சவூதி அரேபியாவின் வங்குரோத்து மனித நேயமும் வஹாபி அரசியலும்.
அமெரிக்க குவான்டானமோ மற்றும் ஈராக்கிய அபூ கிரைப் சிறைகள் மட்டும் தான் மனிதாபிமானத்திற்கு முரணான, மிருகத்தனமான சித்திரவதைகள் செய்யப்படும் வதைமுகாம்கள் என வாசித்திருப்பீர்கள்.
ஆனால் இஸ்லாத்தின் புனித பூமியாகிய சவூதி அரேபியாவில் பணிப்பெண்களுக்கு நடக்கும் கொடுமையைப் பார்த்தால் ஜாஹிலிய்யா என்ற அறியாமைக்காலத்தில் தான் தொடர்ந்தும் அந்த நாடு இருந்து வருகின்றது என்ற உண்மை புலனாகும்.
(சவூதியிலிருந்து இலங்கை திரும்பிய பெண்ணின் உடம்பிலிருந்த ஆணிகள் எக்ஸ் ரே படத்தில் இவ்வாறு தெரிகின்றன.)
சித்திரவதை, கற்பழிப்பு, காடைத்தனம் என்ற தனது அமெரிக்க நண்பனின் அத்தனை செயல்களையும் அச்சொட்டாக சவூதி ஆளும் வர்க்கமும், எண்ணெய் ஷேக்களும் ஏனைய பிரஜைகளும் செய்து வருகின்றனர்.
இலங்கையர்கள் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் சவூதியில் பணிபுரிகின்றனர். இவர்களில் 75 வீதமானோர் வீட்டுப்பணிப்பெண்களாக பணிபுரிகின்றனர். இந்த பணிப்பெண்களுக்கு குறைந்த ஊதியத்தை வழங்கி, அடிமையாக வைத்து வேலை வாங்குவது மட்டுமல்லாமல், அவர்கள் மீது பாலியல் பலாத்காரத்தையும் வயது வேறுபாடின்றி இந்த அரபுகள் இழைத்து வருகின்றனர்.