அனித்தா' என்ற பெயரில் சிங்கள வாராந்த பத்திரிகை ஒன்று வெளிவரவிருக்கிறது. ராவய வாராந்த பத்திரிகையில் கடமையாற்றிய சிறந்த ஐந்து ஊடகவியலாளர்கள்; அடங்கிய ஆசிரிய பீடத்தைக் கொண்டுள்ள இந்த வாராந்த பத்திரிகை எதிர்வரும் 29ம் திகதி முதல் வெளிவரவுள்ளது.
'அனித்தா' பத்திரிகையின் பிரதம ஆசிரியராக லசன்த றுகுணகே பொறுப்பேற்றிருக்கிறார். அண்மையில் ராஜபக்ஷவின் ஊழல் தொடர்பாக வெளியிட்ட இவரது நூல் மிகவும் பிரசித்தமானது. லசன்த றுகுணகே துப்பறிந்து அரசியல் கட்டுரைகளை வழங்குவதில் மிகவும் திறமையானவர். பல விருதுகளை பெற்றவர். இவரோடு ராவய பத்திரிகையில் நீண்ட காலம் சேவையாற்றிய கே.டப்லியூ. ஜனரஞ்சன, கே.சன்ஜீவ, தரிந்து உடுவரகெதர, ரேகா நிலுக்ஷி ஹேரத் ஆகியோரும் இணைந்துள்ளனர்.
'அனித்தா' பத்திரிகையை வெளியிடும் நிறுவனத்தின் பணிப்பாளர்களாக சட்டத்தரணி லால் விஜயநாயக்க, பேராசிரியர் ஜயதேவ உயன்கொட, பேராசிரியர் சரத் விஜேசூரிய, திரு காமினி வியன்கொட, சட்டத்தரணி உபுல் குமரப்பெரும, வை. ரஞ்சித் செனரத் பத்திரன ஆகியோர் பதவி வகிக்கின்றனர்.
No comments:
Post a Comment