Saturday, 15 May 2010

இஸ்ரேலின் பாதையில்..... இலங்கை?

இஸ்ரேலின் பாதையில் ... இலங்கை?


பலஸ்தீன் மேற்குக்கரையில் சட்டவிரோதக் குடியிருப்புகள் என்ற போர்வையில் இஸ்ரேலிய அரசாங்கத்தினால் முஸ்லிம்களின் வீடுகள் புல்டோசர்கள் கொண்டு தகர்க்கப்படுவதை ஊடகங்களில் நாங்கள் பார்த்திருக்கின்றோம்.

பலஸ்தீனில்


அண்மையில் இலங்கையில் அரங்கேறிவரும் அரச அட்டசாகங்களைப் பார்க்கும் போது மற்றுமொரு இஸ்ரேலாக இது மாறி விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

கொழும்பு கொம்பனித்தெரு மிவ்ஸ் வீதியில் பல ஆண்டுகளாக வாழ்ந்த மக்கள் அந்த இடத்திலிருந்து பலாத்கதரமாக பாதுகாப்பு தரப்பினரால் அடித்து உதைத்து வீடுகளிலிருந்து வெளியே இழுத்து வீசப்பட்டு அவர்களின் கண் முன்னாலேயே அவர்களின் வீடுகளை புல்டோசர்களை வைத்து தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டது.

இலங்கையில்




பாதுகாப்பு,  பொலிஸ் படைகளின் உதவியினால் நடாத்தப் பட்ட இந்த வேட்டையை எந்த ஊடகமும் படமெடுக்க அனுமதிக்கப்படவில்லை.

கடந்த காலங்களில் தேர்தல்களின் போது கொழும்பு முஸ்லிம்கள் ஆளும் மஹிந்த அரசாங்கத்திற்கு எதிராக தமது வாக்குகளை அளித்து வந்திருக்கின்றனர். தமது தேர்தல் பிரசார காலங்களில் ஆளும் தரப்பினரும், அவர்களோடு ஒட்டிக் கொண்டிருக்கும்  முஸ்லிம்களும் இதை அடிக்கடி பல இடங்களில் குற்றச்சாட்டாய் முன் வைத்தும் இருந்தனர்.

இன்று முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் இன்னல்களுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று பலர் நம்புகின்றனர்.


அண்மைய இலங்கையின் இந்த நகர்விற்கு பின்னணியில் முஸ்லிம் விரோத வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் செயற்படுகிறதா  என்ற அச்சமும்  ஏற்பட்டு வருகிறது.

இதற்குச் சான்றாக கடந்த 12ம் திகதி இலங்கையில் இடம்பெற்ற இஸ்ரேல் நாட்டின் 62வது சுதந்திர தின விழாவை குறிப்பிடலாம். காலி முகத்திடலிலுள்ள கோல் பேஸ் ஹோட்டலில் இந்த விழா இடம்பெற்றது.  இஸ்ரேல் நாடு பகிரங்கமாக இலங்கையில் கொண்டாடிய ஒரு விழாவாக இதனை சுட்டிக்காட்ட முடியும்.
2010 மே மாதம் 12ம் திகதி கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்ற இஸ்ரேலிய சுதந்திர தின விழாவிற்காக  மேற்படி ஹோட்டல் வாசலில் ஏற்றப்பட்டிருந்த இஸ்ரேலிய தேசிய கொடி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியில் இந்த இஸ்ரேலிய சுதந்திர விழா இலங்கையில் அவரது ஜனாதிபதி அலுவலகத்திற்கு மிக அண்மையில் நடைபெற்றிருப்பது ஆச்சரியத்தை கொடுக்கிறது.

காரணம் பலஸ்தீன் மக்களின் விடுதலைப் போராட்டத்தோடு மிகவும் நெருக்கமானவர் என்று ஜனாதிபதி தன்னை அடிக்கடி சொல்லி வருபவர்.

பலஸ்தீன் மேற்குக் கரையில் உள்ள ஒரு வீதிக்கு மஹிந்த ராஜபக்ஷ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷ  இலங்கை பலஸ்தீன் நட்புறவு கமிட்டியில் பல ஆண்டுகளாக தலைமை வகித்தவர். இத்தகைய பின்னணிகளுக்கு மத்தியில் மஹிந்த அரசாங்கத்தின் அண்மைய நகர்வுகள் பலருக்கு சந்தேகத்தை உருவாக்கி வருகிறது.

Wednesday, 12 May 2010

சட்டவிரோத இஸ்ரேல் நாடு இலங்கையில் கொழும்பில் கோல் பேஸ் ஹோட்டலில் தனது 62 வது சுதந்திர தினத்தை (12.05.2010) இன்று கொண்டாடுகிறது .


சட்டவிரோத இஸ்ரேல் நாடு இலங்கையில் கொழும்பில்  கோல் பேஸ் ஹோட்டலில் தனது  62 வது சுதந்திர தினத்தை (12.05.2010)  இன்று  கொண்டாடுகிறது .

இலங்கை  பாலஸ்தீன் மக்களோடு , அந்த மக்களின் போராட்டத்தோடு  மிகவும் நெருங்கிய உறவை வைத்திருக்கும் ஒரு நாடாகும் .  இலங்கை ஜனாதிபதி திரு. மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பலஸ்தீன் மக்களின் போராட்டத்தோடு மிகவும் நெருக்கமானவர். இதற்கு சான்றாக பலஸ்தீன் மேற்குக் கரையில் உள்ள ஒரு வீதிக்கு மஹிந்த ராஜபக்ஷ வீதி என்று கூட பெயரிடப்பட்டிருக்கிறது.

ஆனால் இன்று ( 12.05.2010 )இலங்கையில் இஸ்ரேலின் சுதந்திர தின வைபவம் இடம்பெறுவது இவை அனைத்தையும்  கேள்விக் குறியாக்கி இருக்கிறது.

பாலஸ்தீன் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட  அந்த மக்களின் தாயக பூமியை சுதந்திர நாடாக அறிவிக்கும் உரிமை இந்த கொலைக்கார  நாட்டுக்கு அறவே இல்லை.

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...