மோடியின் அசை்சரவையில் ஒரு சிறுபான்மை நலத்துறை அமைச்சரா?
ஆச்சரியமாக இருக்கிறதா? மோடியின் ஆட்சியில் சிறுபான்மை சமூகத்தின் உரிமைகள் கேள்விக்குறியாக மாறும் என்று அச்சத்தில் இருக்கும் போது சிறுபான்மை நலத்துறைக்கு அமைச்சரொருவரை மோடி அரசு நியமித்திருக்கிறது.
அந்த அமைச்சர்தான் நஜ்மா ஹெப்துல்லாஹ்!
மோடி அமைச்சரவையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் நஜ்மா ஹெப்துல்லா இந்தியாவின் புகழ்பெற்ற ஒரு முஸ்லிம் அரசியல்வாதியின் பேரப்பிள்ளையாகும்.
இவர் சுதந்திர இந்தியாவின் முதலாவது கல்வி அமைச்சராக இருந்த மௌலானா அபுல் கலாம் ஆஸாத்தின் பேத்தியாகும்.
தனது பாட்டன் வழி காங்கிரஸில் 2004 ம் ஆண்டு வரை பல முக்கிய பதவிகளை வகித்த நஜ்மா கட்சியின் தலைமைப்பீடத்தோடு ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் கட்சியிலிருந்து வெளியேறி பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியில் 1986ம் ஆண்டு பொதுச் செயலாளராக கடமையாற்றியுள்ளார். ராஜ்ய சபை அங்கத்தவராக 1980, 1986, 1992, 1998 நான்கு முறை தெரிவாகியுள்ளார்.
தற்போது பாரதீய ஜனதா கட்சியின் உப தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார். தேர்தல் காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை பா.ஜ.க வினர் கூறி வந்தனர். மோடிக்கு வாக்களிக்காதவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்று கூட பா.ஜ.க வின் ஒரு மாநிலத் தலைவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் நஜ்மாவின் கருத்துக்கள் கூட முஸ்லிம்களுக்கு சாதகமாக அமையப்போவதில்லை என்பதை உணரக் கூடியதாக இருக்கிறது.
நஜ்மா இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு சேவை எதையும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. தீங்கு செய்யாமல் இருந்தாலே போதும்.
No comments:
Post a Comment