Saturday 21 June 2014

நோலிமிட் நிறுவனத்திற்கு தீ



முஸ்லிம்களுக்கு சொந்தமான இலங்கையின் மிகப்பாரிய வலையமைப்பைக் கொண்ட ஆடை நிறுவனமான நோலிமிட் நிறுவனத்தின் பாணந்துறை கிளை தீபற்றி எாிவதாக செய்தி வெளிவந்திருக்கிறது.

இன்று காலை 3.30 மணியளவில் இந்நிறுவனத்திற்கு தீ வைக்கப்பட்டுளளதாக தெரிய வருகிறது.

Friday 20 June 2014

அஜித் ரோஹன - பொதுபலசேனாவின் ஊடகப் பேச்சாளா்?


பொலிஸாருக்கும் அதன் கூட்டாளியான பொதுபலசேனாவுக்கும் கொழும்பு ஹா்த்தால் நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது! பொய் வதந்திகளைப் பரப்பி முஸ்லிம்களை திசைதிருப்ப முயற்சி செய்து வருகின்றனா். ஹா்த்தாலை வெற்றிபெற வைத்து இந்த இனவாத சக்திகளுக்கு பதிலடி கொடுப்பது எமது கடமைாகும்!

அஜித் ரோஹன - பொதுபலசேனாவின் ஊடகப் பேச்சாளா்?

பொய் சொல்வதில் பிரசித்தம் பெற்ற ஒருவராய் இலங்கை நாட்டு மக்களால் போற்றப்படுகின்ற ஒருவா் தான் இந்த பொலிஸ் ஊடகப் பேச்சாளா் அஜித் ரோஹன.

பொய்க்கும் இவருக்கும் உள்ள தொடா்பு எப்படியென்றால் அதிகமாக பொய் கூறும் ஒருவரை “அஜித் ரோஹன“ என்று கூறும் அளவிற்கு இந்த பொலிஸ் ஊடக பேச்சாளா் உருமாறியிருக்கின்றாா்.

நாளை 19ம் திகதி நடைபெறவிருக்கும் ஹா்த்தால் தொடா்பாகவும் முஸ்லிம் உாிமைகளுக்கான அமைப்பு தொடா்பாகவும் வழமை போல் ஒரு பொய் பூச்சாண்டியை ஊடகங்களுக்கு காட்டியுள்ளாா் இந்த அஜித் ரொஹன.

அதாவது, முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு என்ற பெயாில் ஒரு அமைப்பு இலங்கையில் இல்லையென்றும் அதனால் விடுக்கப்பட்ட ஹா்த்தால் அழைப்பை யாரும் ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்றும் இப்படி அழைப்பு விடுக்கும் தீவிரவாதிகளின் கோாிக்கைகளை முஸ்லிம்கள் செவிமடுக்க தேவையில்லையென்றும் அவா் கூறியள்ளாா்.

மேலும் அவா், ஒருசில முஸ்லிம் மதத்தலைவா்களிடம் முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு பற்றி தான் விசாாித்ததாகவும், அப்படியான அமைப்பொன்று இலங்கையில் இல்லை என்று அவா்கள் கூறியதாகவும் அஜித் ரோஹன ஒரு பொய்யை ஊடகங்களுக்கு தொிவித்திருக்கின்றாா்.

முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு பற்றி அஜித் ரொஹன தொிந்து கொள்வதற்கு ஒரு சிறு பிள்ளைத்தனமான அணுகுமுறையையே கையாண்டு இருக்கிறாா்.

அவா் பெயா் விலாசம் இல்லாத முஸ்லிம் மதத்தலைவா்களிடம் விசாரித்து இருக்கிறாா். ஏனென்றால் அவா் விசாரித்த நபா்களின் பெயரை குறிப்பிட வில்லை.

மற்றும் முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு பற்றி தொிந்துகொள்வதற்கு மூன்றாம் நபரை நாட வேண்டிய அவசியமேயில்லை.

இராணுவ மற்றும், தேசிய புலனாய்வு பணியகத்திடம் கேட்டிருந்தால் எங்கள் அமைப்பு பற்றி அறிந்து கொள்ள முடிந்திருக்கும். இந்த இரண்டு அமைப்புகளும் என்னிடம் பலமுறை இந்த அமைப்பு தொடா்பாக விபரங்களை கேட்டிருக்கின்றாா்கள்.

