியாகவே மோதிக்கொண்டன.
1941 டிசம்பா் மாதம் 7ம் திகதி அமெரிக்காவின் பெர்ல் துறைமுகத்தின் Pearl Harbour மீது ஜப்பான் தாக்குதல் மேற்கொண்டது.
அதற்குப் பதிலாக அமெரிக்கா ஜப்பானை இலக்கு வைத்து தாக்கியது.
1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 06ம் திகதி சின்ன பையன் (Little Boy) என்ற பெயரில் அமெரிக்கா தயாரித்து வைத்திருந்த நாசகார அணுகுண்டை ஹிரோஷிமா நகர் மீது வீசியது.
மூன்று தினங்களின் பின்னர் பருத்த மனிதன் (Fat Man) என்ற பெயரில் தயாாிக்கப்பட்டிருந்த அணு குண்டை நாகசாக்கி நகர் மீது வீசியது.
குண்டுவீச்சு நிகழ்ந்த நாளில் இறந்தோரில் 60% பேர் தீக்காயங்களாலும், 30% பேர் கட்டிட இடிபாடுகளினாலும், 10% பிற காரணங்களாலும் கொல்லப்பட்டனர்.
குண்டுவீச்சின் பிற்பட்ட காலங்களில் ஏராளமான மக்கள் தீக்காயங்களின் விளைவாலும், கதிர்வீச்சு நோயாலும், வேறு காயங்களால் நோய் தீவிரமாகியும் இறந்தனர்.இந்த அணுகுண்டு சுமார் மூன்று இலட்சம் மக்களின் உயிா்களை காவுகொண்டிருக்கிறது.
மனித குல வரலாற்றில் மறக்க முடியாத அழிவுகளையும், தளும்புகளையும் அமெரிக்காவின் அணுகுண்டு உலகிற்கு அளித்து இருக்கிறது.
அழிவு என்ற சொல்லுக்கும் அமெரிக்கா என்ற நாட்டுக்கும் உள்ள நெருங்கிய உறவை அன்றைய ஹிரோஷிமா நாகசாக்கி மட்டுமல்ல இன்னும் எத்தனையோ நாடுகள் இன்றும் கூட பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
No comments:
Post a Comment