துருக்கி - நீரின் மேல் கோலம் !
Monday, 8 October 2012
வர்தகமயமான கிரிக்கட் விபரீதம் ! இருவர் தற்கொலை
நேற்று இடம்பெற்று முடிந்த 20-20 கிரிக்கற் போட்டியில் இலங்கை தோல்வியடைந்ததைத் தொடர்ந்துமனவேதனையுற்ற இரண்டு இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டதாக நெத் எப்.எம் இணையதளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
ஹெ ட்டன் குடாஓய பிரதேசத்தைச் சேர்ந்த மகேந்திரன் சுரேந்திரன் என்ற இளைஞன் பக்கத்து வீட்டு தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு வந்து தனது தாயையும் சகோதரியையும் வீட்டை விட்டு வெளியெ போகுமாறு நிர்பந்தித்து வெளியே அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார்.
இவரின் மரண பரிசோதனை நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இலங்கையின் தோல்வியை சகி;க்க முடியாத பாதுக்கை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் காலிமுகத்திடலுக்குச் சென்று போட்டியைப் பார்த்துவிட்டு வீடு திரும்பி வந்து மாமரத்தில் கழுத்துக்கு சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பிரித்தானிய ஏகாதிபத்தியம் தான் ஆட்சி செய்த நாடுகளுக்கு எச்சமாக விட்டுச்சென்றுள்ள இந்த கிரிக்கட் விளையாட்டு இன்று ஒவ்வொரு நாட்டிலும் அரசியல், பொருளாதார சமூகவியல் ரீதியாக தாக்கம் செலுத்துகின்ற ஒரு விளையாட்டாக மாற்றம் பெற்று வருகின்றது.
ஒரு பக்கம் சூதாட்டக் களமாக மாறி வருகின்ற இந்த விளையாட்டு மறுபுறம் உலக மக்களை உளவியல் ரீதியிலான தாக்கங்களுக்கும் உள்ளாக்கி வருகின்றது. இந்த கிரிக்கட் மேனியாவினால் பாதிக்கட்ட பலரால் நூட்டின் அபிவிருத்தி நகர முடியாமல் நின்று போகின்றது.
பணத்தை பிரதான இலக்காகக் கொண்டு போட்டிப் போட்டுக்கொண்டு செயற்படும் ஊடகங்கள் கிரிக்கட் போட்டியை வைத்து தனது மடியை நிரப்பிக்கொள்கின்றன.
பணத்தை முதலாளிகளுக்கும் மன உளைச்சலை மக்களுக்கும் கொடுத்து வரும் இந்த விளையாட்டு இன்று உலகில் அபிவிருத்தியில் அதி முன்னணியில் இருக்கின்ற எந்த நாடுகளிலும் விiளாயடப்படுவதில்லை.
Friday, 5 October 2012
வீடியோ - இலங்கை ஜனாதிபதியை எதிர்த்து தீமூட்டிகொண்ட இளைஞன்!
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்ததை எதிர்த்து தமிழ்நாடு சேலத்தை சேர்ந்த விஜயராஜ் என்ற இளைஞன் தனக்குத்தானே தீமூட்டி கொண்டான் .
வீடியோ - பங்களாதேஷில் பௌத்த நிலையங்கள் தாக்கப்பட்டதன் எதிரொலி கொழும்பு தூதுவராலயத்தின் மீது தாக்குதல்
வீடியோ - பங்களாதேஷில் பௌத்த நிலையங்கள் தாக்கப்பட்டதன் எதிரொலி
கொழும்பு தூதுவராலயத்தின் மீது தாக்குதல்
கொழும்பு தூதுவராலயத்தின் மீது தாக்குதல்
அமெரிக்காவில் இஸ்லாத்திற்கு எதிரான விளம்பரம் !
American Freedom Defense Initiative (AFDI) எ ன்ற இஸ்ரேலிய சார்பு அமைப்பினரால் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த விளம்பரங்கைளை அமெரிக்கா நீதித்துறை கருத்துச் சுதந்திரமாக கணிக்கிறது.
முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் இந்த விளம்பரங்களை அடுத்து அதே இடங்களில் Rabbis for Human Rights – North America and the Sojourners Christian மற்றும் united Methodist Women என்ற அமைப்புகளால் முஸ்லிம்களை ஆதரித்து அதற்க்கு பக்கத்தில் விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
American Freedom Defense Initiative (AFDI) எ ன்ற இஸ்ரேலிய சார்பு அமைப்பின தலைவியாக தன்னை அறிமுகப்படுத்தும் Pamela Geller NBC செய்திச்சேவைக்கு கருத்துத் தெ ரிவித்திருக்கின்றார் . அந்த வீடியோ இங்கு இணைக்கப்பட்டுள்ளது
Wednesday, 3 October 2012
USAID சதிவலைகளின் சொந்தக்காரன்
லத்தீன் அமரிக்க நாடுகளின் கூட்டமைப்பான ALBA அமைப்பு , அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் போர்வையில்; செயற்படும் அமெரிக்க உளவு அமைப்பான USAID(United States Agency for International Development)என்ற அமைப்பை உடனடியாக உறுப்பு நாடுகளிலிருந்து வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமரிக்க அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு இசைவாக செயற்படாத நாடுகளின் அரசுகளையும் அமைப்புக்களையும் பலவீனப்படுத்தி அந்தந்த நாடுகளில் சிவில் சமூகங்களை மோதவிட்டு பிரச்சினைகளையும், உள்நாட்டுப்போர்களையும் உருவாக்கி பின்னர் அரசியல் ரீதியாக தனது நேரடியான தலையீடுகளை ஏற்படுத்தும் சூழலை USAID உருவாக்குவதாக அதன் மீது பலத்த குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றது.
USAID இன் நயவஞ்சகத்தனமான மற்றும் மோசமான செயற்பாடுகள் தொடர்பாக அமெரிக்கரான ஜோன் பெர்கின்ஸ் தனது confessions of an economic hit-man என்ற நூலில் ஆதாரத்தோடு ஏழுதியுள்ளார்.
தன்னோடு இசைந்து போகும் மத மற்றும் ஆரசியல் தலைவர்களுக்கு லஞ்சமாக பணத்தையும், பெண்களையும் USAID வழங்கி தனது வலையில் சிக்கவைப்பதாக ஜோன் பெர்கின் USAID மீது தனது நூலில் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த பூகோள உருண்டையில் விரிக்கப்பட்டுள்ள சதிவலைகளின் சொந்தக்காரர்கள் USAID போன்ற அமெரிக்க உளவு அமைப்புகளாக செயற்படும் இத்தகைய நிறுவனங்கள்தான்.
USAID அமைப்பு அமெரிக்க ஆதிக்கத்தை உலகளவில் நிலைநிறுத்தும் நயவஞ்சக நிகழ்ச்சி நிரலுக்காகவே செயற்பட்டு வருகிறது.
மோசடி மிகுந்த இந்த நிறுவனத்தை தமது உறுப்பு நாடுகளில் அனுமதிக்க வேண்டாம் என இந்த ALBA அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
நிக்காரகுவா, கியூபா, போலிவியா, எக்குவடோர், வெனிசூலா, டொமினிக்கா போன்ற நாடுகள் இந்த அறிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.
Subscribe to:
Posts (Atom)
போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!
பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...
-
அதிகரிக்கும் பள்ளிவாசல்களும் அழிந்து போகும் ஒற்றுமையும்! அரபு பணம் இலங்கையில் வந்து குவிந்துக் கொண்டிருக்கிறது. பாதை நெடுகிலும் பள்...
-
அமெரிக்கா ஏகாதிபத்தியம் எங்களை ஆக்கிரமிக்கிறது… ஜாஹிலிய்யத்திற்கு கை கொடுக்கிறது ஜம்இய்யதுல் உலமா! ஜம்இய்யதுல் உலமா என்ற இலங்கையின் ம...
-
22ம் திகதி காலை. 7.30 மணியிருக்கும் கொழும்பு மாளிகாவத்தை மையவாடி மயான அமைதியில் மூழ்கியிருக்கிறது. எனக்கு மிகவும் அறிமுகமானவரும், எனது நண...