Friday 16 November 2012
இஸ்ரேலின் ஆளில்லா விமானத்தை ஹமாஸ் தரையிறக்கியது.
பலஸ்தீன போராட்ட இயக்கமான ஹமாஸின் இராணுவ பிரிவு இஸ்ஸத்தீன் கஸ்ஸாம் படையணி காசா மீது ஏவப்பட்ட இஸ்ரேலின் ஆளில்லா உளவு விமானத்தை வெற்றிகரமாக தரை இறக்கியிருக்கிறது.
ஹமாஸ் இயக்கம் இது தொடர்பான வீடியோ ஒன்றை ஊடகங்களுக்கு வழங்கியிருப்பதாகவும் , அந்த இஸ்ரேலிய உளவு விமானம் "ஸ்கைலைட் பி" (“Skylight B”) என்ற பெயரிடப்பட்ட ஒன்று எனவும் அறிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலின் உளவு விமானத்தை தம் கைவசம் சிக்க வைப்பதற்கு ஹமாஸ் இயக்கம் பெற்றிருக்கின்ற தொழில் நுட்ப வளர்ச்சி இஸ்ரேலுக்கு பெரும் சவாலாக அமைந்திருக்கிறது.
பலஸ்தீன் போராட்ட இயக்கங்கள் கடந்த வியாழக்கிழமை இஸ்ரேலின் தலை நகர் டெல்அவிவை நோக்கி அனுப்பிய ஈரானிய தயாரிப்பான அல் பஜ்ர் 5 என்ற ஏவுகணை, இஸ்ரேலின் தலைநகரம் பலஸ்தீன் போராளிகளால் தொட்டு விடும் தூரத்தில் தான் இருக்கிறது என்ற அபாய சமிக்கையை இஸ்ரேலுக்கு உணர்த்தியிருக்கிறது.
1991ம் ஆண்டுக்குப்பிறகு முதல் தடவையாக இஸ்ரேலின் தலைநகரம் இப்போது தாக்குதலுக்கு உட்பட்டிருக்கிறது. 1991ம் ஆண்டு வளைகுடா போரின் போது அன்றைய ஈராக்கிய அதிபர் சதாம் ஹுஸைன் டெல் அவிவ் மீது ஏவுகணை தாக்குதல் ஒன்றைத் தொடுத்து இஸ்ரேலை அதிர வைத்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ஹமாஸின் இராணுவப் பிரிவு தளபதி அஹமத் அல் ஜஃபரி அவர்களின் படுகொலைக்கு பழிவாங்கும் படலத்தை போராளிகள் ஆரம்பித்து இருக்கினறனர்.
இஸ்ரேல் தனது நரகத்தின் வாயிலை தானே திறந்துக்கொண்டிருப்பதாக போராளிக் குழுக்கள் இஸ்ரேலை எச்சரித்திருக்கின்றன.
Subscribe to:
Posts (Atom)
போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!
பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...
-
பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...
-
கர்பலாவின் கதையை கேட்டு கண்கள் பூத்துபோனதே! கர்பலாவின் கொடுமை கேட்டு நெஞ்சு வேர்த்து போனதே! இமாம் ஹுசைனை இழந்த நெஞ்சம் தீயில் வெந்து ...
-
அதிகரிக்கும் பள்ளிவாசல்களும் அழிந்து போகும் ஒற்றுமையும்! அரபு பணம் இலங்கையில் வந்து குவிந்துக் கொண்டிருக்கிறது. பாதை நெடுகிலும் பள்...