Tuesday, 17 June 2014
Sunday, 15 June 2014
அளுத்கம- இனவாத பொறிக்குள் இலங்கை முஸ்லிம்கள்!
ஒரு பௌத்த பிக்குவை முஸ்லிம் இளைஞர்கள் தாக்கியதாக பொய்க் குற்றச்சாட்டு ஒன்றைச் சுமத்தி பௌத்த இனவாதிகளால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் இந்த ஆா்ப்பாட்டத்திற்கு அரசு மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளது.
அண்மைக்காலங்களில் ராஜபக்ஸ அரசுக்கு எதிராக நடைபெறவிருந்த பல்கலைக்கழக மாணவா்களின் அனேக ஆா்ப்பாட்டஙகள் நீதிமன்ற தீா்ப்பின் மூலம் அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்ற போா்வையில் தடைசெய்யப்பட்டன.
அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் செய்த பல போராட்டங்களை ராஜபக்ஸவின் பாதுகாப்பு மற்றும் பொலிஸ் படை துப்பாக்கிப் பிரயோகம் செய்து மக்களை கொன்று ஆா்ப்பாட்டங்களை முடக்கியது.
ஜனாதிபதித் தோ்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த சரத் பொன்சேகாவை ஆதரித்து இடம் பெற்ற பௌத்த பி்க்குகளின் உண்ணாவிரத போராட்டத்தை அடித்து உதைத்து கலைத்தது.
தனது அரசைப் பாதுகாத்துக்கொள்ள ஆயுத பலத்தை பயன்படுத்தி மக்களின் போராட்டங்களை நசுக்கும் மஹிந்த அரசு, இன்று முஸ்லிம்களுக்கெதிரான இனவாதிகளின் ஆா்ப்பாட்டங்களுக்கு எவ்வித தடையும் போடாமல் இனவாத சக்திகளுக்கு அங்கீகாரம் வழங்கி வருகின்றது.
இந்த இனவாதிகள் அண்மைக்காலமாக முஸ்லிம்களின் வா்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் பலவற்றை சேதமாக்கி இருக்கின்றார்கள். ஆனால் குற்றவாளிகள் யாரும் இதுவரை சட்டத்தி்ன முன் நிறுத்தப்படவில்லை.
Saturday, 14 June 2014
வராத வாப்பாவும் வற்றாத நதிகளும்
வராத வாப்பாவும் வற்றாத நதிகளும்
அஷ்ரஃப் சிஹாப்தீன்
ஓர் இலக்கியக் கலந்துரையாடலின் போது முழுச் சபை யினதும் கவனத்தைக் கவர்ந்து நண்பர் அஸீஸ் நிஸாருத்தீன் ஒரு சிறுகதை குறித்துச் சிலாகித்துப் பேசிய போது எனக்கும் ஆச்சரிய மாகத்தான் இருந்தது. அக்கதை வெளி வந்த காலப் பகுதி, வெளிவந்த பத்திரிகை பற்றி அவருக்குச் சரியான தெளிவு இல்லாதிருந்த போதும் அக்கதை முழுவதையும் சபைக்கு ஒப்புவித்து ஒரு குறுந் திரைப் படத்துக்கு மிகவும் பொருத்தமான கதை என்று சொன்னதோடு அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. முதன் முதலில் அக்கதையைப் படித்த போது அது தன்னை ஸ்தம்பிக்க வைத்து விட்டது என்றும் இன்றும் அக்கதையைத் தன்னால் மறக்க முடியவில்லையென்றும் கூடச் சொன்னார். அதிர்ஷ்டவசமாக கதையின் தலைப்பும் படைப்பாளியின் பெயரும் அவருக்கு ஞாபகம் இருந்தது. என்னைப் போன்று அவருக்கு ஞாபக மறதி இல்லை என்பதற்காகவும் சக இலக்கியப் படைப்பாளி யின் திறமையை இருட்டடிப்புக் குணம் இன்றிப் பகிரங்கமாகப் பாராட்டிய அவரது பண்புக்காகவும் அவருக்கு நான் வாழ்த்துக்களைச் சொல்ல வேண்டும். நான் கதையைத் தேடிப் படிக்க வேண்டும் என்று எண்ணினேன்.
