ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தை வைத்து சிங்கள இனவாதிகள் தமது வழமையான இனவாத பிரசாரத்தை முடுக்கி விட்டுபோராட்டங்களை ஆரம்பித்திருக்கினறனர்.
எந்த சிறுபான்மை இனங்களுடனும் தொடர்பு படாத குறித்த பிரச்சினை நீதிமன்றத்திற்குள் இடம்பெற்ற ஒரு சம்பவத்தை மையமாக வைத்து உருவானது.
ஊடகவியலாளர் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவிற்கு அச்சுறுத்தல் விட்டது தொடர்பாக பொலிஸார் தொடர்ந்த வழக்கிலேயே ஞானசார தேரருக்கு இந்த சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தை கையிலெடுத்த பேரினவாத சக்திகள் நாட்டைக் காப்பதற்கு குரல் கொடுத்த ஒரு பௌத்த பிக்குவை அநியாயமாக சிறை வைத்திருப்பது போன்றதொரு பிம்பத்தை கட்டமைத்து வருவதுடன். கைதிகள் அணியும் ஆடையை பௌத்த பிக்குகளுக்கு அணிவதற்கு கொடுக்கக் கூடாது என்றும் கோஷமிட்டு வருகின்றன.
அதுமட்டுமல்லாமல், அப்பாவிகளான பௌத்த பிக்குமார்களை அரசாங்கம் வேட்டையாடும் ஒரு சிங்கள விரோத நிகழ்ச்சி நிரலை செயற்படுத்தி வருவதாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகின்றன.
இலங்கை வரலாற்றில் முதலாவது சிறைக்கு சென்ற பௌத்த பிக்கு ஞானசார தேரர்தான் என்பதுபோல பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன.
இலங்கை வரலாற்றில் நிகழ்ந்த ஒரு பிரபலமான சம்பவத்தை இங்கு நினைவூட்ட வேண்டும்.
அது 1959ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் திகதி இடம்பெற்ற ஒரு முக்கிய படுகொலை.
அன்றைய பிரதமர் எஸ்.டபலியூ.ஆர். டி. பண்டாரநாயக்க அவர்கள் கொலை செய்யப்பட்டார். இக்கொலைக் குற்றத்திற்கு
தண்டனை பெற்றவர்களில் இருவர் பௌத்த பிக்குகளாவர். இதில் தல்துவே சோமாராம ஹிமிக்கு 1962ம் ஆண்டு ஜுலை மாதம் 06ம் திகதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
தண்டனை பெற்றவர்களில் இருவர் பௌத்த பிக்குகளாவர். இதில் தல்துவே சோமாராம ஹிமிக்கு 1962ம் ஆண்டு ஜுலை மாதம் 06ம் திகதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இவரோடு கைது செய்யப்பட்டு ஆயுட்கால சிறைத்தண்டனையை அனுபவித்த களனிய ரஜமகா விகாராதிபதி மாபிட்டிகம புத்தரக்கித்த ஹிமி தனது தண்டனைக்காலத்திலேயே சிறையில் மரணமடைந்தார்.
இவர்கள் கூட தண்டனைக் காலங்களில் தமது காவி உடையை கலைந்து சிறைச்சாலையின் உடைகளையே அணிந்துள்ளனர். அது தவிர பல குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்படும் பௌத்த பிக்குகள் கூட சிறைச்சாலையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே நடாத்தப்படுகின்றனர்.
இந்த உண்மைகளை முற்றாக மறைத்து விட்டே இந்த இனவாத சக்திகள் கோஷமிட்டு இனவாதத்தை கிளப்பி வருகின்றன.
No comments:
Post a Comment