இதுவரை உலமா சபை எந்த ஆர்ப்பாட்டத்திற்கும் தடையாக இருந்தது இல்லை யாராவது அப்படி ஆர்ப்பாட்டங்கள் செய்தால் அதற்கு தாம் அதரவு தெரிவிப்போம்!, இக்கூட்டத்தில் நீங்கள் எடுக்கக் கூடிய முடிவை சந்தோஷமாக ஆதரிப்போம்! அதற்காக பிரார்த்தி்ப்போம்!ஆதரவு -இது 24ம் திகதி அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபை தலைவர் றிஸ்வி முப்தி வழங்கிய ஆதரவு)
பேச்சின் ஒலி வடிவம்
எதிர்ப்பு - இது 27ம் திகதி தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதலை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது ஒரு சூழ்ச்சி என்று அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபை யும் முஸ்லிம் கவுன்ஸிலும் இணைந்து விடுத்த முரண்பாடான முஸ்லிம்களைக் காட்டிக் கொடுக்கும் அறிவித்தல்
முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த எதிர்ப்புப் பேரணி பௌத்த இனவாத சக்திகளினதும், பேரினவாதத்திற்கு துணைபோகின்ற அரசியல் மற்றும் இஸ்லாமிய அறிவு மேதைகளினதும் போலி பிரசார பித்தலாட்டங்களையும் முறியடித்து மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
40 வருடங்கள் பழமயான பள்ளிவாசலை பொலிஸ் பாதுகாப்புப் படை புடைசூழ தாக்கிய இனவாதிகள், இப்பள்ளிவாசல் சட்டவிரோக மிக அண்மையில் கட்டப்பட்ட ஒன்று என்று ஊடகங்களின் மூலம் கதைவிட ஆரம்பித்தனர். இலங்கையின் அனைத்து ஊடகங்களும் சம்பவம் இடம்பெற்ற 20ம் திகதி எவ்வித செய்திகளையும் வெளியிடவில்லை.
இந்த அநீதியைப் பற்றி பேசாத ஊடகங்கள் முஸ்லிம்கள் சட்டவிரோதமாக ஒரு கட்டடத்தைக் கட்டி வீணாக சிங்கள மக்களை ஆத்திரப்பட வைத்திருக்கின்றார்கள் என்ற தொனிப்பொருளில் கதையளக்கத் தொடங்கின. பள்ளிவாசலைத் தாக்கிய குற்றவாளிகளை மறைத்து, அநீதியிழைக்கப்பட்ட முஸ்லிம் தரப்பினரை குற்றவாளிகளாக காட்டிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், இதற்கு எதிராக அணிதிரண்டு ஆர்ப்பாட்டம் செய்து இந்த அநீதியை உலகிற்கு உரத்துக் கூற வேண்டும் கருத்து பரவலாக எழுந்தது. 24.04.2012 அன்று அதற்கான கலந்துரையடல் ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டது.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பாக கலந்துரையாடல் கொழும்பு, மாளிகாவத்தை வை.எம்.எம்.ஏ மண்டபத்தில் இடம்பெற்றது.
பல இயக்கங்களின் .பிரதிநிதிகளும், அரசியல்வாதிகளும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் றிஸ்வி முப்தியும் மற்றும் பல சமூக ஆர்வலர்களும் இதில் கலந்து கொண்டனர்.
இதில் உரையாற்றிய ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் றிஸ்வி முப்தி அவர்கள் தம்புள்ளை மஸ்ஜித் தாக்குதல் தொடர்பான விடயங்களை ஆரம்பம் முதல் விளக்கிக் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்வதற்காக கூட்டப்பட்டிருக்கின்ற ஆலோசனைக் கூட்டத்தில், இந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கைக்கு ஆதரித்து கருத்துத் தெரிவித்த அவர், ஆர்ப்பாட்டம் தொடர்பாக உலமா சபையின் கருத்தை தெளிவு படுத்தியதுடன், உலமா சபை ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளாது என்றும் கூறினார்.
இதுவரை உலமா சபை எந்த ஆர்ப்பாட்டத்திற்கும் தடையாக இருந்தது இல்லையென்றும் யாராவது அப்படி ஆர்ப்பாட்டங்கள் செய்தால் அதற்கு தாம் அதரவு தெரிவிப்பதாகவும், இக்கூட்டத்தில் நீங்கள் எடுக்கக் கூடிய முடிவை சந்தோஷமாக ஆதரிப்பதாகவும் அதற்காக பிரார்த்தி்ப்பதாகவும் கூறினார்.