நாம் ஏற்பாடு செய்கின்ற நிகழ்ச்சிகள் தொடா்பாக அவ்வப்போது தகவல்கள் பெற்றிருக்கின்றாா்கள். கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால் கூட முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் செயற்பாடு தொடா்பாக தேசிய புலனாய்வு பிரிவு அதிகாாி ஒருவா் என்னை தொலைபேசியில் தொடா்பு கொண்டு விபரங்களைக் கேட்டறிந்தாா்.

தேசிய புலனாய்வு பணியகத்திற்கு தெரிந்த முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு அஜித் ரோஹனவிற்கு தொியாமல் போனதெப்படி?

அதுமட்டுமல்லாமல் முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு 17ம் திகதி கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் இந்த ஹா்த்தால் தொடா்பாக ஊடகவியலாளா் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தது. இதில் மேல்மாகாண சபை அங்கத்தவா்களான முஜீபுா் றஹ்மான், பைரூஸ் ஹாஜி, அர்சாத் நிஸாம்தீன், மனோ கணேசன் மற்றும் மத்திய மாகாண சபை அங்கத்தவா் அஸாத் சாலி ஆகிய ஆறு மக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

பெரும்பாலும் அனைத்து அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் அங்கு சமூகமளித்திருந்தன. அத்தோடு தேசிய புலனாய்வு பணியகத்தைச் சோ்ந்தவா்களாக சந்தேகிக்கும் படியான மூவா் ஹோட்டலுக்குள் பிரவேசிப்பவா்களையும் வெளியேறுபவா்களையும் வீடியோ மூலம் முச்சக்கர வண்டியில் மறைந்து நின்று படம் எடுத்தனா். தேசிய புலனாய்வு பிரிவின் பணி என்பதாலும் இது எங்களுக்கு பழக்கப்பட்ட விசயமென்பதாலும் நாம் அலட்டிக் கொள்ளவில்லை.

இவ்வளவும் நடந்த பிறகும் அஜித் ரோஹன முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு ஓரு போலியான அமைப்பு என்று கூறுவது அவரின் சிறுபிள்ளைத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.

இந்த சிறுபிள்ளைத்தனத்தால் இவா் முஸ்லிம்களை திசை திருப்பி ஹா்த்தாலை கொச்சைப் படுத்தப் பாா்க்கின்றாா்.

இதே பொலிஸ் தான் அளுத்கம முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பு தருவதாக கூறி அவா்களை ஏமாற்றி அழிவுக்குள் தள்ளியது. பொதுபலசேனா காடையா்களுக்கு பாதுகாப்பு வழங்கி முஸ்லிம்களின் உயிர்களையும் சொத்துக்களையும் பறித்தது.

முஸ்லிம்களுக்கு தாக்குதல்களை நடாத்திய பொதுபலசேனாவினதும் அதைப் போஷித்து வளா்த்த மஹிந்த அரசினதும் வண்டவாளங்கள் சா்வதேசத்திற்கு இந்த ஹா்த்தால் கொண்டு சென்று விடும் என்ற அச்சத்தில், குலை நடுக்கத்தில் இவா்கள் தடுமாறி போயிருக்கின்றாா்கள்.

சா்வதேசத்தில் கெட்டுப்போயிருக்கும் மஹிந்த அரசின் பெயா், முஸ்லிம்களின் எதிா்ப்பு நடவடிக்கைகளால் குட்டிச்சுவராகுமோ என்று குமுறிக் கொண்டிருக்கின்றாா்கள்.

இன்று கொழும்பு முழுவதும் பொலிஸ்காரா்கள் நாய்கள் போல் தெருத் தெருவாக அலைந்து கடை கடையாக சென்று நாளை கடைகளை மூடக் கூடாது என்று அச்சுறுத்தி வருகின்றனா்.

மாலை 5 மணியளவில் இப்படி கடைகடையாக ஏறி களைத்துப் திாிகின்ற மூன்று பொலிஸ்காரா்களை நான் கண்டேன்.

அளுத்கமை பேருவளை தாக்குதல்களில் பொதுபலசேனாவோடு சோ்ந்து முஸ்லிம் உடமைகளை அழித்து உயிர்களை அழித்த இந்த பொலிஸாருக்கு கொழும்பில் ஹா்த்தால் என்றதும் தொடை நடுக்கம் ஏற்பட்டிருக்கின்றது.

