Tuesday 28 September 2010

கத்தார் ! கிலாபத் சிந்தனையின் கனவு ராஜ்ஜியம் ?



கத்தார் !  கிலாபத் சிந்தனையின்  கனவு ராஜ்ஜியம்?





பிரச்சாரப் பணிக்ககாக இஸ்லாமிய இயக்கங்களுக்கு இடையூறு இன்றி இடம் கொடுக்கும் நாடு கத்தார் .  எமது நாட்டின் புத்திஜீவிகள் பலர் அடிக்கடி பிரச்சாரப் பணிக்காக கத்தருக்கு சூறாவளி சுற்றுப்பயணங்களை  மேற்கொண்டு வருகின்றனர்.  


நாளுக்கு நாள்  படு மோசமான மேற்கத்தைய நாகரீகத்தில் மூழ்கி வரும் இந்த நாடு  அமெரிக்க நலன் சார்ந்த வஹ்ஹாபிய சிந்தனை போக்கிற்கு , அந்த போக்கில் செயற்படும் இயக்கங்களுக்கு தனது வாசல் கதவை திறந்தே வைத்திருக்கிறது. 

இதில் இணைக்கப்பட்டுள்ள படங்கள் பிரான்சில் நடைபெற்ற நிகழ்வொன்றில்  எடுக்கப்பட்டவை . ஹிஜாப் போன்ற இஸ்லாமிய ஆடைகளுக்கு பலத்த கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் பிரான்ஸ் நாட்டின் அதிபரின்  அனுசரணயில் இடம்பெற்ற  நிகழ்வொன்றில் மேற்கத்தைய உடையில்  கத்தார் நாட்டின்  அமிரின் மனைவி கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட படங்கள். 

அரபு பணத்தை ஊதியமாக பெறும்  இயக்கங்கள் இன்று போட்டி போட்டுக்கொண்டு கத்தரில் களமிறங்கி இருக்கும் போது அதன் நாட்டின்  தலைவர்கள்  இஸ்லாத்தை விட்டு படு வேகமாக விலகிச் சென்றுக்கொண்டிருக்கின்றனர்.


நவீன சிந்தனையாளர்களில்  ஒருவராக கருதப்படும்  யூசுப் கர்ளாவி  அவர்களும் கத்தார் நாட்டிலேயே  வாழ்ந்து வருகின்றார் .  சர்வதேச ரீதியாக பத்வா  வழங்கிவரும் இவர்கூட அரபுகள் விடயத்தில் அடக்கிவாசிக்கும் உபாயத்தையே கையாண்டு வருகிறார்.

இஸ்ரேலுக்கு எதிராக அடிக்கடி பத்வா  வழங்கும்  கர்ளாவி தான் வாழும்  கத்தார்  நாட்டில் உருவாக்கபட்டிருக்கும்  இஸ்ரேலிய தூதரகம் தொடர்பாக இதுவரை எந்த பத்வாவையும் வெளியிட முன்வரவில்லை, 

எகிப்திலே இஸ்லாமிய ஆட்சியை கொண்டுவர போராடிய இவர்கள்  இறுதியாக அதற்கு சமனான அரபு நாடுகளில் தஞ்சமடைந்தனர்.  இஸ்லாமிய அடிப்படையில் பார்த்தால் எகிப்தும் அரபு நாடுகளும் சமமானவையே.  இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.  இக்வான்கள் எகிப்தில் இஸ்லாமிய ஆட்சிக்கு போராடியது உண்மை என்றல்  அவர்கள் அரபு நாடுகளிலும் இஸ்லாமிய கிலாபத் ஒன்றுக்காக போராட வேண்டும்.  அனால் அது இன்று வரை நடக்கவில்லை. 

இதிலிருந்து ஒன்று தெரிகிறது . இக்வான்களின் போராட்டம் இடது சாரியாக இருந்த  நாசரை வீழ்த்துவது மாத்திரமே ஒழிய., இஸ்லாத்தை எகிப்தில் உயிர்ப்பிப்பது அல்ல.  மத்திய கிழக்கில் நாசரை ஒழிக்க வேண்டிய தேவை அமெரிக்கவிற்கும் மத்திய கிழக்கு மன்னர்களுக்கும் இருந்தது.  அதற்கான ஒரு ஜிஹாதிய போராட்டம் தான் இக்வான்களின் போராட்டமாக உருப்பெற்றது.

யூசுப் கர்ளாவி போன்றவர்களின்  அரபு நாட்டு தஞ்சம்  அதையே உறுதிப் படுத்துகிறது.

கத்தரில் கிலாபத்தை ஏற்படுத்த கர்ளாவியும் இஸ்லாமிய இயக்கங்களும்  தயக்கம் காட்டுவது ஏன் ?  சிந்தித்துப் பாருங்கள்...



3 comments:

  1. தரீக்கா வஹாபி இஹ்வான் எல்லோரையும் விமர்சிக்கிறீர்களே அப்போது எது தான் நேர்வழி ?

    ReplyDelete
  2. அல்குரான் அல்ஹதீஸ் மொழிபெயர்ப்புகள் நிறையவே வெளிவந்திருக்கின்றன . நேர்வழி காட்டுமாறு அல்லாஹ்விடம் இறைஞ்சிவிட்டு அல்குரான் அல்ஹதீஸ்களுடன் இஸ்லாமிய ஆட்சியாளர்களினால் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகளை தேடிப்படியுங்கள். இன்ஷா அல்லாஹ் நேர்வழி திண்ணமாக புலப்படும்.

    ReplyDelete
  3. WAHHABI WAHHABI ENHINRIRHAL ATHAN ARTHAM THAN ENNATHERIYUMA EMATHU UYIRINUM MELANA NABIYUM WAHABITHAN ??? EMATHU MARKAM THELIVANATHU ATHAN ERU THUNGAL QUEANUM HADEETHUMTHAN. ATHANAI PADITTHAL ATHANPADI ALTHAL VETRI NITHCHAYAME????

    ReplyDelete

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...