கைக்கெட்டும் தூரத்தில் இருந்த படைப்பாளியுடன் தொடர்பு கொண்டு பிரதியைத் தேடிக் கண்டு பிடித்து எடுப்பதற்குள் மூன்று மாதங்கள் சென்று விட்டன. கதையின் தலைப்பு: ‘வாப்பா வருவார்.’ வெளிவந்த பத்திரிகை ‘பாமிஸ் - மார்ச் 1988’. டெப்ளொயிட் அளவில் வெளிவந்த இந்தப் பத்திரிகை முக்கியமான சில பதிவுகளைச் செய்திருக்கிறது என்பது வரலாறு. இப்பத்திரிகையை இயக்கிவர்களுள் எம்.எம். ஸ_ஹைர், எம்.எச்.எம். ஷம்ஸ், அபுல் கலாம், கலைவாதி கலீல், ரஸீன் மாஸ்டர் ஆகியோர் முக்கியமானவர்கள். கதை பத்திரிகை யின் பத்தாம் பக்கம் முழுமையாகப் பிரசுரமாகியிருந்தது.
“பொறு.. இண்டைக்கி வாப்பா வரட்டும்... ஒன்ட முதுகுத் தோல உரிச்சிக் காட்டுறன்...” என்ற தாயாரின் எச்சரிக்கையுடன் கதை ஆரம்பமாகிறது. அவ்வீட்டின் வறுமையை மறைமுகமாக எடுத்துச் சொல்லியபடி அடுத்த வசனம் வருகிறது. ‘கிழிந்து போன கொப்பி களை உடைந்து கிடந்த கதிரையில் வீசி விட்டு சட்டையைக் கழட்டும் போது உம்மா சொன்ன வார்த்தைகள் உதுமானின் காதுகளில் விழுந்தன.’ ஆம்! பதினொரு வயதான உதுமான்தான் இக்கதையின் பிரதான பாத்திரம். பாடசாலையில் தன் நண்பனுடன் சண்டையிட்ட மாணவன் ஒருவனுக்கு உதுமான் தலை புடைக்குமளவு எதிர்த்தாக்கு தல் நடத்தி விட்டான். செய்தி வீட்டுக்கு வந்தது. தாயார் அவனை வைதபடியே இருக்கிறாள். வாப்பா வந்தவுடன் சொல்லிக் கொடுத்து அடி வாங்கிக் கொடுப்பதாக வேறு சொல்வதால் அந்தப் பயத்தில் வாப்பாவின் வருகையை பதட்டத்துடன் எதிர்பார்த்திருக்கும் அவனது மனப்போராட்டத்தில் கதை நகர்கிறது. அந்தப் பயத்திலிருந்து தன் எண்ணத்தை மறக்க டயர் உருட்டுவதும் வேறு ஒரு இடத்தில் மாங்காய் பறிக்கப் போவதும் பாடசாலைக்குச் சென்று புறாப் பிடிக்க முயல்வதுமாக நேரத்தைக் கடத்துகிறான் உதுமான். கிழக்கு முஸ்லிம் கிராமச் சூழலில் வாழும் சிறுவன் ஒருவனின் செயற்பாடுகளோடு இணைத்துப் பின்னப்பட்டுள்ளது கதை. ஊர் ஊராக ஐஸ்பழம் விற்பதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்ற வாப்பா திரும்பி வரவே இல்லை. அவர் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டு விட்டார். வாப்பா வந்து விடுவாரோ என்ற உதுமானுடைய பயப் போராட்ட மனது வாப்பா இனி வரவே மாட்டார் என்ற நிலையில் அவர் வர வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் உருகிக் கண்ணீர் சிந்துகிறது.