அவர் பேசிய ஒலி நாடாவை இங்கு இணைத்திருக்கின்றேன்.
கூட்டத்தில் அவர் ஆற்றிய உரைக்கு அளித்த வாக்குறுதிக்கு நேர் எதிராக அவர் நடந்து கொண்டிருக்கின்றார்.
மிகவும் பயபக்தியோடும், சமூகம் சார்ந்த கவலையோடும் கதைப்பதாக காட்டிக்கொண்ட றிஸ்வி முப்தி, தான் கொடுத்த வாக்குறுதியைமூன்றே மூன்று நாளில் காற்றில் பறக்க விட்டார்.
திடீரென தான் வழங்கிய வாக்குதிகளை மறந்து போன றிஸ்வி முப்தி, சிங்கள மக்களிற்கு எதிராக இந்த நாட்டு முஸ்லிம்கள் ஏதோ பயங்கரவாத நடவடிக்கை ஒன்றில் ஈடுபடப்போகின்றார்கள் என்ற தோரணையில் உலமா சபையின் மெளலவி மார்களை வைத்து ஆர்ப்பாட்டத்திற்கு எதிரான மிக மோசமான பிரசாரங்களை முடுக்கி விட்டார்.
ஒரு பக்கம் அரசாங்கத்தில் அங்கத்துவம் பெற்றிருக்கின்ற ஜாதிக ஹெல உருமய என்ற பௌத்த தீவிரவாத கட்சியும், மறு புறம் ஜம்இய்யத்துல் உலமாவும் ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக சம அளவில் மோசமான பிரசாரத்தை மேற்கொண்டன.
தம்புள்ளையில் அல்லாஹ்வின் இல்லத்திற்கு ஏற்பட்ட இந்த அநீதிக்காக குரல் கொடுக்க முயற்சிப்பவர்களை காட்டுமிராண்டிகளாக சித்தரித்து காட்டிக்கொடுக்கின்ற வேலையை அரசாங்க வானொலியின் முஸ்லிம் சேவையைப் பாவித்து உலமா சபை மௌலவிமார்கள் கச்சிதமாக செய்தனர்.
மறுபுறம் அரச மற்றும் தனியார் சிங்கள ஊடகங்கள் அப்பாவி முஸ்லிம்களை குற்றவாளிகளாக காட்டிக்கொண்டிருந்தது.
எது எப்படியிருப்பினும் இனவாத சக்திகளோடு கைகோர்த்து இந்த அரச ஆதரவு இஸ்லாமிய(?) சக்திகள் செய்த போலிப் பிரசாரங்களையும், அச்சுறுத்தல்களையும் முறியடித்து ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
அசம்பாவிதங்கள் அற்ற ஒரு சிறந்த எதிர்ப்பு நடவடிக்கையாக அது அமைந்தது.
அது மட்டுமல்லாமல் இந்த அரச ஆதரவுசக்திகளின் வேண்டுகோளை நிராகரித்து விட்டு நாட்டின் பல பாகங்களிலிலும் முஸ்லிம்கள் ஹர்த்தாலை அனுஷ்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அல்லாஹ்வின் இல்லத்திற்கு ஏற்பட்ட அபகீர்த்திக்காக, அநீதிக்காக குரல் கொடுத்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்!
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் என்பது ஜனநாயகம் அங்கீகரித்துள்ள ஒரு வழிமுறையாகும். இனவாதிகளின் பயங்கரவாத செயற்பாட்டிற்கு முஸ்லிம்கள் ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
அல்லாஹ்வின் இல்லத்திற்காக குரல் கொடுப்பதை ஒரு சூழ்ச்சியாக சித்தரித்து பொதுப்பணம் பல லட்சம் ரூபாய்களை 27ம் திகதி வெளிவந்த அனைத்து பத்திரிகைகளிலும்அறிவித்தல் போட்டு விளம்பரத்திற்காக கொட்டித் தீர்த்தருக்கிறது உலமா சபை.
சிங்கள இனவாதிகள் பள்ளிவாசலை தாக்கியதை கண்டித்து இதுவரை எவ்வித அறிக்கையையும் வெளியிடாத உலமா சபை ஆர்ப்பாட்டம் செய்யும் முஸ்லிம்களை சூழ்ச்சிக்காரர்கள் என்று சொல்வதற்கு பல லட்சம் ரூபாய்களை நாசமாக்கியிருக்கிறது.