Saturday 17 November 2012

வீடியோ - இஸ்ரேலின் காஸா மீதான தாக்குதலைக் கண்டித்து உலகளாவிய எதிர்ப்பலைகள்!













காணொளி- இஸ்ரேலில் இடியாய் இறங்கும் அல் பஜ்ர்

2வது தடவையாக அல்பஜ்ர் டெல்அவிவை தாக்கியது


இங்கு நீங்கள் காண்பது இஸ்ரேலிய உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அவி டிச்டர் ஹமாஸின் ஏவுகணைக்குப் பயந்து தனது அலுவலகத்திலிருந்து விரண்டு ஓடும் காட்சி

காஸாவிலுள்ள ஹமாஸின் அமைச்சரவைக் கட்டிடம் தாக்கப்பட்டதையடுத்து, ஹமாஸ் இயக்கம் இரண்டாவது தடவையாக இஸ்ரேலிய தலைநகர் டெல்அவிவை நோக்கி அல் பஜ்ர் ஏவுகணையை அனுப்பியிருக்கிறது.

அல் பஜ்ர் 5 ஏவுகணை டெல்அவிவிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அண்மையில் விழுந்து வெடித்துள்ளதாக ஊர்ஜிதமான செய்திகள் வெளியாகி யுள்ளன.

ஆகாயத்தில் சிதறிய இஸ்ரேலிய F16 விமானம் - கஸ்ஸாம் படையணி சாதனை!


பலஸ்தீன் போராளிகளின் இராணுவ அமைப்பான் அல் கஸ்ஸாம் படையணி இஸ்ரேலிய போர் விமானமான  F16 ஐ  வீழ்த்தியிருக்கிறது.

                                                                  F16 ரக விமானம்

காஸாவின் வட பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றதாக Middle East Monitor இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஹமாஸ் இயக்கத்தால் ஊர்ஜிதமாகியிருக்கும் இந்தச் செய்தி, முதல் தடவையாக இஸ்ரேலிய விமானத்தை தாக்கும் வல்லமை பலஸ்தீன  போராளிகளிடம் இருப்பது ஊர்ஜிதமாகியிருக்கிறது.

போராளிகள் மீது தாக்குதல் நடாத்துவதாகக் கூறிக்கொண்டு பலஸ்தீன் சிவிலியன் நிலைகள் மீது தாக்குதல் தொடுத்து சிறுவர்களையும், பெண்களையும் கொடுரமாக கொலை செய்து விட்டு ஓடிமறையும் இஸ்ரேலிய விமானங்கள் இனி தப்பிப் போக முடியாது.

பொறுத்திருந்து பார்ப்போம்.

Friday 16 November 2012

வீடியோ - அல் பஜ்ரும் அதிரும் இஸ்ரேலும்




தொட்டு விடும் தூரத்தில் டெல்அவிவ்


தொட்டு விடும் தூரத்தில்
டெல்அவிவ்
ஆவலாய் பறக்கிறது “ அல் பஜ்ர் 5 ”

இஸ்ரேலின் ஆளில்லா விமானத்தை ஹமாஸ் தரையிறக்கியது.


பலஸ்தீன போராட்ட இயக்கமான ஹமாஸின்  இராணுவ பிரிவு இஸ்ஸத்தீன்  கஸ்ஸாம் படையணி காசா மீது ஏவப்பட்ட இஸ்ரேலின் ஆளில்லா உளவு விமானத்தை வெற்றிகரமாக தரை இறக்கியிருக்கிறது.

ஹமாஸ் இயக்கம் இது தொடர்பான வீடியோ ஒன்றை ஊடகங்களுக்கு வழங்கியிருப்பதாகவும் , அந்த இஸ்ரேலிய உளவு விமானம்  "ஸ்கைலைட் பி" (“Skylight B”) என்ற பெயரிடப்பட்ட ஒன்று எனவும் அறிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலின் உளவு விமானத்தை தம் கைவசம் சிக்க வைப்பதற்கு ஹமாஸ் இயக்கம் பெற்றிருக்கின்ற தொழில் நுட்ப வளர்ச்சி இஸ்ரேலுக்கு பெரும் சவாலாக அமைந்திருக்கிறது.

பலஸ்தீன் போராட்ட இயக்கங்கள் கடந்த வியாழக்கிழமை இஸ்ரேலின் தலை நகர் டெல்அவிவை நோக்கி அனுப்பிய ஈரானிய தயாரிப்பான அல் பஜ்ர் 5 என்ற ஏவுகணை,  இஸ்ரேலின் தலைநகரம் பலஸ்தீன் போராளிகளால் தொட்டு விடும் தூரத்தில் தான் இருக்கிறது என்ற அபாய சமிக்கையை  இஸ்ரேலுக்கு உணர்த்தியிருக்கிறது.

1991ம் ஆண்டுக்குப்பிறகு முதல் தடவையாக இஸ்ரேலின் தலைநகரம் இப்போது  தாக்குதலுக்கு உட்பட்டிருக்கிறது. 1991ம் ஆண்டு வளைகுடா போரின் போது அன்றைய  ஈராக்கிய அதிபர் சதாம் ஹுஸைன் டெல் அவிவ் மீது ஏவுகணை தாக்குதல் ஒன்றைத் தொடுத்து இஸ்ரேலை அதிர வைத்திருந்தார் என்பது  இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ஹமாஸின் இராணுவப் பிரிவு தளபதி அஹமத் அல் ஜஃபரி அவர்களின் படுகொலைக்கு பழிவாங்கும் படலத்தை போராளிகள் ஆரம்பித்து இருக்கினறனர்.

இஸ்ரேல் தனது  நரகத்தின் வாயிலை தானே திறந்துக்கொண்டிருப்பதாக போராளிக் குழுக்கள் இஸ்ரேலை எச்சரித்திருக்கின்றன.


போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...