இன்றைய நிலையில் பலநூறு சம்பவங்களோடு இதுவும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் இக்கதை படைக்கப்பட்ட காலப் பகுதியில் படிப்பவர் மனதைக் கரைக்கும் கதையாக இது அமைந்து விட்டிருக்கிறது. அதனால்தான் இருபது வருடங்கள் சென்று விட்ட போதும் நண்பர் நிஸார்தீன் போன்றவர்களின் மனதில் நின்று நிலைத்திருக்கிறது. தவிர, இக்கதையை ஒரு சிறுவனின் பார்வையில் நகர்த்திச் சென்றிருப்பதானது படைப்பாளியின் கூர்ந்த கண்ணோட் டத்தை எடுத்துச் சொல்கிறது. இன்று புதிதாக வாசிப்பவருக்கும் ஒரு மனத் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது. இனப்பிரச்சினையின் பின்னணி யில் முஸ்லிம் சமூகப் பாதிப்பினை எடுத்துச் சொல்லும் முதலாவது கதையாக இது இருக்கலாம் என்பது எனது கணிப்பு. இத்திகதிக்கு முன்னரான இவ்வாறான இனப் பிரச்சினையை மையப்படுத்திய கதைகளை யாராவது எழுதியிருந்தால் எழுதியவரோ அறிந்த வாசகர்களோ (தயவு செய்து பொய்ப் பெயர்களில் வாசகர் கடிதம் மூலம் தாக்குதல் நடத்த முனையாமல்) எனது கவனத்துக்குத் தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வாழைச்சேனை அமர்தான் இக்கதையின் ஆசிரியர். இவர், “விடுதலையின் நிகழ்வுகள்” என்றொரு சிறு தொகுதியை 1985ல் வெளியிட்டார். இனமுரண்பாடு எரியத் தொடங்கிய காலகட்டத்தில் அதுபற்றிப் பேசிய கவிதைகள் கொண்ட தனி நபரின் முதல் தொகுப் பாகவும் அநேகமாக இதுவே இருக்கக் கூடும். இவரது “நீ வரும் காலைப் பொழுது” கவிதைத் தொகுதி 2004ல் வெளிவந்தது.
அமர் எழுதிய கதை ஒன்றுதான்| எழுதப்படாத கதைகள் ஆயிரமாயிரம் உள்ளன. வீட்டிலிருந்து வெளியே சென்று திரும்பாத வாப்பாக்களதும் அப்பாக்களதும் பிள்ளைகளின் கண்ணீர் அன்று முதல் இன்று வரை வற்றாத நதிகளாக ஓடிக் கொண்டேயிருக்கின்றன. இதற்கு அப்பால் தந்தையரின் முகமே அறியாமல் எப்போது வருவார் என்று காத்திருக்கும் பலநூறு பிள்ளைகள்; உள்ளனர் என்பதையும் நீங்கள் அறிவீர்களா?

***
நன்றி : அஷ்ரஃப் சிஹாப்தீன்
Thursday, 12 June 2014
Saturday, 7 June 2014
Thursday, 5 June 2014
முஸ்லிம்களுக்கெதிரான கலவரம் - பூனாவில் நடந்தது என்ன!
வாட்ஸ்அப் என்கிற இயங்கு வலைதளம்மூலமாக முக நூலில் சிவாஜி, பால்தாக்கரே ஆகி யோரைப்பற்றி விமரிசனம் உள்ள பதிவு இருந்ததை மய்யப்படுத்தி அரசுப் பேருந்துகள், தனியார் வாகனங்கள்மீது கல்வீச்சு என்று வன்முறை வெடித் துள்ளது - சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பொறியாளர் கொல்லப்பட்டார்.