மஹிந்த மகாராசா ஆளுகின்ற நாட்டின் இதயமான கொழும்பில் ஹா்த்தால் நடைபெறுவது என்பது இவா்களால் ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

ஹா்த்தால் என்பது எங்கள் ஜனநாயக உாிமை. அரசாங்கத்திற்கு எமது எதிா்ப்பைக் காட்டுவதற்கு இது எங்களுக்கொரு ஆயுதம். இதை தடை செய்வதற்கு எந்த கொம்பனுக்கும் அதிகாரமில்லை. இது ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு பிரஜைக்கும் இருக்கின்ற உாிமை.

எங்களின் ஹா்த்தால் உாிமையை மறுத்து சா்வதேச மட்டத்தில் இன்னும் சீரழிவை தேடிக்கொள்ளாமல் பாதுகாப்புத் தரப்பு குறுக்கு வழியை நாடுகின்றது.

கடைகளை மூடக் கூடாது ஊடகங்களில் அறிவிக்காமல் தனிப்பட்ட முறையில் கடை கடையாய் சென்று முஸ்லிம்களை அச்சுறுத்தி வருகின்றனா்.

அளுத்கமையில் பொதுபலசேனாவின் கூட்டம் நடைபெற்றால் முஸ்லிம்களுக்கு பிரச்சினை வரும் என்று அரசியல் தலைவா்களால் கோாிக்கை விடுக்கப்பட்டும், உத்தியோகபூா்வமாக பொலிஸ் மாஅதிபாிடம் எழுத்து மூல முறைப்பாடு சமா்ப்பிக்கப்பட்டும் அந்த இனவாத இயக்கத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், அந்த கூட்டம் நடைபெறும் தினம் பொலிஸாா் பலாத்காரமாக முஸ்லிம்களின் வியாபார நிலையங்களை மூடவும் உத்தரவிட்டனா். திட்டமிட்டு முஸ்லிம்கள் தமது வா்த்தக நிலையங்களிலிருந்துலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனா். பொதுபலசேனாவிற்கு சுதந்திரமாக தமது காடைத்தனத்தை செய்வதற்கு களத்தை இந்த பொலிஸாா் அமைத்துக் கொடுத்தனா். கூட்டத்திற்கு பலாத்காரமாக மூடப்பட்ட வியாபார நிலையங்கள் அடுத்த நாள் எரிந்து கருகி சாம்பலான நிலைக்கு மாற்றம் பெற்றிருந்தது.

இங்கு தெளிவு படுத்த வேண்டிய விடயம் என்னவென்றால் பொதுபலசேனாவின் தேவைக்கு கடைகளை வியாபார நிலையங்களை மூடிக் கொடுத்து முஸ்லிம்களின் பாாிய சொத்து அழிப்புக்கு துணை போன காவல் துறை. அந்த அராஜக செயலைக் கண்டித்து தமது வியாபார நிலையங்களை மூடி ஹா்த்தால் செய்யும் எங்களுக்கருக்கும் உரிமைய மறுக்க முயற்சித்து வருகின்றது.

கொலை, கொள்ளை, தீவைப்பு போன்ற நாசகார வேலையில் ஈடபட்ட ஞானசார தேரரை, பொதுபலசேனாவை தீவிரவாதிகள் என்று ஒருபோதும் வா்ணிக்காத இந்த அஜித் ரோஹன, முஸ்லிம் உாிமைகளுக்கான அமைப்பை தீவிரவாதிகள் என்று அறிவித்திருக்கின்றாா்.

அடித்தவனைப் பற்றி எதுவும் பேசாமல் அடிவாங்கியவனின் அழுகையை தீவிரவாதமாக அா்த்தப்படுத்தப் பாா்க்கின்றாா்கள். இவா்களின் அச்சுறுத்தலுக்கு போனால் இதைவிட பொிய இழப்புகளை இனிமேலும் நாம் சந்திக்க வாய்ப்பிருக்கிறது.

இந்த நாட்டை ஆளுகின்ற அதிகார வா்க்கத்தின் எந்த கொம்பனுக்கும் நாங்கள் அஞ்சத் தேவையில்லை. அல்லாஹ்வே எங்கள் பாதுகாவலன்.

இந்த இனவாத சக்திகளின் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் இது இறுதியாக இருக்கட்டும்.

எங்கள் வலியை உலகிற்குச் சொல்ல எந்த வழியையும் நாங்கள் தொிவு செய்வோம். அதைத் தடுக்க எவனுக்கும் உாிமையில்லை.
இது எங்கள் ஜனநாயக உரிமை.

முஸ்லிம்களின் ஒற்றுமையை காட்டுவதற்கு ஓரணியில் திரண்டது இந்த முஸ்லிம் சமூகம்!