இதனால், பூனா நகரே கலவரமய மாகி உள்ளது. சத்ரபதி சிவாஜி, சிவ சேனைக்கட்சி நிறுவனர் பால் தாக்கரே குறித்து தவறாக சித்தரிக்கப்பட்ட படங் களை முகநூலில் பதிவு செய்ததைத் தொடர்ந்தே வன்முறை வெடித்துள்ளது. அமைதிப்படுத்த சிறப்புக் காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மராட்டிய மன்னன் சிவாஜி, சிவ சேனைக்கட்சியின் மறைந்த தலைவரான பால் தாக்கரே மற்றும் பலருடைய தவறாக சித்தரிக்கப்பட்ட படங்கள் முகநூலில் பதிவு செய்யப்பட்டிருந்தன. பிரச்சினைக்குரிய முகநூல் பதிவால் எதிர்ப்பாளர்களான சிவசேனைக்கட்சி, பாஜக, வலதுசாரி அமைப்பான ஹிந்து ராஷ்டிர சேனா ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் ஏற்பட்ட வன்முறை யால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. 33 காவல் நிலையங்களில் 24 காவல்நிலையங்கள் சனிக்கிழமை31-5-2014 அன்று இரவு நேரத்தில் அடித்து நொறுக்கப்பட்டன. அதே இரவில் சமூகவிரோதிகள் வாகனங்கள்மீது கல் வீச்சில் ஈடுபட்டனர்.
130 அரசு பேருந்துகள், 21 தனியார் வாகனங்கள் சேதமாயின. மேலும், ஒரு பேருந்து, டெம்போ, மோட்டர் பைக் ஆகியவை தீக்கிரையாக்கப்பட்டன. கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. எதிர்ப்பா ளர்கள் இந்த கலவரத்தில் வகுப்பு பேதங்களையும் காட்டி, மதத்துக்குரிய இடங்களையும் தாக்கிக் கலவரங்களில் ஈடுபட்டனர். போப்கெல் பகுதிக்கு அருகில் உள்ள கணேஷ்நகர், போசாரியில் உள்ள லேந்தவாடி, லோஹோகான், ஹடாப்சார் பகுதியை அடுத்த சையத் நகர் மற்றும் புர்சங்கி ஆகிய பகுதிகளில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் குழுவாக காவிக்கொடிகளுடன் மோட் டர் பைக்குகளில் ஊர்வலமாகச் சென்று முழக்கங்கள் எழுப்பியவாறு பல இடங்களுக்கும் சென்றுள்ளனர். கடை களை அடைக்க வலியுறுத்தினர். காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்தபோது, அமெரிக்காவிலிருந்து இயங்கக்கூடிய சமூக வலை தளத்தி லிருந்து பிரச்சினைக்குரிய பதிவுகளை அகற்றுமாறு கோரினர். அதே பதிவுகள் மற்றொரு சமூக வலைதளத்திலும் 1-6-2014அன்று பதிவாகி உள்ளது. பின் அகற்றப்பட்டது. காவல்துறை சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் சஞ்சய் குமார் கூறும்போது, முதற்கட்டமாக பலமணிநேரத்துக்குப்பிறகு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட் டுள்ளது. முகநூலில் பிரச்சினைக்குரிய பதிவு இடப்பட்டுள்ளதை விசாரணை செய்து வருகிறோம்.
117 பேர் கைது!
1-6-2014 அன்று மாலையில் 117 பேர் கைது செய்யப்பட்டனர். 101 பேர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்வீச்சு மற்றும வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம்காண தொடர்ந்து கண் காணிப்புப்பணியில் ஈடுபட்டு வருகி றோம். வன்முறைச்சம்பவங்கள் 52 இடங்களில் நடைபெற்றுள்ளன. 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொருட்கள் சேதத்தில் போசாரி பகுதி மோசமாக பாதிப்படைந்துள்ளது. நூர் மொஹல்லாஹ் பகுதியில் 24 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. நான்கு இருசக்கர வாகனங்கள் தீக் கிரையாக்கப்பட்டுள்ளன. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 295-ஏவின் கீழ்(பிரிவினைவாதம் மற்றும் தீங்கி ழைத்தல் மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்துதல், மதம் மற்றும் மத நம்பிக்கைகளை இழிவு படுத்துதல்) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத் தின்கீழும் கோத்ருட் மற்றும் ஹிஞ் ஜெவாடி காவல் நிலையங்களில் அடையாளம் தெரியாதவர்கள்மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. தர்மவீர் சிறீ சாம்பாஜி மகராஜ் என்கிற பெயரில் முகநூலில் சனிக் கிழமை (31-5-2014) இரவு சத்ரபதி சிவாஜி, பால் தாக்கரே, கணேஷ் கடவுள் (வினாயகன் படம்) மற்றும் சத்ரபதி சாம்பாஜி மகராஜ் ஆகிய தவறாக சித்தரிக்கப்பட்ட படங்கள் பதிவிடப் பட்டுள்ளன. அதனால், உடனடியாக எதிர்வினைகள் ஏற்பட்டு, காவல்துறை யிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. சாபேகர் சவ்க் பகுதியில் இரவு 9.30 மணிக்கு 12 பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. வாட்ஸ் அப் எனும் இணைய இயங்குதளம்மூலமாக காட்டுத்தீயாக முகநூல் பதிவு பரவியது. வதந்தி பரப்புவர்களும் பதட்டத்தை ஏற்படுத்தும்வகையில் உண்மைக்கு மாறானவற்றை பரப்பினர்.
அதிகாலை 2 மணிவரையிலும் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன என்று காவல்துறையின் உயர் அதிகாரி கூறுகிறார். பாதிப்புக் குள்ளான பகுதிகளில் அதிக எண்ணிக் கையில் காவல்துறையினர் குவிக்கப்பட் டனர். கலவர தடுப்பு வண்டிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. காவல் தலைமையகத்திலிருந்து மேன்மேலும் ஆயிரக்கணக்கிலான காவல் படைகள் குவிக்கப்பட்டன. ஆயுதப்படையினரும் 31-5-2014 அன்று நள்ளிரவுமுழுவதும் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். பூனா காவல்துறையின்சார்பில் டில்லியிலுள்ள கணினி அவசர பொறுப்புக் குழுவி னரின் (Computer Emergency Response Team-CERT) உதவியுடன் முகநூலில் பதிவிடப்பட்டவை நீக்கப்பட்ட ன.
முகநூல் இணைய செயல்பாடுகளின் கட்டுப்பாட்டகம் அமெரிக்காவில் இருப்பதால் சில நேர தாமதத்துக்குப் பின்னர் பிரச்சினைக்குரிய பகுதிகள் முகநூலிலிருந்து நீக்கப்பட்டன. சமக இணைய தளங்களிலிருந்து எதையும் நீக்க வேண்டுமானால் நீதிமன்ற உத்தரவு இருக்க வேண்டும். அதன்படி டில்லியி லுள்ள கணினி அவசர பொறுப்புக்குழு (Computer Emergency Response Team-CERT) செயல்பட்டு பிரச்சினைக்குரிய முகநூல் பதிவை நீக்கினர். நிஹால் கான் என்கிற பெயரில் இளம் நிகில் டைகோன் படத்துடன் 31-5-2014 அன்று இரவு வாட்ஸ் அப்பில் பரபரப்புடன் வலம் வந்தது. 1-6-2014 அன்று பிற்பகலில் முகநூலில் பதிவிட்டவர் கஸ்பா பேத் பகுதியைச் சேர்ந்த டைகோன் என்பவர் என்று தெரிவந்தது. அதன்பிறகு அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். பூனா நகரின் வடக்குப்பகுதி இந்த கலவரத்தில் கல்வீச்சால் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஹின்ஜெவாடி, பிம்பிரி, சின்ச்வாட், போசாரி, கட்கி, ஏர்வாடா, பூனா-அகமத்நகர் சாலை, கராதி, வேனோவ்ரி, ஹடப்சர் உள்ளிட்ட பூனா மாவட்டத்தின் பல்வேறு பகுதி களும், லோனி கல்போர், வேகோலி, வாட்கான் மாவல் மற்றும லோனவாலா ஆகிய பகுதிகள் பாதிப்புக்கு உள்ளா யின. மும்பை-பூனா நெடுஞ்சாலை, பூனா-அகமத்நகர் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் முற்றிலும் சாலை போக்கு வரத்து முடக்கப்பட்டது. காவல் துறையினர் 27 வழக்குகளைப் பதிவு செய்து, 53 பேரைக் கைது செய்துள்ளனர். பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு ஆயுதப்படையினரின் இரு பிரிவுகள், அதிரடிப் படையினர் பூனாவைச்சுற்றி உள்ள பகுதிகளிலும் தொடர்ந்து பாது காப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு, ரோந்து சுற்றி வருகின்றனர் என்று பூனா புறநகருக்கான காவல் கண்காணிப் பாளர் மனோஜ்குமார் லோகியா கூறினார். பூனாவின் நகரப் பகுதிகளில் மூன்று