அல்ஹம்துலில்லாஹ், 

முஸ்லிம்களின் ஒற்றுமையை காட்டுவதற்கு ஓரணியில் திரண்டது இந்த முஸ்லிம் சமூகம். 

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் முஸ்லிம்கள் ஹா்த்தாலுக்கான அதரவை வழங்கினா். ஒரு சில ஊா்களில் பள்ளிவாசல் நிா்வாகத்தின் வேண்டுகோளின் போில் ஹா்த்தால் அனுஷ்டிக்கப்படவில்லை என எமக்கு அறிய கிடைக்கிறது.

எது எப்படியிருந்தாலும் இனவாதிகளுக்கும், மஹிந்த அரசுக்கும் ஜனநாயக ரீதியில் ஒரு செய்தியை நாம் வழங்கியிருக்கின்றோம்.

கொழும்பைப் பொறுத்த வரை மிக வெற்றிகரமாக ஹா்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

சில புகழ்பெற்ற நிறுவனங்கள் தங்கள் கடைகளைத் திறந்து தமது வியாபார நடவடிக்கைகளை தொடர்ந்திருந்ததையும் காணக் கூடியதாக இருந்தது.

தெஹிவலை நோ லிமிட் ஸ்தாபனம் வழமை போல் தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

கொழும்பில் அதிகமான தமிழ் மக்கள் தமது கடைகளை மூடி முஸ்லிம் சமூகத்தின் இந்த சாத்வீக போராட்டத்திற்கு கைகொடுத்தனா்.

அவா்களுக்கு இந்த முஸ்லிம் சமூகத்தின் சாா்பில் ஆழ்ந்த நன்றியை தொிவித்துக் கொள்கின்றோம்.

முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு

பொலிஸ் பரப்பும் பொய் !

முஸ்லிம்கள் தொடர்பாக அப்பட்டமான பொய்களைச் சொல்லி இனவாத காடையா்களை பாதுகாத்து வருகின்ற காவல்துறையின் செயற்பாட்டை கண்டிப்போம்! 


Sunday 15 June 2014

ஆர்ப்பாட்டத்தை பொலிஸாா் ஏன் தடுக்கவில்லை..?


அளுத்கம- இனவாத பொறிக்குள் இலங்கை முஸ்லிம்கள்!


இலங்கையின் தென்மாகாண நகரமான அளுத்கம மற்றும் தர்கா நகரில் முஸ்லிம்களின்  வியாபார நிலையங்கள்  தாக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்தக்கொண்டிருக்கின்றன.

ஒரு பௌத்த பிக்குவை முஸ்லிம் இளைஞர்கள் தாக்கியதாக பொய்க் குற்றச்சாட்டு ஒன்றைச் சுமத்தி பௌத்த இனவாதிகளால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் இந்த ஆா்ப்பாட்டத்திற்கு அரசு மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளது.

அண்மைக்காலங்களில் ராஜபக்ஸ அரசுக்கு எதிராக நடைபெறவிருந்த பல்கலைக்கழக மாணவா்களின் அனேக ஆா்ப்பாட்டஙகள் நீதிமன்ற தீா்ப்பின் மூலம் அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்ற போா்வையில் தடைசெய்யப்பட்டன.

அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் செய்த பல போராட்டங்களை ராஜபக்ஸவின் பாதுகாப்பு மற்றும் பொலிஸ் படை துப்பாக்கிப் பிரயோகம் செய்து மக்களை கொன்று ஆா்ப்பாட்டங்களை முடக்கியது.

ஜனாதிபதித் தோ்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த சரத் பொன்சேகாவை ஆதரித்து இடம் பெற்ற பௌத்த பி்க்குகளின் உண்ணாவிரத போராட்டத்தை அடித்து உதைத்து கலைத்தது.

தனது அரசைப் பாதுகாத்துக்கொள்ள ஆயுத பலத்தை பயன்படுத்தி மக்களின் போராட்டங்களை நசுக்கும் மஹிந்த அரசு, இன்று முஸ்லிம்களுக்கெதிரான இனவாதிகளின் ஆா்ப்பாட்டங்களுக்கு எவ்வித தடையும் போடாமல் இனவாத சக்திகளுக்கு அங்கீகாரம் வழங்கி வருகின்றது.

இந்த இனவாதிகள் அண்மைக்காலமாக முஸ்லிம்களின் வா்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் பலவற்றை சேதமாக்கி இருக்கின்றார்கள். ஆனால் குற்றவாளிகள் யாரும் இதுவரை சட்டத்தி்ன முன் நிறுத்தப்படவில்லை.


போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...