பிரிவாக ஆயுதப்படைப்பிரிவு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட் டுள்ளது. பூனாவின் வடக்கு நகர்ப் பகுதியில் டிஜீபி பொறுப்பில் உள்ள காவல் உயர் அதிகாரியின் மேற் பார்வையில் மண்டலங்கள் மூன்று மற்றும் நான்கு பகுதிகளில் பலத்த பாதுகாப்புப்பணிகளில் வடக்குப் பகுதிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பூனாவின் காவல் துறையின் ஆணையர் சதீஷ் மாத்தூர் விடுப்பில் உள்ளார். பொதுமக்களிடம் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள் ளார். எந்த பதிவையும், படத்தையும், கருத்தையும் பொதுமக்களின் மனங் களைப் புண்படுத்தும்வகையில் முன் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அவசர உதவிக்கு காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ள எண் நூறு (100 )செயல்பட்டுவருவதாகவும் மாத்தூர் தெரிவித்தார்.
1-6-2014 அன்று கலவரங்களில், கல்வீச்சில் ஏராளமானோர் படுகாயம் அடைந்திருந்தாலும், 12பேர் உள் நோயாளிகளாக சிகிச்சைக்கு சாசூன் பொது மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.
முகநூலில் பதியவிட்டவர் கடுமை யாகத் தாக்கப்பட்டதால் சுயநினை விழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். தீவிர கண்காணிப்புப் பிரிவில் உள்ளார். சாசூன் மருத்துவ மனையின் தலைமை மருத்துவ அதிகாரி மாஷ்கே கூறும்போது, அவர் தலையில் பலமாக தாக்கப்பட்டுள்ளதால் தீவிர மாக அவர்நிலையை கண்காணித்து வருகிறோம் என்று கூறினார்.
- பூனா மிர்ரர், 2-6-2014
இந்த கேலிச் சித்திரங்களை வெளி யிட்டது யார் என்று உறுதி செய்யப் படாத தொடக்க நிலையிலேயே குறிப்பிட்ட சிறுபான்மையினர் தான் இதனைச் செய்துள்ளனர் என்று புரளி யைக் கிளப்பி மென்பொருள் நிறுவ னத்தில் பணியாற்றிய பொறியாளர் கொல்லப்பட்டுள்ளார்!
அடுத்து சட்டமன்றத் தேர்தல் வரும் மாநிலங்களில் இதே பாணி தொடரப் படலாம் - எச்சரிக்கை! எச்சரிக்கை!!
நன்றி http://viduthalai.in
Subscribe to:
Posts (Atom)
போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!
பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...
-
அதிகரிக்கும் பள்ளிவாசல்களும் அழிந்து போகும் ஒற்றுமையும்! அரபு பணம் இலங்கையில் வந்து குவிந்துக் கொண்டிருக்கிறது. பாதை நெடுகிலும் பள்...
-
அமெரிக்கா ஏகாதிபத்தியம் எங்களை ஆக்கிரமிக்கிறது… ஜாஹிலிய்யத்திற்கு கை கொடுக்கிறது ஜம்இய்யதுல் உலமா! ஜம்இய்யதுல் உலமா என்ற இலங்கையின் ம...
-
22ம் திகதி காலை. 7.30 மணியிருக்கும் கொழும்பு மாளிகாவத்தை மையவாடி மயான அமைதியில் மூழ்கியிருக்கிறது. எனக்கு மிகவும் அறிமுகமானவரும், எனது நண...